அனல்– 43

ஆதிஷ் சொல்லிச் சென்றதைக் கேட்டுத் தொப் என்று சோபாவில் அமர்ந்த வாணியைப் பிடித்த கண்ணப்பன்.

“வாணிம்மா என்னம்மா?” என்று பதற, அவர் “என்னங்க இவன் இப்படிப் பேசிட்டுப் போறான்?”

“எனக்கும் அதான் ஒன்னும் புரியல, இவனும் அந்தப் பொண்ணும் லவ் பண்றாங்க போலன்னு தான் அம்மா சொன்னாங்க. நானும் கூட இப்போதான் லவ் பண்றாங்க போலன்னு நினைச்சேன்.

ஆனா இவன் சொல்றதப் பார்த்தா அந்தப் பிள்ளையக் குழந்தைல இருந்து லவ் பண்றான் போலயே!”

“அட நீங்க வேற! அவன் பேசிட்டுப் போறதப் பார்த்தா லவ் பண்ற மாதிரியா இருக்கு. இந்தத் படத்துல சொல்லு வாங்களே  ஒன்னு, அதுக்கும் மேலன்னு அந்த மாதிரில இருக்கு.”

“இப்போ என்னம்மா பண்ண?”

“வேற என்ன பண்ண, இவன் இப்படி இருக்கும்போது கல்யாணம் தான் பண்ணி வைக்கணும் போல!” என்றவரை முகத்தைத் திருப்பிப் பார்த்த கண்ணப்பன்.

“அதுக்கு முன்னாடி உன் பிள்ளைய ஒரு நல்ல மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்டு வா, இவன் பேசுறதப் பார்த்த பயமா இருக்கு.

அந்த பொண்ண எதவது பண்ணிடுவானோன்னு ”

என்றவரை முறைத்த வாணி, “நம்ம புள்ளையப் பைத்தியம்னு சொல்றீங்களா?”

“நீ இல்லன்னு வேற சொல்லுவியாம்மா? அவன் அந்தப் பொண்ணு மேல பைத்தியமா தான இருக்கான்!”

“அது காதல்ங்க!”

“இப்படி யாரும் காதலிச்சி நான் பார்த்தது இல்ல. நான் முடிவா சொல்லிட்டேன், இவன் டாக்டர்  கிட்ட போய் பார்த்துட்டு அந்த டாக்டர் ஓகே சொன்னாதான் உன் பையனுக்குக் கல்யாணம்!”

என்று அவர் சென்று விட, வாணி ஒன்றும் புரியாதுதான் அமர்ந்திருந்தார்.

இங்கு மண்டபத்தில் வரவேற்பு நன்றாகத் தொடங்கி இருக்க, அங்கே அனைவரையும் வரவேற்றபடி ஆதிஷ் குழப்பமான முகத்துடனே சுற்றி வந்தான்.

அம்மா அப்பா முன் இவன் பேசியது மிக அதிகமோ என்று உள்ளே உறுத்தி கொண்டே இருக்க அதை நினைத்தபடி குழப்பத்துடன் சுற்றி வந்தான்.

அவனை மேடையில் ஸ்டெல்லா பின் நின்று கொண்டு பார்த்திருந்த ரூத்.

“இவன் ஏன் இப்படி ஏதோ மாதிரி இருக்கான்? வீட்டுல லவ் விஷயம் தெரிஞ்சு அவங்க ஒத்துக்கலயா என்ன?” என்று இவள் மனமும் பதற, அவனைத் தான் பதட்டமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின் அங்கும் இங்குமாக ஏதோ அழைந்து கொண்டிருந்த ஆதிஷைப் பிடித்த பாட்டி, “வாட நாம போவோம் மேலே!”

என்று அவனை மேலே இழுத்துச் சென்ற, மணியம்மாள் ஸ்டெல்லாவிற்கு என்று வாங்கி வைத்திருந்த இரு ஜோடி வளையல்களைப் போட்டுவிட, ஸ்டெல்லா,

“ப்ஷ்! யாரு இப்போ உங்கள இப்படி காசு செலவு பண்ணச் சொன்னா?” என்று அதட்ட, அவர் அவளிடம் இருந்து வேகமாக நகர்ந்து த்ரூவ் அருகே சென்று நின்றுகொண்டவர் அவள் பேசியதை காதில் வாங்காத படி.

“இவ ஒருத்தி கிஃப்ட் கொடுத்தா வாங்காம அதட்டிகிட்டு…” என்று முனகியவர், அங்கு போட்டோ எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த போட்டோகிராஃபரைப் பார்த்து,

“அட நீ என்னப்பா போட்டோ எடுக்காம பார்த்துட்டே இருக்க? போட்டோ எடுப்பா!” என்று அவனை அதட்டி போட்டோ எடுத்துக்கொண்டு கீழே இறங்கிவிட, ஸ்டெல்லா ஆதிஷிடம் திரும்பி,

“அவங்கள ஏன் இவ்வளவு செலவு பண்ண விடுறீங்க? நீ கூடயே தான இருக்க, இதெல்லாம் எதுக்கு கேட்க மாட்டியா ?” என்று அவனைப் பிடித்துக் கேள்வி கேட்க,

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன். இப்போது அவளிடம் பேச மூட் இன்றி  எதுவும் பேசாது முறைத்தபடி கீழே இறங்கிவிட்டான்.

கீழே இறங்கியவனை ஒரு ஓரமாக அழைத்துக்கொண்டு சென்ற ரூத்,

“ஆதி… என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க? வீட்டுல ஏதாவது பிரச்சனையா?” என்று பதட்டமான ரூத்தின் முகத்தைப் பார்த்தவனுக்கு

இத்தனை நேரம் இருந்த டென்ஷன் அனைத்தும் குறைந்தது போல தோன்றாவும் லேசாக சிரித்தவன்,

“ஏன்டி நீ இப்போ இவ்வளவு டென்ஷனா பேசுற? ரிலாக்ஸ் டா,” என்று அவளின் கைகளை மென்மையாகப் பற்றியவன்,

“வீட்டுல ஒரு பிரச்சனையும் இல்ல, எல்லாம் ஓகே தான்,” என்று அவளை இவன் சமாதானம் செய்ய

“அப்புறம் ஏன் நீ இத்தனை டென்ஷனா சுத்திட்டு இருக்க?”

“அது ஸ்டெல்லாவ யோசிச்சி தான் எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க, ஆனா அவ சொல்ல மாட்டாளே,” என்றவனின் நிச்சயமான பதிலில் ரூத்திற்கும் பயம் வர,

“அது… இப்போ அவ கிட்ட எதுவும் பேச வேண்டாம் ஆதி… பாப்பா வரட்டும், அப்புறமா பேசிக்கலாம், பொருமையா

எனக்கு நம்பிக்கை இருக்கு எனக்காக வாது அவ ஒத்துப்பா ” என்றதற்கு இவனும் சம்மதத்துடன் தலையசைத்துச் சென்றான்.

அதன் பின் அனைத்து விருந்தினரும் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றிருக்க, இந்த மதி அவனை மட்டும் ஏனோ காணவில்லை.

அவனை காணாது த்ரூவும் அவன் போனுக்கு அழைத்து பேச, இவன் போனை எடுக்க ஸ்டெல்லா,

“இப்போ யாருக்கு த்ரூவ் கால் பண்றீங்க?”

“வேற யாருக்கு டா, இந்த மதிக்கு தான் மொத ஆளா வந்து நிப்பன்னு சொல்லிட்டு போனவன ஏனோ காணோம், ஃபன்சனே  முடிஞ்சிரும் போல ,”

என்று இவன் புலம்ப, போனை எடுத்து அவன் நம்பருக்கு கால் செய்யப் போக, ஸ்டெல்லா,

“இதோ மதி வந்துட்டாங்க த்ரூவ்,” என்றதும் அவனும் நிமிர்ந்து பார்க்க, மதியை பார்த்து அதிர்ந்து நின்று விட்டான்.

அன்வியுடன் வந்தவன், கையில் அவனைப் போலவே ஒரு குழந்தையை பிடித்துக்கொண்டு சிரித்தபடி வந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தபடி இவன் இருக்க, ஸ்டெல்லா,

“இவங்க அன்வீதா தான? இவங்க எப்படி மதி கூட? இவங்க பையனை ஏன் அவரு தூக்கிட்டு வராரு? இவங்கள உங்களுக்கு தெரியுமா?”

“அது அன்வி குழந்தையா ஸ்டெல்லா,” என்று இவன மேலும் அதிரவும் ஸ்டெல்லா

“ம்ம்ம்… த்ரூவ், சிங்கிள் பேரண்டு ன்னு தான் கம்பெனில ஜாயின் பண்ணாங்க, ஏன் நீங்க அவங்கல பார்த்தது இல்லையா?”

என்றதற்கு இவன் மறுப்பாகத் தலையசைக்க, இங்கு இவர்கள் மூவருமாக மேடை ஏறினார்கள்.

தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்த மதியை கோபமாகப் பார்த்த த்ரூவ், அன்வீதாவிடம் திரும்பி,

“என்ன ஞாபகம் இருக்கா மேடம்?” என்று கோபமாகப் பேச, மதி

“டேய் அவ மேல தப்பு இல்ல டா,” என்று அவளுக்கு பறிந்து கொண்டு வந்த மதியை,

“வாய மூடுறியா இல்ல மேடையிலயே அடி வாங்குறியா டா?”

என்றதும் மதி வாயை மூடிக்கொண்டு நின்றுவிட, இவர்களைச் சுவாரசியமாகப் பார்த்தபடி ஸ்டெல்லா, மதியின் மகன் சந்திருவை வாங்கிச் சென்று இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

இன்னொரு பக்கம் அன்வீதாவோ த்ரூவிடம் சங்கடமாகத் தலையை குனிந்தபடி, “அது த்ரூவ்…” என்று இழுக்க,

“என்னமோ நான் பேச வந்தப்போ கேட்டியே, இப்போ தான் நான் கண்ணுக்குத் தெரிஞ்சேனா? உனக்கு இத்தனை வருஷமா நான் கண்ணுக்குத் தெரியலையா?

காலேஜ் முடிச்சதும் மொத வேலையா நம்பரை மாத்திட்ட, அப்புறம் எப்படி டச்ல இருக்க?”

“த்ரூவ் புரிஞ்சிகோ டா, எங்க வீட்டுல பிரச்சனை, அவங்க கிட்ட தப்பிக்க தான் நம்பர் எல்லாம் சேஞ்ச் பண்ணேன், அதுல எல்லார் காண்டாக்டும் மிஸ் ஆகிடுச்சு.” என்று வருந்தியவளை அதற்கு மேலே திட்டவும் தோன்றாது.

மதி பக்கம் திரும்பியவன், “என்னடா பண்ணி வச்சிருக்க அவள?” என்று அவனை அடிக்க வந்தவன் கையை பிடித்து கொஞ்சிதலாக முகத்தை வைத்தவன்

“பிரனாவ், எதுவா இருந்தாலும் நம்ம தனியா பாத்துக்கலாமே, மேடை டா…. ஊரே பாக்குது டா. ஊர் பார்த்தா கூட பறவால, என் பையனும் பாக்குறான் டா.” என்றதும் திரும்பி சந்திருவை பார்த்தவன் கண்களை மூடி திறந்து

“இப்போ போ, உன்ன அப்பறம் பாத்துக்கிறேன்,” என்று விட்டு குடும்பமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இவர்கள் கீழே இறங்கி விட, ஸ்டெல்லா

“அப்போ அன்வீ ஹஸ்பண்ட் மதியா? ஏன் இத்தனை நாள் பிரிஞ்சு இருக்கணும்?” என்று இவள் கேள்வியாகப் த்ரூவை பார்க்க

“என் கிட்ட லவ் ப்ரோப்போஸ் பண்ணும் போது தான் சன்டேன்னு சொன்னா, இப்போ என்னன்னா இவ குழந்தையோட இருக்கா எனக்கே ஒன்னும் புரியல மேரேஜ் ஆச்சா இல்லையா ஒன்னும் தெரியல. என்னவோ நல்லா இருந்தா சரி,”

“ ஓ…. அப்படியா “ என்று ராகம் இழுத்த ஸ்டெல்லா எதோ புரிந்தது போல

“இந்த விஷயத்துல பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ஒன்னு தான் போலையே”

என்றவளை இவன் புரியாமல் பார்க்க,  அவன் பார்வையில் ஸ்டெல்லா

“ என்ன இப்படி பாத்தா நீங்க பன்னது இல்லன்னு ஆகிடுமா. சிங்கப்பூர்ல ஏன் கூட இருந்திட்டு என்ன அப்போன்னு விட்டுட்டு போனவங்க தான நீங்க “

என்றவளின் குற்றச் சாட்டில்  “ டேய் அம்மு என்னடா சொல்ற நான் அப்படி செய்றவனாடா “ என்றவனை குழப்பமாக இவள் பார்க்கவும்

அவளின் கரம் பிடித்து அவள் அருகே அமர்ந்தவன்

“எனக்கு சீரியஸ்ஸா நைட் நடந்தது இப்போ வர எதுவுமே நினைவு இல்ல டா “

என்றவனை நம்பாத பார்வை பார்த்தவள்

“ நம்புற மாதிரி எதாவது சொல்லுங்க த்ரூவ் ,அது எப்படி எதுவும் நினைவு இல்லாம போகும்! அதுவும் அப்படி என் கூட உருகி இருந்துட்டு  “

என்று ஸ்டெல்லா சிவந்து போய் பேச த்ரூவ்  அவளின் சிவந்த முகத்தை ஆசையாக பார்த்து அவள் கன்னம் வருடி

“ஏன் மறந்தன்னு ரொம்ப ஃபீல் பன்ற ஸ்டெல்லா “ என்றவனை நிமிர்ந்து அவள் முறைக்கவும்

“மார்னிங்  எழுந்ததே இந்த ஆதிஷ் கதவ தட்டுற சத்தத்துல தான். அப்பறம் டேட்டா லீக் நியூஸ் னு என்னென்னு உனக்கு தான் தெரியுமே.

அந்த கலவரத்துல  நான் என் உடம்புல இருந்த மாற்றத்தை எதையும் கவனிக்கல டா “

என்றவன் பேச்சில், வெகு நாள் உறுத்தி கோண்டிருந்த த்ரூவின் தவறு  மறைந்து போக

அந்த மகிழ்ச்சியில் அவன் கையை அழுத்தி பிடித்தவள் அவன் கண்களை பார்த்து சிரித்து, அவன் தோளில் ஆசையாக சாய்ந்து கொண்டாள்.

 அழாகான அந்த நிகழ்வையும் படமாக பதித்து அவர் வேலையை சரியாக பார்த்தார் ஃபோட்டோ எடுப்பவர்.

அதன் பின் ரிசப்ஷன் நன்றாகவே முடிவுக்கு வந்தது.

ரிசப்ஷன் முடிந்த கையோடு ரூத் பாட்டியுடன் கிளம்பி மறுவீடு ஏற்பாடு செய்ய கிளம்பி விட்டாள்.

அடுத்த மூன்று நாள் மறுவீடு அத்தனை சந்தோஷமாகச் சென்றது. மறுவீடு முடிந்து ரூத்தை ஸ்டெல்லா அழைத்துச் செல்வதை பார்த்து கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தான் ஆதிஷ்.

அவன் நிலையை பார்த்த வாணி, “இப்போ இந்த நிலையில பாக்குறவன் யாரும் உன்ன பக்கத்து வீட்டு காரன்னு சொல்ல மாட்டான் டா, அந்த பொண்ணோட பாசத் தம்பி ன்னு தான் சொல்லுவாங்க,” என்றதும் கோபமாக ஆதிஷ் அவரை பார்த்து முறைக்க

உதட்டை சுளித்த வாணி, “ம்க்கும் இந்த பார்வைக்கு ஒரு குறையும் இல்ல, எதோ ஊர் விட்டு ஊர் அந்த பொண்ணு போற மாதிரி ல பாத்து வச்சிட்டு இருக்க,” என்று அவனைத் திட்டிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

உண்மையில்  ரூத் இல்லாது ஒரு வாரம் தவித்து தான் போனான் ஆதிஷ்.

ஒழுங்காக வேலை பார்க்க முடியாது உணவு உண்ணாது  என்று இருந்தவனை பார்த்து அவன பெற்றோரே  பயந்து தான் போனார்கள்.

பின் அவளுக்கு தினமும் காலை அழைத்து பேசி என்று என்ன செய்தும் அவள் முகம் காணாது வாடி போய் இருந்தவன்.

பின் ரூத்திடம் கெஞ்சி, கொஞ்சி என்று வீடியோ அழைப்புக்கு சம்மதம் வாங்கி கொண்டவன்

தினமும் காலை எழுந்து முதல் ஆளாக அவளுக்கு தான் அழைப்பான்.

இப்படி தினமும் அவள் முகம் பார்த்து பேசினாலே இவன் நாள் நன்றாக நகரும் என்று அதை பழக்கமாக வைத்திருந்தான்.

இப்படி ஆரம்பித்த வீடியோ கால் அழைப்பு பின் ஒரு நாளில் மூன்று முறை, பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்று நீண்டு கொண்டே போக, ஒருநாள் அது ஸ்டெல்லா கண்களிளும் பட்டு போனது தான் கவலையாக போனது.

இவர்கள் காதல் தெரிந்து ஆதிஷ் பயந்தது போல ரூத்ர தாண்டவம் தான் ஆடி தீர்த்தாள் ஸ்டெல்லா.