Advertisement

மாலைப்போல் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவளுக்கு ,என்ன செய்வதென்றே தெரியவில்லை.
குழந்தைகளுடன் ஊரையே சுற்றி வந்தவளுக்கு இந்த ஹாஸ்டல் என்னும் ஜெயிலில் அடைப்பட்டு கிடப்பது போல் தோன்ற மூச்சு விடவே சிரமப்பட்டாள்.
அப்போது ஒரு பெண் அவளுடைய பைகளை எடுத்து கொண்டு உள்ளே வர ,அந்த பெண்ணை கண்டதும் “ஹே மோனிக்கா நீயும் இந்த ரூம் தானா ” என்று கேட்ட வாசவியிடம் அத்தனை சந்தோஷம் இருந்தது.
“ஹே நித்யா..!!நீ தான் என்னோட ரூம் மெட்டா ,சூப்பர் தான் போ ” என்றவள் உள்ளே வந்தமர்ந்தாள்.
அதன்பின் , இருவரும் ஒரு நல்ல தோழிகளாகினர்.
அடுத்து வந்த ஒருவாரமும் அவர்களுக்கு அந்த சூழ்நிலைக்குள் ஒத்து போகவே சிரமப்பட்டார்கள்.
மோனிக்கா எல்லாருடையவும் தானே பேசி நட்பு கரம் கோர்த்து கொண்டாள். ஆனால் வாசவியோ மோனியை தவிர்த்து யாரிடமும் அதிகளவு பேசவில்லை கேட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்தாள்.
அடுத்து வந்த ஒரு நாளில் ஃப்ரஷர்ஸ் டே  வைத்திருக்க ,எதுக்கு தான் அதை வைக்கிறார்களோ என்று‌ நினைக்கும் அளவிற்கு அவளை சுற்றி உள்ளவர்களின் செயல்கள் இருந்தது.
இந்த ஒருவாரத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரே விடயம் ஏவி மட்டுமே..
“ஏவி அழகா இருப்பானான்..”
“ஏவி ரொம்ப க்யூட்டாம்..”
“ஏவி மேன்லியா இருப்பானாம்..”
“ஏவி அப்படியே நம்ம அதர்வா போல ஹேன்சமா இருப்பானாம் டி..”
“ஏவி தான் டாப்பராம்..”
“ஏவி தான் இந்த காலேஜ் சேர்மேனோட பையனாம்..”
“ஏவி ஏவி ஏவி ஏவி…”
எங்கு பார்த்தாலும் எங்கு கேட்டாலும் ஏவி ஏவி ஏவியின் போஜனையாக இருக்கவே வாசவிக்கு ஏவியின் பெயர் கேட்டாளே கடுப்பாக இருந்தது.
“அவன் என்ன பெரிய இவனா ” என்று தேவையில்லாமல் யாரென்றே தெரியாத ஒருவனின் மீது வெறுப்பை வளர்த்து கொண்டாள் வாசவி.
அன்று இரவு ஹாஸ்டலில்..,
“ஹே வா நித்யா ,சாப்பிட போகலாம் ” என மோனி அழைக்க 
“என்ன டி இவ்வளோ சீக்கிரமா சாப்பிட கூப்பிடுற..??டெய்லியும் லேட்டா தானே சாப்பிட போவோம். இன்னைக்கு மட்டும் என்ன இவ்வளோ சீக்கிரம் ” என வாசவி கேட்க
“இப்போ சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்தா தானே.. நாளைக்கு ஏவிய பார்க்கும் போது கொஞ்சமாது அழகா தெரிவேன் ” என வெட்கப்பட்டவாறே காலால் கோலம் போட்டபடி சொல்ல
அவளின் வெட்கத்தை கண்டவளுக்கு ,”என்ன டி பண்ணிட்டு இருக்க நீ.? பார்த்து நீ போடுற கோலத்துனால கீழ இருக்கிறங்களுக்கு பிரச்சனையை உண்டாகிடாத தாயே ” என பெரிய மூச்சொனறை இழுத்து விட்டாள்.
“போடி  ,இரசனை இல்லாத உனக்கு எல்லாம் எங்க தெரிய போது. வாசவிக்கு தெரியுமா லவோட வாசனை எல்லாம். உனக்காக உங்க ஊருல எவனாவது இருப்பான். அவனைய தான் கட்டிகிட்டு அழ போற பாரு ” என்று சாபம் கொடுக்க 
“போடி.. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை எல்லாம்.அப்புறம் நான் எங்க அப்பா அம்மா கூட பொய்டுவேன். அதுவரைக்கும் உன்னோட அக்கபோரை பொறுத்துக் கிட்டா போதும் ” 
“அடியே என் கோதுமை கட்டி ,உனக்கு இந்த காலேஜ் ரூல்ஸ் எதுவும் தெரியாதா உனக்கு..??” என அவள் தாடையை பிடிக்க 
“என்ன ரூல்ஸ்..??”
“இங்க ஹாஸ்டல் ஜாயின் பண்ணினாலே அஞ்சு வருஷம் இங்க தான் இருக்கனும் டி செல்லம். உன்னைய அவுங்க வெளியலாம் விட மாட்டாங்க.. அப்படியே போனும்னாலும் இந்த இயர் நீ இங்க இருந்து தான் கம்ப்ளீட் பண்ணி ஆகனும் ” 
“என்ன சொல்ற நீ..???” 
“நான் சொன்னது அனைத்தும் உண்மையே ..உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. இப்போ வா சாப்பிட போலாம் ” என்று வாசவியை இழுத்துக் கொண்டு சென்றாள் மோனிக்கா.
மோனி சொன்னதை கேட்டதிலிருந்து வாசவிக்கு அழுகையாய் வந்தது.
 ‘என்னை ஏமாற்றி தான் இங்கே சேர்த்து விட்டார்களா..??’ என தாய் தந்தையின் மீது கோபம் கொண்டாள் அந்த பைங்கிளி.
மெஸ் வந்து சாப்பாடு வாங்கி அமர்ந்தவளுக்கு சாப்பாடு இறங்க வேணாம் என்பது போல் அடம்பிடித்தது.
அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்த மோனிக்கா ,”ஹே நித்யா என்ன ஆச்சி சாப்பிடாம சாப்பாட்ட அப்படியே வச்சிருக்க  ” என்க 
“பச் ,பசிக்கல டி நீ சாப்பிட்டு வா ,நான் இங்க வெளியே சிட்ஔட் உட்கார்ந்து இருக்கேன்” என சாப்பாட்டை குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றுவிட்டாள்.
அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளது வகுப்பு தோழி வனிதா ,மோனிக்காவை பார்த்து ‘என்னாச்சி ‘ என்று கேட்க
“பசிக்கலையாம் ” என்று விட்டு சாப்பிட தொடங்கினாள்.
பின் இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வர ,அங்கே வாசவி வளர்பிறையில் வளர்ந்து கொண்டிருந்த நிலவையே கண்கள் கலங்க பார்த்து கொண்டிருந்தாள்.
“நித்யா வா போலாம்” என்றதில் வேகமாக கண்ணை துடைத்தவள் அவர்களுடன் சென்றாள்.
நாளை நடக்க போகிற ஃப்ரஷ்ரஸ்  டேவிற்கு ட்ரெடிஷ்னல் வியர் மட்டுமே உடுத்த வேண்டும் என்றிருக்க மோனிக்கா அவளிடம் இருந்த ட்ரெடிஷ்னல் ட்ரெஸ் அனைத்தையும் எடுத்தெடுத்து கண்ணாடி முன்பு வைத்து பார்த்தாள்.
அவளுடன் சேர்த்து பக்கத்து அறையில் இருந்த வனிதாவும் வந்து விட , இருவரும் எதை தேர்ந்தெடுத்து உடுத்துவது என குழம்பிப்போனர்.
இவர்களின் அட்டூழியம் அழிச்சாட்டியம் யாவும் வாசவியின் புலனுக்கு எட்டவே இல்லை..
திடிரென யாரோ தன்னை உலுக்கவும் சுயநினைவு பெற்றவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புலப்படவில்லை.
 “நித்யா “என மோனிக்கா கத்த 
“எதுக்கு இப்போ இப்படி காதுல வந்து கத்துற..??” என காதை தேய்த்தவாறே வாசவி கேட்க
“ஏன் சொல்லமாட்ட , நீங்க ஜாலியா உங்க பி எஃபோட  ட்ரீம்ஸ்ல இருப்பீங்க. உங்களை கூப்பிட்டு கூப்பிட்டு கடைசியா கத்துனது தான் இப்போ உனக்கு பிரச்சனையா தெரியுதா ” என வம்புக்கு நிற்க 
“சாரி..ஏதோ ஒரு ஞாபகத்துல நீ கூப்பிட்டதை கண்டுக்கல .இப்போ சொல்லு எதுக்கு கூப்பிட்ட..??” என்க 
“ஒரு நிமிஷம் ” என்றவள் சென்று தனது கட்டிலின் மேல் வைத்திருந்த இரு புடவையை எடுத்து வந்தவள் “இதுல எது போடுறது..??” என ஆசையாய் கேட்டாள் மோனிக்கா.
வாசவி எதையும் பார்க்கும் நிலையிலோ சொல்லும் நிலையிலோ இல்லாததால் ,அந்த இரண்டு புடவையில் ஒரு புடவையை காட்டி “இதை கட்டு இது நல்லா இருக்கும் ” என சொல்ல
“அப்போ நீ காட்டின புடவை கட்டினா நான் கண்டிப்பா அழகா இருக்கமாட்டேன். சோ நான் இந்த புடவையையே கட்டிக்கிறேன் ” என்று வாசவி மறுத்த புடவை கட்டலாம் என்று முடிவெடுத்தாள்.
“இதுக்கு எதுக்கு என்னைய சூஸ் பண்ண சொன்ன..??” என கோபமாக கேட்க
“உனக்கு தான் ஏவிய பிடிக்காதே.. அதுனால உனக்கு பிடிக்காத ட்ரெஸை தான் சொல்லுவ. அதான் நீ செல்றதுக்கு ஆப்போசிட்டு ட்ரெஸ் சூஸ் பண்ணேன் ” என்று தோளை குழுக்கி படுக்கைக்கு சென்றாள் மோனிக்கா..
“அய்யோ! கடவுளே” என்று தலையாய அடித்து கொண்டாள் வாசவி..
அடுத்த நாள் காலை ரம்யமாக விடிய , அந்த விடியலை கூட இரசிக்க முடியாமல் நேற்று மோனிக்கா சொன்னதே ஞாபகத்தில் ஓடியது…
எழுந்ததில் இருந்தே ஹாஸ்டல் பெண்கள் எல்லாம் அரக்க பறக்க கிளம்ப ,வாசவி மட்டும் பொறுமையாக கிளம்பினாள்.
பின் , அனைவரும் கிளம்பி கல்லூரிக்கு சென்று விட ,சிறிது நேரத்திலே ஃப்ரஷ்ரஸ் டே பங்க்ஷனும் ஆரம்பமானது..
அங்கு இருந்த குமரிகள் யாவும் ஏவியை காணப்போகும் ஆவலில் அமர்ந்திருக்க ,பசங்க எல்லாம் கடுப்புடன் அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தவளால் அதற்கு மேல் முடியாம போய்விட ,தலைவலி வேறு விர்ரென்று வலிக்க தொடங்க மோனியிடம் சொல்லி விட்டு காற்றாட வெளியே வந்து நின்றாள் அவள்.
யாரோ ஒரு பெண் தனியே நிற்பதை கண்ட பசங்க கூடம் அவளை நோக்கி நடையிட்டது..
அந்த கூட்டத்தின் தலைவன் அவள் பக்கத்தில் சென்று ,”இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..???” என்றான் கேள்வியாய்.
ஒரு ஆடவனின் குரல் பின்னின்று வரவும் திடுக்கிட்டவள் , திரும்பி அவனை பார்த்து விழி விரித்தாள் நித்ய வாசவி.
யாரென்றே அறியா 
அவனின் மேல் 
வெறுப்பு வர..
ஏன் என்று
புரியாமலே
வளர்த்துக் கொண்டாள்..
யாரோ எவரின் 
சொயலோ 
யாவும் அவனின் மீது
வெறுப்பை வளர்க்க…
காரணமில்லா வெறுப்பு
மோதலில் துவங்க
இறுத்தியில் என்னாவுமோ..???
யாரோ அவன்..?!!

Advertisement