அனல் – 32

அன்று இரவு சிங்கப்பூரில் த்ரூவை தள்ளிவிட்டு கதவு நோக்கி சென்றவள், த்ரூவின் அழைப்பில் கதவைத் திறவாமல் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.

“அம்மூ….. என்ன விட்டுப் போறியா டி….” என்றவனின் கரகரப்பான குரலில் தான் எத்தனை அன்பு.

இவள் பிறந்ததிலிருந்து  இன்று வரை இத்தனை பாசமாக இவளை அழைத்தவன் இவன் ஒருவருனே.

ஒருவனின் அழைப்பில் கரைய முடியுமா, கரைந்தாளே இவள். அவனின் அழைப்பில் சிலையாகி நின்றவளின், மனம் கரையத் தொடங்க அசையாது அங்கேயே நின்றாள்.

“டேய்…. அம்மூ…. செல்லம்… பட்டுல… போகாதடி…. என்னை விட்டுத் தள்ளிப் போகாதடி…. இங்க வா….”

என்று அழைத்தவன் அழைப்பிற்கு என்ன அர்த்தம், அங்கு இவள் சென்றால் என்ன ஆகும் என்று அனைத்தும் புரிந்தது தெரிந்தது.

இது தவறு, இங்கிருந்து நகர்ந்து விடு என்று மூளை எச்சரிக்க, அந்த மூளையை மழுங்க வைத்தது அவனின் வாசம்.

தள்ளாடியபடி ஸ்டெல்லா பின்னே வந்து நின்றவன், அவள் தோளில் தலைசாய்த்து நிற்க, சிறிது சிறிதாக அவள் கட்டி வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுபடத் தொடங்கியது.

“இவ்வளவுதானா நீ ஸ்டெல்லா, அவனோட அழைப்பிற்கே இப்படி உருகி நிக்கிறியே!” என்று கேலி செய்த மனதை என்ன செய்வது என்று தடுமாறி இவள் நிற்க, த்ரூவ்

“அம்மூ…. இது தப்புடா, ஏதோ சரியில்ல தானே.., எனக்குத் தப்புத் தப்பாத் தோணுது டா, நீ இங்கிருந்து போடா…”

என்று அவன் உணர்வை கட்டு படுத்தி  பேசியவன், அவளை விட்டு நகர்ந்து தடுமாறித் திரும்ப, அவனின் கையைப் பிடித்திருந்தாள் ஸ்டெல்லா.

அவளின் கடைசி கயிறும், இந்த நிலையிலும் அவன் அவளுக்காக யோசித்த அந்த நிமிடம் அறுந்து விட, அவளை விட்டு நகர்ந்தவனின் கையை எட்டிப் பிடித்திருந்தாள் ஸ்டெல்லா.

ஒருவன் தன்னை மறந்த நிலையிலும் அவன் காதலிக்காக யோசிக்கிறான் என்றாள், வேறு என்ன வேண்டும் என்று நினைத்துவிட்டாள் போலும்.

இதுதான் கரனமா? இவளின் தடுமாற்றத்திற்குப் பதில் இவளுக்கே தெரியவில்லை.

ஏதோ ஒன்று இவளை அவனிடம் இழுத்துக்கொண்டே இருக்க, அனைத்துக் கட்டுக்களையும் மீறி அவனிடம் வந்துவிட்டாள்.

ஸ்டெல்லா இவன் கையைப் பிடித்திருந்ததை தள்ளாடியபடி பார்த்தவன்,

“இல்ல…..இது… தப்புடா….” என்று அவள் கையைப் பிடித்தவனுக்கு, அந்த கையின் மென்மையில் அவள் கையை விட மனமில்லாமல் போனது.

மெல்ல அவள் கையை வருடியவன் அவள் உள்ளங்கையில் குரு குருப்பு காட்ட அதில் நெழிந்த ஸ்டெல்லா

“த்ரூவ்….” என்று சினிங்கியவளின் குறளில் மயக்கத்தில் இருந்தவன் மேலும் மயங்கி அவளை இழுத்து அள்ளி அணைத்திருந்தான்.

முத்தங்கள், முனங்கள் கள், மோதல்கள், சிறு சிறு காயங்கள் என்று மாறி மாறி நடந்த யுத்தம், இறுதியில் கட்டிலில் வந்து முடிவடைந்தது.

இருவரும் இன்பத்தில் இணைந்து, அயர்ந்து, தெளிந்து, பல தயக்கங்களுடன், பல தடுமாற்றத்துடன் திணறி, சிரித்து வெட்கி என்று யுத்தம் முடிந்து, அதில் இருவரும் வென்று கலைத்து போனார்கள்.

த்ரூவ் ஸ்டெல்லா கழுத்தில் முகம் புதைத்து படுத்திருக்க.

அவன் உடல் பாறத்தை தாங்கி மூச்சிரைக்க, கண்களில் ஈரம் கசிய, அதற்கு மாறாக உதடு புன்னகிக்கப் படுத்திருந்தாள் ஸ்டெல்லா.

போரின் இறுதியில் இருவரும் களைத்து மூச்சிரைக்கப் படுத்திருந்த போதிலும், அவர்களுக்கு உறக்கம் வரவில்லை.

“அம்மு…. அம்மு…. “ என்று அவிளின் காதோரம் முனகிய த்ரூவ், “லவ் யூ டி…. “ என்று அவள் கையில் முத்தம் பதித்தான்.

“என் சாக்லேட் கிழங்கு இனிக்கிற டி “ என்று மேலும் அவன் பேசிய அந்தரங்க பேச்சில் வெட்கம் கொண்டவள்.

அவன் இடிப்பில் கிள்ளி “ஹூ…” என்று அதட்ட, அதற்குப் பதிலுக்கு அவன் அவள் கன்னத்தை கடிக்க, அடுத்த போருக்கு இருவரும் தயாரானார்கள்.

எப்போது போர் முடிந்தது, எப்போது உறங்கினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.

காலை ஸ்டெல்லாவிற்கு ஆறு மணி போல விழிப்பு வந்துவிட, கண்களைத் திறந்து தன் நிலையைப் பார்த்தவள் முகம் சிவந்து போனாள்.

“அச்சோ…. என்னடி இது ஸ்டெல்லா…” என்று கண்களை மூடி திறந்தவள்.

“எப்படி நைட் இப்படி நடந்துச்சு? நான்… இப்படிலாம் பண்ண…” என்று அதிர்ந்தவள், பின் “இப்படியே எத்தனை நேரம் இருக்க?” என்று மெல்ல த்ரூவை அவள் மீது இருந்து நகர்த்தி அருகில் போட்டவள்.

“ஹா….” என்று வலியில் முனங்கி, தன் உடலின் நிலையைப் பார்த்துவிட்டுத் திரும்பி த்ரூவை பார்த்தாள்.

அவனை முறைத்து “அம்முன்னு இன்னொரு வாட்டி சொல்லி பாரு, உனக்கு இருக்கு..” என்று கோபமாகத் திட்ட முயன்றவள், அதை வெட்கத்துடன் சொல்லி முடித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“ப்ச்… என்ன இது இப்படி இருக்கு?” என்று அவன் முகம் காண கூசியவலாக, மெதுவாகக் கீழே கால் வைத்தவள், மிக மெதுவாகத் தன் உடையை எடுத்துக்கொண்டு த்ரூவின் சிதறி இருந்த உடைகளை அவன் அருகே வைத்துவிட்டு, அவன் மீது போர்வையைப் போர்த்தினாள்.

பின் குளிக்க பாத்ரூம் சென்றாள்; இவள் குளிக்கச் சென்ற நேரத்தில்தான் ஆதிஷ் இவர்களின் கதவைத் தட்டி, த்ரூவைச் சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தான்.

ஸ்டெல்லா உள்ளே இருப்பதை கவனிக்காத த்ரூவ், அவனது உடைப் பெட்டியைக்கூட எடுக்காமல் தான் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தான்.

குளித்து முடித்த ஸ்டெல்லா வெளியே வந்து பார்த்தது காலியான அறையைத்தான். த்ரூவ் எங்கே என்று தேடியவள் ஆதிஷிடம் கேட்டு நடந்தவற்றை அறிந்து கொண்டவள். அவன் அவசரமாக  சென்றதின் காரணம் அறுந்து

இருந்தாலும் ஒரு வார்த்தை ஆவது சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று வருந்தியவள், த்ரூவ் மீது கோபமாகத்தான் சென்னை வந்தாள்.

சென்னை வந்தும் த்ரூவ் இவளுக்கு ஒரு போன் கூட செய்யாமல் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டவள், இரண்டு நாள் விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருந்தாள்.

அப்போது ஆவது அவன் அழைப்பான் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிச்சம். ஒவ்வொரு நாளும் அவனுக்காகக் காத்திருந்து சோர்ந்து போனவள்.

இவனும் மற்ற ஆண்களைப் போலத்தானோ என்று எண்ணத் தொடங்கினாள். இப்படியே மூன்று மாதங்கள் சென்றன; அன்று காலை தாமதமாக எழுந்தவள், வேகமாக இட்லியை உண்டுவிட்டு காரில் செல்ல வயிற்றைப்  பிரட்டி கோண்டு வந்தது.

எந்த வாகனத்தில் சென்றாலும் சிறு மயக்கம் கூட வராத இவளுக்கு, இன்று வயிறு பிரட்டவும் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, உண்ட அனைத்து இட்லியையும் வாந்தி எடுத்துவிட்டாள்.

அனைத்தையும் வெளியே தள்ளியவளுக்குத் தலை சுற்றுவது போல இருந்ததால், காரில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு இது அதுவா என்று சந்தேகம் வர ; அவள் எப்போதும் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றாள்.

இவளுக்கு எப்போதும் சரியாக மாதவிடாய் வராது; அதனாலேயே அதை கணக்கில் வைத்திருக்காதவளுக்கு, இந்த வாந்தி மற்றும் தலைசுற்றல் அனைத்தும் வேறு எதையோ நினைவுபடுத்தியதால் வேகமாக டாக்டரைப் பார்க்கச் சென்றாள்.

அங்கு அவர் இவளைப் பரிசோதித்துவிட்டு, கர்ப்பத்தை உறுதிப்படுத்தியதும் அவளுக்கு அத்தனை சந்தோஷம்.

மகிழ்ச்சியில் கை தானாகத் த்ரூவின் நம்பரை அழுத்த, தலையை மறுப்பாக  அசைத்து மனதை மாற்றிக்கொண்டவள்.

“இவனுக்கு ஏன் நான் சொல்லணும்? இது என் குழந்தை. எல்லாம் முடிச்சிட்டு மத்த பசங்க மாதிரி தானா போன! நீ எனக்கு வேணாம்”

என்று உறுதி எடுத்தவளுக்கு, முக்கியமான மீட்டிங் இருப்பது நினைவு வர வேகமாக கேப்பில் அலுவலகத்திற்குச் சென்றாள்.

அங்கு சென்று மீட்டிங்கை நல்ல முறையில் முடித்தவள், தன் சேரில் சாய்ந்து அமர அவளால் சுத்தமாக முடியவில்லை.

வீட்டிற்குச் சென்று நன்றாகத் தூங்க வேண்டும் போல இருக்க, அங்கிருந்து கிளம்பிவிட எண்ணியவளுக்கு, த்ரூ இன்று சென்னை திரும்புவது செய்தியாகக் காதில் விழுந்தது நினைவுக்கு வந்தது.

உடனே வேகமாக ராஜினாமா மெயிலை ஒன்றைச் சத்தமில்லாமல் அவனுக்கு அனுப்பி வைத்தவள், வீட்டிற்கும் கிளம்பிவிட்டாள்.

“இதுக்கு அப்புறமும் அவனுக்குக் கீழே என்னால வேலை பார்க்க முடியாது” என்று கோபமாகச் சென்றாள்

ஹார்மோன் மாற்றம், பசிமயக்கம், உடல் சோர்வு என்று நோந்து போய் சோர்ந்து கீழே இறங்கியவள் ரூத்தை அந்த கோலத்தில் பார்த்துவிட்டுப் என்ன செய்கிறோம் என்று உணராமல் அனைத்தும் செய்து முடித்தாள்.

இவற்றை எல்லாம் கண் மூடி யோசித்தவள்,

“வேலையை விட்டு நிக்கிறேன்னு சொன்னதும் தான் பதறி வந்திருக்கான், இல்லனா இன்னைக்கும் என்னப் பார்க்க வந்திருக்க மாட்டான் ல” என்றவளுக்கு மேலும் அவன் மீது கோபம் தான் பெருகியது.

பின் அவள் உடல்நிலை நினைவுக்கு வர மீண்டும் கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து விட்டவள்,

“ரிலாக்ஸ் ஸ்டெல்லா… பாப்பா பத்தி மட்டும் யோசி…” என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்தபடி எப்படியோ பீப்பியை குறைத்திருந்தாள்.

மறுநாள் அவளைப் பரிசோதித்த டாக்டர், “ம்ம்ம் பீப்பி இப்போ ஓகே, பேபியும் நார்மல் ஆகிட்டாங்க, பட் என்னும் டூ வீக் க்கு நீங்க எதுவும் பண்ண கூடாது, முடிஞ்ச வரைக்கும் லீவ் சொல்லிட்டு வீட்டுலயே இருங்க” என்று டாக்டர் சொன்னதை கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.

“டாக்டர் பாப்பா நார்மல் ஆகிட்டாங்கன்னு சொன்னிங்களே” என்று ஷாக் ஆன ஸ்டெல்லாவிற்கு,

“பாப்பா ஓகே தான் பட் மம்மி நீங்க ஓகே இல்லயே, ஸ்டெல்லா நீங்க ரொம்ப வீக்கா இருக்கிங்க, அதுக்கு தான் சொல்றேன், முடிஞ்ச அளவு ஸ்டெயின் பண்ணிக்காம இருங்க, டூ வீக் கழிச்சு என்னொரு செக்கப் பண்ணிட்டு அப்பறம் எப்படின்னு சொல்றேன்”

என்றவர் சில சத்து மாத்திரைகளை அவளுக்கு எழுதி கொடுத்து விட்டு அவளை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்.

அங்கிருந்து ஸ்டெல்லா மற்றும் ரூத்தை த்ரூவ் தான் காரில் அழைத்து சென்றான். ஸ்டெல்லாவும் அவள் நிலையை உணர்ந்து அவனுக்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் காரில் ஏறிவிட்டாள்.

காரில் ஏறியவள் களைப்பு மிகுதியில் ரூத்தின் தோளில் சாய்ந்து நன்றாகத் தூங்கி போனாள்.

அரை மணி நேரம் நன்றாகத் தூங்கி எழுந்தவள், கண் விழித்து எங்கு இருக்கிறோம் என்று சுற்றிப் பார்த்த போது அவள் கண்ணுக்குத் தெரிந்தது “சார்பதிவாளர் அலுவலகம்” என்ற பலகை தான் , அதை பார்த்து கண் முன் தெரியாத கோபம் தான் வந்தது அவளுக்கு.