அறையின் ஜன்னல் வழியே வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரூத்.
ஆதிஷின் அம்மா அப்பா கிளம்புவதைக் கண்டு, அவர்களை ஆர்வமாக எட்டிப் பார்த்தவள், அவர்களுடன் அவனும் தெரிகிறானா என்று எட்டி எட்டிப் பார்த்தாள்.
அவன் இன்றி இவர்கள் மட்டும் தனியாகப் புறப்படுவது தெரிந்தது.
“ப்ச்… இவன் அப்பா அம்மா கூட கிளம்பலையா?” என்று எண்ணியவளின் உள்ளுணர்வு அவளின் தலையில் வந்து ஒரு கேட்டு வைத்து
“அவன் பண்ணது மறந்துட்டியா ரூத்…” என்று நினைவுபடுத்தவும், கண்களை மூடி அந்த ஜன்னலில் சாய்ந்து கொண்டாள்.
அவன் என்ன செய்தான் என்று தெரிந்தும், அவனது செயல்கள் அனைத்தும் புரிந்தும், மனம் அவனிடமே செல்கிறது.
“அவன் நேசித்தானோ இல்லையோ, அனா நான் அவனை உண்மையா தானே நேசித்தேன்” என்று வருத்தமாக நினைத்துக் கொண்டிருந்தவள்,
“ரூத்…” என்ற ஆதிஷின் குரலைக் கேட்டு உற்சாகமாகத் திரும்பியவள், அவனை பார்த்ததும் முகத்தை கோபமாக விருப்பம் இல்லாதவள் போல மாற்றி கொபமாக அவனை பார்த்து
“இங்க என்ன பண்ற?” என்று வெறுப்புடன் பேசினாள்
“அது… நான் சார் கிட்ட, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு உன் ரூம் எங்கேன்னு கேட்டு தான் வந்தேன்” என்று தயக்கத்துடன் அவள் முகத்தைப் பார்க்க, ரூத்,
“சரி சொல்லு, இப்போ என்ன சொல்லி ஏமாத்த வந்திருக்க?” என்றவளின் பேச்சில், இவனுக்கு எரிச்சலாக பல்லை கடித்துக் கொண்டு
“ஏமாத்துறன், ஏமாத்துறன்னு சொல்லாத ரூத்! அப்படி நான் என்ன சொல்லி உன்ன ஏமாத்துனேன்?”
“என்னவா! லவ் பண்ற மாதிரி நடிச்சி ஏமாத்தத் தானே செஞ்ச?”
“நான் அப்போ சொன்னத தான் இப்பவும் சொல்றேன், நான் உன்ன உண்மையாவே லவ் பண்னேன் இப்பவும் பண்றேன் எப்பவும் பண்ணிட்டு தான் இருப்பேன் !”
என்றவனின் பேச்சை ஜில்லென்று மனது குளிர்ந்தாளும் மூளை அவன் பேச்சை நம்பாது
“அப்போ ஸ்டெல்லா…” என்று ஆரம்பித்தவளை கை நீட்டித் தடுத்தவன்,
“நான் உன்ன, ரொம்ப சின்ன வயசுல இருந்து, அதாவது எனக்கு லவ்னா என்னன்னு தெரியுற வயசுக்கு முன்னாடி இருந்து லவ் பண்றேன்.
எனக்கு நீ வேணும், உன் கூட சந்தோஷமா வாழணும்னு ஆசை. ஆனா உங்க அக்கா உன்ன பாக்கக் கூட விடாம இருந்தா, அதான் அவள உன்ன விட்டு பிரிக்கணும்னு பார்த்தேன்.
இதுல எனக்கு எந்த தப்பும் தெரியல ”
“உங்க லவ்-க்காக என் ஸ்டெல்லா வாழ்க்கையில ரிஸ்க் எடுத்தது தப்பா தெரியலயா?”
“உன் மனசாட்சியத் தொட்டுச் சொல்லு, நான் பண்ணது அவ்வளவு பெரிய தப்பா உனக்குத் தெரியுதா?”
“அது… எங்க மாமாவா இருக்கப் போயி ஓகே இல்லனா என் ஸ்டெல்லா நிலம…”
என்றவளைக் கோபமாக முறைத்துப் பார்த்தவன்,
“ஸ்டெல்லா ரொம்ப வருஷமாத் த்ரூவ லவ் பண்ணிட்டு இருக்கா, இருந்தும் ஒரு தடவை கூட அவ அவளோட வேலைய தாண்டி சார் கிட்ட அவ லவ் பண்ற மாதிரி காட்டினது இல்ல.
ஏன் சார் கூட அவ இதுவரை சிரிச்சுப் பேசுனது கூட இல்ல, ஏன் தெரியுமா?”
என்றவனை இவள் புரியாமல் பார்க்க, “ஏன்னு உனக்கு தெரியாது…” என்று நக்கலாகச் சிரித்தவன்,
“உனக்குத் தெரியும், இருந்தாலும் வெளிய காட்ட மாட்ட… ரைட்”
என்றவனின் பார்வையில் தலையைத் திருப்பியவள், “இல்ல, எனக்கு எதுவும் தெரியாது!” என்று உறுதியாகவே பதில் கொடுக்க
“ஓ… எதுவும் தெரியாமத்தான் ஸ்டெல்லா கிட்ட, இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கலனா நான் வீட்டை விட்டுப் போய்டுவேன்னு மிரட்டுனியா?” என்றவனை அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தவள்
“உனக்கு எப்படித் இது தெரியும்…” என்றவளைப் பார்த்து மீண்டும் சிரித்தவன்
“உனக்குத் தெரியும் ஸ்டெல்லா, உனக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்னும்,
அவ உனக்காக தான் எப்பவும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான்னும் உனக்கு தெரியும்,” என்றவன் பேச்சை கேட்டு கண்கள் சிவக்க நிமிர்த்திப் பார்த்த ரூத்
“தெரியும் தான்… அவ எனக்காகத்தான் இப்படி இருக்கான்னு எல்லாம் தெரியும் தான். அதுக்கு நான் என்ன பண்ண?
பாட்டிய வச்சி மாப்பிள்ளை பாக்க சொன்ன
பாட்டி வச்சி அவ கூட பேசிப் பாக்க சொன்ன, ஆனா எதுவும் ஸ்டெல்லா ஒத்துக்கலையே!” என்று பாவமாக உதட்டை பிதுக்கி நின்றவளின் நிலை பாவமாக இருப்பினும் பல்லை கடித்து கொண்டு
“பாட்டி வச்சி இத பண்ண சொன்ன, பாட்டிய வச்சி அத பண்ணச் சொன்னன்னு சொல்றியே, நீ என்ன பண்ண?
ஒரு தடவையாவது அவகிட்ட போய் பேசிப் பார்த்தியா? இப்போ பேசினா மாதிரி அப்போ ஏன் பேசல?”
என்றவனின் பேச்சில், கண்ணிலிருந்து கண்ணீர் வழிய அவனை ஏறிட்டுப் பார்த்தவள்.
“ஏன்னா…. ஸ்டெல்லா… என்ன விட்டுப் போகக்கூடாதுன்னு நினைச்சேன்,” என்று தலையைத் குனிந்து கோண்டு
“எனக்குன்னு அவ மட்டும் தான்…. எனக்கு எதுவா இருந்தாலும் அவ தான் பார்த்துப்பா.
எனக்கு என்ன பிடிக்கும், நான் எதுக்கு பயப்படுவேன்னு எல்லாமே அவளுக்குத் தெரியும். அப்படி இருக்க
அவ இல்லாம நான் தனியா என்ன பண்ணுவேன்?”
என்று முகம் சிவக்க ஆதிஷை நிமிர்த்திப் பார்க்க, அந்தப் பார்வையில் அவள் அருகே வந்தவன்.
“ரூத்…” என்று அவள் கன்னம் நோக்கி கையைத் தூக்கியவன், அவளைத் தொடாமல் அப்படியே அவன் கைகளை மூடிக்கொண்டு மீண்டும் கையை கீழே இறக்கிவிட்டான்
“ஸ்டெல்லா நான் சொல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு தெரியும், நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன்,”
என்று கண்களைத் துடைத்துக்கொண்டவள்.
“ கொஞ்ச நாள் போகட்டும் காலேஜ் முடிச்சிட்டு அவ கூடவே நானும் ஒரே குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சு வச்சிருந்தேன்,”
“அது எல்லாம் உன்னைப் பார்க்குற வரைதான் ஆதிஷ். உன்னைப் பார்த்து உன் கூடப் பழகுன பிறகு என்னால முன்ன மாதிரி யோசிக்க முடியல. நீயும் வேணும் ஸ்டெல்லாவும் வேணும்னு தோணுச்சு.
ரொம்ப யோசிச்சேன் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன், அப்போதான் ஸ்டெல்லா பிரக்னென்சி எல்லாம் தெரிய வந்தது.
ஸ்டெல்லா எனக்காக ஏன் அவக் காதலை விடணும்னு யோசிச்சேன். அந்த பாப்பா க்கு ஒரு குடும்பம் வேணும்னு யோசிச்சேன்.
ஏன் ஸ்டெல்லா என்ன மாதிரி இல்லன்னு யோசிச்சன். என் காதல்னு வரும்போது நான் சுயநலமாத் தானே யோசிச்சேன்?
ஏன் ஸ்டெல்லா மட்டும் அப்பவும் என்னைப் பத்தி யோசிச்சா? அப்போ நான் அவளை மாதிரி யோசிக்கல தான ஆதி…”
என்று அழுதவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாது.
அவள் தலையை ஆதிஷ் வருடி “ரூத்…. அழாத டா…” என்று சமாதானம் செய்ய, அவன் தோளில் ரூத் முகம் புதைத்து அழுது தீர்த்து விட்டாள்.
“ஏன் ஸ்டெல்லா வாள அவக் காதலை விட முடிஞ்சதுன்னா அவன் ஸ்ட்ராங் ரூத்.
இப்போ கூட நீ அன்னைக்கு மிரட்டுனதுனால அவ ஓகே சொல்லிருக்க மாட்டா. அவளுக்கா இது சரியான முடிவுன்னு தோணி இருக்கும் அதான் ஓகே சொல்லிருப்பா ரூத்.”
“ஆமா…. அவ ஸ்ட்ராங் தான்” என்று தேம்பியவளைத் தள்ளி நிறுத்தியவன்
“அதுனாலதான் சொல்றேன், ஸ்டெல்லாவை நான் அன்னைக்கு அந்த அறையை சார் ஓட பூட்டி வைக்காம இருந்திருந்தா, எத்தனை வருஷம் ஆனாலும் ரெண்டு பேரும் தனித்தனியா பார்த்துட்டு இருந்திருப்பாங்களே தவிர ஒன்னு சேர்ந்திருக்க மாட்டாங்க.
அதே மாதிரி அந்த அறையில சார்ர தவிர வேற யார் இருந்திருந்தாலும் உங்க அக்கா அவன ஒரு வழி ஆக்கி அடிச்சி துரத்தி இருப்பாளே தவிர அவளுக்கு ஒன்னும் ஆகிருக்காது.
சோ… எனக்கு நீங்க எல்லாம் நன்றிதான் சொல்லணும்”
என்றவனை இவள் முறைத்து பார்க்கவும் ஆதிஷ்
“வெயிட்… வெயிட்… திருப்பி ஆரம்பிக்காத, நான் சொல்ல வந்த த சொல்லிட்டுப் போய்டுறேன், அப்புறமா நீ என்ன வேணா பேசு” என்றதும் ரூத் கை கட்டி என்ன என்பது போல அவனைப் பார்க்கவும்.
“நான் நம்ம விஷயத்தைப் பத்தி பாட்டி கிட்ட பேசிட்டேன், சார் உம் ஓகே சொல்லிட்டாங்க. சோ… பாட்டி எப்போ வேணா பேசலாம் நம்ம விஷயத்தைப் பத்தி ஸ்டெல்லா கிட்ட. அப்பவும் உனக்கு என்மேல கோபம் குறையலன்னா என்ன பிடிக்கலன்னு சொல்லிடு.”
என்றதும் ரூத் வேதனையாக அவனைப் பார்க்கவும், “நீ அப்படிச் சொல்ல மாட்டன்னு நம்புறேன்” என்று பெருமூச்சை இழுத்து விட்டவன்.
“ஓகே…. பாய் ரூத், நான் எங்க வீட்டுல பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன். தயவு செய்து ரிப்ளை பண்ண லனாலும், பரவாயில்லை பிளாக்ல இருந்து நம்பரை எடு” என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.
அவன் சென்று விட்டான். இவளுக்குத்தான் அவன் சொல்லிச் சென்ற விஷயத்தில் தலைசுற்றிப் போனது.
“என்னது நான் லவ் பண்றது பாட்டிக்குத் தெரியுமா?” என்று ஷாக் ஆகியிருந்தாள்.
இங்கு ஹாலில் மறுநாள் ரிசப்ஷன் வரை மணியம்மாள் ரூத்துடன் இங்கயே இருக்கிறேன் என்று சொல்லிவிட மற்ற அனைவரும் கிளம்பி அவரவர் வீடு சென்றனர்.
இங்கு இரவு உணவு முடித்து விட்டு சிறிது நேரம் அமுதா, பாட்டி, ரூத், ஸ்டெல்லா என்று ஹாலில் அமர்ந்து நால்வரும் பேசிக்கொண்டு இருக்க, பாட்டி
“ரூத் நேரம் ஆச்சு பாரு, போய் பெட் கொஞ்சம் சரி பண்ணு போ…” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு சுற்றிப் பார்த்தவர்
“ஸ்டெல்லா…” என்று ரகசியக் குரலில் அவளை அழைத்து விட்டு அவள் அருகே சென்றவர்.
“பாத்து ம்மா…. இப்போ நாளு போயிட்டு இருக்கு, பாத்து…” என்று சொன்னவரை மேலிருந்து இவள் பார்த்து வைக்கவும், மணியம்மாள்
“இவ ஒருத்தி எல்லாத்துக்கும் ஒரே மாதிரி பாத்து வச்சிட்டு..” என்று முனுமுனுத்தவர் அமுதா கையை பிடித்து
“நீங்களாவது நாளு வார்த்தை பக்குவமும்மா அவளுக்கு புரியுற மாதிரி சொல்லி அனுப்பு ம்மா” என்று அமுதாவை பார்க்க, அவர் அதற்கு மேலே முழிக்கத் தான் செய்தார்.
அவரே வாழ்க்கை என்ற பெயரில் போர்க்களத்தைப் பார்த்து வந்தவர், அவரிடம் சென்று பக்குவம் சொல்லச் சொன்னால் அவர் என்ன சொல்லுவார்?
திருதிரு என்று முழித்தவர் மணியம்மாளின் பார்வையில்
“அது வந்து ம்மா…. உனக்கு அங்க காத்து வரலன்னா… இல்ல ரூம் பிடிக்கலன்னா…. இறங்கி என் ரூமுக்கு வந்துடு ம்மா” என்று பேசிவரை மணியம்மாள்
“என்னது…” என்று அதிர்ந்து பார்க்க அமுதா, அவர் பார்வையில் “ஏதாவது தப்பா சொல்லிட்டோமோ…” என்று மணியாம்மாளைப் பதிலுக்கு பார்க்க, என்று இருவரும் திடுக்கிட்டுச் சொதப்பிக் கொள்ள.
இவர்களைப் பார்த்து மறுப்புடன் தலையசைத்த ஸ்டெல்லா,
“எங்க ரூமுக்குத்தானே நான் போறேன். அதுக்கு ஏன் இத்தனை பதட்டம்? ஏதாவதுன்னா த்ரூவ் பார்த்துப்பாங்க,” என்று சொல்லிவிட்டு இவள் பாட்டுக்கு எழுந்து செல்லவும்.
“என்ன இது…, அது சரி இவ பாட்டுக்கு போறா. அங்க போய் என்ன பண்ண போறாளோ…” என்று அமுதாவைத் திரும்பப் பார்க்க, அவருக்கு ஒன்றும் புரியாமள் என்ன என்பது போல மீண்டும் அவரை பார்க்கவும்
“நல்ல மாமியார்…சரியா தான் செட்டு சேந்திருக்கிங்க….சரி போய் தூங்கும்மா,” என்று அவர்களும் எழுந்து சென்று விட்டனர்.
இங்கு சாதாரணமாக அறைக்குள் நுழைந்த ஸ்டெல்லா, அறையைச் சுற்றித் த்ரூவைத் தேடி அவனை காணவில்லை என்றதும்
“எங்க த்ரூவ்…” என்று ஒவ்வொரு கதவாகத் திறந்து பார்த்தவள், பால்கனி கதவைத் திறந்து அங்கேயும் பார்க்க, அவனை அங்கும் காணவில்லை.
“ரூமுக்குத்தானே வந்தாங்க…” என்று யோசித்தவளை வருடிச் சென்ற வாடை காற்றில் அப்படியே அந்த இரவை ரசித்தபடி அங்கேயே அவள் நின்று விட்டாள்.
நிலவோடு நட்சத்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டு வானை அலங்கரித்து இருக்க, அதற்கு மனம் கூட்டும் வகையில் ஜில்லென்று காற்று வீச, கைகளைக் கட்டிக்கொண்டு அவற்றை ரசித்து நின்று கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.
அந்த இரவின் ஓவியத்தை இவள் கண்ணிலிருந்து மறைக்க, ஒரு கருப்புத் துணியால் இவள் கண்ணைக் கட்டவும்,
“யாரு…” என்று ஸ்டெல்லா பதறுவதைப் பார்த்து,
“ஹேய்… ஸ்டெல்லா நான் தான்…” என்றவனின் குரல் இவள் காது ஓரம் சூடாக படவும், அதில் உடல் சிலிர்க்க,
“என்ன த்ரூவ் இது? ஏன் இப்போ கண்ணைக் காட்டுறீங்க?” என்று கட்டை கையால் இவள் வருடி அவனை பிடிக்க பார்க்க,
த்ரூவ் அவள் கையில் அக படாது அவள் பின்னேயே நின்றவன்.
“சும்மா ஒரு சின்ன கிஃப்ட், என் வாழ்க்கைக்குள்ள வந்த என் தேவைக்காக,” என்று த்ரூவ் பேசியதை கேட்டு உதடுகள் விரியச் சிரித்தவள்,