புதிய பூபாளம்
தன்னுடைய பதில் ராகவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை உர்ரென்ற அவன் முகமே தணிகாசலத்திற்கு சொல்ல, அதைக் கண்டு கொள்ளாமல் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார் தணிகாசலம்.
“மலர்விழி உங்ககூட சென்னைக்கு வந்ததும் நாங்களும் மதுரைக்கு போயிட்டோம். போயிட்டோம்னு சொல்லுறதைவிட மாயன் போகவச்சிட்டான்னு தான் சொல்லணும். அவ்வளவு தொந்தரவு, நாங்க தான் மலர்விழியை மறைச்சு வச்சிருக்கோம்னு.”
“இருக்குறது வாடகை வீடு....
ஆரம்பத்தில் மனைவியை தன்னோடு வரும்படி அழைத்து முரண்டு பிடித்த மாதவன் கூட, நாளடைவில் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
“நாலு அறை போட்டு பொண்டாட்டியை இழுத்துட்டு வரத் துப்பில்லாம, அவ சொன்னதுக்கெல்லாம் ஆடுறியா நீ?” ஆப்பு அசைத்த குரங்கு போல, மாதவனின் அம்மா தான் அவனிடம் சண்டைக்கு வந்தார்.
“அது சரி... அதே...
ஆமாம்... மெசேஜை அனுப்பிய மறுவினாடியே மலர்விழியின் கைபேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டது.
மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றானதும், வாய்ஸ் மெசேஜை ஓப்பன் செய்தான் ராகவன்.
அவனை தவிக்க விட்டுவிட்டு மலர்விழி சென்றுவிட்டாள் என்பதை, அது உரக்கச் சொல்லியது. ஓய்ந்து போனான் ராகவன். ‘என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு செல்ல எப்படியடி உனக்கு மனது வந்தது?’ மனதோடு கேட்டு,...
அத்தியாயம் 18
“அப்ப்ப்பா...”
ஒரே நேரத்தில் அழைத்த இரண்டு இளங்குரல்களில், கட்டிலில் அமர்ந்திருந்த ராகவன், தன் மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு, புன்னகை முகமாக நிமிர்ந்தான்.
ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று, நான்கு வயது மதிக்கத்தக்க இரண்டு குழந்தைகள் ராகவனை நோக்கி உற்சாகமாக ஓடிவந்தார்கள். ஆமாம்... இருவரும் இரட்டையர்கள்.
உற்சாகப் பந்தாக ஓடிவந்த இளஞ்சிட்டுக்கள் இரண்டும், தகப்பன் அமர்ந்திருந்த...
அத்தியாயம் 03
மாயனும், பரமேஸ்வரியும் தங்கள் தொழிலில் உச்சத்தில் இருந்த நேரம் தங்கள் பெண்பிள்ளை மீது வைத்த கவனத்தை, ஆண்பிள்ளை தானே என்ற அலட்சியத்தால் மகன்மீது வைக்கத் தவறினார்கள்.
அந்த தம்பதியருக்கு தங்கள் தவறு புரிந்த போது, அவர்கள் மகனோ திரும்பி வரமுடியாத பாதையில், நெடுந்தூரம் பயணம் செய்திருந்தான்.
ஆமாம்... பதின்ம வயதிலேயே எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை...
அத்தியாயம் 19
இராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் கலெக்டர் பங்களாவை நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் காரின், பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான் ராகவன். ட்ரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தான் கதிரேசன்.
கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த ராகவனின் மனமோ, உணர்வுகளின் பிடியில் அகப்பட்டு கொந்தளித்துக் கொண்டிருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கலெக்டர் என்ற தலைப்பு...
அத்தியாயம் 17
“ராகவ்... “ உயிரை உருக்கும் குரலில் அந்த ஒற்றைப் பெயரை உச்சரித்த மலர்விழி, சில வினாடிகள் இடைவெளியில்,
“நம்ம வாழ்க்கையில இப்பிடி ஒரு முடிவை நான் எடுப்பேன்னு நினைச்சு கூட பாக்கல ராகவ். ஆனா, நாம நினைச்சு பாக்காதது எல்லாம் தான இங்க நடக்குது” என்று, ஒரு பெருமூச்சோடு பேசத் தொடங்கினாள்.
“இத்தனை நாள்ல, உங்க...
எதிரில், தான் எதிரியாக பாவிக்கும் மலர்விழி வரவும், அலட்சியமாக அவள் மீது பார்வையை பதித்த ரமேஷ், “ம்ஹூம்... ஆனாலும் இந்த தமிழ்நாடு அழகான ஒரு கரகாட்டக்காரியோட கலைச்சேவையை மிஸ் பண்ணிடிச்சே ப்பா... இல்லைன்னா நாமளும் நெஞ்சுல பசக்கு பசக்குன்னு...”
குரலில் நக்கல் கூத்தாட பேசியவனை,
வேண்டுமென்றே முடிக்கவிடாமல் இடைமறித்த அவன் நண்பன், “மாப்ள... என்னடா சொல்லுற?” என்று...
அத்தியாயம் 16
"ஏம்மா, புத்தி புல்மேய போயிடிச்சா? இன்டிகேட்டர் போடா ம உன் இஷ்டத்துக்கு வண்டியை திருப்புற?"
மெயின்ரோட்டிலிருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் கிளைச் சாலையில், திடீரென்று ஸ்கூட்டியை திருப்பியிருந்த மலர்விழியால், தடுமாறியிருந்த பைக்காரன் திட்டினான்.
"சாரி ண்ணா..." பதட்டத்தில் முகமெங்கும் முத்து முத்தாக வியர்த்துப் போனவளாக சொன்னாள் மலர்விழி.
"ஆ ஊன்னா, இது ஒண்ணைத் தூக்கிட்டு வந்துடுங்க. நான் கொஞ்சம்...
அத்தியாயம் 06
இரு கோடுகளாக நீண்டிருந்த தண்டவாளத்தில், தன் பரிவாரங்களை இழுத்துக்கொண்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த சென்னை எக்ஸ்பிரஸ். அதில், தங்களுக்கான இருக்கைகளில் மலர்விழி, ராகவன், செந்தில் மூவரும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள்.
ஆமாம்... ட்ரெயின் கிளம்பப் போகும் அந்த கடைசி வினாடிகளில், தணிகாசலத்தோடு அரக்கப்பரக்க ஓடி வந்த மலரை, ட்ரெயினில் ஏற்றிவிட்டு தானும் ஏறியிருந்தான் ராகவன்.
மூவரும் அமர்ந்திருந்த...
அத்தியாயம் 07
'ராஜம் பெண்கள் விடுதி' என்ற பெயர்ப்பலகை மின்னிய அந்த நான்கு மாடி கட்டிடம், காலையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அது ஒரு அப்பார்ட்மெண்ட் ஸ்டைல் பெண்கள் விடுதி. அங்கே தனி நபர் தங்கும் அறையிலிருந்து, நால்வர் பகிர்ந்து கொள்ளும் அறைகள் வரை இருந்தன.
அதில் மூன்றாவது தளத்தில், மூவர் தங்கும் வசதியுடைய அறையில் இருந்த மலர்விழி,...
அத்தியாயம் 05
“இந்த உலகத்தில், நீங்கள் பாதுகாப்பாக கருதும் இடம் எது?” என்று யாரைக் கேட்டாலும், “என் வீடு” என்று யோசிக்காமல் பதில் சொல்லுவார்கள்.
ஆனால், அந்த வீடுகூட பாதுகாப்பில்லாமல் போனது மலர்விழிக்கு.
ஆமாம்... தாயை இழந்த இரண்டு நாட்களிலேயே அந்த வீட்டிலுள்ளவர்கள் மனதளவில் மலர்விழியை பலவீனமாக்க முயற்சி செய்தார்கள் என்றால், சந்திரன் வேறுவகையில் அவளை பயம்கொள்ள வைத்தான்.
எனவே,...
அத்தியாயம் 14
உலகாளும் ஈசன் சன்னிதானத்தில் மாலையும் கழுத்துமாக ஜோடியாக நின்றிருந்தார்கள் ராகவனும் மலர்விழியும். அவர்களோடு செந்திலும் நின்றிருந்தான்.
அம்மையப்பரை மாங்கல்யமாக கோர்த்திருந்த மஞ்சள் கயிறை பூஜையில் வைத்து ராகவன் கைகளில் அர்ச்சகர் கொடுக்க, அந்த எம்பெருமானை மனதார வேண்டிக்கொண்டு மலர்விழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ராகவன்.
மஞ்சள் கயிறு மார்பில் உரசவும், இறுகினாற் போல இருந்த மலர்விழியின்...
அத்தியாயம் 15
“ராகவா” என்ற அக்காவின் அழைப்பில் பரபரப்பாக வாசலுக்கு வந்து ஆனந்தியை வரவேற்ற ராகவனுக்கு, அவள் பேச்சிலும், பார்வையிலும் இருந்த மாறுபாடு, ‘ஏதோ சரியில்லை’ என்றே எண்ணத் தோன்றியது.
யோசனையாக நெற்றியைச் சுருக்கியவன், என்னவாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்து பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், “வீட்டுக்குள்ள வா க்கா” என்று தமக்கையின் கைப்பிடித்து வீட்டுக்குள் அழைத்தான்.
அவளோ,...
அத்தியாயம் 04
“இரண்டு மாசத்துக்கு முன்னாடி வராத திருவிழாவுக்கு, உன் அப்பங்காரன் நேற்று பேசும்போதும் கூட திட்டுறான் டா” ராகவனோடு கைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த அவன் சித்தப்பா சிதம்பரம் அங்கலாய்த்து கொண்டார்.
“வந்து தலையை காட்டிட்டு போயிடுங்க. இல்லைன்னா உங்க அண்ணன் ங்குற புயல் கரையைக் கடக்க பலமாசங்கள் ஆகும்னு, நான் தான் சொன்னேன்ல சித்தப்பூ...” என்று...
அத்தியாயம் 10
கடைசி பரீட்சையை முடித்துவிட்டு, வகுப்பு தோழமைகளிடம் பிரியாவிடையும் பெற்று, கல்லூரியை விட்டு வெளியே வந்த மலர்விழியின் உள்ளம் உற்சாகத்தின் பிடியில் இருந்தது.
அதற்கு, நாளை மாலை சென்னைக்கு கிளம்புவதாக ராகவன் சொன்னது ஒரு காரணம் என்றால், இன்றுகாலை கல்லூரிக்கு வந்ததும் கல்லூரி முதல்வர் அவளை அழைத்து, “பி எட் அல்லது போஸ்ட் க்ராஜூவேஷன், எதுவாக...
அத்தியாயம் 09
ராஜம் பெண்கள் விடுதி வளாகத்தில், ஓங்கி வளர்ந்திருந்த வேப்பமரத்துக்கு கீழ் நின்று கொண்டிருந்த சிதம்பரத்தை நோக்கி, புன்னகை முகத்தோடு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி.
கடந்திருந்த மூன்று வருட சென்னை வாழ்க்கை மலர்விழியின் நடை, உடை, பாவனைகளில் எந்த ஒரு அனாவசியமான மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கவில்லை. ஆனால், அவள் முகத்தில் மட்டும் படிப்புக்கே உரிய தனி...
அத்தியாயம் 11
"தீச்சர்... கிளம்பியாச்சா?” கைபேசியின் வழியே உற்சாகமாக கேட்ட ராகவனுக்கு,
"ம்ம்... அவ்வளவு தான், முடிஞ்சுது" என்று பதில் சொல்லியபடியே, கண்ணாடி முன் நின்று தன்னை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டாள் மலர்விழி.
மாம்பழக்கலரில் குங்குமக்கலர் கரையிட்ட சில்க் காட்டன் புடவை, நீண்ட பின்னலில் பாங்காக பொருந்தியிருந்த மல்லிகைச்சரம் என்று, தன் தோற்றம் அவளுக்கு திருப்திகரமாகவே இருந்தது.
"ம்ம்... குட்,...
அத்தியாயம் 08
கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்த இந்த ஒருவாரத்தில், மலர்விழி எப்போதும் போல எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறாள். ஆனால், அவள் மீதான வகுப்பு மாணவர்களின் பார்வை மாறியிருக்கிறது.
முன்பு, நடை, உடை, பாவனைகளால் வகுப்பில் அத்தனை பேருக்கும் நடுவே தனியாகத் தெரிந்த மலர்விழி, இப்போது அவளுடைய தனித்திறமையால் அத்தனை பேருக்கும் நடுவே தனியாகத் தெரிய...
கோபத்தில் கண்களை உருட்டினாள் அந்த பெண் சுசீ. திருமணமாகாத பெண் தான். இருந்த போதும் அவள் அணிந்திருந்த நகைகளைப் பார்க்கும் போதே கண்களைக் கட்டியது மலர்விழிக்கு.
"ஹேய் சுசீ... கழுதைன்னா அழகிய இளம் பெண். அப்போ நீ கழுதை இல்லையா?" கூடியிருந்த இளம்பெண்களில் ஒருத்தி வம்பு செய்ய, கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்கியது.
"அப்படின்னா, சரி...