நம் சொந்தம் கூடுமோ
அத்தியாயம் 13
இந்த பத்து நாட்களில் கலையரசியுடன் பேச்சுக் கொடுத்து ஓரளவிற்கு தெரிந்து கொண்ட விஷயங்களை யோசித்துப் பார்த்தாள். செல்வி சரிதாவைப் பற்றி யாரும் தனியாக வந்து அவளுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இத்தனை நாட்களில் அவர்களே தங்கள் குணத்தை உணர்த்தியிருந்தார்கள்.
ஏதேதோ யோசித்தபடி தூங்கியவள் காலையில் எழும் போதே சற்று தாமதமாகத் தான் எழுந்தாள்....
வீட்டிற்கு வந்ததிலிருந்து அமைதியாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்த சாந்திக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இறுகிப் போயிருந்தவளின் முகம் மட்டும் ஏதோ யோசனையில் இருக்க, அவளிடம் பேசவே யோசித்தார் சாந்தி.
“ஏதாவது பிரச்சனையா அபர்ணா?” என்றார் மூர்த்தி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா” என்று வேகமாய் கூறியவள்,
“அண்ணாவுக்கு இன்னைக்கு லீவ் தானம்மா!” என்றாள்.
“அப்படித்தான் நினைக்கிறேன் அபர்ணா” என்றார்.
“எனக்கு, ரெண்டு பேருக்கு...
அத்தியாயம் 14
மறுநாள் எழும் போதே ஒரு தெளிவான மனநிலையுடன் தான் எழுந்திருந்தாள் அபர்ணா. அவளை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. நேற்று சிவாவிடம் தான் நடந்து கொண்டதை எண்ணி ஒரு பக்கம் என்னவோ போல் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனால் தான் இந்த அளவிற்கு தெளிந்திருக்கிறோம் என்று நிம்மதியாகத் தான் இருந்தது அவளுக்கு. கிளம்பும்...
அத்தியாயம் 25
வீடு வரும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக வந்த அபர்ணாவை யோசனையுடன் பார்த்த படியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான் சிவா. அவள் அந்த உலகத்திலேயே இல்லை என்று அவளின் வெறித்த பார்வையிலேயே தெரிந்து போனது அவனுக்கு.
வீட்டிற்கு வந்த பிறகும் கூட எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவளைக் கண்டு யோசனையுற்றவன்,
“இப்போ என்னாச்சுன்னு இப்படி இருக்க...
அத்தியாயம் 18
“நடந்து போற தூரத்துல இருக்கு அம்மா வீடு. சிவா உனக்கு தோதா வீடு பார்த்த மாதிரி தெரியுதே?” என்றான் கபிலன்.
‘அவர் என்ன நினைக்கிறாருன்னே தெரியலைண்ணா’ என்றவளுக்கும் அதே யோசனை தான்.
ஏற்கனவே கபிலன் மூலம் விஷயத்தை அறிந்திருந்த சாந்தி, மகள் வீட்டிற்குள் வந்ததும் பிடித்துக் கொண்டார்.
“என்ன அபர்ணா இதெல்லாம்? இப்போ தனிக்குடித்தனம் எல்லாம் எதுக்கும்மா?”...
அத்தியாயம் 19
அன்று காலை வேக வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் அபர்ணா. எழுந்ததில் இருந்து முதல் நாள் இரவு சிவா சொன்ன வார்த்தைகளே அவள் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, அவளால் எந்த வேலையையும் உடனே செய்ய முடியவில்லை. எப்போதும் கடகடவென்று செய்து முடிப்பவள், இன்று ஒவ்வொன்றையும் ஒரு தடுமாற்றத்துடன் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த சிவா அவளை...
அத்தியாயம் 1 :
தேனி- மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகர். நகரை விட்டு சற்று தள்ளி அமைந்திருந்தது அந்த தனியார் பள்ளி. பள்ளி முடிந்து அனைவரும் சென்று கொண்டிருக்க, ஸ்டாப் ரூமில் இருந்து தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் அவள். அந்த...
“சாரி காயு..!” என்றபடி எங்கோ வெறித்தவளை பார்த்த காயத்ரிக்கு மனமே ஆறவில்லை.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அபர்ணா. இப்படி நடக்கும்னு ஏற்கனவே நான் எதிர்பார்த்தேன்” என்ற தோழியை அகன்ற விழிகளுடன் எதிர்கொண்டாள் அபர்ணா.
“என்னடி பார்க்குற? உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனா ஒரு விஷயம் அபர்ணா, உன்னை மாதிரி ஒருத்தியை வேண்டாம்னு சொன்னது அவங்களுக்குத் தான் இழப்பு....
அத்தியாயம் 10
ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க, இப்போது கபிலனும் வித்யாவும் கிளம்ப அவர்களுடன் காயத்ரியும் கிளம்பியிருந்தாள்.
அமைதியாய் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தவளைப் பார்த்த கலையரசி,
“நீ போய் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்குமா அபர்ணா” என்றார்.
“ம்ம்” விழித்தவள் எங்கே செல்வது என்று பார்த்திருக்க, சமையல் அறைக்குள் நின்று இவளின் முக பாவனைகளை பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கும் சரிதாவுக்கும் சிரிப்பை அடக்க...
“கலை” என்ற நடராஜனின் குரலில் இருவருமே திரும்ப, ஒரு இறுக்கத்துடன் இருந்தார் நடராஜன்.
“உன்னை யாரு இங்க வர சொன்னது? அவங்களா ஒரு முடிவை எடுத்துட்டு பேசுறாங்க. நாம என்ன சொன்னாலும் புரியப் போறது இல்லை. இனி இதைப் பத்தி பேசாத. வா கீழ” என்றார்.
“மூணு பேரும் ஒண்ணா ஒரு வீட்ல இருக்கணும்னு தானங்க ஆசைப்பட்டோம்....
அத்தியாயம் 23
காலையில் விழித்தவள் கண்டது இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த சிவாவைத் தான். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனைக் கண்டு ஆச்சர்யம் தான் அவளுக்கு. இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட அவன் இவ்வளவு நேரம் தூங்கியதில்லை.
நேற்று அவன் பேசிய பேச்சுக்களும், செய்த சேட்டைகளும் ஞாபகத்திற்கு வர, தன்னையறியாமல் புன்னகை...
அத்தியாயம் 16
அவளின் கோபத்தை குறைக்க வேண்டுமென்று தான் அவளை அணைத்திருந்தான் சிவா. ஆனால் உண்மையில் மனதிற்குள் அவனுக்குத்தான் அவ்வளவு கோபமும் ஏமாற்றமும் இருந்தது. அபர்ணா அதை வெளிக்காட்டி விட்டாள். சிவாவோ அதை மனதிற்குள் போட்டு அழுத்திக் கொண்டான். செல்வி அந்த மூன்று நாள் சம்பளக் கணக்கை பேசும் போதே அவன் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்து...
அத்தியாயம் 21
யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருக்க, செல்வியைத் தவிர்த்து அனைவரும் வந்திருந்தனர். செல்வி வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. பிரபாகரன் அவளை அழைத்து வரவில்லை அவ்வளவு தான்.
”வீடு நல்லா இருக்கு சிவா. வாடகை எவ்வளவு?” என்றான் பிரபா.
“பத்தாயிரம்ண்ணா” என்றான் சிவா.
“வாடகை பத்தாயிரம்னா சமாளிச்சுடுவியா சிவா. பேசாம லீசுக்கு பார்த்திருக்கலாம்ல?” என்றான் சத்யா.
“பிரச்சனையில்லை,பார்த்துக்கலாம்ண்ணா” என்றான் சிவா.
“ஏன்டா பார்த்தது...
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
‘அபர்ணாஸ் கபே !’ மூன்று கிளைகளுடன் வளர்ந்திருந்தது. சிவசக்தி இப்போது தேனியில் பேர் சொல்லும் நபர்களுள் ஒருவன். மூன்று கிளைகளும் சொந்த இடத்தில் தான் இருந்தது.
அவனின் வளர்ச்சி மற்றவர்கள் எதிர்பாராத வளர்ச்சி. அபர்ணா தன்னவனிடத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி.
அவர்களுக்கு இரண்டாவதும் பையன் தான் பிறந்திருந்தான்.
இன்று சிவா -அபர்ணா அவர்களின் புது வீட்டின் கிரகப்...
“உனக்கு என்னாச்சு அபர்ணா? நீ இப்படி இல்லையே? இப்ப ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குற? அப்படி என்னதான் பிரச்சனை?” என்றான் கபிலன்.
“ஒண்ணுமில்ல” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,
“சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்றான் வேண்டுமென்றே.
“கொஞ்ச நேரம் இருண்ணா. எல்லாரும் எழுந்ததுக்கு அப்பறம் சொல்லிட்டு போவோம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல்...
அத்தியாயம் 17
அதிகாலை மூன்று மணிக்கு சிவாவிற்கு எப்போதும் போல் முழிப்பு வர, கண் விழித்தவனுக்கு அப்போது தான் அப்படியே உறங்கிவிட்டது தெரிந்தது. தன் மேல் ஏதோ பாரத்தை உணர்ந்தவனுக்கு, அபி அவன் கையணைப்பிலேயே உறங்கிக் கொண்டிருப்பது புரிந்தது. நடு இரவிற்கு மேல் வீசிய பனிக் காற்றில் அவளுக்கு குளிர் எடுத்திருக்க, தன் பாதி பாரத்தை...
அத்தியாயம் 8
ஒரு வழியாக முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது. மூர்த்தி செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் செய்து, விட்டுக் கொடுக்காமல் செய்முறையும் செய்ய, அன்னம் கண் கலங்க நின்றிருந்தார்.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற வார்த்தைகளில் சட்டென்று மேடையைப் பார்த்த அபர்ணாவிற்கு அது வரை அடக்கி வைத்த கண்ணீர் விழிகள் ததும்பி நிற்க,
“அபர்ணா அட்சதையை போடுடி” என்று இடித்த...
அத்தியாயம் 6 :
மாதவனின் திருமண ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இங்கு சிவா அபர்ணா நிச்சய ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது.
அபர்ணாவை விட இந்த திருமணத்தில் துளியும் நாட்டமில்லாமல் இருந்தான் சிவா.
‘இப்போ யாரு இந்த பொண்ணை சரின்னு சொல்ல சொன்னது?’ என்று கோபத்தை முழுவதும் அவள் மீது திருப்பியிருந்தான்.
அன்று வீட்டிற்கு வந்தவனை...
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே பிரபாகரனின் குரல் கேட்க, வேகமாய் கீழே சென்றனர். சத்தியசீலனும் சரிதாவும் கூட ஊரில் இருந்து வந்துவிட்டிருந்தனர்.
“என்னாச்சு பிரபா? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றார் நடராஜன் பொறுமையாக.
“எதுக்கு இவ்வளவு கோபம்னு உங்களுக்குத் தெரியாதாப்பா? என்னமோ இவனுக்கு பொண்ணுப் பார்க்க போயிட்டு வந்திங்களாமே? ஒரு வார்த்தை கூட எங்ககிட்ட சொல்லாம?...
இதோ இன்று அபர்ணாவிற்கு வளைகாப்பு..
திருமணப் பட்டை உடுத்தி, மிதமான அலங்காரத்தில் தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருந்தவளை அருகில் அமர்ந்து முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
“இப்போ எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்கீங்க? எல்லாரும் நம்மளைத் தான் பார்க்குறாங்க சக்தி” என்றாள்.
“அழகா இருக்க அபி. நிஜமாவே என் கண்ணு வேற எங்கயும் போக மாட்டேங்குது. நான்...