Varamena Vanthavalae
வரமென வந்தவளே...
அத்தியாயம் 04
கோபங்கள் யாவும்
உன்மேல் கொண்டேனடி பெண்ணே..
ஏன் என்றே தெரியாத கோபம்..
உயிர் வரை தீண்டி மருக செய்ததே டி..
இயற்கையில் ஆல்ந்து உயிரை விட துணைய
கைகள் கொண்டு காப்பாற்றிய நின்னை
கரங்கள் கொண்டு அடிக்க செய்தாயே..
கண்ணம் தாங்கி கண்கள் பளக்க நின்று
மனதின் வலியை உணர செய்தாயே..!!!
அடிவாங்கிய வாசவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது.? ஏது நடக்கிறது.? என்று...
மாலைப்போல் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவளுக்கு ,என்ன செய்வதென்றே தெரியவில்லை.
குழந்தைகளுடன் ஊரையே சுற்றி வந்தவளுக்கு இந்த ஹாஸ்டல் என்னும் ஜெயிலில் அடைப்பட்டு கிடப்பது போல் தோன்ற மூச்சு விடவே சிரமப்பட்டாள்.
அப்போது ஒரு பெண் அவளுடைய பைகளை எடுத்து கொண்டு உள்ளே வர ,அந்த பெண்ணை கண்டதும் "ஹே மோனிக்கா நீயும் இந்த ரூம் தானா "...