கண்கள் முன்னே பல ஓவியங்கள் அழகாக மாட்டப்பட்டிருக்க, இவள் முன்னே காலி தூரிகையுடன் பல வண்ணங்களும் இருந்தன.
இவற்றை அனைத்தையும் கண்களை விரித்து மகிழ்ந்த முகத்துடன் ஸ்டெல்லா சுற்றிப் பார்த்துவிட்டு,
“இது… இது எல்லாம் நான் வரைந்த ஓவியங்கள் தானா?” என்றவளுக்கு ஆம் என்பது போல தலையசைத்தவன், அவளை விட்டுத் தள்ளி நின்று,
“இந்த ரூம் உனக்கே உனக்கான ரூம், இங்க நீ எவ்வளவு நேரம் வேணாலும் வரையலாம்.” என்றவனின் கண்களை பார்த்த ஸ்டெல்லா,
“ஆனா இந்த ஓவியங்கள், இதை நான் வீட்டுல மேல ரூம்ல தான லாக் பண்ணி வச்சிருந்தேன்.”
“ரூத் கிட்ட கேட்டு வாங்கினேன்.”
“அவளா சொன்னா எனக்கு பெயிண்ட் பண்ண பிடிக்கும்னு,” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,
“இந்த ரூம் பத்தி எதுவுமே நீ என்னும் சொல்லலையே ஸ்டெல்லா, உனக்கு ரூம் ஓகேவா?”
என்று பேச்சை மாற்றியவனை செல்லமாக முறைத்துப் பார்த்தவள்,
“நைஸ், நல்லா இருக்கு, ஆனா நான் பெயிண்ட் பண்றத விட்டு ரொம்ப நாள் ஆச்சே.” என்று குறும்பாக த்ரூவை அவள் பார்க்கவும், த்ரூவும்
“அப்படியா!” என்று அதிர்வது போல முகத்தை வைத்தவன்
“சரி அப்போ இது எல்லாத்தையும் போட்டுட்டு இந்த ரூமை உன்னோட ஆபிஸ் ரூமா மாத்திடுவோமா,” என்றவன் ஓரப்பார்வையில் ஸ்டெல்லாவைப் பார்க்க,
அவளின் மகிழ்ந்து இருந்த முகம் ஒரு நொடி வாடி பின் இயல்புக்கு வரவும், அவளின் விருப்பம் புரிந்தவனாக,
அவள் கரம் பற்றி அவளைப் பின்னோக்கி அணைத்துப்பிடித்தவன்,
“உனக்கு பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு, இல்லன்னா இல்லன்னு சொல்லு, அதை விட்டுட்டு, ஏன்டா உன் உணர்வுகளை மறைக்கிற? நான் தான இங்க இருக்கேன் “
என்றவனைத் தலை திருப்பிப் பார்த்தவள்,
“அது… எனக்கு இப்படி இருந்து தான் பழக்கம் த்ரூவ்,” என்று கண்கள் கலங்க இவனை பார்த்தவளின் கண்களில் தான் எத்தனை உணர்ச்சிகள்
இவள் முகம் காட்ட மறுத்து மறைக்கும் உணர்வுகளை வெளிப்படையாக இவனுக்கு எடுத்துக்காட்டும் அந்த இரு கண்களுக்கும் முத்தம் வைத்த த்ரூவ்,
“உன் கண்ண நான் பார்த்தா போதும், அது என் கிட்ட எல்லாம் சொல்லிடும், சோ பீல் பண்ணாத,” என்று அவள் கன்னத்தில் உதட்டால் லேசாக ஒற்றி எடுத்தவன்.
அவளை விட்டு வேகமாக விலகி, “இனிமே எதுக்கும் எப்பவும் என் கிட்ட தயங்கி நிக்காத அம்மு,” என்று அவள் கன்னம் தட்டி சிரித்தவன், நேரத்தைப் பார்த்துவிட்டு,
“சரி டைம் ஆச்சி, நாளைக்கு முழுக்க நமக்கு ரெஸ்ட் இருக்காது, சோ வாடா சீக்கிரம் தூங்கலாம்,”
என்று த்ரூவ் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு செல்ல, ஸ்டெல்லா புரியாமல் முழித்தவளாக,
“அவ்வளவு தானா?” என்றபடி அவன் பின்னாலே செல்ல,
“சாரிலயே வா தூங்கப் போற அம்மு,”
என்றவனுக்கு, ஸ்டெல்லாவின் உடல் நிலை அறிந்தவனாக அவளை இந்த நிலையில் அவளிடம் நெருங்க விருப்பமின்றி இவன் தூங்க அவசரம் காட்டவும்,
“இல்ல இதோ மாத்தணும்,” என்று ஸ்டெல்லா உறங்க ஏதுவான உடை அணிந்து வருவதற்குள் த்ரூவ் தூங்கியே விட்டான்.
அதில் ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் முழித்தவள், பின் தோள்களை உலுக்கியபடி
“ரொம்ப டயர்டா இருக்காங்க போல” என்று கூறிவிட்டு அவன் அருகே படுத்து இவளும் தூங்கிப்போனாள்.
ஸ்டெல்லா தூங்கியதை உறுதி செய்தவன், கண் விழித்துத் திரும்பி அவளின் மதிமுகத்தைப் பார்த்து
“நிறைய பேசணும்னு நினைச்சி வந்தேன், ஆனா எல்லாம் உன் முன்னாடி மறந்து போச்சு டா அம்மு ” என்று அவள் முகத்தைப் பார்த்துப் பேசியவன்.
மெல்ல அவள் அருகே சென்று அவள் நெற்றியில் மென்மையாக உதடு பதித்து நகர்ந்தவன், “குட் நைட் மை பொண்டாட்டி…” என்று கூறிவிட்டு அவனும் படுத்துத் தூங்கிப்போனான்.
இங்கு இவர்கள், வாழ்க்கை என்னும் படகில் அழகாக அடி எடுத்து வைத்துத் பயனத்தை தொடங்கி இருக்க
இங்கு ஆதிஷின் நிலைமையோ வேறாக இருந்தது.
வாணி ஹாலில் ஆதிஷைப் பார்த்து முறைத்தபடி இருக்க, ஆதிஷிற்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னம்மா? நிக்கச் சொல்லிட்டு முறைச்சிட்டு இருக்க? என்ன ஆச்சும்மா?”
“எத்தனை வருஷமா இதை மறச்சிட்டு இருக்க ஆதி?” என்றவரைப் புரியாமல் பார்த்தவன், அருகில் இருந்த அப்பாவையும் பார்த்துவிட்டு,
“எதைப் பத்தி பேசுறீங்கம்மா? நான் எதை மறச்சேன்?”
“இப்பக்கூட உனக்கு என் கிட்ட சொல்ல தொனலயா ஆதி… அப்போ எனக்குத் தெரியாம எல்லாம் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்து வச்சிருக்கியா?”
“அம்மா கூட நாளு வார்த்தை சேர்த்துப் பேச எரிச்சலாதான் இருக்கும் இப்போ உனக்கு. அதான் நாள் முழுக்கப் பேச அவ வந்துடாலே!”
என்றதும் தான் இவர் பேசும் சாராம்சம் புரிந்தவனாக, மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டவன்.
“அம்மாவுக்கு எப்படி விஷயம் தெரியும்?” என்று யோசிக்கவும்,
“எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறியா…” என்றவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இவன் முழிக்க,
“அதான் இன்னைக்கு மண்டபத்துல அந்தப் பொண்ண அப்படிப் பாத்தியே டா! அவ பின்னாடியே வால் முளைச்ச மாதிரி சுத்திட்டு இருந்தியே. நான் எதுவும் கவனிக்கலன்னு நினைச்சிட்டு இருக்கியா?”
“அச்சோ! அம்மா பார்க்கிற அளவா அவள சுத்தி வந்தேன்” என்று நோந்தவனாக,
“அது வந்து அம்மா…” என்று வாணி அருகே இவன் செல்ல, அவனை கை நீட்டித் தடுத்தவர், “எதுவா இருந்தாலும் அங்க இருந்தே பேசு” என்று அவனை நிறுத்திவிடவும்,
ஆதிஷ் “சூப்பர்!” என்று எண்ணியவனாக ஆழமாக மூச்சை இழுத்தவன்.
ஆனா நீங்க நான் சொல்றதக் கேட்டுற நிலைமையில இல்லன்னு புரியுது” என்று அவன் அப்பாவையும் ஒரு முறை பார்த்தவன்,
“என் கல்யாணம் குடும்பத்தோட மண்டபத்துல நடக்கணுமா இல்ல யாரும் இல்லாம ரிஜிஸ்டர் ஆபீஸ்ல நடக்கணுமான்னு முடிவு பண்ணி வைங்க.
ஆனா எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ரூத் கூடத்தான்”
என்றுவிட்டு இவன் இறுகிய முகத்துடன் மாடி ஏறிவிடவும், வாணி அவன் பேச்சில் கோபமாக சோபாவில் அமர்ந்து,
“அப்போ எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கான் இவன்” என்றவர் அருகில் அமர்ந்த கண்ணப்பன்,
“இப்போ எதுக்கு இத்தனை கோபம் வாணி?”
“இந்த விஷயத்தைக் கேட்டு கோபப்படாம சந்தோஷப்படச் சொல்றீங்களா பின்ன?”
“நம்ம பையன் ஒன்னும் ஸ்கூல் காலேஜ் படிக்கிற வயசுல ஒன்னும் காதல் பண்ணிட்டு வரலையே.
இப்போ ஒரு நல்ல கம்பெனில வேலையில இருக்கான், நாலு இடம் போறவன் எல்லாம் பாத்துட்டு தான இப்போ அவன் வாழ்க்கையில அவன் முடிவு எடுத்திருக்கான், இதுல என்ன தப்பு இருக்கு வாணி?”
“அப்போ அம்மான்னு நான் எதுக்கு இருக்கேன்? இவனுக்கு ஏத்த மாதிரி பொண்ணுப் பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேனா?”
“இப்பவும் கல்யாணம் நீ தானடா பண்ணி வைக்கப் போற?”
“எப்படி? பொண்ணுல இருந்து எல்லாம் அவனே பார்த்துப்பானா? கல்யாணம் மட்டும் நான் பண்ணி வைக்கணுமா?”
“இப்படி சொன்னா அப்படிச் சொல்ற, அப்படிச் சொன்னா இப்படிச் சொல்ற… என்ன தான் யோசிக்கிற ம்மா ?” என்றவர் தொளில் சாய்ந்தபடி,
“இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலயா ங்க ? அந்தப் பொண்ணு போய் லவ் பண்றன்னு வந்து நிக்குறான்!”
“அப்போ உன் பையன் லவ் பண்ணது பிரச்சனை இல்ல, இந்த பொண்ண லவ் பண்ணது தான் பிரச்சனை” என்றவர் மௌனத்தில் விஷயம் பிடிபட,
“ஏன் உனக்கு அந்தப் பொண்ண பிடிக்கல? நம்ம கண்ணு முன்னால வழந்த பொண்ணு நல்ல பொண்ணு வேற!”
என்றவரை முறைத்து பார்த்த வாணி,
“நல்ல பொண்ணு தான், நான் இல்லன்னு சொல்லலையே. ஆனா சொந்தம்னு ஒரு ஆளுங்க இல்லாம இந்த குடும்பத்துல எப்படி பொண்ணு எடுக்க?
“உங்களுக்கும் நான் சொல்ல வர்றது புரியல போங்க,” என்றவர் எழுந்து நின்று யோசித்தவறாக
“ இது வேலைக்காவது நான் பேசாம எங்க அண்ணா பொண்ணுக்கு இவன முடிக்கப் போறேன்”
என்று பேசியவரை கேட்டு, கண்ணப்பன் ஏதோ பேச வர, அதை காது கொடுத்துக் கேட்காமல் வாணி எழுந்து உள்ளே சென்று விட்டார்.
மறுநாள் காலை ஆதிஷ் ஸ்டெல்லாவின் ரிசப்ஷனுக்காகச் சீக்கிரமாக கிளம்பி, மண்டபத்திற்குச் செல்லத் தயாராகக் கீழே இறங்கி வந்தபோது, அங்கே ஹாலில் இவனது மாமா அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்தவனுக்கு முதலில் எதுவும் தோன்றவில்லை; எப்போதும் இந்த பக்கம் வரும் பழக்கம் உடையவர், இன்றும் அம்மாவைப் பார்க்க வந்திருப்பார் போல என்று நினைத்தவன்.
“வாங்க மாமா, எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?” என்று இவன் எப்போதும் போல நலம் விசாரித்தவன்.
“நேரம் ஆகிடுச்சு, வெளிய போயிட்டு இருக்கேன். என்னொரு நாள் வீட்டுக்கு வரண் மாமா? இப்போ போய்டு வரேன்” என்று சொல்லிச் செல்லப் போனவனை,
“எங்க, அந்தப் பக்கத்து வீட்டுப் பொண்ணு கல்யாணத்துக்கா ஆதி…?” என்றவரின் குறளிலும், அவரின் கேள்வியிலும் இவனுக்கு விஷயம் புரிய, அங்கு நின்றிருந்த அவன் அம்மாவைப் பார்த்தான்.
அவர் இவன் முகத்தைப் பார்க்காமல் கோபமாகத் தலையைத் திருப்ப,
“ஓ… பார்க்க வந்ததே!, என்ன தானா?” என்றபடி அவர் எதிரே அமர்ந்து
“கல்யாணத்துக்கு இல்ல மாமா, ரிசப்ஷனுக்கு,” என்று அவரைப் பார்த்த பார்வையில்,
“என்ன நினைச்சிட்டு இருக்கப்பா? உங்க பாட்டி என்னன்னா ஏதோ அவங்க பேத்தி கல்யாணம் மாதிரி அங்க போய் உட்கார்ந்து இருக்காங்க. விட்டா சொத்துல பாதி அங்க கோடுத்துடுவீங்க போலயே!”
என்றவரைப் பார்த்து ஆதிஷ் சிரித்தபடி,
“ஏன் பாதியைக் கொடுத்துட்டு? இந்த முழு சொத்தும் அவளுக்குத் தான?” என்றவனை அவர் அதிர்ச்சியுடன் பார்த்து
“என்ன பேசுற ஆதி? விட்டா தெருவுல போறவ எல்லாருக்கும் சொத்துல பங்கு கொடுப்ப போல!” என்றவரின் பேச்சில் கோபம் வர
“யாரத் தெருவுல போறவன்னு சொல்றீங்க? இது எங்க பாட்டி சொத்து. அப்போ பேரனுக்குத் தான வரும்? அப்போ இந்தச் சொத்துல என் பொண்டாட்டிக்கும் உரிமை உண்டு தான?”
என்றவனின் பேச்சில் அந்த மாமா ஆனவர் கொந்தளித்து
“என்ன பேச்சைப் பேசிட்டு இருக்க? என்ன ஆளுங்க! எவரு ஏதுன்னு தெரியாதவள ‘தெருவுல போறவல எல்லாம் பொண்டாட்டி’ன்னு சொல்லுவியா? இல்ல நாங்க தான் அவள உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்போமா?”
என்றவரை பல்லை கடித்து கொண்டு முறைத்தவன்
“எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி உங்ககிட்ட கேட்டு நான் ஒன்னும் வரல.
என் கல்யாணம் என் விருப்பம். யாரை எப்படித் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும். அத மீறி ஆளுங்க ‘கீளுங்க’ன்னு பேசிட்டு வந்தீங்கன்னா, ஒரே கம்பலெயின்ட் தான்; மொத்தப் போறையையும் உள்ள வச்சிருவேன்!”
என்று மிரட்டியவனை, கோபத்தில் இவர் அடிக்கப் போக, அவரைத் தடுத்துப் பிடித்துத் தள்ளிவிட்ட கண்ணப்பன்,
“என் பையன் மேல கை வைக்கிற உரிமை உங்க யாருக்கும் இல்லை!
ஏதோ என் பொண்டாட்டி அண்ணான்னு உள்ள விட்டா, என் பையனையே என் முன்னாடி மிரட்டுறீங்க! ஒழுங்கா வெளிய போங்க !“
என்று எகிறிக் கொண்டு நின்ற கண்ணப்பனைப் பார்த்து கோபமாக அவர்
“இதுக்கு மேல மரியாதை இல்லாத இடத்தில நான் ஏன் இருக்கப் போறேன்?” என்று அவர் தங்கை பக்கம் திரும்பியவர்.
“நீ பயப்படாதம்மா, உன் பையன் எப்படி அந்தப் பொண்ணைக் கட்டிக்கிறான்னு நான் பார்த்துக்கிறேன், உனக்கு இந்த அண்ணன் நான் இருக்கேன்”
என்று அவர் சென்றுவிடவும், ஷோப்பாவில் இருந்து கைகளில் தூசியைத் தட்டியபடி எழுந்த ஆதிஷ்
“நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கல ல… அம்மா!” என்று கோபமாக வாணியை பார்க்க
“நான் ஏன்டா உன் பேச்சைக் கேட்கணும்? இப்போ வந்த அவளுக்காக உன் சொந்த மாமாவையே அசிங்கப்படுத்துற” என்று கோபமாக இவனைப் பார்த்தவர் அருகே சென்றவன்.
“யார் இப்போ வந்தவ? அவள நான் இருபது வருஷமா பார்த்துட்டு இருக்கேன். அவ மூணு வயசுல அவ எனக்குத் தான்னு ஒரு வெறியோட அவ அக்கா கூட சண்டை போட்டிருக்கேன்.
இதோ இத்தனை வருஷம் அவளுக்காகக் காத்திருந்து இப்போதான் அவளை என்ன லவ் பண்ண வச்சிருக்கேன்.
எனக்கு ரூத் வேணும், அவதான் என்னோட லைஃப். அவளுக்காக என்னலாம் பண்ணிருக்கேன் தெரியுமா?
கேட்டா பயந்துடுவீங்க”
என்று ஒரு வித கோபமாக முகத்தை வைத்துப் பேசியவன், வாணியின் பயந்த முகத்தைப் பார்த்து அவனை அவனே நிதானமாக்கி
“ப்பூ…” என்று காற்றை இழுத்து ஊதியவன்
“நானே நிதானமா இதெல்லாம் உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன், அதுக்குள்ள ஏன் ம்மா…” என்று நெற்றியில் கை வைத்து அமர்ந்தவன்.
நேரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் எழுந்து,
“எனக்குள்ள நிறைய இருக்கு ம்மா, உங்க பையன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ம்மா. நான் இப்படி நானா இருக்கணும்னா அதுக்கு ரூத் வேணும் ம்மா, அவ இல்லாம என்னால…” என்று தலையை உலுக்கிக்கொண்டவன்
“சாரி ம்மா… ரொம்ப ஹார்ஸா பேசிட்டேன் . ரொம்ப யோசிச்சு ஃபீல் பண்ணாதீங்க, ரூத் நல்லவ ம்மா” என்று விட்டு இவன் கிளம்பிவிட்டான்.
“ரூத் நல்லவ தான்! அன ந நல்லவன் இல்ல போலயே டா!
இப்போ எனக்கு உன்ன பாத்தா தான பயந்து வருது. பாவம் அந்த புள்ள உன் கிட்ட மாட்டிட்டு என்ன பண்ண போதோ “ என்ற வாணியின் மைன்ட் வாய்ஸ் ஆதிஷ்கு கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.