Wednesday, July 22, 2026

    புதிய பூபாளம்

    அத்தியாயம் 13 “நம்ம ராகவனும், அந்த மலர் டீச்சரும் லவ் பண்ணுறாங்க தெய்வா க்கா...” தன் கையிலிருந்த காஃபி கப்பை லேசாக உருட்டியபடியேச் சொன்னார் கோதை. “என்ன கோத சொல்லுற?” சட்டென்று தேகம் விறைத்துப் போக நிமிர்ந்து அமர்ந்த தெய்வானை, கோதையின் வார்த்தைகளை நம்ப முடியாமல் கேட்டார். ஏனென்றால் கோதையின் வரலாறு அப்படி. ஊருக்குள் நடப்பவற்றை கூட்டியும் குறைத்தும்...
    அத்தியாயம் 21 "விடிஞ்சா சின்னவனுக்கு கல்யாணம். இன்னைக்கு ராத்திரி கூட ராகவன் வீட்டுல போய் தான் தூங்குவேன்னு சொல்லுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் டி."  ஒலிப்பெருக்கியில் பாடல் உச்சஸ்தாயியில் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்க, மகள் ஆனந்தியிடம் இரைந்து கத்திக் கொண்டிருந்தார் தெய்வானை. இதோ, நாலு வீடு தள்ளி இருக்குற ராகவன் வீட்டுல தூங்குனா என்ன, இங்க தூங்குனா என்ன?...
    எதிரில், தான் எதிரியாக பாவிக்கும் மலர்விழி வரவும், அலட்சியமாக அவள் மீது பார்வையை பதித்த ரமேஷ், “ம்ஹூம்... ஆனாலும் இந்த தமிழ்நாடு அழகான ஒரு கரகாட்டக்காரியோட கலைச்சேவையை மிஸ் பண்ணிடிச்சே ப்பா... இல்லைன்னா நாமளும் நெஞ்சுல பசக்கு பசக்குன்னு...” குரலில் நக்கல் கூத்தாட பேசியவனை, வேண்டுமென்றே முடிக்கவிடாமல் இடைமறித்த அவன் நண்பன், “மாப்ள... என்னடா சொல்லுற?” என்று...
    அத்தியாயம் 04 “இரண்டு மாசத்துக்கு முன்னாடி வராத திருவிழாவுக்கு, உன் அப்பங்காரன் நேற்று பேசும்போதும் கூட திட்டுறான் டா” ராகவனோடு கைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த அவன் சித்தப்பா சிதம்பரம் அங்கலாய்த்து கொண்டார். “வந்து தலையை காட்டிட்டு போயிடுங்க. இல்லைன்னா உங்க அண்ணன் ங்குற புயல் கரையைக் கடக்க பலமாசங்கள் ஆகும்னு, நான் தான் சொன்னேன்ல சித்தப்பூ...” என்று...
    அத்தியாயம் 08 கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்த இந்த ஒருவாரத்தில், மலர்விழி எப்போதும் போல எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறாள். ஆனால், அவள் மீதான வகுப்பு மாணவர்களின் பார்வை மாறியிருக்கிறது.  முன்பு, நடை, உடை, பாவனைகளால் வகுப்பில் அத்தனை பேருக்கும் நடுவே தனியாகத் தெரிந்த மலர்விழி, இப்போது அவளுடைய தனித்திறமையால் அத்தனை பேருக்கும் நடுவே தனியாகத் தெரிய...
    ஆமாம்... மெசேஜை அனுப்பிய மறுவினாடியே மலர்விழியின் கைபேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டது.  மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றானதும், வாய்ஸ் மெசேஜை ஓப்பன் செய்தான் ராகவன்.  அவனை தவிக்க விட்டுவிட்டு மலர்விழி சென்றுவிட்டாள் என்பதை, அது உரக்கச் சொல்லியது. ஓய்ந்து போனான் ராகவன். ‘என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு செல்ல எப்படியடி உனக்கு மனது வந்தது?’ மனதோடு கேட்டு,...
    அத்தியாயம் 10 கடைசி பரீட்சையை முடித்துவிட்டு, வகுப்பு தோழமைகளிடம் பிரியாவிடையும் பெற்று, கல்லூரியை விட்டு வெளியே வந்த மலர்விழியின் உள்ளம் உற்சாகத்தின் பிடியில் இருந்தது. அதற்கு, நாளை மாலை சென்னைக்கு கிளம்புவதாக ராகவன் சொன்னது ஒரு காரணம் என்றால், இன்றுகாலை கல்லூரிக்கு வந்ததும் கல்லூரி முதல்வர் அவளை அழைத்து, “பி எட் அல்லது போஸ்ட் க்ராஜூவேஷன், எதுவாக...
    அத்தியாயம் 12 "இளம் சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது, மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு..." ஒலிபெருக்கியில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலோடு இணைந்து வாய்விட்டு உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தாள் மலர்விழி. கைகளோ, வீட்டுக்கு பின்னாலிருந்த கீரை பாத்தியில், களை நீக்கி...
    அதற்குள், பேசியத் தொகையை கொடுத்து காரை அனுப்பி வைத்திருந்தாள் மலர்விழி. கைகளில் ட்ராலியை இழுத்தபடியே உள்ளே வந்தவள், "பொண்டாட்டி லக்கேஜை எடுத்துட்டு வராளே, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோம்னு மனுஷனுக்கு அக்கறை இருக்கா?" கணவனை இடித்தபடி முணுமுணுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். "ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நான் தானே லக்கேஜை கொண்டு வந்து தந்து ட்ரையின் ஏத்திவிட்டேன்,...
    ஆரம்பத்தில் மனைவியை தன்னோடு வரும்படி அழைத்து முரண்டு பிடித்த மாதவன் கூட, நாளடைவில் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளைத் தொந்தரவு செய்யவில்லை. “நாலு அறை போட்டு பொண்டாட்டியை இழுத்துட்டு வரத் துப்பில்லாம, அவ சொன்னதுக்கெல்லாம் ஆடுறியா நீ?” ஆப்பு அசைத்த குரங்கு போல, மாதவனின் அம்மா தான் அவனிடம் சண்டைக்கு வந்தார். “அது சரி... அதே...
       தன்னை பாராட்ட அழைத்த செந்திலிடமும், அதே விஷயத்தை மலர்விழி பேச்சுவாக்கில் சொன்னாள். சத்தமாக சிரித்த செந்தில், மலர்விழியைப் படிக்க வைப்பதற்காக ராகவன் செய்தவற்றைச் சொல்ல, அதிர்ந்து தான் போனாள்.  ராகவனைப் பார்த்த அன்றே அவனிடம் தன் மனம் சாய்ந்தது உண்மை. ஆனால், அன்று அவனுக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மலர்விழிக்கு தெரியுமே. அப்படியிருந்தும், தன்னிடம் சொன்ன...
    அன்று, முன்மாலைப் பொழுதில், தங்கள் ஊருக்கு அருகில் உள்ள செட்டிக்குளம் என்ற ஊருக்கு, செந்திலோடு பைக்கில் வந்து இறங்கினான் ராகவன். அந்த ஊரில் கோவில் திருவிழா என்றும், கரகாட்டம் உண்டு என்றும் சொல்லிய செந்தில், “போய்த்தான் பார்ப்போமே, ஒருவேளை அந்த பெண்ணைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கலாம்” என்று சொல்ல, ஏதோ ஒரு நம்பிக்கையில், ஊர்...
    அத்தியாயம் 06 இரு கோடுகளாக நீண்டிருந்த தண்டவாளத்தில், தன் பரிவாரங்களை இழுத்துக்கொண்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த சென்னை எக்ஸ்பிரஸ். அதில், தங்களுக்கான இருக்கைகளில் மலர்விழி, ராகவன், செந்தில் மூவரும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். ஆமாம்... ட்ரெயின் கிளம்பப் போகும் அந்த கடைசி வினாடிகளில், தணிகாசலத்தோடு அரக்கப்பரக்க ஓடி வந்த மலரை, ட்ரெயினில் ஏற்றிவிட்டு தானும் ஏறியிருந்தான் ராகவன். மூவரும் அமர்ந்திருந்த...
    அத்தியாயம் 11 "தீச்சர்... கிளம்பியாச்சா?” கைபேசியின் வழியே உற்சாகமாக கேட்ட ராகவனுக்கு,  "ம்ம்... அவ்வளவு தான், முடிஞ்சுது" என்று பதில் சொல்லியபடியே, கண்ணாடி முன் நின்று தன்னை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டாள் மலர்விழி. மாம்பழக்கலரில் குங்குமக்கலர் கரையிட்ட சில்க் காட்டன் புடவை, நீண்ட பின்னலில் பாங்காக பொருந்தியிருந்த மல்லிகைச்சரம் என்று, தன் தோற்றம் அவளுக்கு திருப்திகரமாகவே இருந்தது. "ம்ம்... குட்,...
    கோபத்தில் கண்களை உருட்டினாள் அந்த பெண் சுசீ. திருமணமாகாத பெண் தான். இருந்த போதும் அவள் அணிந்திருந்த நகைகளைப் பார்க்கும் போதே கண்களைக் கட்டியது மலர்விழிக்கு. "ஹேய் சுசீ... கழுதைன்னா அழகிய இளம் பெண். அப்போ நீ கழுதை இல்லையா?" கூடியிருந்த இளம்பெண்களில் ஒருத்தி வம்பு செய்ய, கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்கியது. "அப்படின்னா, சரி...
    அத்தியாயம் 14 உலகாளும் ஈசன் சன்னிதானத்தில் மாலையும் கழுத்துமாக ஜோடியாக நின்றிருந்தார்கள் ராகவனும் மலர்விழியும். அவர்களோடு செந்திலும் நின்றிருந்தான். அம்மையப்பரை மாங்கல்யமாக கோர்த்திருந்த மஞ்சள் கயிறை பூஜையில் வைத்து ராகவன் கைகளில் அர்ச்சகர் கொடுக்க, அந்த எம்பெருமானை மனதார வேண்டிக்கொண்டு மலர்விழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ராகவன்.  மஞ்சள் கயிறு மார்பில் உரசவும், இறுகினாற் போல இருந்த மலர்விழியின்...
    அவள் தம்பியோ, தன் மனைவியின் முகம் பார்த்தான். அந்த பார்வையிலேயே தனக்காக கணவன் யோசிக்கிறான் என்பது மலர்விழிக்குப் புரிய, தனக்கு சம்மதம் என்று மலர்விழி கண்களை மூடித் திறந்தாள். "சரி" என்று தலையாட்டினான் ராகவன். அவ்வளவு தான்... பரபரவென்று மேலும் கீழுமாக மாடிப்படி ஏறியிறங்கி ராகவனின் ரூமை தயார் செய்த அவன் உடன்பிறந்த பெண்கள், "இப்போ...
      அத்தியாயம் 07 'ராஜம் பெண்கள் விடுதி' என்ற பெயர்ப்பலகை மின்னிய அந்த நான்கு மாடி கட்டிடம், காலையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு அப்பார்ட்மெண்ட் ஸ்டைல் பெண்கள் விடுதி. அங்கே தனி நபர் தங்கும் அறையிலிருந்து, நால்வர் பகிர்ந்து கொள்ளும் அறைகள் வரை இருந்தன. அதில் மூன்றாவது தளத்தில், மூவர் தங்கும் வசதியுடைய அறையில் இருந்த மலர்விழி,...
    அத்தியாயம் 01 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகேயுள்ள செங்குளம் என்னும் கிராமம் திருவிழா கோலம் பூண்டு நின்றது‌. ஊர் முழுவதும் ஆங்காங்கே மரங்களின் உச்சியிலும், வீட்டு மொட்டைமாடிகளிலும், எலக்ட்ரிக் கம்பங்களிலும் கட்டிவைத்திருந்த ஒலிப்பெருக்கிகள், ‘முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், அவள் முகத்தழகை காணவரும் ஒருநாளாம், சித்திரைப்பூ மாலையிலே தோரணமாம், அவள் சிங்கார தேரில் வர ஊர்வலமாம்...’  என்று, எல்ஆர் ஈஸ்வரியின் தெய்வீகக் குரலில் பாடலை உச்சஸ்தாயியில்...
    அடுத்து செந்திலிடம் விஷயத்தைச் சொல்லி, வீட்டு உரிமையாளரின் ஃபோன் நம்பரையும் ராகவன் கொடுக்க, கச்சிதமாக விஷயத்தை முடித்து விட்டான் செந்தில். ஏற்கனவே ஆழ்வார்குறிச்சியில் வேலை பார்க்கும் சிலர், செங்குளத்தில் வாடகை குறைவு என்று குடும்பத்தோடு தங்கியிருப்பதால், வேலைக்கு செல்லும் பெண்ணிற்காக என்று விபரம் சொல்லி வீட்டை வாடகைக்கு பிடிப்பதில் செந்திலுக்கு சிரமம் இருக்கவில்லை. அடுத்து, ராகவன் உதவி...
    error: Content is protected !!