Wednesday, November 11, 2026

    இதழின் மொழியானவனே

    அத்தியாயம் 13 : திகைத்து நின்றவனை பார்த்த விவேக் ”அதி நமக்கு டைம் அதிகம் இல்லை” என்று உலுக்க, திகைப்பில் இருந்து மீண்டவனின் கண்கள் அந்த திரையையே பார்த்திருந்தது. “கேமரா நம்பர் த்ரீயை ஜூம் பண்ணுங்க” என்றவன் எதையோ ஆழ்ந்து நோக்க, “என்னாச்சு அதி?” “விவேக் இங்க பாரு..! மொழி லிப்ட்கிட்ட போன டைமும், ரூம்க்கு போன டைமும்..” என்று...
    அத்தியாயம் 12: யுகாவின் அறையில் இருந்த மொழிக்கு முகம் சற்று வெளிறியிருந்தது. நிச்சயம் விமலை அதுவும் இப்படி ஒரு நிலையில் பார்ப்பாள் என்று அவள் நினைக்கவில்லை. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்திருக்க, எதுவும் முடியாமல் அப்படியே தான் இருக்கிறது என்று நடப்பு அவளுக்கு புத்தியில் உரைத்தார் போல் கூறியிருந்தது. “ஹேய் மொழி! ஆர் யு ஓகே”...
    அத்தியாயம் 11 : அகன் அமைதியாய் அவர்களைப் பார்த்திருக்க, “உங்க ஹாஸ்பிட்டல்ல விமல்னு   ஒரு பேஷன்ட் அட்மிட் ஆகியிருக்கான்ல டாக்டர். அவன் எதுக்காக இங்க அட்மிட் ஆகியிருக்கான்? அவனுக்கு என்ன ஹெல்த் இஷ்யூஸ்?” என்றான் அகன். “நீங்க எந்த விமலை சொல்றிங்க?” என்றான் அகன். தன் மொபைலில் இருந்த போட்டோவைக் காட்டினான் விவேக். “எஸ், இங்க தான் அட்மிட் ஆகியிருக்காங்க. ஹார்ட்...
    அத்தியாயம் 10 : டிரைவர் சடன் பிரேக் அடிக்க, “என்னாச்சு விவேக்?” என்ற படி நினைவில் இருந்து மீண்டிருந்தான் அதிதீரன். “ஒண்ணுமில்லை அதி, ஒருத்தன் ராங் ரூட்ல ஏறிட்டான்”  என்ற விவேக், “எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே போங்க” என்றான் டிரைவரிடம். அதி தனக்கு வலது புறத்தில் அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்க்க, அவளோ நன்றாய் தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு...
    அத்தியாயம் 9: “என்ன தீரன் சொல்றிங்க?” என்ற ராஜ ராஜனுக்கு தீரன் சொல்லும் விஷயத்தில் உடன்பாடில்லை. “அங்கிள் பிளீஸ்! உங்க பொண்ணோட சேப்டிக்கு நான் பொறுப்பு. என்னை நம்பி அனுப்பி வைங்க. நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்திடுவேன்” என்று பொறுமையாய் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேச்சியில் யோசனைக்கு சென்றவர்,”விஷயம் என்னன்னு சொல்லாம திடீர்னு கோயம்புத்தூர் கூட்டிட்டு போறேன்னு...
    அத்தியாயம் 8: “சார் ஒரு நிமிஷம்” என்ற விவேக் அவனைத் தனியாய் அழைக்க, “என்ன விவேக்?” “அதி என்ன நடக்குது இங்க? என்கிட்ட இருந்து மறைச்சுட்ட இல்ல. நான் அவ்வளவு தூரம் கேட்டும் நீ வாயைத் திறக்கவேயில்லை” என்றான் விவேக். “நடக்குற விஷயத்தை சொல்லலாம். நடக்கவே நடக்காதுன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்தை எப்படி சொல்ல முடியும்?” என்றான் தீரன். “நிஜமாவே இந்த...
    அத்தியாயம் 7 : தீரனிடமிருந்து வந்த அழைப்பை யோசனையுடன் பார்த்திருந்தார் ராஜ ராஜன். “மாப்பிள்ளை” என்றார் எடுத்த எடுப்பில். மொழி விஷயம் தெரிந்த பிறகு அவனிடம் பேசவே அப்படி ஒரு தயக்கம் அவருக்கு. “சாரி சார்..! நான் அபீஷியலா கால் பண்ணியிருக்கேன்” என்றான். “சொல்லுங்க தீரன்” என்றார் ராஜனும் உடனடியாக. “உங்க பொண்ணு அவங்க காதலிக்கிற பையனோட இங்க கமிஷனர் ஆபீஸ்...
    அத்தியாயம் 6: “அதி தீரன்” என்று மீண்டும் அவன் பெயரை உதடுகளுக்குள் உச்சரித்துப் பார்த்தாள். அவள் தன் பெயரை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்ப்பதைக் கண்ட தீரனுக்கு இதழோரம் ஒரு சிறு வெற்றுப் புன்னகை வந்து போனது. “உட்காருங்க” என்றான் இருவரையும் பொதுப்படையாய். “இல்ல சார் இருக்கட்டும். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்னு நம்பி இங்க வந்தோம். வந்து பார்த்தா இங்க...
    அத்தியாயம் 5 : அங்கே நரேந்திரனோ ராஜனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். “என்ன சொல்றிங்க நரேந்திரன்?” என்றார் கோபத்துடன். “தப்பா எடுத்துக்க வேண்டாம் ராஜன் சார். இதை இதோட முடிச்சுக்குவோம்” என்றார் நரேந்திரன் பொறுமையாக. “எதை முடிச்சுக்க சொல்றிங்க. உங்க பையன் தான் மாப்பிள்ளைன்னு சொந்த பந்தம் எல்லாருக்கும் சொல்லிட்டேன். அரசியல் வட்டாரத்துலயும் விஷயம் கசிய ஆரம்பிச்சுடுச்சு. இப்போ வந்து இப்படி...
    மூன்று நாட்களுக்குப் பிறகு, சென்னையில் தன் வீட்டில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தவளின் முகம் முழுவதும் வேதனை படிந்திருந்தது. கப்பலில் நடந்த விஷயங்கள் ஒரு பக்கம்,வீட்டில் நடந்து கொண்டிருந்த நிச்சயதார்த்த ஏற்பாடுகள் ஒரு பக்கம் என அவளைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. அவள் தந்தை அமைச்சர் ராஜராஜனை பார்க்க வரும் கூட்டத்திற்கு அளவில்லாமல், வீடு முழுவதும் ஆட்களும், வீட்டின்...
    அத்தியாயம் 4 : அன்று முழுவதும் அதிதீரனின் அறையில் தான் இருந்தாள் வெண்மொழி. உடன் தோழிகளும் இருந்தனர். அப்போது சென்றவன் மறுநாள் தான் அவளைப் பார்ப்பதற்காக அந்த அறைக்குள் சென்றான். அவனை வால் பிடித்த மாதிரி விவேக்கும் உடன் சென்றிருந்தான். “இப்போ ஓகே வா?” என்றான் நந்திதாவிடம். “இப்போ ஓகே ஆகிட்டா ஹேண்ட்சம். நாங்க எங்க ரூம்க்கு ஷிப்ட்...
    “அதி அங்க பாரு, கடல்ல யாரோ குதிச்சுட்டாங்க” என்ற விவேக்கின் பதட்டமான குரலில் வெளியே வந்த அதிதீரன் விவேக் கட்டிய இடத்தைப் பார்த்தான். “இந்நேரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிருக்கும். அவங்க பார்த்துப்பாங்க. நீ ஏன் பதட்டப்படுற விவேக்” என்றான் சாவகாசமாய். “இல்ல அதி, விழுந்தது ஒரு பொண்ணு மாதிரி இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்...
    அத்தியாயம் 3 : தன்னுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் வெண்மொழி. அவள் அறையில் இருந்த பால்கனி மட்டுமே இந்த இரண்டு நாட்களாக அவளின் உலகமாக இருந்தது. வெளியே செல்ல பிடிக்கவில்லை. யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. தன்னை யாரோ பின்தொடர்வதைப் போன்று தோன்றியது அவளுக்கு. நந்திதாவும், டயானாவும் எவ்வளவு அழைத்தும் அவள் செல்லவில்லை. தாரிக் இரண்டு நாட்களாக அவளிடம்...
    நேரம் போவதே தெரியாமல் வெண்மொழி அதில் ஆழ்ந்துவிட, அந்த மங்கிய ஒளியில் வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. திடீரென்று ஏதோ அசௌகரியமாக உணர்ந்தாள். இடுப்பில் ஏதோ ஊர்வதைப் போல் இருந்தது. அந்த உணர்வு சட்டென்று அவளுக்கு எதையோ உணர்த்த, அதற்குள் அவளின் இடுப்பில் ஊர்ந்த கை அவள் எதிர்பார்க்காத நொடி அவள் முன்னழகை பற்றியிருந்தது. உடல்...
    அத்தியாயம் 2 : தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டும் காணாதவன் போல், உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையில் வேடிக்கை பார்த்திருந்தான் அதிதீரன். “நீ பண்றது உனக்கே சரின்னு தோணுதா அதி? உன்கிட்ட இப்படியொரு பிகேவியரை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான் விவேக் கோபமாய். நண்பனின் குற்றச்சாட்டில் திரும்பி அவனைப் பார்த்தவன், எதுவும் சொல்லாமல்...
    “சாரி ப்ரோ..! நீங்க போங்க” என்றவன் மேற்கொண்டு வெண்மொழியிடம் பேசிக் கொண்டிருக்க, அதாவது ஒரு முத்தத்திற்காக கெஞ்சிக் கொண்டிருக்க, அவனின் தோள் மீது கை போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்த அந்த பீர் பாட்டில்காரன், “பாஸ்.. மயிலே மயிலேன்னா இறகு போடாது. அதுக்கு ஒரு வழிதான் இருக்கு. நமக்குத் தேவைன்னா இப்படி அசால்ட்டா இழுத்து, இப்படி...
    இதழின் மொழியானவனே..! அத்தியாயம் 01: சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த அதிநவீன சொகுசுக் கப்பல் மூன்று நாள் தொடர் கடல் பயணத்திற்கு பிறகு தாய்லாந்தின் புக்கெட் தீவினை நோக்கி சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலப்பரப்போ, மலைகளோ,மரங்களோ இல்லாமல் சுற்றிலும் நீல நிறக் கடல் மட்டுமே காட்சியளித்துக் கொண்டிருந்தது. தூய்மையான சூரிய வெளிச்சத்தில் கடல் நீர்...
    error: Content is protected !!