அத்தியாயம் 30 :

நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்த பிரதான மண்டபம் பல முக்கிய பிரமுகர்களின் வருகையால் நிறைந்திருந்தது. பல அரசியல் புள்ளிகள், காவல் துறையினர், தொழில் துறையினரின் வருகை என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

அதிதீரன்-வெண்மொழி வரவேற்பு நிகழ்ச்சி ஒரு பெரிய திருமண விழாவாகவே நடந்து கொண்டிருந்தது. மேடையில் தன் அருகில் அழகோவியமாய் நின்றிருந்தவளை நிதானமாய் பார்க்கக் கூட நேரமின்றி அவ்வளவு பிசியாக இருந்தான் அதிதீரன்.

வானதியை கையில் பிடிக்க முடியவில்லை. ‘என் ஒரே பையனின் ரிஷப்ஷன்’ என்ற அவரின் டிரேட் மார்க் டயலாக்குடன் பிசியாக இருந்தார். வெண்மொழி வீட்டில் அனைவரின் மனதிலும் கவலை இருந்தாலும் அதை யாரும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவர்களின் மனநிலை கருதி வரவேற்பு வேண்டாம் என்று சொன்ன தீரனை அவர்கள் தான் கட்டாயப் படுத்தி சம்மதிக்க வைத்திருந்தனர்.

ராஜன், தன் பெரிய மகளுக்கு செய்ததைப் போலவே மொழிக்கும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட, தன் பெற்றோரின் ஆசையும் அதுவாக இருக்க அதற்கு மேல் தீரனும் மறுக்கவில்லை. இதோ உறவுகள், நண்பர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

விஷயத்தை கேள்விப்பட்டு கடந்த ஒரு வாரமும் அரசியல் வட்டாரமும் காவல் துறை வட்டாரமும் பரபரப்பாகத் தான் இருந்தது. நாளிதழ்கள் தினம் ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்க, செய்தி சேனல்கள் தினம் ஒரு இன்வெஸ்டிகேஷன் அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருந்தன. பாதிக்கப்பட்ட நபர்கள் நிறைய பேர் புகார் அளித்திருக்க, அனைத்தும் சுகந்தனுக்கு எதிரான சாட்சியங்களாகவே மாறிப் போனது. வழக்கு நடந்து கொண்டிருந்தது. நம் நாட்டில் தான் எந்த வழக்கும் உடனே முடியாதே.

சஞ்சையும் பிரகதியும் நிற்க நேரமின்றி பிசியாக இருக்க, விவேக்கோ அமைதியாய் அனைத்தையும் பார்த்திருந்தான்.

இதில் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன் விஹான் சற்று ஒதுங்கியிருக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த விவேக் என்ன நினைத்தானோ வேகமாய் அவன் அருகில் சென்றிருந்தான்.

“என்னாச்சு? ஏன் இங்க தனியா நிக்கிற? ஸ்டேஜ்ல இருக்குறது உன் அக்கா மாமா தான? இது உன் வீட்டு பங்க்ஷன் தான? அப்பறம் ஏன் யாரோ மாதிரி நிக்கிற விஹான்” என்றான் அக்கறையுடன். அவன் குரல் தான் அக்கறையுடன் இருந்ததே தவிர, முகம் இலகுவாய் இல்லை.

“அப்படியெல்லாம் இல்லை…” என்று தயங்கியவன் அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் நிறுத்த,

“அண்ணான்னு சொல்லு” என்றான் விவேக்.

“ஜஸ்ட் சும்மா தான் இங்க நிக்கிறேன்ண்ணா” என்றான் விஹான்.

“வாய் தான் அப்படி சொல்லுது. முகம் வேற சொல்லுது. தப்பு பண்ணது உன் அப்பா தான். நீ இல்லை. உன்னை யாரும் தப்பா நினைக்கவும் மாட்டாங்க. சோ நீ எப்பவும் போல இரு” என்றான் விவேக்.

“ம்ம்” என்றவன் மீண்டும் தயங்க,

“வா” என்று அவனை அழைத்து சென்றவன்,

“இவன் கீழ யார் கூடவும் ஒட்டாம தயங்கி தயங்கி நிக்கிறான் அதி. இவனை என்னன்னு கேளு?” என்றான் தீரனிடம்.

விஹானை முறைத்த தீரன்,”உனக்கு நான் பல தடவை சொல்லிட்டேன் விஹான். நாங்க அப்படி எதுவும் நினைக்கலை. நீ சின்னப் பையன். எப்பவும் பிரகதிக்கும் மொழிக்கும் நீ தம்பி தான். அதை மறந்துடாத. இந்த வீட்டு வாரிசு நீ. உன்னை அப்படித்தான் எல்லாரும் பார்க்குறாங்க. நீதான் விலகிப் போற” என்றான் தீரன் குற்றம் சாட்டும் குரலில்.

“சாரி மாமா” என்றான்.

“டேய் ரொம்ப ஓவரா ஆக்ட்டிங் குடுக்காத. உனக்கு செட்டே ஆகலை. போய் அக்காவுக்கு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துட்டு வா” என்றாள் மொழி.

“இப்போ நீ என்ன வெட்டி முறிச்சன்னு உனக்கு ஆரஞ்சு ஜூஸ். வர்ற கெஸ்ட் எல்லாரையும் மாமா தான் ஹேண்டில் பண்றார். நீ வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு நிக்கிற. சோ ஜூஸ் அவருக்குத் தான். உனக்கு இல்லை” என்று அவளை முறைத்தபடி சென்றான் விஹான்.

“பையன் பார்ம்க்கு வந்துட்டான் ஏசிபி” என்றவளை ஒரு புன்னகையுடன் பார்த்துவிட்டு கீழே இறங்கியிருந்தான் விவேக்.

“மச்சான் அவனை சொல்லிட்டு நீ எங்க போற?” என்றான் தீரன்.

“நம்ம சீனியர் குமரனும், தாசில்தார் மேடமும் வர்றாங்க அதி. அவங்களை வரவேற்க வேண்டாமா?” என்று விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குமரன் தன் மனைவி நதியுடன் வந்து சேர்ந்திருந்தான்.

“வாங்க குமரன், வாங்க மேம்” என்ற தீரன் மொழிக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

“குமரன் அண்ணாவைத் தான் எனக்குத் தெரியும். உங்களை இப்போதான் பர்ஸ்ட் டைம் பார்க்குறேன்” என்றாள் நதியிடம்.

மொழியிடம் புன்னகைத்தவள் “ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் மாதிரி இருக்கீங்க. லுக்கிங் சோ குட்” என்றாள் நதி.

“உங்களை விடவா மேம்? பாருங்க சீனியர் எப்படி கலக்குறார்னு. இந்த கேஸ்ல குமரன் மட்டும் இல்லைன்னா கடைசி நிமிஷத்துல ரொம்ப சிக்கல் ஆகியிருக்கும். சார் சம்பவம் பண்ணிட்டார்” என்றான் தீரன்.

நதி கணவனை பெருமையாய் பார்க்க,”என்ன?” என்று புருவத்தை ஏற்றி இறக்கியிருந்தான் குமரன்.

“சாரி சீனியர். இங்க நான் தான் பெர்பார்ம் பண்ணனும். நீங்க கெஸ்ட் அப்பியரன்ஸ் தான்” என்று தீரன் சிரிப்பை அடக்கியபடி சொல்ல,

“நம்ம சீனியர் எல்லா இடத்துலையுமே ஹீரோ தான். இல்லையா சீனியர்?” என்றான் விவேக்.

“யாரு நானு? அங்க பாருங்க” என்று குமரன் ஜாடை காட்ட, அகன் தன் மனைவி யுகாவை கையில் தூக்கிக் கொள்ளாத குறையாய் அழைத்து வந்து கொண்டிருந்தான்.

தாய்மையின் பூரிப்பில் யுகா இன்னமும் அழகு கூடித் தெரிய, எப்போதும் போல் அகன் அருகில் இருக்கும் போது அவன் தான் ஸ்கோர் செய்தான்.

“எங்க போனாலும் எல்லார் கண்ணும் இவனைத் தான் பார்க்கும்” என்று அவள் முனுமுனுத்தபடி வர,

“எனக்கு கேட்குது “ என்றான் அகன் சிரிப்புடன்.

“யோவ் சிலுக்கு ஜிப்பா இங்க இருந்து கிளம்புற வரைக்கும் நீ சிரிக்கவே கூடாது” என்ற கண்டிஷன் போட்டபடி சென்றாள்.

“ஹாய் டாக்டர்” என்று தீரன் அணைத்துக் கொள்ள,

“நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல மொழி. ஏசிபி கண்ல காதல் பொங்கி வழியுதுன்னு. நீங்க தான் நம்பலை. ஆனா இப்போ பார்த்திங்கல்ல?”  என்று கலகலத்து சிரித்தவளை அங்கிருந்த அனைவருக்கும் பிடித்துப் போனது.

“உங்களுக்கு தான் சிரமம் டாக்டர். பிரக்னென்சி டைம்ல உங்களை அலைய வச்சுட்டோம்” என்றான் தீரன்.

“நான் வேண்டாம்னு தான் சொன்னேன் தீரன். மேடம் எங்க கேட்குறாங்க?” என்ற அகனை முறைத்தவள்,

“சாரி ஏசிபி சார், நான் இல்லாம இவரை எங்கயும் அனுப்புறது இல்லை. சாரோட ராசி அப்படி?” என்றாள் தாரா சிரிப்புடன்.

“பொதுவா டாக்டர்ஸ் எல்லாம் ரொம்ப அமைதியா கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு அது ஒரு மாதிரி டைப்பா இருப்பாங்க. பட் நீங்க சம்திங் ஸ்பெஷல்” என்றாள் மொழி.

“இசிட்..! இவன் கூட அப்படித்தான் சொல்லுவான்” என்றவள் நாக்கை கடிந்து “சாரி சாரி இவர் கூட அப்படித்தான் சொல்லுவார்” என்று திருத்த, அகன் முறைக்க அந்த இடமே கலகலத்திருந்தது. அவர்களின் சிரிப்பு சத்தத்தில் கீழே இருந்தவர்கள் கூட திரும்பி பார்த்திருந்தனர்.

“நான் சொல்லலை..! இவ ஒரு ஆள் போதும். எந்த இடமா இருந்தாலும் ஊரே நம்மளைத் தான் வேடிக்கை பார்க்கும்” என்றான் அகன்.

“இந்த கேஸ்ல உங்களோட ஹெல்ப்  இல்லைன்னா கொஞ்சம் தடுமாறியிருப்போம் டாக்டர். தேங்க்ஸ் பார் யுவர் டைம்லி ஹெல்ப்” என்ற தீரனை அணைத்துக் கொண்டவன்,

“வித் மை பிளஷர் தீரன்” என்றவன், தாராவை கைவளைவில்  நிதானமாய் அழைத்து செல்ல,

“லவ்லி கப்பிள்” என்றான் தீரன்.

“ஆமா ஏசிபி” என்றவளின் மனதிலும் அதே எண்ணம் தான்.

“யோவ் சகலை”என்று சஞ்சய்யை அழைத்தவன்,

“நீ வேலை பார்த்தது எல்லாம் போதும். பிரகதி அவங்களையும் கூப்பிடு. போட்டோ எடுப்போம்” என்றான் தீரன்.

“அதி அங்க வர்றவங்களை பார்க்க ஆள் இல்லை. இதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்” என்றான் சஞ்சய்.

“எப்பா டேய் ஓவரா பெர்பார்ம் பண்ணாத. நீ பொறுப்பான மருமகன் தான் யார் இல்லைன்னு சொன்னது. பொறுப்பை தள்ளி வச்சுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்குறேன்” என்று விவேக் அவனை முறைத்துவிட்டு செல்ல,

“ஏன் இவங்க ரெண்டு பேரும் வித்தியாசமா நடந்துக்கிறாங்க?” என்றாள் மொழி.

“அது ரெண்டு பேரும் முன்ன இருந்தே அப்படித்தான். ஒரு தினுசாத்தான் திரிவானுக” என்றான் தீரன் சிரிப்புடன்.

அவள் அவனையே இமைக்காமல் பார்க்க,

“ஸ்டேஜ்ல வச்சு இப்படியெல்லாம் பார்க்கக் கூடாது. அப்பறம் வேற மாதிரி ஆகிடும்” என்றான் தீரன் கண்ணடித்தபடி.

“என்னை எதுக்காக உங்களுக்கு இவ்வளவு பிடிச்சது ஏசிபி?” என்றாள்.

“எத்தனை தடவைடி கேட்ப?” என்றான் போலியான சலிப்புடன்.

“பரவாயில்லை சொல்லுங்க” என்றாள்.

“பிகாஸ் ஐ லவ் யு டி மக்கு” என்றான் அவள் நெற்றியில் முட்டியபடி.

“ம்க்கும்..! நாங்களும் இருக்கோம்” என்றான் சஞ்சய்.

“தெரியுது சகலை. நீயும் பெர்பார்ம் பண்ணு. எல்லாருக்கும் இங்க ஸ்பேஸ் இருக்கு. நானா வேண்டாம்னு சொன்னேன்?” என்று சிரிப்பை அடக்கியபடி தீரன் சொல்ல,

“பிரகதி” என்று திரும்பியவனை முறைத்தவள்,

“கொன்னுடுவேன் உங்களை. சாருக்கு புது மாப்பிள்ளைன்னு மனசுல நினைப்பா?” என்று சஞ்சயின் இடுப்பில் கிள்ளி வைக்க,

“ராட்சசி” என்றான் சஞ்சய்.

“எதே..?”

“அழகான ராட்சசின்னு சொல்ல வந்தேன்மா” என்றவனின் சமாளிப்பில் அனைவரும் சிரித்திருக்க, மகள்களின் சிரிப்பைப்  கீழிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜ ராஜனுக்கும் சங்கரிக்கும் அப்படி ஒரு மன நிறைவு.

ஒரு வழியாக ரிஷப்ஷன் முடிந்து அவர்கள் கிளம்ப இரவாகியிருந்தது. இன்று தான் தீரனின் வீட்டிற்கு செல்கின்றனர். மொழி வீட்டின் நிலைமை சரியில்லை என்பதால் ரிஷப்ஷன் வரை அவர்களை அங்கேயே இருக்க சொல்லியிருந்தார் வானதி.

மகனுக்கும் மகளுக்கும் வானதி ஆரத்தி எடுக்க, தீரனின் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் வெண்மொழி.

மொழியின் வீட்டில் எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பர். ஆனால் தீரனின் வீடு அவ்வளவு அமைதியாக இருந்தது.

“வீடு பிடிச்சிருக்கா மொழி?” என்றான் அவளையே பார்த்தபடி.

“ரொம்ப அமைதியா அழகா இருக்கு ஏசிபி. எப்படி சொல்றதுன்னு தெரியலை. பட் ஐ லைக் திஸ் பீல்” என்றாள்.

“எனக்குத் தான் தெரியுமே? மேடம்க்கு தனிமையில இனிமை காணத்தான் பிடிக்கும்னு” என்றவளை முறைத்தாள்.

“என்னடா வம்பு பண்ற மொழிகிட்ட?” என்று வானதி பஞ்சாயத்திற்கு வர,

“வீடு ரொம்ப அமைதியா இருக்காம்மா” என்றான்.

“அதுமா மொழி..! எனக்கு இருக்குறது ஒரே பையன். அதுலயும் போலீஸ் வேற ஆகித் தொலைச்சுட்டான். முக்கால்வாசி நாள் வீட்டுக்கே வர மாட்டான். நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருப்போம்.சொந்தக்காரங்க எல்லாம் மண்டபத்துல இருந்தே கிளம்பிட்டாங்க. அதான் வீடு இப்படி அமைதியா இருக்கு” என்றார்.

“முதல்ல இந்த ஒரு பையன் டயலாக்கை விடுங்கம்மா. உங்களுக்கு ஒரு புண்ணியமா போகும்?” என்றான்.

“அதி! எனக்கு இருக்குறது ஒரே மருமக. அவகிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன்?” என்றார் வானதி.

“ஒரே மருமகளா?” என்று அதிர்ந்தவன்,

“இதுக்கு வேணும்னா நான் சொல்யூஷன் சொல்றேன். உங்களுக்கு கவலையா இருந்தா ஏன் ஒரு மருமகளோட நிறுத்துவானேன். நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்கம்மா, ரெண்டு மூணு மருமகளை கொண்டு வந்து நிறுத்துறேன்” என்றான் சிரிக்காமல்.

மொழி அவனை முறைக்க,

மகனை மேலிருந்து கீழாக பார்த்த வானதி”ஏங்க நான் சொல்லலை? நாளைக்கு அதிக்கு சந்திராஷ்டமம்னு. அது இப்போ இருந்தே ஆரம்பிச்சுடுச்சு போல” என்ற மனைவியின் பேச்சில் நாகேந்திரன் சிரித்திருக்க,

“ஏதோ அம்மா கவலைப் படுறிங்களேன்னு ஒரு வழி சொன்னேன். வேண்டாம்னா போங்க” என்றவனை நறுக்கென்று கிள்ளியிருந்தாள் மொழி.

இதோ இத்தனை நாள் தீரனின் மனதிற்குள் இருந்தவள் இப்போது தீரனின் அறையிலும் இருக்கிறாள்.

அவள் கண்கள் அறையை சுற்றிலும் ஒரு முறை பார்வையிட, அவள் பார்வையின் பொருள் புரிந்தவன், அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“இங்கயும் கேமரா இருக்கு” என்றான் தீரன்.

“என்ன சொல்றிங்க?” என்றாள் அதிர்ந்து.

“எஸ்..! என் கண்ணு தான் கேமரா” என்று சிரிப்புடன் சொன்னவன்,

“உன்னோட பயம் புரியுது மொழி. ஆனா இனி அந்த பயம் தேவையில்லாதது. இந்த தீரன் இருக்குற வரைக்கும் மொழிக்கு தப்பா எதுவும் நடக்காது” என்றான்.

“எனக்கும் புரியது ஏசிபி. இருந்தாலும் என்னையறியாம இப்படி நடந்திடுது” என்றாள் அவன் முகம் நோக்கி.

“உனக்கும் எனக்கும் இடையில எவ்வளவு நல்ல விஷயம் இருக்கு. அதெல்லாம் உன்னையறியாம வராதே” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“ஆரம்பிச்சுட்டிங்களா?”

“ஆரம்பிக்கலைன்னா தான்டி தப்பு. ஆக்சுவலி, நான் ஒரே பையன்னு எங்கம்மாவுக்கு ரொம்ப நாள் கவலை. சோ, பியூச்சர்ல நீயும் அப்படி ஒரு கவலைக்கு ஆளாகிட கூடாது” என்றான் சீரியசாய்.

“அதுக்கு??”

“உனக்கே தெரியும் என்னோட டியூட்டி கான்சியஸ் பத்தி. இந்த தீரன் எப்பவுமே பெர்பெக்ட் தான். அதனால புல் எபோர்ட் போடுறோம். மூணு நாலு குழந்தைகளை பெத்துக்கிறோம்” என்றான் சிரிக்காமல்.

“ம்ம் சரி” என்றாள் பட்டென்று.

“பாருடா பட்டுன்னு சரின்னு சொல்லிட்டா பொண்டாட்டி” என்றவன் அதற்கு மேல் அவனுக்கான கடமைகளில் இறங்கி விட்டான்.

கூடிக் களித்து கூந்தல் வருடியவனின் முகம் பார்த்தவள்,

“என்னை ஏன் இவ்வளவு பிடிக்குது ஏசிபி உங்களுக்கு” என்றாள்.

“மீண்டும் மீண்டுமா?” என்றான் சிரிப்புடன்.

“மத்ததெல்லாம் மீண்டும் மீண்டும் போகத் தெரியுதுல்ல. அப்போ இதையும் சொல்லுங்க” என்றாள் முறைப்புடன்.

“பிகாஸ் ஐ லவ் யு டி மக்கு”  என்றவனின் இதழ்கள் இப்போது மொழியின் வசமானது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு…

போதைப் பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றி, தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேஸை வெற்றிகரமாக முடித்ததால் அதி தீரன் பதவி  உயர்வு பெற்று அடிஷனல் டெபுட்டி கமிஷனராகவும், சஞ்சய் ஆசிட்டென்ட் கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தனர். முக்கியமான வழக்கு என்பதால் அதில் பணியாற்றிய அனைவரும் பதவி உயர்வு பெற்றிருந்தனர். அதில் குமரனும் விவேக்கும் அடக்கம்.

இதோ அதற்கான விருது வழங்கும் விழாவில் அனைவரும் விருதுகளை பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க,

விவேக்கோ” இப்போ எதுக்கு இந்த ப்ரோமோஷன்..? நம்ம சர்வீஸ் பேஸ்ல  இன்னும் ரெண்டு மாசம் போனா ஆட்டோமேட்டிக்கா அதுவே வந்திருக்கும். எப்படி நேக்கா குடுத்து கவர் பண்றாங்க பாரு மச்சான்” என்றான் தீரனிடம்.

“சரி விடு மச்சான். அவங்க சொன்னா நாம கேட்டுக்க வேண்டியது தான்” என்று பேசி சிரித்துக் கொண்டிருக்க,

“எக்ஸ்கியூஸ்மி” என்ற குரலில் தீரன் திரும்ப, அங்கே காக்கி யூனிபார்மில் ஒரு நிமிர்வுடன் நின்றிருந்தவனை புரியாமல் பார்த்தான் தீரன்.

“எஸ் நீங்க??” என்றான் கேள்வியாய்.

“ஐ யாம் ரதன் சத்ரியன் ஐபிஎஸ். நீங்க ஹேண்டில் பண்ணி குளோஸ் பண்ண சுகந்தன் கேஸை ரி-ஓப்பன் பண்ண வந்த ஸ்பெஷல் ஆபிசர்” என்று கையை நீட்ட,

“ஹெலோ சார்” என்று தீரனும் கையை குலுக்கியிருந்தான்.

“ம்ம்..!! நாட் பேட்! யு லுக்கிங் சோ மேன்லி மேன்” என்றான் தீரனைப் பார்த்து.

“தேங்க்யு சார். யு ஆல்சோ லுக்கிங் சோ ஹாட்” என்றான் தீரன்.

“இசிட்” என்றவனிடம்,

“இந்த கேஸ் சம்பந்தமா ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா தயங்காம கேளுங்க சார். வி வில் ஆல்வேஸ் பீ ரெடி” என்றான் தீரன்.

“வாட்? ஹெல்ப்பா? அதுவும் இந்த ரதன் சத்ரியனுக்கா?” என்று நிறுத்தியவனின் முகம் சட்டென்று மாற,

“தேவைப்படாது. அப்படி தேவைப்பட்டாலும் கண்டிப்பா கேட்க மாட்டேன். எனிவே உங்களைப் பார்த்ததுல சந்தோஷம் மிஸ்டர் அதி தீரன்” என்றவன் வேக எட்டுக்களுடன் சென்று விட்டான்.

“ஆளு ஒரு தினுசா இருக்கானே? ஹெல்ப் தேவைப்பட்டாலும் கேட்க மாட்டானாமே? பார்ப்போம் என்ன தான் பண்றான்னு?” என்றான் விவேக்.

“விடு மச்சான்..! நம்ம டிப்பார்ட்மென்ட்ல இந்த் கான்பிடன்ஸ் நல்லது தான்” என்றான் தீரன்.

விவேக் சொன்னது ரதன் சத்ரியன் காதுகளில் விழுந்திருக்க வேண்டும். திரும்பி அவனைப் பார்த்தவன்,

“மிஸ்டர் விவேக்..! அதுல எனக்கு அசிஸ்ட் பண்ணப் போறதே நீங்க தான்” என்று அதிராமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட,

“எதே” என்ற விவேக் முகம் பார்த்து தீரன் சிரிப்பை அடக்க, சஞ்சையோ வாய்விட்டு சிரித்திருந்தான்.

“டேய் அடங்குடா” என்று விவேக் அவனை அடிக்கப் போக, நண்பர்களின் சிரிப்பொலியில் திரும்பிய ரதன் சத்ரியன் “பெஸ்ட் பிரண்ட்ஸ் “ என்றான் புருவம் சுருக்கி.

“பார்எவர் பிரதர்” என்றான் தீரன்.

அடுத்த வழக்குகள் அவர்களுக்காக வரிசை கட்டிக் கொண்டு காத்திருந்தது.

அடுத்த வழக்குகளில் சந்திப்போம்.