Advertisement

வரமென வந்தவளே…
அத்தியாயம் 02
அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்தவள் ,நேராக சென்றது என்னவோ அங்கு அனுமதித்து இருந்த சிறுமியை பார்ப்பதற்கே…
வேக வேகமாக ஓடி வந்ததால் அங்கே தண்ணீர் சிந்தி இருப்பது தெரியாமல் போய் விட ,வேகமாக வந்தவள் அதில் கால் வைத்து கீழே விழுந்து விட்டாள்.
விழுந்ததினால் அவளால் எழும்ப முடியாமல் இடுப்பு பிடித்துக் கொள்ள ,அந்த நேரம் பார்த்து ஏதோ ஒரு பிஞ்சு கை அவளை பார்த்து நீட்டியது.
நீட்டிய கையை பார்த்தவாறே அப்பிஞ்சுவின் முகத்தினை பார்த்தாள் அவள்.
அவளின் முகமோ சாந்தமாக இருந்தது. அதில் இதழ் விரியாமல் ஒரு அழகான மென்னகை ஒட்டி இருந்தது. ஆனால் தலையிலோ பெரிதாக கட்டு ஒன்று கட்டிருந்தது. அதனை பார்க்கும்போது பாவமாக இருந்தது அவளுக்கு..
“கை கொடுங்க… நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் “என அக்குட்டி சொல்ல 
அவளையே இமைக்க மறந்து பார்த்தளுக்கு கண்ணீர் துளி ஒன்று வெளி வந்தது.
அப்பெண்ணின் அழுகையை கண்டு பதறினாள் சிறியவள்.
“அச்சோ !ரொம்ப வலிக்குதா ” என விழி விரித்து கேட்க ,அவளையே ஆசையாக பார்த்தாள் அவள்.
“என் கைய பிடிச்சு எந்திரிங்க..” என்று என தலையை அழகாய் ஆட்டிட, அவளும் எதுவும் பேசாது புன்னகையுடனே சிறியவள் கைபிடித்து எழுந்தாள் பெரியவள்.
“வாங்க !வந்து இப்படி உட்காருங்க ” என இருக்கையில் அமர வைத்த குட்டி பக்கத்தில் இருந்த ப்யூரிஃபையரில் தண்ணீர் பிடித்து குடிக்க கொண்டு வந்தாள்.
“இதை குடிங்க.. அவசரமா எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது .இப்படி வேகமா நீங்க வந்ததுனால தான் அங்க தண்ணி இருந்ததை கவனிக்க மறந்து பொய்ட்டிங்க பாருங்க.இனி இப்படி வேகமா வராதீங்க..” என புன்னகையோடே சிறியவள் பெரியவளுக்கு அறிவுரை வழங்கினாள்.
சிறியவளையே பிரமிப்பாய் பார்த்தாள் பெரியவள். அவளுக்கு குட்டி ஏனோ கடவுளாகவே அந்த நொடி தோற்றமளித்தாள்.
தண்ணீரை குடித்தவள் ,”ரொம்ப தேங்க்ஸ் டா குட்டி..” என கூறி ஆசையாக அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தாள். ஏனோ அந்த நேரத்தில் முத்தம் வைக்க சொல்லி அவள் ஆல் மனம் தூண்டியது.
பின் ,அவளுக்கு அழைப்பு வர ,அதை பார்த்தவளுக்கு புரிந்து போனது அது யாருடையது என்று..
உடனே மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து உள்ளே வைத்தவள் ,எழுந்து நின்றாள்.
“சரி டா குட்டி ..உன்ன பார்த்ததுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். இப்போ நான் போயே ஆகனும் ” என சிறியவளிடமிருந்து விடைப்பெற்றாள் அவள்.
போகும் அவளையே பார்த்த குட்டி ,அப்படியே கொஞ்ச நேரம் நடக்க தொடங்கினாள்.
நேராக தன்னுடைய இருக்கைக்கு சென்றவள் , தன்னை சுத்தம் படுத்தி விட்டு நர்ஸை அழைத்தாள்.
அந்த நர்ஸ் உள்ளே வந்ததும் ,” இப்போ அந்த பாப்பாக்கு எப்படி இருக்கு..??” என குழந்தை நல மருத்துவராய் கேட்க 
“தலையில கொஞ்சம் அடி பட்டு இருக்கு மேடம். டாக்டர் ப்ரகாஷ் தான் அந்த பாப்பாவை ட்ரீட் பண்ணினாரு. உங்களுக்காக தான் வெயிட்டிங் மேம் ” என்று கூறி அவளின் ஃபைலை கொடுத்தாள் .
“சரி வாங்க அங்க போய் பாத்துட்டு வந்து இங்க அட்டன் பண்ணிக்கிறேன் ” என்றவள் தனது  ஸ்டெதாஸ்கோபை எடுத்து கொண்டு முன்னே நடந்தாள்.
அந்த குழந்தையின் ரூமிற்கு சென்று பார்த்தால் ,அவள் அன்னை மட்டும் அமர்ந்திருக்க “பேஷண்ட் எங்கே..??” என கோபமாய் செவிலியரை பார்த்தாள் அவள்.
“இங்க தான் மேடம் இருந்தா அந்த பொண்ணு ” என்று கூறி அவளது தாயை பார்த்து “உங்க பொண்ணு எங்க மா ” என்க 
“அவளால உட்கார முடியலைன்னு இங்க தான் டாக்டர் வராண்டாவில் நடக்குறேன்னு சொன்னா “என்று வெளியே வந்து பார்க்க அங்கு யாருமே இல்லை.
“இப்படி தான் கேர்லெஸா இருப்பீங்களா நீங்க..??குழந்தைக்கு மண்டையில அடிப்பட்டு இருக்கு. இப்படி சாதரணமா விட்டுட்டு கதை சொல்றீங்க ” என பார்கவியை திட்டியவள் “போய் குழந்தையை கூட்டி வாங்க ” என்று சொன்ன நொடி 
“நானே வந்துட்டேன் டாக்டர் அம்மாவ ஒன்னும் சொல்லாதீங்க…” என அழகிய குரல் அவள் பின்னாலிருந்து வந்தது.
உடனே திரும்பியவள் அச்சிறுமியை பார்த்து ,”ஹோ ! நீங்க தான் அந்த பேபியா…” என்று அவள் கண்ணம் கிள்ளினாள்.
“சரி வாங்க நாம அங்க போய் பேசுவோம்…” என அன்பாக கூறி  அவளை கட்டிலில் அமர வைத்தாள்.
“இப்போ உங்களுக்கு தலை வலிக்குதா டா..” என மருத்துவரையும் தாண்டின ஒரு அக்கறையாய் அவள் கேட்க
ஏனோ அந்த சிறு பெண்ணுக்கு கண்கள் எல்லாம் கரிக்க தொடங்கியதுமே புன்னகையால் மறைத்து கொண்டாள்.
அவளுக்கு தான் தன்னின் நிலைமை அறிந்தவளாகிற்றே. வலியை கூட சொல்ல யாருமில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் அவதிப்படுகிறாளே. 
பாசத்தை விட அவளது பெற்றோர்கள் அவளுக்கு கொடுத்தது தனிமை அல்லவா. சிறு வயதிலே ஏனோ தனிமையை அனுபவித்தவளுக்கு இந்த அன்புக்கு கூட அப்பெண்ணுக்கு பெரிதாக தெரிந்தது.
அவளின் கண்ணீர் துளியை கண்ட பெரியவள் பதறி போனாள்.
“என்னாச்சி டா குட்டி..???” என்க 
“தூசி பட்டுச்சி ம்…ம..ஆ… ண்…டி ” என்றவளின் பார்வை அவள் அன்னையின்  மீது ஏக்கமாக பதிந்தது.
அவளோ அவள் கணவனான கமலனுக்கு அழைத்து பேசிக்கொண்டு இருந்தாள்.
“சரி டா ..இப்போ பெயின் எப்படி இருக்கு .தலையில எங்கயாவது வலிக்காதா ” என ஒவ்வொரு இடமாய் தொட்டு பார்த்து கேட்டாள்.
“இல்ல .இப்போ எனக்கு வலிக்கல “என்று சிறியவள் புன்னகைக்க முயன்றாள்.
ஏனோ அந்த புன்னகை உயிர்ப்பாக இருப்பதாக தோன்றவில்லை.
“சரி டா குட்டி…”என்றவள் சில விடயத்தை அவளுக்கு உரித்தான ஃபைலில் நோட் செய்தாள்.
“இவ்வளோ நேரம் பேசினதுல உங்க நேம் கேட்க மறந்துட்டேன் பாரேன். இந்த குட்டி ப்ரின்சஸ் நேம் என்னனென்ன தெரிஞ்சிக்கலாமா “என அவளுக்கு நிகராய் குனிந்து அவள் ஆசையாய் கேட்க
புன்னகையோட தன் பெயரினை கூறினாள் சிறியவள்..
“நிரல்யா…” என்று
“வாவ் ப்ரின்ஸஸ் நேம் அழகா இருக்கே..சரி நீங்க எங்கேயும் போக கூடாது இங்கேயே இருந்து ரெஸ்ட் எடுக்கனும் ஓகேவா” என தம்ஸ்அப் காட்ட 
“ஓகே…” என்றாள் விரிந்த புன்னகையாக..
அவளும் தன் வேலை முடிந்தது என்று திரும்பி நடந்தவளை “உங்க நேம் சொல்லலையே…???” என அழகாய் தலைசாய்த்து கேட்டி…
திரும்பி புன்னகைத்தவள் ,”நித்ய வாசவி ” என்று நடந்தாள்.
********
“டாட் நான் சிங்கப்பூர் ரீச் ஆகிட்டேன் ” என ஏவி போனில் சொல்ல
“என்ன டா அதிசியமா இருக்கு.. எனக்கு எல்லாம் கால் பண்ணி சொல்லுற.. எப்போதும் என்னோட மருமகளுக்கு தானே போன் பண்ணுவ..???”என கேட்க 
“அவளுக்கு தான் டேட் ஃப்ர்ஸ்ட் பண்ணேன். பட் ஷி டிடினிட் பிக் மை கால் டேடி .சோ தான் உங்களுக்கு கூப்பிட்டு இன்ஃபாரம் பண்றேன். அவகிட்ட கொஞ்சம் இன்ஃபார்ம்  பண்ணிடுங்க” என்றான் சிறு வருத்தமாய்.. 
“எனது என்னோட மருமக போனை எடுக்கலையா..??ஆச்சிரியமா இருக்கே டா ” என ஆச்சிரித்தோடே கலாய்க்க
“டாட் அவளுக்கு ஏதாவது ஒர்க் வந்திருக்கும் அதான் பிக் பண்ணி இருக்க மாட்டா ” என அவரை சமாளித்தான் மகன் ஏவி என்கிற ஆதித்ய வரதன்.
“ஹோ..” என்று இழுத்தார் தந்தை கார்த்திகேயன்.
“சரிங்க பா… இஸ் தட் எவ்ரிதிங்க் ஆல்ரைட் டாடி..??? ” என மனைவியாளின் செயலில் வித்தியாசம் கண்டவனாய் தந்தையிடம் கேட்க 
“ஆமா டா.. இங்க எல்லாம் ஓகே தான் மை சன். என்ன உங்க அம்மா தான் ரொம்பவே சந்தோஷமா இருக்கா. சரி அதெல்லாம் விட்டுட்டு அங்க நடக்கிற கான்ஃபெரன்ஸை நல்ல படியா முடிச்சிட்டு வா..” என்று அவனுக்கு செய்ய வேண்டியதை சொல்லி வைத்தார்.
அன்னையின் மகிழ்ச்சியும் மனையாளின் நடவடிக்கையும் அவனுக்கு ஏதோ தவறாகவே பட்டது. மனைவியை பற்றி முழுதாக அறிந்தவனுக்கு ஏன் இந்த கான்ஃபெரன்ஸிற்கு வந்தோம் என்று தன்னை தானே கடிந்து கொண்டான்.
************
 

Advertisement