Advertisement

வரமென வந்தவளே 
அத்தியாயம் 01
மங்கிய மாலை நேரம் அந்திவானம் சிவப்பேறி , வெம்மை தன்னை விரட்டித் தென்றலை வீசி இன்பம் சேர்க்கும்
வெள்ளி நிலவு இருட்டிய வேலையில் அங்கிருந்த பூங்காவில் அமர்ந்திருந்த இவரின் மனநிலை மட்டும் அடுத்தநாள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கடந்திட வேண்டுமென இயற்க்கையோடு மன்றாடியது..
“ஹே! நாளைக்கு காலைல சீக்கிரமா வந்துருவல .உன்ன நம்பி தான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணி இருக்கேன் ” என்று ஏவி கேள்வியாக அவளை நோக்க 
“கண்டிப்பா வந்துடுவேன் டா. ஆனாலும் இப்படி பெரியவுங்களுக்கு தெரியாமலா நாம கல்யாணம் பண்ணிக்கனும் சொல்லு .இது தப்பில்ல ” என்று தயங்கியவாறே தன் கருத்தினை அவள் முன் வைக்க 
அவள் கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் ,” ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சிக்கோ ,இப்படி இன்னைக்கு நான் பிடிச்சிருக்க கைய என் வாழ்நாள் முழுவதும் பிடிச்சிருக்கனும்னு ஆசை படுறேன் டி. நாளைக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலைன்னா அப்புறம் எப்போதுமே உனக்கு இந்த ஏவி கிடைக்காமலே பொய்டுவான் . அதை  ஞாபகத்துல வச்சிக்கோ டா “
“அது மட்டும் இல்லாமல் ,எங்க வீட்ல நம்ம லவ் தெரிஞ்சி என்னோட அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ண முடிவு செஞ்சிட்டாங்க .உங்க வீட்லயும் நான் பெரிய இடம்னு ஒத்துக்க மாட்டாங்க. இப்ப சொல்லு இத தவிர்த்து நாம சேருறதுக்கு ஏதாவது ஐடியா இருக்கா ” என்றவாறே அவள் கைகளை விடுவித்தான்.
அவன் விடுவித்த நொடியே அவள் கையினை பற்றிக்கொள்ள , அவளின் செய்கையை கண்டு உள்ளார புன்னகைத்தான் ஏவி.
“விடமாட்டேன் ஏவி .உன்னோட காதல் எனக்கு மட்டும் தான் சொந்தம் ” என்றவளின் கையில் மென்மையாக முத்தமிட்டான் ஏவி.
அடுத்தநாள் நடக்கப்போகும் அவர்களது திருமணத்தை பற்றி பேசிய பின் இருவரும் அவர்களது வீட்டிற்கு சென்றனர்.
அன்றைய இரவு அவர்களுக்கு உறங்கா இரவாகவே சென்றது.
காலையில் எழுந்ததுமே எப்போதும் கிளம்புவது போல் இருவரும் கிளம்பி அவர்களது நண்பர்கள் வீட்டிற்கு வந்து விட , அங்கிருந்து இருவரும் கிளம்பி ரிஜிஸ்டர் ஆஃபிஸிற்கு சென்றனர்.
அங்கிருந்து கிளம்பும் வரை அமைதியாக இருந்தவள் , ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வந்ததும் மீண்டும் பாடிய பல்லவியை பாடத் தொடங்கினாள் ஏவியின் காதலி.
அதனை கேட்டவனுக்கு கோபம் தலைக்கேறி விட ,”சரி இந்த மேரேஜை கால் ஆஃப் பண்ணிடலாம். அவளுக்கே பிடிக்காத போது இந்த கல்யாணம் எதுக்கு நிறுத்திடலாம் ” என்றான் விட்டோத்தியாக 
அவன் சொன்னதில் முகம் சுருங்கி போனது அவளுக்கு.
“என்ன டா பேசுற நீ ” என்று அவன் நண்பர்கள் கோபப்பட 
“வேற என்ன பேச சொல்றீங்க..?? அதையே சொல்லுங்க நான் சொல்றேன் ” 
“அவ ஏதோ பயத்துல பேசுறா டா .அவளை பத்தி உனக்கு தெரியாதா சொல்லு .ஒரு விஷயம் கிடைச்சா அதை பத்தியே யோசிச்சு சுத்தி உள்ளவுங்களை ஒரு வழி பண்ணுவான்னு உனக்கு தெரியாதா சொல்லு ” என்று அவன் நண்பர்கள் சொல்ல
“நேத்து தான் மச்சி அவளுக்கு அத்தனை தடவை சொன்னேன். இதை தவிர வேற சாய்ஸ் நமக்கு இல்லைன்னு இப்போ திரும்பவும் ஆரம்பிச்சா நான் என்ன செய்ய “என்றவனின் குரலில் அத்தனை கடுமை இருந்தது.
“இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க டா. பணத்துக்கு பணமும் நேரத்துக்கு நேரமும் தான் வீணாச்சி” என்றவன் அவளை பார்த்து “ஆனா ஒன்னு இன்னைக்கு கல்யாணம் நின்னுட்டா அதுக்கப்புறம் வைஷூக்கு  சொந்தமான பொருளா நான் மாறிடுவேன். அது தான உனக்கு வேணும்னா ,அப்போ நீ கிளம்பு ஆனா அதுக்கப்புறம் நான் செத்தா கூட என்ன பாக்க வந்துறாத ப்ளிஸ் ” என்றவன் அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.
ஏவியின் காதலியால் அவனை இன்னொருவளுடன் பெயர் சேர்த்து சொல்வதை கூட ஏற்க முடியாமல் தவித்து போனாள்.ஆனால் அதனுடன் சேர்த்து பெற்றவர்களை ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு அவளை போட்டு வாட்டி எடுக்க , அவளின் காதலன் அவியை பார்த்தவள் முடிவெடுத்தவளாய் பெருமூச்சொன்றை விடுத்தாள்.
அதன் பின் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தவள் ,” சாரி டா என்னைய மன்னிச்சிடு. என்னால உன்னைய இன்னொருத்திக்கு எல்லாம் விட்டு கொடுக்க முடியாது. நீ சொன்னது போல நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம் ” என்று அவன் காதலி உறுதியளித்தாள்.
பின்னர் நண்பர் படை சூழ ரிஜிஸ்டர் ஆஃபிஸில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
என்ற பாடல் கிருஷ்ணர் கோவிலில்  பாடிக்கொண்டிருக்க ,அவள் நினைவலைகளில் இருந்து வெளிவந்தவள் ,இப்பாடலை பாடும் போதும் கேட்கும்போதும்  மனதில் உள்ள கவலைகள் யாவும் நீங்கும் என யாரோ சொல்லி கேட்டு இருக்க , அதனாலே அங்கிருந்த அவள் தன் கவலைகள் யாவும் நீங்க வேண்டி அந்த பாடலையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தாள்.
மனதில் உள்ள ரணம் ஆறவேண்டும் என்றும் கடந்த கால வாழ்க்கையை முற்றிலும் மறக்கடிக்க வேண்டுமென்ன நடுப்பகுதி என்றும் பாராமல் அங்கிருந்த ஒரு இடத்தில் ஓரமாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.
அவள் மனம் முழுவதும் உலையாக கொதித்து கொண்டிருந்தது. அவள் ஆசைப்பட்டு பலரின் எதிர்போடு கோர்க்கப்பட்ட வாழ்க்கையின் முறிவுக்கான முதல் படியை எடுத்து வைத்திருக்கிறாள். அதாவது தன் கணவனிடமிருந்து பிரிந்து வருவதற்காக டிவேர்ஸ் பேப்பர் அப்லை செய்திருக்கிறாள். 
அந்த பாடலை பாடிக் கொண்டிருந்த நேரம் பார்த்து அங்கு வந்த ஐயர் ,”அம்மா நடை சாத்திர நேரம் ஆகிட்டு மா ” என்று சொல்ல
“சரிங்க சாமி ” என்றவள் கிருஷ்ணர் பாதங்களில் முன் நின்றாள்.
“ஏன் கிருஷ்ணா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது சொல்லுங்க . என்னோட வாழ்க்கையில இனி என்னோட அவி எனக்கு இல்லைன்னு நினைக்கும்போதே இப்பவே என்னோட உயிர் என்ன விட்டு பொய்ட கூடாதான்னு இருக்கு சாமி.  நான் அவனோட இருந்தா அவன் நிம்மதியாவே இருக்க மாட்டான் .அவனோட நிம்மதியும் சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம் .அது என்னோட பிரிவுல தான் கிடைக்கும்  “என்று கிருஷ்ணரிடம் மன்றாடியவளுக்கு தெரியவில்லை அவனின் நிம்மதியும் சந்தோஷம் எல்லாம் அவளுடன் இருப்பதே என்று…
கிருஷ்ணரிடம் மண முருக அவி சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டவள் , அவளின் மொபைல் அழைக்கவே அங்கிருந்து வெளிவந்தாள்.
வெளி வந்தவள் மொபைலை எடுத்து பார்க்க அதில் “சகுந்தலா அத்தை ” என்று டிஸ்ப்ளே ஆகவே , கைகள் நடுக்கத்துடனே அதனை ஆன் செய்தாள்.
“சொல்லுங்க அத்தை ” என்று தயங்கியவாறே கேட்க 
“யாருக்கு யாரு டி அத்தை  ‌. இந்த அத்த கித்தைன்னு உறவு கொண்டாடிட்டு இருந்தன்னா அப்புறம் மரியாதை கெட்டுடும் பார்த்துக்கோ .உன்ன மாதிரி ஒருத்தியை எப்படி தான் அவன் காதலிச்சானோ. என்னத்த பண்ணி என் பையனை மயக்கி வச்சியோ தெரியல உன் பின்னாடியே சுத்திக்கிட்டு அலையிறான்  ” என்று அமிலம் போல் வார்த்தைகளை கொட்ட 
அவர் பேசியதை தாங்கி கொள்ள முடியாத பேதை கீழுதட்டை கடித்து தன் அழுகையினை கட்டுப்படுத்தினாள்.
“அத்தை எதுக்கு கூப்பிட்டிங்க..??? ” 
“எதுக்கு கூப்பிட்டேன்னு உனக்கு தெரியாதா ..??அப்படியே தெரியாத மாதிரியே நடிக்கிறது.இப்படியே நடிச்சு தான உன்னோட குறையே தெரியாத அளவுக்கு என்னோட பையனை மயக்கி வச்சிருக்க ” என்று வார்த்தைகளை நெய் போல் காற்றில் மணக்க விட்டார்.
“அப்படிலாம் இல்ல அத்…” என்று முடிப்பதற்குள் இடைபுகுந்து வந்தது ஒரு குரல்…
“வாய மூடு இன்னொரு தடவை என்னோட அத்தைய அத்தைன்னு சொன்ன அப்புறம் உன்ன என்ன பண்ணுவேன்னே தெரியாது பாத்துக்கோ ” என்று மிரட்டினாள் அவள்.
” நீ அங்க போய் சைன் பண்ணியா இல்லையான்னு மட்டும் சொல்லு .தேவையில்லாததை பேசி எங்க நேரத்தை வீணடிக்காத ” என்று சகுந்தலா சொல்ல
அழுகையின் பிடியில் இருந்தவாறே ,” ச..சை..ன் போ..ட்..டே..ன் அ..த்தை ” என்று திக்கி திணறி கூறினாள் அவள்.
அந்தப்புறம் இப்பதிலை கேட்ட மூவருக்கும் சந்தோஷம் தாளவில்லை.
“சரி போனை வச்சி தொலை ” என்று கட் செய்தார் சகுந்தலா வர்தன்.
“எப்படியோ பீடை ஒழிஞ்சது அண்ணி ” என்று பெருமிதமாய் கூறினார் சகுந்தலாவின் அண்ணன் பார்த்திபனின் மனைவி மஞ்சரி.
“ஆமா மம்மி நீ சொன்னதும் ரைட் தான். அவ ஏவிக்குலாம் செட்டே ஆக மாட்டா பட்டிக்காட்டு பொண்ணு. சும்மா சும்மா வாடர்ஃபால்ஸ் ஊத்திக்கிட்டு ” என்று கடுப்புடன் கூறினாள் மஞ்சரியின் மகள் வைஷாலி.
“எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு. இனி நான் ஆசைப்பட்ட படி என்னோட அண்ணன் மகளே எனக்கு மருமகளா வந்திடுவா ” என்று பெருமிதமாய் கூறியவர் வைஷாலி தலையை தடவி கொடுத்தார்.
“அத்தை இப்படி ஒரு சந்தோஷமான நாளை நாம செலிப்ரேட் பண்ணணும் த்த. வாங்க நாம மூணு பேரும் ஷாப்பிங் பொய்ட்டு வரலாம் ” என்று ஐடியா கொடுக்க 
“அதுவும் நல்ல ஐடியா தான் அண்ணி வாங்க போகலாம் ” என்று மஞ்சரி ஒத்து ஊத 
மூவருமாய் கிளம்பி மாலுக்கு சென்று அங்கிருந்த பெரிய கடையினுள் நுழைந்தனர்.
இங்கே வெயில் என்றும் பாராமல் அவள் சிலைப்போல் நின்ற இடத்திலே நிற்க ,அவளுக்கு தீடிரென மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரவும் வேகமாக அட்டன் செய்து பேசிவிட்டு வைத்தவள் ,கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டு கடமையை பரைச்சாற்ற மருத்துவமனைக்கு சென்றாள்….
#####
தாம்பரம் மற்றும் மாம்பலம் செல்லும் வழியில் இருந்த பல்லாவரம் என்ற பகுதியில் அடுக்கு மாடி வீட்டில் குடியிருந்த தம்பதியின் வீட்டில் ஒரு சிறுமியின் அழுகுரல் சத்தமே கேட்டது. அச்சிறுமியின் அழுகை சத்தம் கூட அக்கம் பக்கத்தினோருக்கு கேட்காமல் போய் விட்டது.
“அம்மா அம்மா ” என்று தீடிரென உள்ளறையில் வயிற்றை பிடித்துக்கொண்டு கத்தினாள் அந்த பதிமூன்று வயது சிறுமி.
“ம்மா ரொம்ப வலிக்குது மா . என்னால முடியல மா வலி தாங்கள ” என்று அழுகையின் பிடியில் யாருமில்லா வீட்டில் கத்த, கேட்ட உயிரற்ற பொருட்களுக்கு கூட உயிர் இருந்தால் அழுதிருக்குமோ என்னவோ.
அவள் கத்தலை கேட்க கூட ஆல் இல்லாமல் தனியாக இருந்தாள் அந்த பதின்ம வயது குட்டி.
அவளின் அலறல் அழுகையின் பிடியில் சிக்கித் தவிக்க , அவளால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது.
இப்பதின்ம வயது சிறுமிக்கு இது ஒன்றும் புதிதல்ல. சில மாதங்களாகவே இந்த வயிற்று வலி பிரச்சனை அவளுக்கு இருக்கிறது தான். ஆனால் அச்சிறுமிக்கு இப்படி ஒரு வயிற்று வலி இருக்கிறது என்று அறியாத படி அவளை பெற்றவர்கள் இருந்தனர்.
நல்ல சம்பாத்தியத்தில் நல்ல படியாக வாழ வேண்டும் என்று நினைத்த பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்ல ,இக்குழந்தையின் பிரச்சனை அங்கிருந்த யாருக்கும் தெரியாமல் போகிற்று. இது இப்போதைய பெறும்பாலான பிரச்சனை. பெற்றவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பெற்ற பிள்ளையின் நலனை கண்காணிக்க மறந்து விடுகின்றனர்.
அச்சிறுமி வயிற்று வலியால் துடிதுடித்து போய் அவ்விடத்திலே மயங்கி விழுந்து விட ,தலையில் சிறிது அடிப்பட்டு உதிரம் சிறிதாக கசிய துவங்கியது.
சிறிது நேரத்திலே தலைவலி காரணமாக வேலையில் இருந்து சீக்கிரமாகவே வீடு திரும்பிய அச்சிறுமியின் அன்னை , தன் பெண்ணை தேடி அவள் அறைக்கு வருகை தந்தவள் அதிர்ந்தே போய்விட்டாள்.
“அம்மு ” என்று கத்தியவாறே அவளை நோக்கி ஓடினாள் அவள் அன்னை பார்கவி.
அவளிடம் விரைந்தவள் தன் பெண்ணை தன் மடியில் தாங்கி “அம்மு அம்மு ” என்று கத்த , அந்த புறத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் போனது.
பார்கவிக்கு தன் மகளின் தலையில் அடிப்பட்டு உதிரம் வருவதை கண்டு பயந்து போனவள் , உடனே தன் கணவனான கமலனிற்கு அழைப்பு விடுத்து விரைந்து வருமாறு கூறினாள்.
அதன்பின் நேரம் தாமதிக்க விரும்பாமல் ,அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு சென்றாள்.
பார்கவி தன் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த சமயம் ட்யூட்டி டாக்டர் மட்டுமே இருக்க ,உடனே அச்சிறுமியை அனுமதித்து அவளுக்கான சிகிச்சையை தொடங்கி விட்டு குழந்தை நல மருத்துவரை அழைத்து வரச்சொல்லி இருந்தனர் அங்கிருந்த செவிலியர்….

Advertisement