அறியாமல் தொலைந்தேனே
ஞாயிறு அன்று ஏதோ விஷேஷம் என ஐஸக் கூட வரவில்லை. வீட்டில் யாரிடமும் பேசினால் உடைந்து போய் விடுவோமோ என்ற பயத்தில் அவர்களிடம் வெறும் ‘சாட்’ மட்டுமே செய்தான். சஞ்சய்க்கு என்னடா வாழ்க்கை இது என்பது போலாகி விட்டது.
மீரா வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. நாளை மறுநாள் அவளுக்கு வார விடுமுறை....
அறியாமல் தொலைந்தேனே -6
அத்தியாயம் -6
நடந்த நேர்காணலில் அப்படியொன்றும் பிரமாதமாக அவனது திறமையை காண்பித்திருக்கவில்லை சஞ்சய். ஆனால் சிபாரிசின் பெயரில் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது. ரித்தேஷ் அழைத்து வாழ்த்து சொல்ல, சஞ்சயிடம் மகிழ்ச்சியே இல்லை.
மீராவின் சம்பளத்தையே குறைவு என நினைத்தவன் அவளை விட குறைவான சம்பளம்தான் தனக்கு எனும் போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏதோ...
அவள் செல்லமாக முறைக்க, “நீதான் ஃபிரெண்ட்ஸ் மட்டும்தாங்கிறதுல ஸ்ட்ராங்கா இருக்கியே. எனக்கு ஊர் சுத்த கம்பெனிக்கு நல்ல கேர்ள் ஃபிரெண்ட் வேணும். இப்படி வெளில வந்தாதானே யாராவது நமக்கு சிக்குவாங்க” என தீவிர தொனியிலேயே சொன்னான்.
“பெங்காலி சரியா பேச தெரியல, அடுத்தவங்க பேசினாலும் புரியல, இந்த லட்சணத்துல பெங்காலி பொண்ணு கேர்ள் ஃபிரெண்ட்டா வேணுமா...
அடுத்த நாள் மீராவுடைய ஆதார், பான் புதிதாக பெற என்ன நடைமுறை என பார்த்து இணைய நிறுவனம் ஒன்றுக்கு சென்று அதை செய்தனர். புதிய அடையாள அட்டை எல்லாம் அவளது வீட்டு முகவரிக்குத்தான் செல்லும். கார்த்திகேயனிடம் யோசனை கேட்க, அஞ்சல் அலுவலகத்தில் அவருக்கு தெரிந்தவர் இருப்பதால் அவரிடம் வீட்டில் கொடுக்க வேண்டாம், தபால் வரும்...
அறியாமல் தொலைந்தேனே -5
அத்தியாயம் -5
சஞ்சயும் மீராவும் இரயில் நிலையத்தில் உள்ள காவல் அலுவலகத்துக்கு சென்றனர். இரவில் இருந்த காவலர் இல்லாமல் வேறு நபர்கள்தான் இருந்தனர். ஆனால் இவர்களை பற்றி அவர் ‘தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் இளம் காதல் ஜோடி’ என சொல்லியிருக்க, இன்னொரு முறை என்ன ஏது என சுவாரஷ்யத்துடன் விசாரித்தனர்.
நண்பர்கள் என்றுதான் இருவரும்...
தலையாட்டிக் கொண்டவள், “நீங்க எதுக்காக கொல்கத்தா வந்திருக்கீங்க?” என விசாரித்தாள்.
“உன்னை மாதிரியேதான், வேலை தேடி. இண்டர்வியூல செலக்ட் ஆகனும்” என்றான்.
“ஓ, உங்களுக்கு எப்போ இண்டர்வியூ?” எனக் கேட்டாள்.
“டேட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை” என சாதாரணமாக சொன்னான்.
“அப்புறம் ஏன் முன்னாடியே வந்திட்டீங்க?”
“வீட்ல சண்டை” என மட்டும் சொன்னான். அதற்கு மேல் அவளும் விசாரிக்கவில்லை. அவனாகவும் சொல்லவில்லை.
“என்...
“இன்னிக்கு உனக்கு சோதனை போதும்னு நினைக்கிறன், ப்ளீஸ் அதை வச்சிடு” என்றான் சஞ்சய்.
விரக்தியாக சிரித்தவள் இன்னொரு வாய் பருக போனாள்.
“ரிஸ்க் எடுக்காத. மறுபடியும் உனக்கு ஒத்துக்காம போனா அடுத்து ஹாஸ்பிடல்தான் போகணும்” என அவன் சொல்லவும் அவளுக்கும் சரியாக பட தேநீரை பருகவில்லை.
மீரா கேட்டுக் கொண்டதால் மீண்டுமொரு முறை அவர்கள் வந்த ரயில் நின்ற...
அறியாமல் தொலைந்தேனே -4
அத்தியாயம் -4
கைப்பை வேறெங்கும் விழுந்து கிடக்கிறதா என அந்தப் பக்கம் தேடிப் பார்த்து விட்டு எங்கேயும் தென்படாமல் போகவும், மீராவின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. தளர்ந்து போனவளாக அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
அம்மா மற்றும் அண்ணன் இருவரது கைப்பேசி எண்களை தவிர வேறு யாருடையதும் அவளுக்கு நினைவில் இல்லை. இவ்வளவு...
அவள் முறைக்க, “பின்ன என்ன, நைட் ஒரு மனுஷன் உயிரை பணயம் வச்சு உனக்கு மெடிசின் வாங்கி தந்திருக்கான். இன்னும் யாரோ எவனோன்னு தள்ளி தள்ளி போனா… என் ஹார்ட் புஸுன்னு ஆகுமா ஆகாதா?” எனக் கேட்டான்.
“குட் மார்னிங்!” முணு முணுத்தாள் மீரா.
சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தான். “நைட் வரை இதே ட்ரெயின்லதான் டிராவல்...
“என்னாச்சு உங்களுக்கு? கைல மெடிசின் இருந்தா போட்டுக்கலாமே” என்றான்.
தன்னுடைய நிலை இப்படியே தொடர்ந்தால் விரைவிலேயே கவலைக்கு இடமாகி விடுவோம் என்பதை உணர்ந்தவள் அவனை சங்கடமாக பார்த்தாள்.
“என்ன? இப்படி வச்ச கண் வாங்காம பார்த்தா என்னன்னு நினைக்கிறது நான்?” என அவன் கேட்ட கேள்வியில் அவனிடம் ஏதும் உதவி கேளாமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.
“ஐயைய… ரொம்ப...
அறியாமல் தொலைந்தேனே – 3
அத்தியாயம் -3
மீரா கொல்கத்தா சென்று கொண்டிருந்த ரயில் இன்னும் சென்னையை தாண்டியிருக்கவில்லை. ஒரு ஸ்டேஷனில் சில நிமிடங்கள் நின்றது. கண்கள் மூடி அமர்ந்திருந்த மீரா விழிகளை திறந்து பார்த்தாள். பயணிகள் சிலர் ஏறிக் கொண்டிருக்க, கைப்பையை இறுக பிடித்துக்கொண்டு மீண்டும் இமைகளை அடைத்துக் கொண்டாள்.
ரயில் மீண்டும் புறப்பட்டது.
“ம்மா… சும்மா சும்மா...
அறியாமல் தொலைந்தேனே -2
அத்தியாயம் -2
டியூஷன் முடித்து விட்டு வந்த கார்த்திகேயன் இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் சுபாவை அவர் எதிர்பார்க்கவில்லை. கலவரத்தோடு வந்து நின்றவரை உள்ளே அழைத்து வந்து அமர வைத்தார்.
சுபாவின் கையிலிருந்த டிபன் கேரியரை குழப்பமாக பார்த்தார் கார்த்திகேயன்.
“ஏதாவது சாக்கு சொல்லிட்டு வரணுங்களே… மேடம்தான் ஊர்ல...
“ரெண்டு நாள் டைம் இருக்குல்லடா, பார்த்துக்கலாம்” என சமாதானம் சொன்னான் சஞ்சய்.
சஞ்சய், ஹரிஷ் இரண்டு ஆண்களும் மேல் தட்டு வர்க்கத்தினரின் சாயலில் தெரிந்தார்கள். அவர்கள் பேச்சும் மீராவுக்கு கேட்கத்தான் செய்தது.
அதிலும் சஞ்சயின் தலை கொள்ளாத முடி, ட்ரிம் செய்த தாடி, முறுக்கிய மீசை, ஜிம்’மின் உபயோகத்தால் வளர்த்து வைத்திருக்கும் உடல் என பார்க்க அவளுக்கு...
அறியாமல் தொலைந்தேனே -1
அத்தியாயம் -1
நள்ளிரவு நேரம் சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த அந்த மருத்துவமனையின் காஷுவாலிடி பகுதிக்கு இரவுப் பணிக்காக வந்து சேர்ந்தாள் நர்ஸ் மீரா. வழக்கமாக வரும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்திருந்தாள்.
நூறு படுக்கைகள் கொண்ட சின்ன மருத்துவமனைதான். அருகிலேயே செவிலியர்களுக்கு என வீடு ஒன்று மருத்துவமனை நிர்வாகத்தின்...