Advertisement

வரமென வந்தவளே…
அத்தியாயம் 04
கோபங்கள் யாவும்
உன்மேல் கொண்டேனடி பெண்ணே..
ஏன் என்றே தெரியாத கோபம்..
உயிர் வரை தீண்டி மருக செய்ததே டி..
இயற்கையில் ஆல்ந்து உயிரை விட துணைய
கைகள் கொண்டு காப்பாற்றிய நின்னை 
கரங்கள் கொண்டு அடிக்க செய்தாயே..
கண்ணம் தாங்கி கண்கள் பளக்க நின்று
மனதின் வலியை உணர செய்தாயே..!!!
அடிவாங்கிய வாசவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது.? ஏது நடக்கிறது.? என்று புரிவதற்குள் அனைத்துமே நடந்து முடிந்து கைகளை கொண்டு கண்ணத்தை தாங்கி நின்றாள் நித்ய வாசவி..
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ..??எதுல விளையாடனும்னு அறிவில்லையா” என கோபமாக கண்கள் சிவக்க அடித்தவன் கத்த 
“….”
“பராக்கு பாத்துட்டே இப்படி முன்னாடி போனின்னா போக வேண்டியது தான் திரும்ப உன்னால வரவே முடியாது. பெரிய பொண்ணு தானே நீ ,கொஞ்சம் கூட சுய புத்தி வேணாமா சொல்லு. இப்படியே கடலுக்குள்ள நடக்க முயற்சி பண்ணின்னா உயிரோடவே திரும்ப முடியாது ” என்று நிதர்சனத்தை கோபமாக அவள் முன் கத்தலானான். 
அவளோ அவன் அடித்ததில் கண்கள் பனிக்க , கண்ணீரோ இதோ அதோ என்று வெளி வரும் நொடிக்காக காத்திருந்தது. அதனால் அவனின் முகம் அவளுக்கு சரிவர தெரியவில்லை.
“வாய திறந்து பேசுனா என்ன முத்து குறைஞ்சிடுமா சொல்லு ” என பல்லை கடித்தவாறே கேட்க 
கண்கள் சொறிய ,”நீங்க அடிச்சது எனக்கு ரொம்ப வலிக்குது ” என குழந்தைப்போல் பாவமாக அவள் சொல்ல 
அவளின் இந்த பதிலில் கோபம் எல்லாம் குன்றி போய்விட , இதழில் வெளிய தெரியாத படி மென்னகை பூத்தது.
இவர்கள் பேசவும் அவர்களை மக்கள் யாவும் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
வாசவியின் தாயும் தந்தையும் மகளை பற்றி பேசியதில் ,மகளை கவனிக்க தவறி விட அவளின் நிலை அவர்கள் அறியவில்லை.
இருவரும் பேசிக்கொண்டு இருந்ததில் திடிரென மாதவி ,”ஏங்க வாசு எங்கங்க.?இங்க தான விளையாடிட்டு இருந்தா..??” என அவளை காணாது தவிப்போடு கேட்க 
அப்போதே மகளின் எண்ணம் வந்தவராக , சுற்றிலும் பார்வையை பதிக்க மகளை காணாது போக பதறினார் சந்திரசேகர்.
“இரு இரு இங்க தான் இருப்பா நாம தேடுவோம்..” என்று சொல்லி பார்வையை சுழல விட்டவருக்கு அங்கே ஏதோ கூட்டமாக இருப்பது தெரிய அங்கே இருந்து வேடிக்கை ஏதோ பார்ப்பாளோ என்று நினைத்தவாறே மனைவியுடன் அங்கே சென்றார்.
“சாரி மா ..சாரி மா..ஐம் ரியலி சாரி..ஏதோ ஒரு கோபத்துல அடிச்சிட்டேன்..” என அவளை பார்த்து மன்னிப்பு வேண்ட
“இட்ஸ் ஓகே..அன்னைக்கு நீங்க பண்ண ஹெல்ப்க்கு இந்த அடியை மன்னிச்சி விடுறேன்..” என்று கண்களில் நயனங்கள் காட்டி பேசினாள் பாவையவள்.
அவளின் கண்களை பார்த்தவன்  ஒரு நொடியேனும் தன்னை அவளிடம் இழந்திருந்தான். அழகாய் நயனகள் புரியும் அவள் விழிகளை பார்க்க பார்க்க மனது ஏனோ பரவசமடைந்தது.
‘இது தவறு ‘ என்று தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வந்து முடியை சிலுப்பிக் கொண்டவனின் பார்வை அப்போது தான் சுற்றி இருந்தவர்களின் மீது பதிந்தது.
அனைவரின் பார்வையும் இருவரின் மீது இருந்தாலும் ஆண்கள் சிலரின் பார்வை ஏனோ அந்த இளஞ்சிட்டின் மீது ஆர்வமாக பதிவதை கண்டவன் துனுக்குற்று அவளை நோக்க , அவளின் ஆடையில் பாதியிடம் சொர்ப்பமாக நனைந்து உடல் மேனியில் ஒட்டி இருந்து அவளது அங்கங்களை காட்டிக்கொடுக்க  பார்த்தவன் வேகமாக அவனின் சட்டையை கழட்டி அவளுக்கு அணிவித்து,
அங்கிருந்தவர்களை நோக்கி ,”இங்க என்ன நாங்க ரெண்டு பேரும் லேகியம் விக்கிறதுக்காக கூவிட்டு இருக்கோமா என்ன.?இப்படி எங்களையே பார்த்துவிட்டு இருக்கீங்க ..”என கோபமாக அவளை மறைத்தாற் போல் நின்று அந்த இளைஞன் கோபத்தை கக்க
“இது என்ன டா வம்பா போச்சி.. ” என பலரும் அவர்களை பற்றி கிசு கிசுத்த படி சென்றனர்.
அதற்குள் மாதவியும் சந்திரகேரும் அங்கே வந்து விட ,கூட்டம் கலைந்ததை பார்த்தவாறே தன் பெண்ணை தேடினார் சந்திரசேகர்.
அவருக்கு எங்கே தெரிய போகுது அந்த கூட்டம் கூடினதே தன் மகளின் செயலினால் தான் என்று…
எங்கேயாவது வாசவி தென்படுகிறாலா என்று பார்த்தவாறே வந்தவர்களுக்கு ,அங்கே உடல் நடுங்க ஒரு ஆடவனின் மேல் சட்டையை அணிந்தவாறு ஒரு இளைஞனின் முன் நின்றிருந்த பெண்ணை கண்டு விதிர்விதிர்த்து போனார்கள் பெற்றோர்கள்..
“வாசு…”என்ற அன்னையின் அழைப்பிற்கு மகள் திரும்பி பார்க்க அவளோடு சேர்ந்து அந்த இளைஞனும் திரும்பி பார்த்தான்.
அவளின் நிலையை கண்டு கலங்கி போய் வந்த பெற்றோர்களை பார்த்து ,” கூட வந்து பொண்ணு என்ன பண்றா ஏது பண்றான்னு கூட நீங்க பாக்கமாட்டிங்களா “என அவளுக்காக அவளின் பெற்றோர்களிடம் வாதாட
“வாசு மா..என்ன ஆச்சி டி உனக்கு..??ஏன் இப்படி தொப்பலா நனைஞ்சி இருக்க..??”என பதறி கேட்க 
“ம்மா.. எத்தனை தடவ சொல்றது வாசுன்னு பையன் பேரு வச்சி கூப்பிடாதீங்கன்னு ” என சிணுங்களுடன் முகத்தை சிலுப்பிக் கொண்டு சொன்னாள் பாவையவள்.
அவளின் செய்கைகளை கண்டு நமட்டு சிரிப்பொன்றை சிந்தியவன் ,”அவுங்க பெரிய அலை வரது பாக்காம நின்னதுல கொஞ்சம் அவுங்க தடுமாறி விழ பார்த்தாங்க. அதுல தான் அவுங்க ட்ரெஸ் நனைஞ்சிட்டு ” என்று பக்குவமாக நடந்ததை விளக்கினான் அவன்.
நடந்ததை கேட்ட பெற்றவர்களுக்கு மனது பதறிபோனது. அது மட்டுமின்றி மகளின் இச்செயலை நினைத்து இருவருக்குமே மனது கனம் பெருக்கிற்று.
“ரொம்ப நன்றி தம்பி..” என அவரின் கைப்பற்றி மன்னிப்பு வேண்ட 
“அய்யோ.! அதெல்லாம் வேணாம் அங்கிள்..நீங்க பாத்து உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க” என்று சொல்லி அவர்களிடமிருந்து விடைப்பெற்று சென்றான் அவன்…
சிறிது தூரம் நடந்தவனுக்கு திரும்பி அவளை ஒருதரம் பார்க்கும் படி மனது சண்டித்தனம் செய்ய ,உடனே திரும்பி அவளை நோக்கினான் அவன்.
குழந்தைப்போல் மாசு மருவற்ற கலையான முகம் , தந்தையையும் அன்னையையும் கொண்டு வெள்ளையும் இல்லாமல் அதேநேரம் கருப்பு இல்லாமல் கோதுமை நிறத்தை கொண்டு தன்னவனை மட்டும் கவரும் தேவதையாக அங்கே நின்றாள் நித்ய வாசவி.
அவளை பார்த்ததும் இதழோரத்தில் புன்னகை பூக்க ,அவளையே பார்த்து இருந்தவனுக்கு ஏனோ மனம் இளகுவானது போல் தோன்றியது.
அதேநேரம் அவளும் அவனை நோக்கி ஒரு புன்சிரிப்பை தர ,அதை கண்டு அதிர்ந்தவன் தலை முடியை  கோதியவாறே அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தான்.
மேலும் ஒரு நாள் தாய் தந்தையோடு நேரத்தை கழித்தவள் , திங்களன்று கல்லூரியை நோக்கி நடையிட்டாள் அவள்.
தாய் தந்தை அக்கா குடும்பம் என ஒரு கூட்டுக்குள்ளே வாழ்ந்த அவளை ,இன்று அதிலிருந்து விடுதலை எடுத்து படிக்க  வந்திருக்கிறாள்.
படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் குடும்பத்தை விட்டு வந்து படிக்க வேண்டுமா என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
கல்லூரியின் முன்பு விட்ட பெற்றோர்கள் ,”பாப்பா ! கண்டதையும் நினைச்சி யோசிக்காம நல்ல படியா படிச்சு நீ ஒரு டாக்டரா வரனும் புரியுதா .உன்னைய ஒரு டாக்டரா பாக்கனும்னு தான் இந்த அப்பா ஆசை படுறேன் டா. இந்த அப்பாவுக்காவாது எதை பத்தியும் யோசிக்காம நல்ல படிக்கனும் சரியா ” என தந்தையாய் அவள் குணமறிந்து பேச 
“சரிங்க பா .நான் நல்ல படியா படிக்கிறேன்..” 
“நல்லா படிக்கனும் டி புரியுதா.. கண்டதையும் யோசிச்சு தேவையில்லாம எதையாவது பண்ணி வச்சேன்னு வை காலேஜ்ன்னு கூட பாக்காம அடி வெளுத்து வாங்கிடுவேன் பாத்துக்கோ.. படிப்பு மட்டும் உன்னோட குறிக்கோளா இருக்கனும் புரியுதா வாசு ” என மகளிடம் கோபமாகவே அறிவுரை வழங்க 
“சரி மா.. நான் படிக்கிறேன். ஆனா நீயும் ஒரு விஷயத்தை பண்ண கூடாது ” என்க 
“என்னத்த டி நான் பண்ண கூடாது ” 
“ஹான்..என்னைய பார்த்து பையன் பேரு சொல்லி கூப்பிட கூடாது “என சொல்ல 
“பார்ப்போம் பார்ப்போம்..” என்று சொல்லி அவளுக்கு மேலும் சில அறிவுரைகள் சொன்ன பிறகே அவளை கல்லூரிக்குள் அனுப்பினர் பெற்றோர்கள் இருவரும்.
 
தன் பைகளை தூக்கி கொண்டு கல்லூரிக்குள் வந்தவள் , ஆஃபிஸ் ரூம் சென்று ஹாஸ்டல் எங்கே என கேட்டு அவளது மூட்டைகளை தூக்கி கொண்டு சென்றாள்.
ஒன்பதரைக்கு கல்லூரி என்பதால் வேகவேகமாக ஹாஸ்டல் நோக்கி நடையிட்டவளுக்கு சாப்பிட்டதும் யாவும் முழுமையாக செரித்து இருந்தது.
“இன்னும் எவ்வளோ தூரம் தான் போறதோ தெரியலையே ” என புலம்பிய படியே நடந்து சென்றாள் வாசவி..
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹாஸ்டல் வந்து விட ,அவளது அறை எண்ணை தெரிந்து கொண்டு அவளது மூட்டைகளை வைத்தவள் ,வேகமாக கல்லூரியை நோக்கி நடையிட்டாள்.
“ஐயோ !எதுக்கு தான் இவ்வளவு தூரமா ஒவ்வொன்னையும் கட்டி வச்சிருக்காங்களோ .,சாமி முடியல பா ” என்று தனக்கு தானே புலம்பிய படி கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்தாள்.
“முருகா..!!இதுல எது என்னோட க்ளாஸோ தெரியலையே ஆண்டவா ” என நான்கு தளங்கள் கொண்ட ஒரு வளாகத்தின் முன்பு நின்று எங்கு செல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க..
அப்போது அங்கே வந்த ஒருத்தி ,”எக்ஸ் க்யூஸ் மீ ” என்றழைக்க 
“ம்ம்.,சொல்லுங்க ” 
“இல்ல MBBS ஃப்ர்ஸ்ட் இயர் க்ளாஸ் எங்க இருக்குன்னு தெரியுமா.?” என்க 
” நீங்க ஃப்ர்ஸ்ட் இயரா..??” என ஆர்வமாக கேட்க 
“ஆமாம். ஏன் கேக்குறீங்க..??” 
“நானும் ஃப்ர்ஸ்ட் இயர் தான் க்ளாஸ் தெரியாம தான் நின்னுட்டு இருக்கேன்” என்றாள். 
“சூப்பர்..என்னோட நேம் மோனிக்கா. உன்னோட நேம் என்ன..??” என்க
சிறிது தயங்கியவள் பின் ,”நித்ய வாசவி ” என்றாள் புன்னகையோடு
“ஓகே.. வா நாம யார்கிட்டயாவது கேட்டு க்ளாஸ்க்கு போலாம் ” என்று வாசவியை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அன்றைய நாள் பொழுது ஒருவருக்குள் ஒருவர் அறிமுகம் படுத்திய படியும் நட்பு கரம் கோர்த்திய படியுமே சென்றது. இதற்கிடையில் ஆசிரியர்கள் வந்து அவர்களையும் அறிமுகம் படுத்தி விட்டு சென்றனர்.

Advertisement