Tuesday, May 21, 2024

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 13   நடப்பதை எதையும் ரோகிணியால் நம்பவே இயலவில்லை. 'இது சோதனை காலம்' என்று புரிந்திருந்தது. அதற்காக இப்படியா? ஒன்றிலிருந்து மீளும் முன்பு அடுத்த சோதனை என அணிவகுத்து நிற்கிறது. அவளால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவளுக்கு வேறு வழியில்லையே! நீ ஏற்றுக்கொள்வாயோ, இல்லையோ நீதான் அனுபவித்ததாக வேண்டும்...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12 சந்திரன் பேசப் பேச, அதன் அர்த்தத்தை உள்வாங்கிய ரோகிணியது இதயம் சிறுசிறு துகள்களாய் சிதைந்ததைப் போன்று உணர்ந்தாள். ஏற்கனவே மூன்று நாட்கள் சரியாக உண்ணாதது, அழுதழுது சோர்ந்திருந்தது, தற்பொழுது கணவன் கூறிய செய்தியினால் அடைந்த அதிர்ச்சி என அவளை மொத்தமாக வலுவிழக்கச் செய்ய, கண்கள் இருள்வதைப் போன்று...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11 சந்திரனுக்கு ரோகிணி பேசியது எதுவும் புரியவில்லை. 'நான் என்ன கேக்கறேன். இவ என்ன பதில் சொல்லறா? சாப்பிட்ட மாதிரியும் தெரியலை, இப்படி பேசாம படுத்துட்டா' என குழம்பியவன், "ரோ, சாப்பிடாம தூங்கற?" என அவளது முகத்தை மறைத்திருந்த போர்வையைப் பார்த்துக் கேட்டான். ரோகிணிக்கு எரிச்சலாக இருந்தது. மிகவும்...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 10 இவ்வளவு கனமான சூழலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்களுக்குச் சந்திரன் தான் ரோகிணியின் கணவன் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும், அவள் பாவனையைப் பார்த்தால், இன்று தான் கணவனைப் பற்றித் தெரிந்து கொள்கிறாள் என்பது திண்ணம். அவளின் நிலையை எண்ணி அனைவரும் வருந்தினார்கள். ஆனால், ரோகிணியால் எப்படி தான் அதை...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09   சந்திரனை வேறொரு பெண்ணோடு பார்த்த ரோகிணியின் மனம் அவனை தவறாகவெல்லாம் நினைக்கவில்லை. 'என்ன இது, இந்த நேரத்தில் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காம இங்க இருக்காரு... இவருக்கு ஷாப்பிங் வர எல்லாம் நேரம் இருக்குமா? மனுஷனுக்குப் பொண்டாட்டியை விட பிரண்ட்ஸ் கூட இருக்கிறது தான் ரொம்ப பிடிக்கும் போல!' என்று...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 08 கர்வமான மனிதர்களிடம் நமது கர்வத்தை வெளிப்படுத்தலாம். அதில் தவறேதுமில்லை. ரோகிணிக்கும் கணவனின் அலட்சியமும், அவமதிப்பும், கேலியும் துளியும் பிடிக்கவில்லை. ‘இதெல்லாம் அவ்வளவு அத்தியாவசியமா?’ என்ற எண்ணம் வர, நிமிர்வும் வந்திருந்தது. அதே நிமிர்வோடு கர்வமாகப் புன்னகை செய்தாள். ஆனால் சந்திரனுக்கு ரோகிணியின் புன்னகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை போலும்....
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 07   ரோகிணி சிகாகோ வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. இந்த ஆறு மாதக் கணக்கு எல்லாம் புதுமண தம்பதிகள் வாழ்வில் எப்படி ஓடும், என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ரோகிணி கூட புதிதாய் மணமானவள் தான், அவளுக்கும் இந்த மாதங்கள் அனைத்தும் வேகமாக ஓடியிருக்க வேண்டும். ஆனால், இது...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 06   ரோகிணியின் வெகு நாளைய ஏக்கம், கணவன் நம்முடன் நேரம் ஒதுக்குவதில்லையே!’ என்பது. அவளே எதிர்பாராமல் அது நிவர்த்தியானது அவனுடைய அவ்வப்பொழுதான விடுமுறைகளில். ஆனால், உண்மையில் சந்திரனுக்கு வாரம் ஒருமுறை விடுப்பு இருக்கும். என்ன, அந்த நாளையும் நண்பர்களோடு அல்லது லுனாவோடு செலவழித்து விடுவான். சனிக்கிழமை இரவு மிகவும்...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05 சந்திரனுக்கு ரோகிணியை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அவளின் சிறுபிள்ளைத் தனமான செய்கைகளும், அவனைச் சார்ந்திருப்பது போன்ற தோற்றமும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் அறிந்த அனைவரும் தன்னிச்சையாய் செயல்படுபவர்கள். ஏன் அவனே இங்குத் தனியாக வந்து அனைத்தையும் கற்றுக் கொண்டவன் தானே! அவனை யார் வழி நடத்தினார்கள்?...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 04 ரோகிணிக்கு சந்திரனை மிகவும் பிடிக்கும். அவளுடைய தாயார் நீலவேணிக்கு அடுத்து அவளின் வாழ்வில் அதிமுக்கியமானவன் அவளுடைய ஆருயிர் கணவன் தான். ஆனால், அவனைப் பொறுத்தவரையில்? பெரும்பாலும் திருமணமான புதிதில் இருக்கும் ஈர்ப்பு தானே, அனைவரின் வாழ்விலும் பிணைப்பை உருவாக்கும் அடித்தளம். இங்கே அதுவே ஆட்டம் காணுகிறதே! ஒருவேளை...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 03 ரோகிணி சென்னையிலிருந்து லண்டன் வந்து அங்கிருந்து சிகாகோ வந்தடைந்தாள். 'சிகாகோ ஓ'ஹேர் விமான நிலையம்' வந்தடைவதற்குள் அமெரிக்கன் ஏர்லைன்ஸோடு இருபது மணி நேரங்களுக்கும் மேல் போராடி விட்டாள், அவளைப் பொறுத்த வரையிலும் அவளுக்கு அது மிகப்பெரிய சாதனை. பழக்கப்படாத நெடுநேர விமான பயணம் தந்த அலுப்பைத் தாண்டியும், கணவனைக்...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02 *** சில மாதங்களுக்கு முன்பு *** திருமணம் என்ற ஒற்றை சொல் ஓராயிரம் கனவுகளை உள்ளடக்கியது. காதல், அரவணைப்பு, பாதுகாப்பு, அக்கறை, மரியாதை எனப் பெண்களுக்கான திருமண கனவுகள் ஏராளம். ரோகிணிஸ்ரீயும் அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல. மனதில் பூட்டி வைத்த மொத்த காதலையும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளன் மீது...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி - 01 இனிமையான இசை அலாரமாக அடித்து, சந்திரனின் உறக்கத்தைக் கலைக்க முயற்சிக்க, ஏனோ அந்த இசை அவனின் செவிகளில் நாராசமாய் ஒலித்தது. அதற்காக அவன் விடியலை விரும்பாதவனோ, உறக்கத்தைத் தொலைத்தவனோ, சோம்பல் பேரரசனோ அல்ல. இருந்தும் அவனின் மனம் இந்த இசையின் சப்தத்தில் எழ முரண்டியது. மெல்லிய கொலுசொலிகளின் கீதத்திற்கு...
    error: Content is protected !!