நம் சொந்தம் கூடுமோ
அத்தியாயம் 22
ஊரைத் தாண்டும் போது வண்டி நிற்க, உள்ளே ஏறி வந்த சிவாவைப் பார்த்தவர்களுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
“வாங்க மாப்பிள்ளை” என்ற சாந்திக்கு அப்படி ஒரு சந்தோசம்.
“சாரி கபிலன், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றான் சிவா.
“அங்க பாருங்க” என்று கபிலன் ஜாடை காட்ட, அபியோ கடுகடுவென்று அமர்ந்திருந்தாள்.
அவள் நகர்ந்து அமர்ந்தால் தான் சிவா...
அத்தியாயம் 21
யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருக்க, செல்வியைத் தவிர்த்து அனைவரும் வந்திருந்தனர். செல்வி வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. பிரபாகரன் அவளை அழைத்து வரவில்லை அவ்வளவு தான்.
”வீடு நல்லா இருக்கு சிவா. வாடகை எவ்வளவு?” என்றான் பிரபா.
“பத்தாயிரம்ண்ணா” என்றான் சிவா.
“வாடகை பத்தாயிரம்னா சமாளிச்சுடுவியா சிவா. பேசாம லீசுக்கு பார்த்திருக்கலாம்ல?” என்றான் சத்யா.
“பிரச்சனையில்லை,பார்த்துக்கலாம்ண்ணா” என்றான் சிவா.
“ஏன்டா பார்த்தது...
அத்தியாயம் 20
புது வண்டியில் வந்து இறங்கியவர்களைப் பார்த்த சரிதா முதன் முறையாக சந்தோஷமாக உணர்ந்தாள். கலையரசியும் நடராஜனும் பார்த்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. கேட்டுக் கொள்ளவும் இல்லை. செல்வியோ முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
“புது வண்டி எடுக்கப் போறீங்கன்னு சொல்லவே இல்லை அபர்ணா?” என்றாள் சரிதா.
“திடீர்ன்னு முடிவு பண்ணது தான்க்கா”...
அத்தியாயம் 19
அன்று காலை வேக வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் அபர்ணா. எழுந்ததில் இருந்து முதல் நாள் இரவு சிவா சொன்ன வார்த்தைகளே அவள் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, அவளால் எந்த வேலையையும் உடனே செய்ய முடியவில்லை. எப்போதும் கடகடவென்று செய்து முடிப்பவள், இன்று ஒவ்வொன்றையும் ஒரு தடுமாற்றத்துடன் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த சிவா அவளை...
“வாங்க சிவா” என்ற கபிலனின் குரலில் அன்னம் குடும்பம் மொத்தமும் வாயிலைப் பார்க்க, ஒரு தலையசைப்புடன் உள்ளே வந்தவனின் கண்கள் அபர்ணாவைத் தேடியது. கபிலன் அறையைக் கண் காட்ட, யாரையும் சட்டை செய்யாமல் உரிமையுடன் அவள் அறையை நோக்கி சென்றவனைக் கண்டு மாதவனுக்கு ஊசியாய் குத்தியது.
அவன் கதவைத் திறக்கும் முன்னரே கதவைத் திறந்து வெளியே...
அத்தியாயம் 18
“நடந்து போற தூரத்துல இருக்கு அம்மா வீடு. சிவா உனக்கு தோதா வீடு பார்த்த மாதிரி தெரியுதே?” என்றான் கபிலன்.
‘அவர் என்ன நினைக்கிறாருன்னே தெரியலைண்ணா’ என்றவளுக்கும் அதே யோசனை தான்.
ஏற்கனவே கபிலன் மூலம் விஷயத்தை அறிந்திருந்த சாந்தி, மகள் வீட்டிற்குள் வந்ததும் பிடித்துக் கொண்டார்.
“என்ன அபர்ணா இதெல்லாம்? இப்போ தனிக்குடித்தனம் எல்லாம் எதுக்கும்மா?”...
“கலை” என்ற நடராஜனின் குரலில் இருவருமே திரும்ப, ஒரு இறுக்கத்துடன் இருந்தார் நடராஜன்.
“உன்னை யாரு இங்க வர சொன்னது? அவங்களா ஒரு முடிவை எடுத்துட்டு பேசுறாங்க. நாம என்ன சொன்னாலும் புரியப் போறது இல்லை. இனி இதைப் பத்தி பேசாத. வா கீழ” என்றார்.
“மூணு பேரும் ஒண்ணா ஒரு வீட்ல இருக்கணும்னு தானங்க ஆசைப்பட்டோம்....
அத்தியாயம் 17
அதிகாலை மூன்று மணிக்கு சிவாவிற்கு எப்போதும் போல் முழிப்பு வர, கண் விழித்தவனுக்கு அப்போது தான் அப்படியே உறங்கிவிட்டது தெரிந்தது. தன் மேல் ஏதோ பாரத்தை உணர்ந்தவனுக்கு, அபி அவன் கையணைப்பிலேயே உறங்கிக் கொண்டிருப்பது புரிந்தது. நடு இரவிற்கு மேல் வீசிய பனிக் காற்றில் அவளுக்கு குளிர் எடுத்திருக்க, தன் பாதி பாரத்தை...
வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்த சாந்திக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இறுகிப் போயிருந்தவளின் முகம் மட்டும் ஏதோ யோசனையில் இருக்க, அவளிடம் பேசவே யோசித்தார் சாந்தி.
“ஏதாவது பிரச்சனையா அபர்ணா?” என்றார் மூர்த்தி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா” என்று வேகமாய் கூறியவள்,
“அண்ணாவுக்கு இன்னைக்கு லீவ் தானம்மா!” என்றாள்.
“அப்படித்தான் நினைக்கிறேன் அபர்ணா” என்றார்.
“எனக்கு, ரெண்டு பேருக்கு...
அத்தியாயம் 16
அவளின் கோபத்தை குறைக்க வேண்டுமென்று தான் அவளை அணைத்திருந்தான் சிவா. ஆனால் உண்மையில் மனதிற்குள் அவனுக்குத்தான் அவ்வளவு கோபமும் ஏமாற்றமும் இருந்தது. அபர்ணா அதை வெளிக்காட்டி விட்டாள். சிவாவோ அதை மனதிற்குள் போட்டு அழுத்திக் கொண்டான். செல்வி அந்த மூன்று நாள் சம்பளக் கணக்கை பேசும் போதே அவன் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்து...
அத்தியாயம் 15
‘இதற்கெல்லாமா கணக்குப் பார்ப்பாள்’ என்ற அதிர்ச்சியில் அவர்கள் இருக்க,
“ஒரு நிமிஷம் சக்தி” என்றவள், அவன் டேபிள் மேல் திருப்பி வைத்த பணத்தை எடுத்துக் கொண்டாள்.
“இது என் புருஷனோட ஒரு மாச உழைப்பு. அப்படியெல்லாம் சட்டுன்னு தூக்கிக் குடுத்துட முடியாது” என்றாள் செல்வியை முறைத்தபடி.
“என்ன அபர்ணா? என்னமோ உன் புருஷன் உழைச்ச காசை நான்...
அத்தியாயம் 14
மறுநாள் எழும் போதே ஒரு தெளிவான மனநிலையுடன் தான் எழுந்திருந்தாள் அபர்ணா. அவளை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. நேற்று சிவாவிடம் தான் நடந்து கொண்டதை எண்ணி ஒரு பக்கம் என்னவோ போல் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனால் தான் இந்த அளவிற்கு தெளிந்திருக்கிறோம் என்று நிம்மதியாகத் தான் இருந்தது அவளுக்கு. கிளம்பும்...
அத்தியாயம் 13
இந்த பத்து நாட்களில் கலையரசியுடன் பேச்சுக் கொடுத்து ஓரளவிற்கு தெரிந்து கொண்ட விஷயங்களை யோசித்துப் பார்த்தாள். செல்வி சரிதாவைப் பற்றி யாரும் தனியாக வந்து அவளுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இத்தனை நாட்களில் அவர்களே தங்கள் குணத்தை உணர்த்தியிருந்தார்கள்.
ஏதேதோ யோசித்தபடி தூங்கியவள் காலையில் எழும் போதே சற்று தாமதமாகத் தான் எழுந்தாள்....
அத்தியாயம் 12
சிவாவையும் அபர்ணாவையும் அழைத்து வந்திருந்தான் கபிலன். தன் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம் போன நிம்மதியெல்லாம் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வு அபர்ணாவிற்கு. மனதில் இருந்த பாரமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருக்க, பலமாதம் பிரிந்து இருந்தவளைப் போல் சாந்தியை அணைத்துக் கொண்டாள். மகளைப் பரிவுடன் பார்த்திருந்த மூர்த்திக்கும் அப்படி ஒரு மன...
“உனக்கு என்னாச்சு அபர்ணா? நீ இப்படி இல்லையே? இப்ப ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குற? அப்படி என்னதான் பிரச்சனை?” என்றான் கபிலன்.
“ஒண்ணுமில்ல” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,
“சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்றான் வேண்டுமென்றே.
“கொஞ்ச நேரம் இருண்ணா. எல்லாரும் எழுந்ததுக்கு அப்பறம் சொல்லிட்டு போவோம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல்...
அத்தியாயம் 11
வெகு நேரம் கழித்து உறங்கியிருந்தாலும் தினப்படி வழக்கமாக மூன்று மணிக்கெல்லாம் முழிப்பு வந்திருந்தது சிவாவிற்கு. நேரத்தைப் பார்த்துவிட்டு வேகமாய் எழுந்தவனுக்கு, அப்போது தான் உரைத்தது, இரண்டு நாட்களுக்கு கடைக்குச் செல்ல தேவையில்லை என்பதே.
யோசனையுடன் எழுந்து அறைக்குள் செல்ல முற்பட்டவனுக்கு திடீரென்று ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
“எப்படி தூங்கிட்டு இருக்காளோ தெரியலை. நாம...
அத்தியாயம் 10
ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க, இப்போது கபிலனும் வித்யாவும் கிளம்ப அவர்களுடன் காயத்ரியும் கிளம்பியிருந்தாள்.
அமைதியாய் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தவளைப் பார்த்த கலையரசி,
“நீ போய் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்குமா அபர்ணா” என்றார்.
“ம்ம்” விழித்தவள் எங்கே செல்வது என்று பார்த்திருக்க, சமையல் அறைக்குள் நின்று இவளின் முக பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கும் சரிதாவுக்கும் சிரிப்பை அடக்க...
அத்தியாயம் 9
மேடையில் மணப்பெண்ணிற்குரிய சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருந்த அபர்ணாவிற்கு நடந்து முடிந்த அனைத்தும் கனவு போல் இருந்து. இதோ இப்போது தான் மூன்று முடிச்சையும் போட்டு அவளை தன்னில் சரி பாதியாக்கியிருந்தான் சிவசக்தி. இப்போது வரை அவன் அபர்ணாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தான் அவளுக்கு மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது....
அத்தியாயம் 8
ஒரு வழியாக முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது. மூர்த்தி செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் செய்து, விட்டுக் கொடுக்காமல் செய்முறையும் செய்ய, அன்னம் கண் கலங்க நின்றிருந்தார்.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தைகளில் சட்டென்று மேடையைப் பார்த்த அபர்ணாவிற்கு அது வரை அடக்கி வைத்த கண்ணீர் விழிகள் ததும்பி நிற்க,
“அபர்ணா அட்சதையை போடுடி” என்று இடித்த...
அத்தியாயம் 7
திருமண தேதி குறிக்கப்பட்டு வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சிவா வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து பேக்கரி செல்வதும் நடு இரவில் வீட்டிற்கு வருவதும் என்று அவனுடைய வழக்கமான வேலைகளில் இருந்தான். பார்ப்பவர்கள் தான் குழம்பிப் போய் திரிந்தனர்.
‘நிஜமாவே இஷ்ட்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிறானா?’ என்ற சந்தேகம் வீட்டில் இருந்த அனைவர்...