Advertisement

தனது அறைக்கு வந்த நித்ய வாசவி , பேஷன்ட்ஸ் ஒவ்வொருவரையும் அட்டன்ட் செய்து முடிக்கவே மாலையானது.
அத்தனை நேரமும் இருந்த வேலை பளுவில் வீட்டை பற்றின நினைப்பை மறந்தளுக்கு ,ஏனோ கணவனின் ஞாபகமும் அத்தையின் ஞாபகமும் ஒரு‌ சேர நினைவில் வர வாழ்வே சூனியமாக தெரிந்தது.
வாழ்க்கையை இந்த சிறுவயதிலே வெறுக்க தொடங்கி இருந்தாள் அவள். காதல் திருமணம் செய்தவளுக்கு புகுந்த வீட்டில் சிறப்புற நடத்தவில்லை அவளை. ஏனோ அவர்களுக்கு இவளை பார்த்தாலே வேற்றுலக மனிஷி போலே தோன்றினாலோ என்னவோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் விதமாக பாசமாக காதலாக அன்பாக இருந்தது என்னவோ அவளது கணவன் ஆதித்ய வரதன் தான். அவன் அவளுக்கு வெறும் காதலனோ கணவனோ மட்டுமல்ல அவளுக்கு ஒரு நல்ல தாயுமானவன் கூட…
இந்த மூன்று வருட திருமண வாழ்வில் இருவருக்கும் ஒரு சுணக்கம் கூட வந்ததில்லை. ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து காதலோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.
வாழ்வே பூதங்கரமாக தெரியவும் மதியமும் சாப்பிடாததால் மயக்கம் வருவது போல் தோன்ற அப்படியே டேபிளில் தலை வைத்து படுத்துவிட்டாள்.
அவள் படுத்த சிறிது நொடியில் ,செவிலியர் அவளுக்கு லேன்லைன் மூலம் தொடர்பு கொண்டாள்.
எழுந்தவள் அந்த லைனை அட்டன் செய்து காதில் வைத்தாள்.
“மேடம் ஷீவ் டாக்டர் உங்க கிட்ட பேசணும்னு சொல்லி கால் கனெக்ட் பண்ண சொன்னாங்க “என்க 
“சரி கனெக்ட் பண்ணுங்க ” என்றாள் வருத்தத்தை உள்ளடக்கிய படி…
அடுத்த நொடியே அந்த செவிலியர் காலை கனெக்ட் செய்து விட ,”சொல்லுங்க மாமா.. எதாவது இம்பார்டண்டா..???” என்றாள்
“ஆமா மா.. உன்னோட பொற்செல்லவனை பத்தி தான் ” என்க
“புரியல மாமா..” என்று புரியாமல் விழித்தாள் வாசவி.
“அதான் மா உன்னோட புருஷன். அவன் சிங்கப்பூர் ரீச் ஆகிட்டானாமா.. உனக்கு போன் பண்ணப்ப நீ எடுக்கலையாமே . அதான் எனக்கு சொல்லி சொல்ல சொன்னான் ” என்றார் அவளின் நிலையறியாமல்…
“சரிங்க மாமா.. நான் இங்க கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் அதான் மாமா பேச முடியாம போச்சி..” என பொய் கூறி சமாளித்தாள்.
“சரி மா..நீ பாத்து வீட்டுக்கு பொய்டு.எனக்கு காலேஜ்ல கொஞ்சம் வேலை இருக்கு அதை பாத்துட்டு வரேன் ” என்று வைத்து விட்டார்.
இப்போது அவளின் எண்ணவோட்டங்கள் யாவும் கணவனின் மீதே இருந்தது. அவனிடம் பேச வேண்டுமென காதல் கொண்ட மனம் அடித்துக் கொள்ள அது செய்ய முடியா நிலையில் அவளை கட்டி போட்டனர்.
அதனாலே அவனின் நினைவலைகளில் அவனை மீட்டெடுக்க தொடங்கினாள்.
************
“அப்பா.. என்ன எதுக்கு பா இவ்வளவு தூரத்துல கொண்டு வந்து காலேஜ் சேர்க்க பாக்குறீங்க..???” என தந்தையிடம் இதோடு ஆயிரமாவது முறையாக சண்டை பிடித்தாள்.
“நீ தான் நம்ம ஊருலயே நல்ல மார்க் வாங்கியிருக்க.. உன்ன ஒரு நல்ல படிப்பு படிக்க வைக்கனும்னு ஒரு வாத்தியாரா எனக்கு ஆசையிருக்காத என்ன .ஒழுங்கா சிரிச்ச முகமா வரனும் புரிஞ்சிதா “என தந்தை சந்திரசேகர் அவளுக்கு புரியும் படி சொல்ல 
ஆனாலும் தந்தையிடம் மகள் முறுக்கி கொண்டு தான் அந்த கல்லூரிக்கு வந்தாள்.
சந்திரசேகர் -மாதவி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் .மூத்த மகள் சரண்யா அவளுக்கு மோகன் என்பவருடன் திருமணமாகி இப்போது மூன்று மாதத்தில் அழகான ஆண் குழந்தையும் உண்டு . அவனுக்கு தினேஷ் என்று பெயர் வைத்திருந்தனர். இளையவள் தான் நித்ய வாசவி . பயந்த சுபாவம் கொண்டவள் ,தந்தையை சார்ந்தே இத்தனை கால வாழ்க்கையை கடந்து வந்தவளுக்கு பனிரெண்டாம் வகுப்பில் ஸ்டேட் ஃபோர்த் வந்ததால் மெரிட்டேலே ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு வந்தது.
அதன் பொருட்டே தந்தையும் மகளும் இன்று அவர்கள் ஊரை விட்டு சென்னை செல்கின்றனர்.
தந்தையை பிரிந்திருக்க நேரிடும் என வாய்ப்பு வந்த நாளில் இருந்தே தந்தையிடம் மகள் ஒரே சண்டை . ஆனால் அவர் மகளின் எந்த ஒரு சண்டைக்கும் அவரது முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. தந்தை கூடவே தாய் மற்றும் சகோதரியின் போராட்டத்தில் அவளை கிளப்பி இருந்தனர்.
அடுத்த நாள் காலை சென்னையில் வந்து இறங்கியதுமே சந்திரசேகருக்கு தெரிந்த வீட்டிற்கு சென்று கிளம்பி கல்லூரிக்கு சென்றனர்.
கல்லூரியின் தொடக்கத்திலே பெரிய பலகையாக “RV MEDICAL COLLEGE AND HOSPITAL” என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அதற்கு பக்கத்தில் சிறிய விநாயகர் கோவில் ஒன்று இருந்தது .
நேராக கோவிலுக்கு சென்ற வாசவி ,”அப்பனே விநாயக எப்படியாவது இங்க சீட் கிடைக்காம பாத்துக்கோ பா. எனக்கு அப்பா கூட இருக்கனும்.இங்க வந்து தனியாலாம் என்னால இருக்க முடியாது கடவுளே. நீங்க தான் ஏதாவது செய்து இக்காரியத்தை நிறுத்தனும் ” என வேண்டி மூன்று முறை தோப்புகாரனம் போட்டவள் தந்தையோடு நடையிட்டாள்.
உள்ளே செல்ல செல்ல நித்ய வாசவி அந்த இடத்தின் அழகினை கண்டு பிரமித்து தான் போனாள். 
சுற்றி இருபுறம் அழகிய வண்ண பூ செடிகள் இருக்க அதற்கு நடுவில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. காணாததை கண்டது போல் அதனை பார்த்து வந்தாள் வாசவி.
“அம்மு சீக்கிரமா வா.. நேரமாச்சி பாரு ” என அவளை இழுத்துச் சென்றார் தந்தை.
அவளும் தந்தையுடன் இருபுறமும் பார்த்தபடியே நடந்து சென்றாள்.
அரை கிலோமீட்டர் தூரம் நடந்திருந்தவளுக்கு கால் வலிக்க தொடங்க ,”அய்யோ அப்பா இது என்னது பொய்க்கிட்டே இருக்கே. என்னால முடியல பா நான் வரல ” என்று சிறு பிள்ளைப்போல் அடம்பிடித்தாள்.
“இதோ அங்க தெரியுது பார் பில்டிங். நாம வந்துட்டோம் டா பாப்பா. இப்போ நீ வந்தின்னா உனக்கு பிடிச்ச படத்துக்கு கூட்டிட்டு போவேன் சரியா “என அவளை சரிக்கட்ட ,அவளும் எழுந்து நடக்க தொடங்கினாள்.
இருவரும் உள்ளே சென்று ப்ரின்ஸ்பாலை பார்க்க காத்திருந்தனர்.
சேர்மேன் கார்த்திகேயன் மருத்துவமனைக்கு சென்றிருந்ததால் ,ப்ரின்ஸ்பாலை பார்க்க காத்திருந்தனர்.
பிரின்ஸிப்பால் வந்தவுடன் , இருவரும் உள்ளே செல்ல ,அவரோ நித்ய வாசவியை பாராட்டி பேசி , இறுதியில் அவளுக்கான மெரீட் சீட்டை வழங்கினர்.
அவள் வேண்டின வேண்டுதல் எல்லாம் பலிக்காமல் போய்விட விநாயகரின் மீது கோபத்தில் இருந்தாள்.
பின் இருவரும் வெளிவந்து காலை உணவினை முடித்து அங்கிருந்த மாலை காட்டி அழைத்து செல்ல சொல்லி வாசவி அடம்பிடிக்க தந்தையும் அவளை அங்கு அழைத்து சென்றார்.
அவள் ஆசைப்படி வாசவி கேட்டவை அனைத்தையும் வாங்கினார் சந்திரசேகர்.
வாசவியோ அந்த மாலின் அழகை பார்த்து இரசித்து வந்தவளுக்கு கீழே கொட்டியிருந்த சோப்பு தண்ணீர் அவள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட அதில் காலையை வைத்து வழுக்கி விழுந்தாள் .
“அய்யோ..! அம்மா..”என கத்தியவளின் குரல் அங்கிருந்த யாருக்கும் கேட்க வில்லை.
பின்னாலிருந்து ஒரே ஒரு குரல் அவளுக்கு கேட்டது.
“இப்படி தான் சோப்பு தண்ணி கொட்டி இருக்குறது கூட தெரியாத அளவு நடப்பாங்களா ” என ஆண் குரல் கேட்கவும் வாசவிக்கு திடுக்கிட்டது.
பயந்து போன வாசவிக்கு எந்திரிக்க கூட முடியவில்லை. கால் சூளுக்கிக் கொண்டது வேற வலி எடுத்தது.
அவளின் அவஸ்த்தையை புரிந்து கொண்டவன் அவளுக்கு முன்னே வந்து கை நீட்டினான்.
அவளோ அதில் மேலும் பயந்து அந்த ஏசியில் நடுங்க தொடங்கி  சுற்றிலும் பார்வையை தவிப்போடு பதித்தாள். 
அதனை கண்டவன்”ஹே சில் பேபி சில் டோன்ட் பேணிக் ஓகே  . நான் உனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்திருக்கேன் சரியா நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை “என்றவன் “என் கைய பிடிச்சு எழுந்துக்கோ ” என நீட்டிய கையை அவன் கண்களால் காட்டினான்.
அவளுக்கு பயமாக தான் இருந்தது ஒரு ஆடவனின் கையை பிடிக்க ,ஆனாலும் வேறு வழியின்றி அவனின் கையை பிடித்து எழ முயன்றாள்.
அப்போதும் முடியாமல் போக , அவனின் உதவியோடு எழுந்தாள் வாசவி. ஆனால் அவளுக்கு கால் வலி எடுக்க  அவனின் தோளை பிடிமானத்திற்காக பிடித்தாள் வாசவி.
அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்தவன் ஒரு இருக்கையில் அமர வைக்க ,அமர்ந்தவளுக்கோ காலை ஊன முடியவில்லை.
“சரி உன்னோட காலை காட்டு ” என அதட்டலாகவே சொல்ல 
பயந்த சுபாவம் கொண்டவளோ மேலும் நடுங்கினாள்.
“நான் ஒன்னும் செய்ய போறது இல்லை. ஜஸ்ட் கால்ல சுளுக்கெடுக்க போறேன் அவ்வளோ தான் .அன்ட் நான் ஒரு மெடிசின் ஸ்டென்ட் ஓகேவா .சோ என்ன பாத்து பயப்பட வேணாம் . ஒரு டாக்டரா நான் பேஷன்ட்க்கு ஹெல்ப் பண்றேன் அவ்வளோ தான்” என்றவன் அவளின் காலை எடுத்து தன் மடியில் வைத்து சுளுக்கெடுத்து விட்டான்.
“இப்ப ஓகோ என்னோட வேலை முடிஞ்சது நான் போறேன்” என்றவன் எழுந்து நடக்க தொடங்கினான்.
“ஒரு நிமிஷம்…”என பல தயக்கங்களுக்கு பின் அவனை அழைக்க 
அவனோ திரும்பி பார்த்து என்னவென்று புருவம் உயர்த்திட 
“தேங்க்ஸ்”என்றாள் மெல்லிய இதழ் விரிப்போடு….
அதன்பின் மெதுவாக எழுந்து நடந்தவள் தந்தையுடன் இணைந்து கொண்டாள்.
வீழும்முன் அந்த கண்ணீர் துளி
கரையும் அந்த மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே
காயம் ஆறும் இந்த புன்னகைகளே…

Advertisement