அனல் – 46

செந்தனலாக சிவந்து போய், நிலவுக்காகக் காத்திருக்கும் அந்த நீல வானை ரசனையாகப் பார்த்துக்கொண்டு பால்கனியில் நின்று கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.

கடந்த ஒரு மாதமாக குழப்பத்திலயே சுற்றி வந்தவள், இன்றுதான் ஒரு முடிவுக்கு வந்தவளாக தெளிந்து தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையை ரசித்தபடி நிற்கிறாள்.

அப்போது பார்த்து கீழே சத்தம் கேட்க, யார் என்று பார்த்தாள், ரூத் தான் ஆதிஷுடன் போனில் சிரித்துப்பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் பேசுவதை புன்னகை முகத்துடன் ரசித்து பார்த்தாள்.

ரூத்திடம் இருந்து ஃபோனை வாங்கிய மறுநாளே அவளை அழைத்து போனை கொடுத்திருந்தாள் ஸ்டெல்லா.

போனை அவளிடம் கொடுத்து விட்டு அவள் சிவந்து இருந்த கன்னத்தைத் தடவி

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ஜோசப், கொஞ்சம் வெயிட் பண்றியா?” என்ற ஸ்டெல்லாவை அணைத்துப்பிடித்து,

“சாரி ஸ்டெல்லா, நான் எத்தனை நாள் வேணும் னாலும் வெயிட் பண்ணுவேன், தேங்க்ஸ்… தேங்க்ஸ்… ஸ்டெல்லா!”

என்று அழுதவளைத் தலையைத் தடவிச் அவளை சமாதானம் செய்தாள்.

அன்றிலிருந்து ஆதிஷுடன் போனில் இவள் பேசுவதை ஸ்டெல்லா பார்க்க நேரிடும் போது எல்லாம் அவளை பார்த்து பயந்து போனை கட் செய்துவிட்டு சிரித்துவிட்டு ரூத் ஓடிவிடுவாள்.

அதை எல்லாம் நினைத்தவள் இன்றும் குறும்பாகச் சிரித்தபடி மேலிருந்தே “ஜோசப்…” என்று சத்தமாக அழைக்க, ரூத் பதறிப்போய் போனை மறைத்தவள்,

வேகமாக இவள் நின்ற திசை திரும்பி, எப்போதும் போலத் தலையைச் சொறிந்து கொண்டு சிரித்து நின்றவளை, போலியான கோபத்துடன் பார்த்தவள்.

“நாளைக்கு ஆதிஷை இங்க வரச் சொல்லு, நான் அவன் கிட்ட பேசணும்”

என்று ஸ்டெல்லா சொன்னதை நம்ப முடியாது, ஏதோ புரியாத மொழி கேட்பது போலக் கேட்டுமுழித்தவள்,

“ஹான்…” என்று திருதிருவென முழிக்க, அதில் சிரித்த ஸ்டெல்லா,

“நம்ம பக்கத்து வீட்டுப் பையன் ஆதிஷ் இருக்கான் ல…. அவன இங்க வரச் சொல்லு, நான் அவன் கிட்ட பேசணும் உங்க லவ்வைப் பத்தி… இப்போ வாச்சி புரியுதா?” என்றவளுக்குத் தலையை உருட்டியவள்,

பதட்டத்தில் உள்ளே ஓடிவிட, ரூத் ஓடிய வேகத்தைப் பார்த்துத் தலையை ஆட்டிச் சிரித்தவள்,

“என்னும் எலிக்குட்டி போலத்தான் ஓடிக்கிட்டி இருக்கா, ஆனா இவளுக்குக் போய் கல்யாணம்” என்று கூறி சோர்வாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவள்.

அருகில் இருந்த இவளின் போனில் நேரத்தைப் பார்த்து விட்டு சிரித்தவள், கண்களை மூடி அப்படியே சாய்ந்து கொண்டாள்.

சரியாக பத்து நிமிடத்தில் த்ரூவின் கார் உள்ளே நுழைந்ததும் இவளின் சிரிப்பு விரிய அவனுக்காக காத்திருந்தாள்.

அன்றைய நாளுக்கு பிறகு த்ரூவ் சரியாக ஆறு மணி தாண்டிவிட்டால் போதும், த்ரூவ் ஸ்டெல்லாவைத் தேடி எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவான்.

அதைப் பார்த்து ஸ்டெல்லா அவனை அடித்து மொத்தியது எல்லாம் வேறு கதை.

இப்போதும் அதேபோல சரியாக நேரத்திற்கு வந்தவன் அவளை கான வேகமாக உள்ளே நுழைய, அங்கு ஹாலில் ரூத் கைகளை உதறிப் பயத்துடன் அமுதாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

அவர்களைப் பார்த்து என்ன வென்று அறிய அங்கு சென்றவன்,

“என்ன ரூத், என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்றவனின் திடீர் குரலில் உடல் தூக்கிப்போடப் பயந்து, பின் அது த்ரூவ் என்றதும் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானவள்.

“நீங்களா மாமா… திரும்பவும் ஸ்டெல்லாவோ ன்னு பயந்துட்டேன் ” என்று பயத்துடன் பேசியவளின் பயத்தைப் பார்த்துச் சிரித்தவன்.

“நீதான் என் வைஃப் அ, பார்த்து பயப்படாம தைரியமா இருந்த ஒரே ஆளு, இப்போ நீயும் பயப்பட ஆரம்பிச்சிட்டியா?” என்று ரூத்தை அவன் கிண்டல் செய்யவும்,

“மாமா…” என்று சினிங்கியவளின் பார்த்து சிரித்த த்ரூவ்,

“சரி… சரி… சொல்லுங்க என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன் ரூத்?” என்றவனிடம் ஸ்டெல்லா கூறியதை இவள் சொல்லி முடித்து,

“பயமா இருக்கு மாமா, ஆதிஷ்க்கும் ஸ்டெல்லாவுக்கும் எப்பவுமே ஒத்துக்காது.

எப்போ ரெண்டு பேரும் பேசத் தொடங்கினாலும் அடிதடியிலதான் வந்து முடியும்” என்றவளை, கேலியான சிரிப்புடன் பார்த்தவன்,

“பாவம் தான் ரூத் நீ, இப்போவே இப்படின்னா மேரேஜ் அப்புறம் ஸ்டெல்லா உன்ன பாக்க வரும் போதுலாம் ரெண்டு பேருக்கும் நடுல தான் உக்காரனும் போல” என்றவனை முறைத்தவள்,

“போங்க மாமா…” என்று விட்டு அவள் அறைக்குச் சென்றுவிடவும், அங்கு சோபாவில் இருந்த அமுதா,

“என்னப்பா, பிள்ளையைப் பார்த்துச் சிரிக்கிற, அவளே எவ்வளவு கவலையாகப் பேசிட்டுப் போறா தெரியுமா? திரும்பி ஸ்டெல்லா டென்ஷன் ஆகி அவளுக்கு ஏதோ ஆகிடுமோன்னு ரொம்பப் பயப்படுறா த்ரூவ்.”

“அவ பயப்படுற மாதிரி ஒன்னும் ஆகாதும்மா, ஸ்டெல்லா கல்யாணத்தைப் பத்தி நல்ல விதமா பேசத்தான் அவனக் கூப்பிட்டு இருப்பா”

என்றவரும் தலையை அசைத்து, “எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி”.

“நல்லதாவே எல்லாம் நடக்கும், நீங்க ரொம்ப யோசிக்காதீங்க, நான் போய் ஸ்டெல்லாவைக் கீழே கூட்டிட்டு வரேன்” என்று இவன் மாடிப்படி வழியாக அவர்கள் அறைக்கு சென்றான்.

அங்கு அறையில் அவள் இல்லாமல் பால்கனி கதவு திறந்து இருப்பதை பார்த்தவன், அவளைத் தேடி அங்கே செல்ல, ஸ்டெல்லா கண்களை மூடியபடி சோபாவில் சாய்ந்திருந்தாள்.

உடனே அவள் அருகில் சென்றவன் அவள் தலையை லேசாகத் அழுத்தி விட தொடங்கினான்.

ஸ்டெல்லா கம்பெனிக்குச் செல்லவில்லை என்றாலும், இங்கிருந்தபடி இவள் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த கம்பெனியை முழுவதும் இவள் தான் பார்த்து வருகிறாள்.

மதி பார்த்துக்கொள்கிறேன் என்று வந்தவன், நன்றாக அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்வியையும் சேர்த்து அவர்கள் குடும்ப ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விட, த்ரூவ் திணறித்தான் போனான்.

தருண் உதவியுடன் ஓரளவு சமாளித்தாலும், அனைத்தையும் பார்த்துக்கொள்ள முடியாமல் போய்விட, கம்பெனியே கதி என்றுதான் இரண்டு கம்பெனிகளுக்கும் இடையே போக்குவரத்தை நடத்திப் கொண்டு இருந்தான்.

அப்போது இவன் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு உதவ வந்த தேவதை தான் ஸ்டெல்லா. முடிந்த அளவு இவள் பார்த்த பழைய வேலை அனைத்தையும் மீண்டும் அவளே பார்க்கத் தொடங்கினாள்.

வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலம் மீட்டிங், சீசிடிவி மூலம் வேலை பார்க்கும் ஆட்களைக் கவனிப்பது என்று நன்றாகவே சமாளித்தாள் ஸ்டெல்லா.

இப்போதும் ஸ்டெல்லாவைப் பற்றி யோசிக்கும் போது அவள் விந்தையாக தான் தெரிவாள்.

இத்தனை வருட உழைப்பு, அதைப்பற்றிய படிப்பு, எக்ஸ்பீரியன்ஸ் என்ற இவனுக்கே பல முறை ஒன்றாக அனைத்தையும் பார்க்கக் கடினமாகத்தான் இருக்கும்.

அப்படி இருக்க எப்படி இதைப்பற்றி எதுவும் தெரியாது, இதைப்பற்றி படிக்கவும் செய்யாது, இத்தனை பெரிய கம்பெனியைத் தனியாளாக எப்படிச் சமாளிக்கிறாள்?

என்று இவளை முதல் முறை பார்த்த போது எழுந்த அதே வியப்புடனே இன்றும் அவள் தலையை அமுக்கி விட்டுக்கொண்டே இவன் யோசிக்க

“ஏன் இவ்வளவு லேட் த்ரூவ்?” என்ற ஸ்டெல்லா கண்களை மூடியபடியே கேள்வி கேட்க,

“லேட்லாம் ஒன்னும் இல்லையே அம்மு, சரியா எப்பவும் போலத்தான் வந்திருக்கேன்” என்று அவன் கைக்கடிகாரத்தை ஒரு நிமிடம் திருப்பிப் பார்த்துச் சொல்ல,

“உங்க கார் வந்து பத்து நிமிஷம் ஆகுது. ரூம்க்கு வர இவ்வளவு நேரம் ஆகாதே! அதான் கேட்டேன். ரூத் உங்கள வழி மறிச்சி என்ன பத்தி கம்பலைன் பண்ணாலா?,”

“சரியா போலீஸ் மூளை டி உனக்கு, எப்படி கரெக்ட்டா கெஸ் பண்ற?” என்றவனை கண்களைத் திறந்து சிரிப்புடன் பார்த்தவள், த்ரூவின் கையைப்பிடித்து இவள் எதிரே அமர வைத்த

ஜம்பமாக அவன் மடியில் இவள் காலைத் தூக்கி வைத்துவிடவும், தன்னைப்போல த்ரூவும் அவள் காலை மிக மெதுவாக அழுத்திவிடத் தொடங்கினான்,

அதில் இவள் மீண்டும் கண்களை மூடி சுகமாகச் சாய்ந்து ஸ்டெல்லா அமரவும், த்ரூவ்,

“ஆதிஷ் கூட பேசப் போறியா அம்மு?”

“ம்ம்ம்…. கொஞ்சம்…. பேசணும்…” என்று இடைவேளை விட்டவள் “இல்ல மிரட்டணும்” என்று முடிக்கவும், அதில் புரை ஏறி இரும்பிய த்ரூவ்,

“என்னடி சொல்ற? நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறவரு டி, மிரட்டணும்னு சொல்ற,”

“யாரா இருந்தா என்ன, அவன் என் ஜோசப்பை பார்த்துக்கிறதப் பொறுத்து தான் அவனுக்கு என்ன மரியாதை நான் கொடுக்கணும்னு முடிவு பண்ணுவேன்” என்றவளை, “அது சரி” என்று பார்த்தவன்.

“அப்போ நாளைக்கு அவனப் பேச கூப்பிடல, மிரட்டத்தான் கூப்பிடுற?” என்றதற்கு, சத்தமாக ஸ்டெல்லா சிரிக்கவும், த்ரூவ் மனதில்,

“பாவம் தான் அந்தப் பையன்” என்று எண்ணிக்கொண்டான்.

அடுத்தநாள் காலை த்ரூவ் எப்போதும் போல வேலைக்கு கிளம்பிவிட, ஆதிஷ் ஒரு பத்து மணி போல, அவன் கூட வர அடம்பிடித்த மணியம்மாளையும் உடன் அழைத்து வந்தான்.

தோட்டத்தில் எதிரெதிரே நாற்காலியில் ஸ்டெல்லா ஒரு புறம், ஆதிஷ் ஒரு புறம் என்று அமர்ந்திருக்க, இருவரும் பேச தான் காணோம்.

ஆதிஷ் வந்து பத்து நிமிடம் ஆகியும் அவனுடன் பேசாமல், ஒரு ஆராயும் பார்வையை அவனை நோக்கி வீசிவிட்டு இருந்தாள் ஸ்டெல்லா.

இவர்கள் இருவரையும் மறைந்து நின்று அமுதா மற்றும் ரூத் பார்த்துக்கொண்டிருக்க,

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன…?”

என்று பின்னால் கேட்ட சத்தத்தில் இருவருமாகத் திரும்பிப் பார்க்க, மணியம்மாள் தான் நின்று கொண்டு இருந்தார்.

“அமைதியா இரு பாட்டி, அங்க கேட்டுற போது,” என்ற ரூத்தை முறைத்தவர்

“என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்? என்ன மட்டும் அங்க தனியா மிச்சர் சாப்பிட விட்டுட்டு?”

“ப்ச்…. ஸ்டெல்லா ஆதிஷ் பேசுறதக் கேட்கத்தான் நிக்கிறோம், திருப்பி ஏதாவது பிரச்சனை ஆகி ரெண்டு பேரும் சண்டை போட்டாங்கன்னா,”

என்ற ரூத்தின் குமுட்டில் இடித்தவர், “என்னையும் கூப்பிட்டு இருந்தா ஒட்டுக் கேட்க வந்திருப்பேன்ல டி!”

“ம்க்கும்…. உனக்கு பக்கத்துல இருக்க நானே அரைகுறையாத்தான் தெரிவனா, இதுல அங்க அவங்க பேசுறதக் கேட்கப் போறியா?”

“அடியே! எனக்குக் கண்ணுதான்டி கொஞ்சம் பிரச்சனை, மத்தபடி காது பாம்புக் காதுடி. அந்த காது வச்சுதான் நம்ம தெரு விஷயம் எல்லாம் எனக்கு அத்துப்படி டி” என்று இவர்கள் பேசுவதைக் கேட்ட அமுதா,

“அச்சோ! கொஞ்சம் அமைதியா இருங்க, ஏதோ பேசுறாங்க” என்றதும் இருவரும் வாயை மூடிக்கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டனர்.

ஆதிஷ் தான் முதலில் இந்த அமைதியை உடைத்து பேசத் தொடங்கினான்.

“சொல்லு ஸ்டெல்லா, எங்களப் பத்தி ஏதோ பேசணும்னு சொன்னியா?”

என்றவனின் பேச்சில் ரூத்தை அவனுடன் சேர்த்துப் பேசியது கடுப்பாக இருப்பினும், நிதர்சனம் புரிந்தவளாக,

“ரொம்ப லவ் பண்றியாம் என் ஜோசப்ப, அதான் எவ்வளவு லவ்னு தெரிஞ்சுக்க கூப்பிட்டேன்”

என்றவளின் ‘என் ஜோசப்’ என்றதில் இவனுக்கு கோபம் லேசாக எட்டிப் பார்த்தாலும், ரூத்திற்கு காக அதை கை கால் கட்டி போட்டு அமர வைத்தவன்.

ஈ என்று பல்லை காட்டி “நான் மட்டும் இல்ல, நாங்க, நாங்க லவ் பண்றோம்”

என்று வார்த்தை போர் செய்வதைக் கேட்டு இங்கு தலையில் அடித்துக்கொண்ட மணியம்மாள்

“இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான் போ” என்றவரின் தோளில் இடித்து

“ஷூ…. பாட்டி” என்று அவரை அமைதிப்படுத்தி அவர்கள் பேசுவதைக் கேட்க

“கல்யாணத்துக்கு உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?” என்ற ஸ்டெல்லாவிற்கு, ஆதிஷ்

“ஏற்கனவே சம்மதம் வாங்கிட்டேன்”

“கல்யாணம் முடிஞ்சு எங்க ஜோசப் கூட வாழப் போற?”

“வேற எங்க? எங்க வீட்டுல தான்” என்று அவள் கேள்வியில் புருவத்தைச் சுருக்கி யோசித்தபடி இவன் பதில் சொல்ல

“உங்க அம்மா, அப்பா, பாட்டி எல்லாம் கூடத்தான இருப்பாங்க?”

“ஆமா, என் கூட இல்லாம வேற எங்க போவாங்க?”

“ப்ச், கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று ஸ்டெல்லா எரிச்சலாகவும் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து இவள் அருந்த

“வார்த்தை போர் முடிஞ்சு, இப்போ ரேப்பீட் ஃபயர் ரவுண்டு போது போல” என்று ரூத் பெருமூச்சு ஒன்று விட

இங்கு தண்ணீரை குடித்து முடித்த ஸ்டெல்லா

“நீ எப்பவும் இங்க சென்னையில தான் வொர்க் பண்ணனும், வேற கம்பெனி ஆஃபர் கொடச்சி நீ அங்க போனாலும் பரவாயில்லை, ஆனா சென்னையில தான் இருக்கணும்

அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் எப்பவும் தனி குடுத்தனம்னு ஜோசப்ப கூட்டிட்டு போக யோசிக்கவே கூடாது

அதே மாதிரி என் ஜோசப் வேலைக்கு போவா, அதையும் நீ தடுக்க கூடாது

அன்ட் நான் எப்போ வேணா ஜோசப்ப பாக்க வருவேன், நைட் கூட வருவேன், நீ ஏன்னு கேக்க கூடாது”

என்று நிதானமாக பேசியவளின் பேச்சில் அவளின் பயம் தெளிவாகத் தெரிய, அவளை வருத்தமாகத்தான் பார்த்தான் ஆதிஷ்

இதுவே ஸ்டெல்லா பற்றித் தெரியாது, இவள் பேசியதை கேட்டு இருந்தான் என்றால், கண்டிப்பாக ஏதாவது பேசி அவளை இன்னேரம் வெறுப்பு ஏற்றி இருப்பான், ஆனால் இப்போது விஷியமே வேரு அல்லவா, நேராக நிமிர்த்து அமர்ந்தவன்

“ஸ்டெல்லா, நான் எப்பவும் த்ரூவ் சார் கம்பெனில அவர் கீழ தான் வொர்க் பண்ணுவேன், அன்ட் என் வீடுன்னு நான் எங்க போனாலும் என் கூட என் அம்மா, அப்பா, பாட்டினு மூணு பேரும் இருப்பாங்க

எப்பவும் ரூத்தை நான் தனியா விட மாட்டேன். அன்ட் நீ எப்போ, என்னைக்கு, எந்த நேரம், நாளும் ரூத்த பாக்க வரலாம்” என்றவனின் பேச்சில் சிறிது பதட்டத்தைக் குறைத்தவள்

“சரி, எனக்கு எல்லாம் ஓகே, உங்க வீட்டுல இருந்து வர சொல்லு, மேரேஜ் பத்தி பேசிடுவோம்”

என்றவள் மெல்ல சேரை பிடித்து எழ, அவள் கால் மருத்து விட்டது போல கால் அசைக்க முடியாது லேசாக இவள் தடுமாற

“ஏ… பாத்து” என்று அவள் கையை பிடித்து மீண்டும் ஆதிஷ் அமர வைத்தவன் அவளுக்கு குடிக்கத் தண்ணீர் தர

அதற்குள் மறைந்திருந்த மூவரும் அங்கே ஓடி வந்து அவளை கவனிக்கத் தொடங்கி விட்டனர்

“ஸ்டெல்லா செருப்ப கலட்டு…”

“புள்ள காலை லேசா அசை மொத”

“ஸ்டெல்லா… நில்லுடா, நான் சூடா தண்ணி எடுத்து வரேன்” என்று அமுதா செல்ல போக, ஆதிஷ்

“நீங்க இருங்க, நான் போய் எடுத்து வரேன்”

என்று அவன் வேகமாக உள்ளே செல்ல, இவர்களைப் பார்த்து ஸ்டெல்லாவிற்கு கண்கள் கரித்துக்கொண்டு தான் வந்தது

போன வருடம் வரை யாரும் இல்லாதவள் போலே சுற்றி வந்தவளுக்கு, இந்த வருடம் அவளை தாங்க இத்தனை பேர்!

அதை நினைத்து மனதில் அத்தனை சந்தோஷமாக கடவுளுக்கு மனதார நன்றி கூறியபடி இருந்தாள்.

இவளின் சந்தோஷத்தைப் பார்த்து கடவுளே கண்வைத்து விட்டார் போலும், பின்னாடியே அடுத்த சோதனையை கதவைத் திறந்து உள்ளே நுழைய வைத்து கொண்டிருந்தார் அவர்.