Advertisement

வரமென வந்தவளே…
அத்தியாயம் 03
அன்றைய நாள் எப்படி எப்படியோ சென்று விட ,அவளின் மனதில் அவனுக்கென நன்மதிப்புகள் வந்திருந்தது.
அன்றைய இரவே ரயில் ஏறிய நொடியே தந்தையிடம் அனைத்தையும் ஒபித்து விட்டாள்.
“பாப்பா !இதைய நீ இவ்வளவு லேட்டா சொல்ற.? முன்னாடியே சொல்லி இருந்தா ஹாஸ்பிடல் பொயிருக்கலாமே.. அப்புறம் அந்த பையனுக்கு தான் நன்றி சொல்லனும்..உனக்கு தக்க நேரத்துல உதவி பண்ணதுக்கு ” என மகளிடம் முதலில் பதறியவர் பின் யாரே தெரியாத அந்த நல்ல குணத்தையும் பாராட்டும் படி பேசினார்.
“உங்களுக்கு பதிலா நான் நன்றி சொல்லிட்டேன் பா..” என புன்னகைத்தது அந்த இளஞ்சிட்டு.
“ரொம்ப சந்தோஷம் மா..ஆனா இந்த மாதிரி கவனமில்லாம எப்போதும் இருக்க கூடாது சரியா. இந்த மாதிரி நல்லவுங்களே எப்போதும் காப்பாத்த வரமாட்டாங்க புரியுதா மா ” என தந்தையாய் மகளின் குணமறிந்து அவளுக்கு அறிவுரை வழங்கினார்.
“சரி பா..” என தந்தையின் புறம் கூறிவிட்டு ஜன்னல் பக்கமாய் திரும்பி வெளியே அந்த இருளை இரசிக்க தொடங்கினாள்.
அடுத்தநாள் காலை ஆறு மணிப்போல் சென்னைலிருந்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கிவிட , அவர்களுக்காகவே சரண்யாவின் கணவரான மோகன் காத்துக் கொண்டிருந்தான்.
“வாங்க மாமா..பயணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா மாமா..??” என மாமனாரின் நலன் விசாரிக்க 
“அதெல்லாம் பராவால்லை  மாப்பிள்ளை போன வேலை நல்ல படியா முடிஞ்சது அதுவே சந்தோஷம். நாங்களே வந்திருப்போமே நீங்க வேற  எதுக்கு வந்து வீணா அழையிறீங்க..??‌ ” என  அக்கறையுடன் மாமனார் கேட்க
“இதுல என்ன மாமா இருக்கு..உங்களுக்காக வந்ததுல்ல எனக்கு எந்த ஒரு அழைச்சலும் இல்லை..” என தன்மையாகவே பேசினான் மோகன்.
பின்னர் , மூவரும் மோகனின் காரில் சிறுமுகை நோக்கி சென்றனர்.
மாமனாரும் பெரிய மருமகனும் பேசியதில் இளையவளை கவனிக்க மறந்தனர். அதில் சிறிவளுக்கு கோபம் போல முகத்தை உற்றென வைத்திருந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக வாசவி , உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டாள்.
“என்னங்க ஆச்சி இவளுக்கு.?வந்தும் வராததுமா இப்படி போய் கதவை அடச்சிக்கிட்டா ” என மாதவி சிறு கோபத்துடனே கணவனிடம் புலம்ப 
“விடு மாது.. டையர்ட்ல தூங்க போயிருப்பா நேத்து வேற கீழ விழுந்துட்டாலாம் ஏதோ ஒரு டாக்டர் பையன் தான் தூக்கி விட்டு சுளுக்கெடுத்தான்னு சொன்னா‌. நீ என்னென்னு கொஞ்சம் பாரேன்..” என்று மனைவியிடம் மகளை பற்றி சொல்ல ,பதறிபோனது அந்த தாயுள்ளம்..
“என்னங்க சொல்றீங்க..?? அவ விழுகிற வரைக்கும் நீங்க என்ன பண்ணீங்களோ.. பேருக்கு தான் ஊருக்கே சொல்லி கொடுக்கிற வாத்தியாரு ஆனா மகளு கீழ விழுகிறது கூட தெரியாம இருந்துருக்கீங்க..” என மனைவி அங்கலாய்த்து கொள்ள
“இதுக்கும் வாத்தியார் வேலைக்கும் என்ன சம்பந்தம்..” என மனைவியிடம் நொடித்து கொண்டார்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் என்னையை காய்த்து எடுத்து வந்து அறை கதவை தட்டினார் மாதவி.
“பாப்பா வந்து கதவை திற..??” என வெளியே இருந்து அழைக்க 
உள்ளே இருந்து பதிலொன்றும் வரவில்லை.
“கதவை திற வாசு மா..” என அன்னை அழைக்கவே வேகமாக வந்து கதவை திறந்தாள் நித்ய வாசவி..
“ம்மா.. என்னைய பையன் பேரு வச்சி கூப்பிட்டாதன்னு எத்தனை முறை சொல்றது உனக்கு..” என வாசவி கோபமாக அன்னையை பார்த்து முறைக்க
“அடி போடி அங்குட்டு..” என அவளை தள்ளி நிறுத்தியவர் உள்ளே சென்றார்.
“அம்மா..” என அவள் கத்த 
“இங்க கத்திட்டு இருந்த அப்புறம் உனக்கு அடி தான் விழும் பாத்துக்கோ.. “என  அன்னை அவளை அதட்ட 
அழுக போகும் குழந்தையாய் மாறி உதடு பிதுக்கி கண்கள் குளம் கட்ட நின்றவளை பார்த்து அன்னைக்கு ஆயாசமாக இருந்தது.
இவள் இப்படி இருந்தால் வெளியுலகம் இவளை எப்படி நடத்தும் என்று நினைக்க நினைக்க அன்னையின் மனதில் கனக்க தொடங்கிவிட்டது.
பெரியவளுக்கு இருக்கும் சாதுரியம் ‌இவளுக்கு இல்லையே என கவலையுற்றது அந்த தாயுள்ளம்.
“இப்போ நீ அழுதின்னா அப்புறம் உன்னைய இப்பே காலேஜ்க்கு அனுப்பி வச்சிடுவேன் பாத்துக்கோ ” என அன்னையின் மிரட்டலுக்கு வெளிவர இருந்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள் வாசவி.
“சரி இங்க வந்து உட்காரு.. காலுல்ல சுளுக்கு பிடிச்சிருக்குன்னு உங்க அப்பா சொன்னாரு.. காலை காட்டு ” என அவள் காலில் அந்த எண்ணையை தடவ தொடங்கினார்.
“கவனமா போக தெரியாதா உனக்கு . இப்படி தான் போற இடமெல்லாம் பராக்கு  பாத்துட்டு போவியா நீ..” என அவளை சாட
“ம்மா.. நான் வேணும்னே விழுகலை மா . தெரியாம காலை வைக்க போய் கீழ விழுந்திட்டேன் .சாரி மா இனி அப்படி நடக்காம பாத்துக்கிறேன்.”என பாவமான முகத்தை கொண்டு சொல்ல 
அன்னையால் அவளை அதற்கு மேல் திட்ட முடியவில்லை.
அதற்குள் அவளது தோழி‌ படை வரவும்  வாசவி குதுகலமானாள்.
“அக்கா…” என ஓடி வந்தது அவளது தோழிகள் படை….
“குட்டிஸ்..” என அவளும் புன்னகையோடவே அழைத்தாள்.
“வந்துட்டாங்க ஊருல இல்லாத தோழிகளாம். வயசுக்கு‌ ஏத்த மாதிரி பழகுறாலா பாரு.. எல்லாம் அஞ்சாவது ஏழாவது படிக்கிற பசங்க .இதுங்க இவளுக்கு ஃப்ரெண்ட்ஸாம் . எல்லாம் எங்க போய் முடியுமோ ” என புலம்பினார் மாதவி.
அதன்பின் அந்த நாள் முழுக்க அவளின் தோழிகள் படையோடவே அவ்வூரை சுற்றி வந்தாள்.
அப்படியே நாட்கள் வாரங்களை கடந்து மாதங்களில் வந்து நிற்க ,வாசவியை கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் நாளும் வந்தது.
அந்த வாரத்திலிருந்து வாசவி , வீட்டில் கல்லூரிக்கு அதுவும் சென்னைக்கு போக மாட்டேன் என அடம்பிடிக்க தொடங்கினாள்.
“நீ இப்படி பண்றது நல்லா இல்லை பா. நான் நீ அஞ்சு வருஷத்துல டாக்டரா வருவேன்னு பார்த்தா , நீ இப்படி பண்றியே ” என தந்தை சந்திரசேகர்  சுணக்கத்துடன் சொல்ல
“ப்பா.. உங்களை எல்லாம் நான் விட்டு போக மாட்டேன் ” என சிறு குழந்தை போல் அடம்பிடித்தாள் அவள்..
“இங்க பாரு டி..இப்படி அழுதேன்னு வை அப்புறம் நான் என்ன பண்ணுவேனே தெரியாது . கிடைக்கிற வாய்ப்பை பயன் படுத்திக்க பாரு வாசு ” என கண்டிப்புடன் அன்னை சொல்ல 
“பாப்பா.. இந்த அப்பாக்காவாது அங்க போய் படிச்சு ஒரு நல்ல டாக்டரா வா டா.  இன்னும் கொஞ்ச நாள்ல ட்ரென்ஸ்ஃபர் அப்ளிக்கேஷன் ஸ்டார்ட் பண்ணுவாங்க . நான் அதுல சென்னைக்கு கேக்குறேன் சரியா. நீ போன கொஞ்ச நாள்ளையே நானும் அம்மாவும் அங்க வந்திடுவோம் புரியுதா. அதுனால இப்போ கவலை படாம ஊருக்கு கிளம்புவியாம் ” என வாத்தியார் பொறுமையாக மகளுக்கு புரிய வைக்க முனைய 
“கண்டிப்பா வந்துடுவீங்கல..?? ” என ஏக்கத்துடன் கேட்க 
“கண்டிப்பா வந்துடுவோம் பாப்பா” என வாக்களித்தார்.
“அப்போ சரி நான் அங்க போய் படிக்கிறேன்..” என்று கிளம்பினாள் வாசவி.
கிளம்பும் முன்பு அவளின் தோழிகள் படை வந்து விட , அவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு அன்னை தந்தையோடு மகள் ஊருக்கு கிளம்பினாள்.
அடுத்தநாள் சென்னை வந்தவளுக்கு மனம் பதைபதைக்க செய்தது.
தாய் தந்தையை பிரியப் போகிறோம் என்று நினைக்கையிலே விழுக்கென்று கண்ணீர் துளி எட்டி பார்த்தது.
தந்தை பார்த்திட கூடாதென்று யாரும் அறியா வண்ணம் துடைத்து கொண்டாள்.
ஆனால் அவள் மனது முழுவதும் குழப்பமே நிறைந்திருந்தது. இவர்களை விட்டு தனியே இருந்து படிப்பது நல்லதா என்று…??
அவளுக்கு எத்தனை பேர் எத்தனை முறை சொல்லி புரிய வைக்க முயற்சித்தாலும் அவளால் அதை ஏற்றுக் கொண்டு அதை செயல் படுத்த தான்    முடியவில்லை.
ஏனோ மனது அதை ஏற்க முடியாமல் தவித்தது. இதே தான் வாழ்க்கையில் முக்கிய நேரத்திலும் குழம்பி சிலரின் மனதை காயப்படுத்த உள்ளால். அதை உணரும் நாள் வரும்போது அவள் அந்த பிரச்சினையின் ‌முடிவில் இருப்பால்.
வாழ்வில் படிப்பு என்பது மிகவும் தேவை படுகின்ற ஒன்று. படிப்பு இருந்தால் மட்டுமே வாழ்வில் சாதித்து விட முடியுமா என்றால் முடியாது. அதனை கூடிய தைரியமும் விடாமுயற்சியும் வேண்டுமே சாதிக்க .. 
சென்னை வரைக்கும் வந்துவிட்டவளுக்கு , கல்லூரி வாழ்வை நினைக்கும்போதே வயிற்றினுள் அவளுக்கு பயப் பந்துக்கள் சுழன்றது.
மூவருமாய் அங்கேயே ஒரு ரூம் எடுத்து தங்கி , ஹாஸ்டலிற்கு தேவையானவற்றை எல்லாம் வாங்கி வைத்தனர்.
அவளின் நிலையை மாற்றுவதற்காக அவளுக்கு பிடித்தமான போக விரும்பும் இடமான கடற்கரைக்கு  அழைத்து சென்றனர்.
குளிர் காற்று  உடலை வருடிச் செல்ல , அக்காற்றை நுகர்ந்த போது உடலிலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தியது. கிழக்கு வானம் சிவந்திருக்க  உச்சியிலிருந்த சூரியன் மெல்ல மெல்ல இறங்கி மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த நேரமது.
வெயில் நீங்கி குளிர் காற்று வீச ,கடற் கரையில் மோதித்தெறிக்கும் அலைத்துளிகள் சூரியனின் செந்நிறத்தில் முத்துக்களாக சிதறி கொண்டிருந்த நேரத்தில் குழந்தையென அதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் வாசவி.
அவளுக்கு இந்த இயற்கையின் மாற்றங்கள்  எல்லாம் புதிதாக தெரிய ஆசையாக பார்த்தாள் வாசவி.
அவளுக்கு இயற்கையின் அழகினை பார்க்க பார்க்க ஆசை தீரவில்லை.
அலைகள் ஒன்றும் அடங்காமல் மோதிக்கொள்ளும் அழகினை பார்க்க பார்க்க தானும் ஒரு அலையாய் இருந்திருக்க கூடாது என்று ஆசைக்கொண்டாள்.
பக்கத்தில் உள்ளோர்கள் யாவும் அந்த அலைகளுடன் விளையாட , அவளுக்கும் அந்த ஆசை வந்தது.
வேகமாக தூரத்தில் அமர்ந்திருந்த தாய் தந்தையிடம் நோக்கி ஓடி வந்தவள் ,”ப்பா வாங்க தண்ணில கால் வைக்கலாம் ” என கூப்பிட
“நான் வரல பாப்பா நீ போய் விளையாடு டா ” என சொல்ல 
“அம்மா நீயாவது வா மா தண்ணில கால் நனைக்கலாம் ” என அழைக்க 
“நீ என்ன சின்ன பொண்ணா சொல்லு .நீயே போய் விளையாடு அம்மாக்கு இதெல்லாம் பிடிக்காது .  ” என நிறுத்தி ” தண்ணிக்குள்ள போக கூடாது. கரையிலே நின்னு தான் கால் நனைக்கனும் புரியுதா ” என்று அவளுக்கு புத்திமதி சொன்னார்
“போங்க ரெண்டு பேரும்..” என கோபித்துக் கொண்டு திரும்பி வந்தவள் தனியாய் வந்து காலை நினைத்தாள்.
ஒவ்வொரு அலை வரும்போதும் அதோடு தனியாகவே ஓடிபிடித்து விளையாட , பக்கத்தில் இருந்த இளைஞர்கள் தண்ணீருக்குள் சென்று சென்று பின் வருவதை பார்த்து தானும் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுள் எழுந்தது.
ஆனால் அன்னை உள்ளே செல்ல கூடாது என்று அறிவுரை வழங்கியது ஞாபகம் வரவே தயங்கி நின்றாள்.
ஆனாலும் ஆசை கொண்ட மனது செய்து பார் என்று கட்டளையிட திரும்பி தாயையும் தந்தையையும் பார்த்தாள்.
இருவரும் மும்முரமாக எதையோ பற்றி பேசுவதை பார்த்த வாசவிக்கு , அவர்கள் தன்னை பார்ப்பதற்குள் உள்ளே சில அடிகள் வைத்து விட்டு திரும்பி விடலாம் என்று நினைத்து முன்னேறினாள். 
அழகாய் அடியெடுத்து வைத்தவளுக்கு முதலில் சிறிய அலைகளே வர அவளுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை.
ஆனால் ஆசைக் கிணங்க உள்ளே செல்ல அடியெடுத்து வைக்க வைக்க கால்கள் உள்ளே செல்லவும் இளஞ்சிட்டுவின் மனது துளி குதித்தது.
அதனையே பார்த்திருந்தவளுக்கு பெரிய அலை ஒன்று வேகமாக வந்தது தெரியாமல் போய்விட , அது நெருங்கவும் பயந்து போனவளுக்கு கால் தடுமாறி விட ,அலை வந்த வேகத்து அவளோடு உள்ளிழுத்து கொள்ள முற்பட்ட போது “அப்பா…” என்ற கத்தலுடன் கண்கனை இறுக மூடிக் கொண்டாள்.
அவளை காக்கும் பொருட்டு வலிய கரமொன்று அவளின் பின்னாலிருந்து இடையை பிடித்து தன்னோடு இறுக்கிய படி தூக்கி சுழற்றி வந்து இறக்கிவிட்டது.
 முன்பாகவே பயத்தில் இருந்தவளுக்கு சுழற்றியதில் மயக்கம் வரவே , தள்ளாடியபடி நின்றவளை கொஞ்சமும் இறக்கமில்லாமல் அவளின் கண்ணத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அவன்.
எனக்காவே பிறந்தவனோ..
எனை காக்கவே ஜனனம் செய்தவனோ…
மென்மையை கொண்டு வலியை மறக்கடித்தானே..
கரம் கொடுத்து உயிர்பித்தானே…
கரத்தை கொண்டே என் சிந்தை  கலங்கடித்தானே..
யார் அவன்…!??

Advertisement