Advertisement

வரமென வந்தவளே…
அத்தியாயம் 05
காணக் கிடைக்காத பொக்கிஷமாக
அவனை காண துடிக்க 
சொல்லொண்ணா வெறுப்பு 
மனதில் வேராக ஊன்றிவிட…
யாதென்று அறியேன் நான்..
மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் ஃப்ரஷ்ரஸ் டே பங்க்ஷன் தொடங்கியது. முதல் வருடம் மாணவ‌ மாணவியர்கள் யாவும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர்.
துவங்கிய நேரம் முதலில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் பேசி முடித்து , அவர்களுக்கான நேரத்தை கொடுக்கவே ஒருமணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டனர்.
வளாகத்தில் சீனியர் பட்டாளம் நுழைந்ததுமே அனைத்து பெண்களின் விழிகளும் ஆவலுடன் ஏவியை தேடிச் செல்ல ,அதனை கண்ட வாசவிக்கு கோபம் கோபமாக வந்தது.
ஏனோ இவள்களின் செயலில் யாரென்றெ அறியாத அவனின் மீது கோபத்தை வளர்த்து கொண்டாள்.
தவறு செய்பவர்கள் ஒருவராயிருப்பின் ஆனால் இங்கே தண்டிக்கப்பட்டது வேறொருவராக இருந்தது.
“ஹே இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியல..??” என கடுப்புடன் மோனி மற்றும் வனிதாவை பார்த்து கடிக்க 
“இதுல ஓவரா தெரிய என்ன இருக்கு சொல்லு. எனக்கு பிடிச்சிருக்கு நான் பார்க்க ஆசைப்படுறேன் .உனக்கு பிடிக்கலைன்னா சும்மா இரு வேண்டா வெறுப்பா நடந்துக்காத ” என்று பட்டென கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள் மோனி..
“இதுல நான் என்ன வேண்டா வெறுப்பா நடந்துக்கிட்டேன் சொல்லு..??நீங்க இப்படி ஏவி ஏவி சொல்லிட்டு இருக்கிறதாள தானே கேக்குறேன்”
“உனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை எனக்கு பிடிக்கல அதுனால செய்யாதேன்னு சொன்னா நீ தாங்குவியா இல்ல செய்யாம தான் இருப்பியா” என மோனி கேட்க அதிர்ந்து தான் போனாள் வாசவி..
இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. யாரோ பேர் மட்டுமே தெரிந்த ஒருவனை பார்க்க இத்தனை பெண்கள் மையல் கொண்டுள்ளார்கள். அவனின் சுயரூபம் அறியாது இத்தனை பெண்கள் அவனின் மேல் கொண்டுள்ள ஆர்வத்தை பார்த்து மனம் பிசைந்தது.
இங்கே பெண்கள் யாவும் அவனின் பின்னே சுற்றி திரிய நினைக்க ,அதுவே அவனை ப்லே பாயாக ஆக்கி அவளின் மனதில் அவனை உருவகப்படுத்தியது.
அதுமட்டுமல்லாது மோனியின் கேள்வியில் மறந்திருந்த தாய் தந்தையின் செயல் ஞாபகத்திற்கு வரவே ஏவியின் மீது இருந்த வெறுப்போடு தலை வலி வின்னென்ன வலிக்க செய்து அங்கு இருக்கவே மூச்சு முட்டியது அவளுக்கு.
மோனியிடம் திரும்பி ,”எனக்கு ரொம்பவே தலை வலிக்குது .வெளில கொஞ்சம் நேரம் காத்தோடமா நின்னுட்டு வரேன் ” என்று வெளி வந்தாள் வாசவி.
வெளியே வந்து நின்றவளுக்கு இயற்கையின் தீண்டல் அவளின் தலைவலியை சிறிது மட்டுப்பட உதவியது. 
அங்கே பக்கத்தில் ஒரு பூங்கா போல் அமைத்திருக்க ,அதற்கு நடுவில் புத்தர் சிலை அமைத்து வைத்திருந்தார்கள். அந்த சிலையை சுற்றிலும் பல வண்ண நிறங்களில் பூக்கள் அமைத்து வைத்து ,பார்க்கவே மனது கவரும் அழகோடு இருந்தது.
அதனையே இரசித்து பார்த்திருவளின் பின்னாலில் இருந்து ஒரு ஆடவனின் குரல் வரவும் திடுக்கிட்டு திரும்பியவள் விழி விரித்து நின்றாள்.
அவளை பார்த்தவனுக்கும் அதே திகைப்பு தான் .ஆனால் ஏனோ சொல்ல முடியாத சந்தோஷ பரவசநிலை அவனுக்குள் ஆர்பரிக்க இதயம் வேகவேகமாக துடித்து அதன் இருப்பினை அழுத்தமாக காட்டியது.
“நீங்க இங்க என்ன பண்றீங்க..??” என சந்தோஷமாக வாசவி கேட்க
“அதை நான் தான் கேக்கணும்..” என பதிலளித்தான் அவன்.
“அது எப்படி நீங்க கேக்க முடியும் . நான் இந்த காலேஜ்ல படிக்கிறேன் . அதுனால கேக்குறேன் ஆனா நீங்க..???”என இழுக்க 
“உன்னோட பதிலிலே உனக்கான கேள்விக்கான பதிலும் இருக்கு ” என்க 
“அப்படியா சொல்றீங்க “என ஆல்காட்டி விரலை தாடையில் வைத்து  விழிகளில் நயனங்களுடன் தலை சாய்த்து கேட்டாள்.
“ஆமாம்…”
“அப்போ.. அப்போ..நீங்க இங்க தான் படிக்கிறீங்களா.. சூப்பரோ சூப்பர் போங்க ” என விழிகள் அழகாய் விரிந்து நயனங்களோடு சொல்ல
அதில் அப்படியே முழுதாக துலைந்து தான் போனான் அவன். அவளின் ஒவ்வொரு செயல்களும் அவனை அவளுக்குள் இழுத்துச் சென்றது அவனையறியாமலே…
அதற்குள் அவனின் நண்பர்களில் ஒருவன் “ஏவி ” என்றழைக்க
அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளின் முகம் மாற்றங்களோடு நயனங்கள் புரிந்த விழிகள் வெறுப்பை கக்கியதை பார்த்து நொடி பொழுது கூட தாமத்திக்காமல் ,”ஏவி வருவான். அவன் ஏதோ ஒரு முக்கியமான வேலையில இருக்கான் ‌. வந்துடுவான், நீங்க கிளம்புங்க “என சொல்லி ‘அந்த இடத்தை விட்டு போகுமாறு’ சைகையில் சொல்ல
“சரி டா நாங்க வெயிட் பண்றோம். நாங்க ஆடிட்டோரியம் முன்னாடி இருக்கோம் அவனை வர சொல்லிடு ” என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
அவர்கள் நகர்ந்த பின்பும் ,வாசவியின் முகம் கோவை பழம் போல் சிவப்பேறி இருந்தது.
யாரென்றே தெரியாத அவனால் தானே மோனி இன்று என்னிடம் கத்தியது. அவனால் தானே தனக்கு தலை வலி வந்தது. அவனை வைத்து தானே வகுப்பிலும் ரூம்மிலும் அவனின் பேச்சுக்கள் நடைப்பெறுகிறது என எல்லா தவறையும் அவன் மீது திணித்து உள்ளுக்குள் கோபத்தை வளர்ந்து கொண்டிருந்தாள் வாசவி. 
அவளால் இதற்கு காரணம் அவன் இல்லை என்றும் அதற்கு காரணம் தன்னை சுற்றி உள்ளவர்கள் தான் என்றும் அவளுக்கு புரிபடவில்லை. அதை புரிந்து கொள்ளவும் நினைக்கவில்லை. யோசனை செய்கிறாளே தவிர அதற்கான ஒரு நல்ல வழியை அவள் அறிய முற்படவில்லை.
“ஹே ! இப்போ எதுக்கு இப்படி மூக்கு சிவக்குற அளவுக்கு கோப படுற..??” என நிதானமாக அவள் நிலை அறியும் நோக்கத்துடன் கேட்க
“அ..து..அது.. வந்து எ..எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது. அவன் பேரை கேட்டாளே வெறுப்பா வருது ” என திக்கி திணறியே அதை கூறினாள். சட்டென்று அவளால் அதை சொல்ல முடியவில்லை.
“யாரோட பேரை கேட்டாளே பிடிக்கமாட்டேங்கிது..??”
“அதான் அவன் பெயரை கேட்டால் தான்..”
“அந்த அவன் யாரு மா..??”
“அந்த ஏவி தான்…”
“ஏன் உனக்கு பிடிக்கலை..??”
“பச் ,அது எப்படி சொல்லறது எனக்கு அவனை பிடிக்கலை அவ்வளவு தான் “
“அதான் ஏன்னு கேக்குறேன்..??நமக்கு ஒருத்தரை பிடிக்காம போறதுக்கு ஒரு காரணம் இருக்குமே அதை சொல்லு ” என்று விடாப்பிடியாக நிற்க
“அப்படி ஒன்னும் இல்லை.ஆனாலும் எனக்கு அவனை பிடிக்காது ” என்று வெறுப்போடு கூறியவளுக்கு அதன் காரணத்தை இவனிடம் கூற விரும்பவில்லை.
“இங்க பாரு டா..இப்படி ஒருத்தரை பத்தி தெரியாமலே அவுங்களை பத்தி தப்பா நினைக்கிறது ரொம்பவே தப்பு .”
“நான் எங்க தப்பா நினைச்சேன். இங்க நடக்கிறதை எல்லாம் பார்த்தாலே புரியுதே அவனோட கேரக்டர் எப்படின்னு .”
“அப்படி என்ன நடக்குது ..அவனோட கேரக்டரை பத்தி நீ மோசமா நினைக்கிற அளவுக்கு “என பொறுமையாக அவளுடன் அங்கே இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து பேசினான்.
“ஹான். நான் இங்க வந்த இந்த ஒரு வாரத்துல எல்லா பொண்ணுங்களும் அவனை பத்தியே தான் பேசிட்டு திரியுறாளுங்க . அவனை எப்போடா பார்ப்போம் தவமா தவம் இருக்காளுங்க . இப்படி அவன்  பொண்ணுங்களை சுத்த விட்டு வேடிக்கை பாக்குறான். இதுலையே தெரியலையே அவன் எப்படின்னு ” என சொல்லி தன் கோவத்தை சமன் படுத்தி கொண்டாள்.
“நீ சொல்ற எதுலையும் அவன் வரலையே. எல்லாமே உன்னோட ஃப்ரெண்ட்ஸ் உன்கூட இருக்கிறவுங்க தானே வராங்க. அவனுக்கு இப்படி ஒரு விஷயம் நடக்குறது கூட தெரியாம இருக்கலாமே. அவனோட ஏதோ ஒரு நல்ல விஷயம் பிடிக்க போய் தானே இப்படி பண்றாங்க சொல்லு.”
“உனக்கே நல்லா தெரியும் நீங்க வேற ப்ளாக் நாங்க வேற ப்ளாக்ன்னு .அப்படி இருக்கும்போது அவன் எப்படி உங்க எல்லாரையும் பார்த்திருக்க முடியும் சொல்லு ” என நிதர்சனத்தை பொறுமையாக அவளுக்கு எடுத்து கூற
அவன் சொல்வது சரி தான் என்று மூலை ஏற்றுக்கொண்டாலும் அவளின் பிறவி குணம் அவளை எப்போதும் குழம்ப செய்து யோசனைக்குள் உள்ளாக்கியது.
அவள் மூலை ஒற்றுக்கொண்டத்தை அவளது மனம் நம்ப மறுத்து முரண்பாடு செய்து , இறுதியில் வெற்றியும் கண்டது.
“எதுவா வேண்ணா இருந்துட்டு போகுது. எனக்கு அவனை பிடிக்கலை அவ்வளவு தான். ஃப்ர்ஸ்ட் இம்ப்ரஷென் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷென் ,அது எனக்கு பேடா தான் கிடைச்சது தட்ஸ் இட்” என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.
அவனுக்கு புரிந்து போனது ,அவளை அவள் நினைத்ததில் இருந்து மாற்றம் கொண்டு வருவது என்பது சற்று கடினமான விடயம் என்பது. அவளுடன் ,  இதை பற்றி பொறுமையாக பேசி தான் கையால வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
அவனே பேச்சை மாற்றும் பொருட்டு ,”நாம எதர்ச்சியாவே இன்னையோட சேர்த்து மூணு தடவை மீட் பண்ணிட்டோம் பட் இன்னும் பேரு கூட நாம தெரிஞ்சிக்கலை பாரேன்” என்றவன் ,
அவளின் புறம் நட்பு கரம் நீட்டி ” என்னோட பேரு ஆதித்யா வரதன் ”  என்க 
அவளும் புன்னகையோடு அவனின் மேல் இருந்த நம்பிக்கையின் காரணமாக அவனோடு கை கோர்த்து “நித்ய வாசவி ” என்றாள்.
இன்று பிடித்த அவள் கையை அவன் என்றுமே விட்டு விட போவதில்லை. ஆனால் நித்யா பிடித்த கையை  அவளே விட்டுவிட நினைத்து அதற்கான வேலையில் தீவிரமாக இருப்பால் என்று அவர்களுக்கு தெரியவில்லை..
“நேம் நல்லா இருக்கு..அதுலையும் பின் பாதி சூப்பர் வாசு எவ்வளவு அழகா இருக்குல ” என நக்கலாக அவன் கேட்க 
அவனை முறைத்தவள் சிணுங்கலுடனே “அப்படி கூப்பிட கூடாது .அப்படி கூப்பிட்டா ,நாம இப்பவே ஃப்ரெண்ட்ஷிப் ப்ரேக்கப் பண்ணிக்கலாம் ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“சரி சாரி சொல்ல மாட்டேன் ஓகே” என்று அவளை சமாதானம் செய்து ஆடிட்டோரியம் அழைத்து சென்றான் ஆதித்யா.
அன்று மாலையே ஆதியை பிடித்துக் கொண்ட நண்பர்கள் அவனை சூழ்ந்து நின்று கொள்ள
“இப்போ என்ன டா வேணும் உங்களுக்கு..?? எதுக்கு இந்த ரௌண்ட் பார்மேஷன் ” 
” விசாரணை பண்ண தான்..” என்றான் அவனின் நெருங்கிய நண்பனான ராம் .
“எதுக்கு விசாரணை..???” 
“ஹான்.,உண்மையை கறக்க தான்..” என்றான் மற்றொருவனான ப்ரவீன்.
“ஏன்டா , நான் என்ன பசு மாடா பால் கறக்குற மாதிரி உண்மையை கறக்குறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க..??”
“முதல இப்படி சுத்துறதை நிறுத்துங்க டா..உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்க நானே சொல்றேன் ” என்று அமைதியாக பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் ஆதித்யா.
“கேளுங்க..” என சைகை செய்ய
“மதியம் உன்கூட பேசின பொண்ணு அந்த பீச் பார்ட்டியா மச்சான்..??” என கர்ணன் கேட்க 
“டேய் ஏன்டா..??” என்றான்  ஆதி..
“பதில் சொல்லு டா.. அந்த பார்ட்டி தான் இதுவா ” என ப்ரவீன் கேட்க 
ராம் அமைதியாக இருந்து அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
ஆதிக்கு வாசவியை பார்ட்டி என பெயரிட்டு அழைத்தது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனாலும் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தான். 
அவர்களும் அன்று தன்னுடன் பீச்சிற்கு வந்திருந்தார்களே. ஆனால் அந்த பெண்ணை காக்கவென ஆதி நித்யாவை நோக்கி வர ,அவனது நண்பர்களோ இது வேலையில்லா பொழப்பு என்று நகர்ந்து விட்டனர்.
தான் எதையாவது சொல்ல போய் ,அவர்கள் வேறுவிதமாக புரிந்து கொண்டால் பாதிக்கப்பட போவதோ நித்ய வாசவி தானே. அதனாலே அமைதியாய் அதனை கையால நினைத்தான்.
“சொல்லு டா அவ தான் இவளா ” என கர்ணன் கேட்க
“இல்லை…”
“என்னது இல்லையா..” என வாயை பிளந்தான் ப்ரவீன்.
“அப்போ அந்த பொண்ணு யாரு..??” என கர்ணன் கேட்க 
“எனக்கு தெரிஞ்ச பொண்ணு அவ்வளவு தான் “
“அப்போ சரி., பாக்க அழகா தான் இருக்கா ,என்னோட அவளை சேர்த்து நிற்க வச்சி பார்த்தா நல்லா தான் இருப்பா ” என்று கனவு கோட்டை கட்ட ,அதை இடித்து சாம்பலாக்குவது போல் ஆதியின் பேச்சு இருந்தது.
“ஆமா அண்ணணும் தங்கச்சியும் ஒன்னா நின்னா நல்லா தான் இருக்கும் ” என்று சொல்ல கர்ணனின் சிறு இதயம் வெடித்தது.
இதை கேட்ட ராமும் ப்ரவீனும் சிரிக்க ,கர்ணன் அவர்கள் மூவரையும் முறைக்கலானான்.
அந்த வார இறுதியில் வாசவி ,ஹாஸ்டலில் இருந்த பீசியூவில் அழைத்து தாய் தந்தையரிடம் பேசினாள்.
முதலில் கோபமாக பேசிய வாசவி ,இறுதியில் கலங்கிய குரலோடு பேசி வைத்து விட ,ஊரில் பெற்றோர்களுக்கு தான் நிலைக்கொள்ள முடியவில்லை.
அடுத்து வந்த வாரத்தில் விசிட்டர்ஸ் டே வரவும் ,கிளம்பியவர்கள் இதோ  ஹாஸ்டல் முன்பு அவளுக்காக காத்திருந்தனர் அவளது பெற்றோர்கள்.
காரணங்கள் யாவும் விடைபெற 
வெறுப்பை தூக்கி சுமக்க 
வேண்டிய நிலை இல்லையென்னினும்
அவளின் மனதின் குரங்காட்டத்தில்
மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி
நங்கூரம் போன்று நின்றது 
அவள் மனது அவன் மீதான வெறுப்பில்..!!!

Advertisement