Wednesday, November 11, 2026

    நம் சொந்தம் கூடுமோ

    அத்தியாயம் 24 குடும்பத்தினர் அனைவரும் கடையின் அமைப்பைப் பார்த்து வியந்து நின்றனர். அவ்வளவு அழகான அமைப்பில் இன்டீரியர் வொர்க்கை செய்திருந்தான் சிவா. “அபர்ணாஸ் கபே!!!” வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. சிவாவைப் பெற்றவர்களுக்கு சந்தோசம் என்றால்,அபர்ணாவின் பெற்றோருக்கோ பெருமையில் நிறைந்திருந்தது முகம். சாந்திக்கோ ஒரு படி மேலே. அன்னத்தின் குடும்பத்தில் அன்னமும்...
    அத்தியாயம் 7 திருமண தேதி குறிக்கப்பட்டு வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சிவா வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து பேக்கரி செல்வதும் நடு இரவில் வீட்டிற்கு வருவதும் என்று அவனுடைய வழக்கமான வேலைகளில் இருந்தான். பார்ப்பவர்கள் தான் குழம்பிப் போய் திரிந்தனர். ‘நிஜமாவே இஷ்ட்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிறானா?’ என்ற சந்தேகம் வீட்டில் இருந்த அனைவர்...
    அத்தியாயம் 25 வீடு வரும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக வந்த அபர்ணாவை யோசனையுடன் பார்த்த படியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் சிவா. அவள் அந்த உலகத்திலேயே இல்லை என்று அவளின் வெறித்த பார்வையிலேயே தெரிந்து போனது அவனுக்கு. வீட்டிற்கு வந்த பிறகும் கூட எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவளைக் கண்டு யோசனையுற்றவன், “இப்போ என்னாச்சுன்னு இப்படி இருக்க...
    “கலை” என்ற நடராஜனின் குரலில் இருவருமே திரும்ப, ஒரு இறுக்கத்துடன் இருந்தார் நடராஜன். “உன்னை யாரு இங்க வர சொன்னது? அவங்களா ஒரு முடிவை எடுத்துட்டு பேசுறாங்க. நாம என்ன சொன்னாலும் புரியப் போறது இல்லை. இனி இதைப் பத்தி பேசாத. வா கீழ” என்றார். “மூணு பேரும் ஒண்ணா ஒரு வீட்ல இருக்கணும்னு தானங்க ஆசைப்பட்டோம்....
    அத்தியாயம் 12 சிவாவையும் அபர்ணாவையும் அழைத்து வந்திருந்தான் கபிலன். தன் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம் போன நிம்மதியெல்லாம் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வு அபர்ணாவிற்கு. மனதில் இருந்த பாரமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருக்க, பலமாதம் பிரிந்து இருந்தவளைப் போல் சாந்தியை அணைத்துக் கொண்டாள். மகளைப் பரிவுடன் பார்த்திருந்த மூர்த்திக்கும் அப்படி ஒரு மன...
    அத்தியாயம் 20 புது வண்டியில் வந்து இறங்கியவர்களைப் பார்த்த சரிதா முதன் முறையாக சந்தோஷமாக உணர்ந்தாள். கலையரசியும் நடராஜனும் பார்த்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. கேட்டுக் கொள்ளவும் இல்லை. செல்வியோ முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள். “புது வண்டி எடுக்கப் போறீங்கன்னு சொல்லவே இல்லை அபர்ணா?” என்றாள் சரிதா. “திடீர்ன்னு முடிவு பண்ணது தான்க்கா”...
    அத்தியாயம் 15 ‘இதற்கெல்லாமா கணக்குப் பார்ப்பாள்’ என்ற அதிர்ச்சியில் அவர்கள் இருக்க, “ஒரு நிமிஷம் சக்தி” என்றவள், அவன் டேபிள் மேல் திருப்பி வைத்த பணத்தை எடுத்துக் கொண்டாள். “இது என் புருஷனோட ஒரு மாச உழைப்பு. அப்படியெல்லாம் சட்டுன்னு தூக்கிக் குடுத்துட முடியாது” என்றாள் செல்வியை முறைத்தபடி. “என்ன அபர்ணா? என்னமோ உன் புருஷன் உழைச்ச காசை நான்...
    மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மாதவனின் வீட்டிற்குள் நுழையும் போதே, பேச்சு சத்தம் வெளியே வரை கேட்டது. “சின்ன வயசுல இருந்து மாதவனுக்கு அபர்ணா தான்னு சொல்லிட்டு இப்போ போய் எப்படிங்க மாத்தி  பேச முடியும்? நீங்க எப்படி மாதவனுக்கு வெளிய பொண்ணு பார்க்கலாம்?” என்றார் அன்னம் கண்ணீர் கலங்கிய குரலில். “நான் என்னைக்காவது சொல்லியிருக்கேனா? உன் அண்ணன்...
    அத்தியாயம் 19 அன்று காலை வேக வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் அபர்ணா. எழுந்ததில் இருந்து முதல் நாள் இரவு சிவா சொன்ன வார்த்தைகளே அவள் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, அவளால் எந்த வேலையையும் உடனே செய்ய முடியவில்லை. எப்போதும் கடகடவென்று செய்து முடிப்பவள், இன்று ஒவ்வொன்றையும் ஒரு தடுமாற்றத்துடன் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த சிவா அவளை...
    அத்தியாயம் 8 ஒரு வழியாக முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது. மூர்த்தி செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் செய்து, விட்டுக் கொடுக்காமல் செய்முறையும் செய்ய, அன்னம் கண் கலங்க நின்றிருந்தார். “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தைகளில் சட்டென்று மேடையைப் பார்த்த அபர்ணாவிற்கு அது வரை அடக்கி வைத்த கண்ணீர் விழிகள் ததும்பி நிற்க, “அபர்ணா அட்சதையை போடுடி” என்று இடித்த...
    அத்தியாயம் 16 அவளின் கோபத்தை குறைக்க வேண்டுமென்று தான் அவளை அணைத்திருந்தான் சிவா. ஆனால் உண்மையில் மனதிற்குள் அவனுக்குத்தான் அவ்வளவு கோபமும் ஏமாற்றமும் இருந்தது. அபர்ணா அதை வெளிக்காட்டி விட்டாள். சிவாவோ அதை மனதிற்குள் போட்டு அழுத்திக் கொண்டான். செல்வி அந்த மூன்று நாள் சம்பளக் கணக்கை பேசும் போதே அவன் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்து...
    அத்தியாயம் 13 இந்த பத்து நாட்களில் கலையரசியுடன் பேச்சுக் கொடுத்து ஓரளவிற்கு தெரிந்து கொண்ட விஷயங்களை யோசித்துப் பார்த்தாள். செல்வி சரிதாவைப் பற்றி யாரும் தனியாக வந்து அவளுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இத்தனை நாட்களில் அவர்களே தங்கள் குணத்தை உணர்த்தியிருந்தார்கள். ஏதேதோ யோசித்தபடி தூங்கியவள் காலையில் எழும் போதே சற்று தாமதமாகத் தான் எழுந்தாள்....
    அத்தியாயம் 3 : கவலையுடன் அமர்ந்திருந்தார் நடராஜன். அவரின் கவலை முழுவதுமே சிவாவைப் பற்றியது தான். சமீப காலமாக செல்வி அவனை மட்டம் தட்டிக் கொண்டிருப்பதை அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். அவளின் தங்கையை சிவா வேண்டாம் என்று சொன்னதில் இருந்தே செல்வி இப்படித்தான் நடந்து கொள்கிறாள். “என்னாச்சுங்க?” என்றார் கலையரசி கணவரின் கவலை நிறைந்த...
    “வாங்க சிவா” என்ற கபிலனின் குரலில் அன்னம் குடும்பம் மொத்தமும் வாயிலைப் பார்க்க, ஒரு தலையசைப்புடன் உள்ளே வந்தவனின் கண்கள் அபர்ணாவைத் தேடியது. கபிலன் அறையைக் கண் காட்ட,  யாரையும் சட்டை செய்யாமல் உரிமையுடன் அவள் அறையை நோக்கி சென்றவனைக் கண்டு மாதவனுக்கு ஊசியாய் குத்தியது. அவன் கதவைத் திறக்கும் முன்னரே கதவைத் திறந்து வெளியே...
    அத்தியாயம் 6 : மாதவனின் திருமண ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இங்கு சிவா அபர்ணா நிச்சய ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. அபர்ணாவை விட இந்த திருமணத்தில் துளியும் நாட்டமில்லாமல் இருந்தான் சிவா. ‘இப்போ யாரு இந்த பொண்ணை சரின்னு சொல்ல சொன்னது?’ என்று கோபத்தை முழுவதும் அவள் மீது திருப்பியிருந்தான். அன்று வீட்டிற்கு வந்தவனை...
    அத்தியாயம் 5 : என்றும் இல்லாத திருநாளாய் தங்கள் வீடு தேடி வந்து அமர்ந்திருந்த தங்கையையும் தங்கையின் கணவரையும் தான் பார்த்திருந்தார் மூர்த்தி. சாந்தி அவர்களுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுக்க, ஒரு செருமலுடன் ஆரம்பித்தார் முத்து மாணிக்கம். “மாதவனுக்கு பொண்ணு பார்த்திருக்கு. எம்எல்ஏ பொண்ணு தான்.அண்ணன் வீட்டுக்கு முறைப்படி தகவல் சொல்லனும்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா....
    அத்தியாயம் 21 யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருக்க, செல்வியைத் தவிர்த்து அனைவரும் வந்திருந்தனர். செல்வி வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. பிரபாகரன் அவளை அழைத்து வரவில்லை அவ்வளவு தான். ”வீடு நல்லா இருக்கு சிவா. வாடகை எவ்வளவு?” என்றான் பிரபா. “பத்தாயிரம்ண்ணா” என்றான் சிவா. “வாடகை பத்தாயிரம்னா சமாளிச்சுடுவியா சிவா. பேசாம லீசுக்கு பார்த்திருக்கலாம்ல?” என்றான் சத்யா. “பிரச்சனையில்லை,பார்த்துக்கலாம்ண்ணா” என்றான் சிவா. “ஏன்டா பார்த்தது...
    “சாரி காயு..!” என்றபடி எங்கோ வெறித்தவளை பார்த்த காயத்ரிக்கு மனமே ஆறவில்லை. “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அபர்ணா. இப்படி நடக்கும்னு ஏற்கனவே நான் எதிர்பார்த்தேன்” என்ற தோழியை அகன்ற விழிகளுடன் எதிர்கொண்டாள் அபர்ணா. “என்னடி பார்க்குற? உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனா ஒரு விஷயம் அபர்ணா, உன்னை மாதிரி ஒருத்தியை வேண்டாம்னு சொன்னது அவங்களுக்குத் தான் இழப்பு....
    அத்தியாயம் 1 : தேனி- மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகர். நகரை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்தது அந்த தனியார் பள்ளி. பள்ளி முடிந்து அனைவரும் சென்று கொண்டிருக்க, ஸ்டாப் ரூமில் இருந்து தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் அவள். அந்த...
    வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்த சாந்திக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இறுகிப் போயிருந்தவளின் முகம் மட்டும் ஏதோ யோசனையில் இருக்க, அவளிடம் பேசவே யோசித்தார் சாந்தி. “ஏதாவது பிரச்சனையா அபர்ணா?” என்றார் மூர்த்தி. “அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா” என்று வேகமாய் கூறியவள், “அண்ணாவுக்கு இன்னைக்கு லீவ் தானம்மா!” என்றாள். “அப்படித்தான் நினைக்கிறேன் அபர்ணா” என்றார். “எனக்கு, ரெண்டு பேருக்கு...
    error: Content is protected !!