Sugamaana Puthu Raagam
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 7
சம்யுக்தாவின் வீட்டில் இருந்து கிளம்பிய சிவாவிற்கும், பவித்ராவிற்கும் மனம் முழுக்க பார்க்க முடியாமல் போன பேரனிடத்தே தான் இருந்தது.
வீட்டிற்கு வந்தும் ஓயாமல் பவித்ரா அதைப்பற்றியே தான் பேசிக்கொண்டு இருந்தார்.
“என்னங்க இது? இவ்ளோ தூரம் முயற்சி பண்ணியும் சர்வாவைப் பார்க்க முடியலையே”
“எனக்கும் அதே வருத்தம் தான் பவி, எனக்கு அவனை...