இவர்கள் வந்ததும் இவர்களுக்கு பின்னாலயே என்னவோ ஏதோ என்று அனைவரும் வந்து விட,
“என்ன சார், என்ன ஆச்சு? சாப்பிடாம வந்திடிங்க” என்ற ஆதிஷை அழைத்து ஏதோ சொல்லி அனுப்பியவன், மற்றவர்களையும் ஒன்றும் இல்லை என்று சமாளித்து உண்ண அணுப்பி விட்டு
அவர்கள் சென்றதும், ஆதிஷ் இரண்டு கைகளிலும் தட்டுடன் வந்தவன் அதை த்ரூவிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
அதில் ஒரு பௌவுளை ஸ்டெல்லாவிடம் நீட்டினான். ரசம் சாதத்தை நன்றாக மசித்து அதில் ஸ்பூன் போட்டிருக்க, அதற்குத் தொட்டுக்கொள்ள கேரட் மற்றும் உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் என்று அந்தத் தட்டில் இருந்தன.
“இதை சாப்பிடு…. இது சீக்கிரம் ஜீரனம் ஆகிடும் வாமிட் வராது ” என்றவனும், அதே போல ஒரு தட்டை எடுத்து அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அதை பார்த்த ஸ்டெல்லா, “இது என்ன, நீங்களும் என்ன மாதிரி ரசம் சாப்பிடுறீங்களா த்ரூவ்?” என்று அதிர்ந்தவளை முறைத்து பார்த்தவன்,
“என் வைஃப் சாப்பிட முடியாம கஷ்டப்படும் போது, என்ன மட்டும் நல்லா கொட்டிக்கச் சொல்றியா ஸ்டெல்லா…?”
“அது இல்ல த்ரூவ், கல்யாண நாள் அதுவுமா இப்படி ரசம் சாப்பிடுறீங்களேன்னு பார்த்தேன்.” என்றவளை மேலும் முறைத்தவன்
“இல்ல, இன்னைக்கு எனக்கு மட்டும் தான் கல்யாண நாளா ஸ்டெல்லா? உனக்கும் தானே?”
என்றவனிடம் மேலும் என்ன பேச என்று தெரியாது யோசித்தவளுக்கு மேலும் பசிக்கவும்,
“என்னமோ பண்ணிக்கோங்க, எனக்கு இப்போ பசிக்குது” என்று எண்ணியபடி ஸ்டெல்லா உண்ணத் தொடங்கவும், த்ரூவும் அவளை சிறிது நேரம் முறைத்து விட்டு அவள் உண்ண தொடங்கவும் அவனும் உண்ண ஆரம்பித்தான்.
பின் இருவருமாக உணவு உண்டு முடிக்கவும், அவள் தட்டை வாங்கியவன் அதை அவனே கழுவி ஒரு ஓரமாக வைக்கவும், அவனை பார்த்த ஸ்டெல்லா,
ஒற்றை புருவம் தூக்கி, “ஆரம்பம் நல்லா தான் இருக்கு, போகப் போக எப்படி ன்னு பாக்க தான போறேன்” என்று ஸ்டெல்லா சொன்னதை கேட்டு பற்கள் தெரிய சிரித்த த்ரூவ்,
“கல்யாணம் ஆகிடுச்சுன்றதுக்காக நீ சின்ன வயசுல இருந்து வேண்டிக்கிட்டு இருந்த கடவுளை எப்படி எங்களுக்காக சுயநலமா மாத்திக்கச் சொல்ல? அது தப்பு தானம்மா? ஸ்டெல்லா
எங்களுக்கு எப்படி எங்க முருகரும் வினயகரும் இருக்காங்களோ அப்படி தானம்மா, உனக்கு உங்க யேசப்பா… அதான் அவங்களையும் இங்க கூட்டிட்டு வந்திட்டேன்.”
என்று சிரித்தவரை இறுக அணைத்துக்கொண்ட ஸ்டெல்லா,
“நீங்க சூப்பர் அத்தை…. நான் கூட பயந்துட்டே தான் வந்தேன், இங்க எப்படி பழக்கம் என்ன பண்ணச் சொல்லுவீங்களோன்னு, ஆனா இப்போ அந்த பயம் இல்லை அத்தை…”
என்றவள் அவர் கன்னத்தில் முத்தம் கொடுக்கவும், இவற்றை பார்த்து குறளை செரிமிய த்ரூவ்,
“ம்க்கும்….நேரம் போது விளக்கு ஏத்து ஸ்டெல்லா”
என்றவன் சொன்னபடி உள்ளே இருந்த விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி என அனைத்தையும் ஏற்றி முடித்து, வெகு நாட்களுக்குப் பிறகு மனது நிறைய கடவுளை வேண்டினாள் ஸ்டெல்லா.
பின் பாலும் பழமும் கொடுத்துவிட்டு அனைவரும் அமர்ந்து பேசத் தொடங்கிவிட, அமுதா ஸ்டெல்லாவிடம்,
“உள்ள போய் டெரஸ் மாத்திட்டு வந்திருமா” என்றவரை கைபிடித்து அவள் அருகே அமர வைத்தவள்,
“அது பரவாயில்லை, அப்புறம் பார்த்துக்கலாம் அத்தை…” என்று அமர வைத்தவள், இன்னொரு கையில் மணியம்மளைப் பிடித்து வைத்திருந்தாள்.
அவரும் இவளிடம் இருந்து எப்படித் தப்பிக்க என்று தெரியாமல் நெளிந்தபடியே ஈ…. என்று சிரித்து கொண்டு இருக்க,
“பாட்டி நல்லா மாட்டிக்கிட்ட போல ஸ்டெல்லா கிட்ட” என்று எதிரில் ரூத் அமர்ந்து கேலி செய்யவும், அவளுக்குப் பதில் கொடுக்க முடியாமல் முழித்தபடியே தான் இருந்தார்.
எப்போதும் தங்கை ஒருத்தியோடு மட்டுமே தளர்ந்து பேசுபவள், அன்று அனைவருடனும் அப்படி தான் பேசி கொண்டு இருந்தாள்.
நெஞ்சை முட்டும் சந்தோஷத்துடன் அமுதா, ரூத், மணியம்மாள், மதி என்று அனைவரிடமும் இலகுவாகப் பேசிக்கொண்டிருந்தவளுக்கு, நேரம் அப்படியே உறைந்தாள் என்னே என்று தான் தோன்றியது.
தினமும் இனி இப்படித்தான் இருக்குமா என்று பலவாறு யோசனையுடன் பேசி கொண்டு இருந்தவள், மணியம்மாவின் மீதே களைப்பின் மிகுதியால் உறங்கிப்போனாள்.
இரவு முழுக்க தூங்காமல் இருந்ததன் விளைவாக, பேசிக்கொண்டு இருக்கும் போதே தூங்கிப்போனாள் ஸ்டெல்லா.
அவள் தூங்குவதைப் பார்த்த அமுதா, த்ரூவிடம் சொல்லி அவளை அவர்கள் அறையில் படுக்க வைத்து விட்டு வரச் சொன்னார்.
இவனும் அவளைப் பூவாகத் தூக்கி கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான். இவற்றை எல்லாம் மகிழ்ந்த முகமாக கவனித்த ரூத், அமுதா கைகளை பிடித்து,
“ஸ்டெல்லாவ நல்லா பார்த்துக்கோங்க அத்தை…” என்று கண் கலங்கி நின்றவளை முறைத்த அமுதா,
“ஸ்டெல்லாவ மட்டும் பார்த்துக்கணும்னா… அப்போ நீ எங்கம்மா போவ?” என்றவர் கேள்வி புரியாது இவள் முழுக்கவும்,
“இனிமே இது உன் வீடும் கூட தான், உங்க அக்கா இருக்குற இடத்துல தானடா நீயும் இருக்கணும்” என்றவர் அவளை அழைத்துச் சென்று அவள் அறையைக் காட்டினார்.
அதை பார்த்து கண் கலங்கியவள், “இல்லை அத்தை, இது எப்படி… நான் இங்க அக்கா கூட…. உண்மையா இருக்கப் போறேனா?” என்று உணர்ச்சிவசமாக இருக்க, ரூத்தின் முதுகைத் தடவி விட்ட அமுதா,
“உன்ன தனியா அந்த வீட்டுல விட்டுட்டு, உன் அக்கா மட்டும் இங்க தனியா நிம்மதியா இருந்திருப்பாளாடா?”
“ம்ஹூம்…. ஸ்டெல்லா நான் இல்லாம இருக்க மாட்டா” என்றவளின் தலையை வருடியவர்,
“ம்ம்ம் அப்பறம் என்ன, போய் நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க உங்க ரூம்ல” என்று சொல்லி அவர் சென்று விட்டார்.
இப்படியாக அனைத்தும் நல்லபடியாகத் தொடங்கி இருக்க, மாலை போலத்தான் தூக்கத்தில் இருந்து எழுந்தாள் ஸ்டெல்லா.
எழுந்தவளுக்கு ஒரு நிமிடம் அவள் இருக்கும் இடம் யாருடையது என்று புரியாமல் சுற்றிப் பார்த்தவள், அங்கு செவிற்றில் மாட்டிக்கொண்டிருந்த த்ரூவின் படத்தை பார்த்து நிதனமாக,
“ஒ… த்ரூவ் ரூம்மா, நாம எப்படி இங்க வந்தோம்?” என்று மெல்ல எழுந்தவளுக்கு உடல் அசதியாக இருக்க, குளிக்க வேண்டும் போலத் தோன்றியது.
அப்போது அவள் கண்ணில் இவளின் பெட்டி தெரியவும், அதைத் திறந்தவள் சாதாரணமாக ஒரு புடவையை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள் பாத்ரூம் எங்கே என்று
அது மிக பெரிய அறையாகவும், அதே நேரம் மிகவும் அழகாகவும் இருந்தது.
அந்த அறையில் நான்கு கதவுகளைப் பார்த்தவள்.
“என்ன இது, பெட்ரூமுக்குள்ள இத்தனை டோர்? இதுல எது பாத்ரூம்?”
என்று யோசனையுடன் ஒரு கதவைத் திறக்க, அங்கு முழுக்கத் த்ரூவின் துணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன; அதிலேயே ஆள் உயரக் கண்ணாடி ஒன்றும் மாட்ட பட்டு இருந்தது.
“ட்ரெஸ்ஸிங் ரூமா?” என்று அதை மூடியவள் அடுத்த அறையைத் திறக்க முயன்றாள், ஆனால் அது லாக் செய்யப்பட்டு மூடியிருந்தது.
அதை விட்டுவிட்டு அடுத்த ரூமைத் திறக்க, அது பல்கெனி, ஊஞ்சலுடன் அழகாக இருந்தது.
“எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த ரூம்ல பாத்ரூம் எங்கடா?” என்று புலம்பிக் கொண்டே அடுத்த கதவைத் திறக்க, அவள் தேடி வந்த இடம் அதுதான்.
அதில் நெஞ்சில் கை வைத்து நிம்மதியடைந்தவள்,
“ஃபைனலி… கண்டுபிடிச்சிட்டேன்!” என்று உள்ளே நுழைந்தவள், குளித்துவிட்டு இலகுவான புடவை ஒன்றை அணிந்திருந்தாள்.
பின் வெளியே வந்து பார்த்ததில் இவர்கள் அறை மாடியில் இருந்தது தெரிய வந்து; அங்கிருந்து கீழே எட்டிப் பார்த்தாள்.
அமுதா மற்றும் த்ரூவ் தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரே சோபாவில் ஒரு மூலையில் அமுதா அமர்ந்திருக்க, அடுத்த மூலையில் நன்றாக இடம் விட்டு த்ரூவ் அமர்ந்து ஏதோ சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான்.
இவர்கள் அமர்ந்து இருந்த விதத்தைப் பார்த்தவள், ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.
அன்று அந்த அறைக்குள் அமுதா இவளிடம் கூறியதை ஜீரணிக்க முடியாமல், த்ரூவின் முகத்தையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள்.
காதில் அமுதாவின் குரல் மெல்லிய சத்தமாக,
“த்ரூவ பாக்க அந்த ஆளு மாதிரியே இருக்கும்மா, என்னதான் அவன என் பையனு பார்த்தாலும் அவன் முகம் அது அவன் அவனோட பையன் தான்றத எனக்கு நினைவுபடுத்திக்கிட்டே தான் இருக்கும்” என்று குறள் நடுங்க பேசியவர் முகம் கண் முன் நிழலாக விரிந்தது.