Advertisement

சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 9
வீட்டிற்குள் நுழைந்த மகளைப் பார்த்த நித்யா நொடியில் பதட்டமடைந்து விட்டார்.
“ஏன்டி? என்னாச்சு? ஹாஸ்பிட்டல் போகலையா?” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தார்.
“போகனும்மா, மதியம்மா போய்க்கலாம்ன்னு வந்துட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அன்னையின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள் மானஷா.
“அப்புறம் ஏன் வீட்டுக்கு வந்த?”
“மைன்ட் சரியில்லை, அந்த கேஸை இன்னொரு டாக்டரை பார்க்கச் சொல்லிட்டேன்”
“என்னம்மா? என்னாச்சு? மானவ் ஏதாவது சொன்னானா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா தான்” என்றவள் மகளுடன் விளையாட்டு அறைக்குள் நுழைந்தாள்.
“அம்மா… மதியம் சாப்பாடு நானே கொண்டு போறேன், டிரைவர்ட்ட குடுத்துவிடாதிங்க”
“சரிம்மா” என்றவர், குழப்பம் மேலிட மற்ற வேலைகளைப் பார்க்கச் செல்ல, மனிஷா மகளுடன் விளையாட ஆரம்பித்தாள்.
அன்று மதியம் மீட்டிங் முடித்து வந்து அமர்ந்த மான்வித்தின் முகத்தில் வெற்றிக்களிப்பும், நிம்மதியும் ஒருங்கே சேர்ந்திருந்தது.
மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தீர்வுகளையும் கண்டுபிடித்து செயலாற்றிவிட்டிருந்தான்.
தவறுகள் நிகழ்ந்த இடங்கள், கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டிருந்தன.
கோர்ட்டையும், டையையும் கழட்டி வைத்தவன், கண்கள் மூடி ரிலாக்ஸாக உட்கார,
ரகு உள்ளே நுழைந்தார்.
“தம்பி, சூப்பர், கலக்கிட்டீங்க”
“என்ன அங்கிள் நீங்க, இதெல்லாம் பெரிய விஷயமா?”
“கண்டிப்பா, அப்பா கூட இந்தளவுக்கு மீட்டிங்க்ல பர்பார்ம் பண்ணி இருக்க மாட்டார், வேண்ணா பாருங்க, இந்த தடவை சேல்ஸ் அதிகமா இருக்கும், பிளஸ் பிராபிட் இருக்குமே ஒழிய லாஸ் இருக்காது”
“அங்கிள் நீங்க சொல்ற மாதிரி நடந்தா சந்தோசம் தான்”
“இன்னிக்கு மனிஷா முகத்தைப் பார்த்துட்டு போனீங்கள்ள அதான், மனிஷா ராசி வொர்க்கவுட் ஆகிடுச்சு”
“பார்டா… ரெண்டு நாளா கண்ணு முழிச்சு வேலை பார்த்தது நான், இதுல நிஷா எங்கிருந்து வந்தா?” என்று சிரித்துக்கொண்டே மானவ் கேட்டான்.
“இன்னிக்கு காலைல எவ்ளோ டென்சனா இருந்தீங்க? மீட்டிங் ஹால் நுழையும் போது அப்படியே சேஞ்ச் ஆகிட்டிங்க, எல்லாத்துக்கும் மனிஷா தான் காரணம்”
“அங்கிள் நீங்க நிஷா புராணம் பாடாம, பர்ஸ்ட் போயி சாப்பிடுங்க, அதுக்கு அப்புறம் நான் சொன்ன வொர்க்கெல்லாம் முடிச்சுடுங்க, மெமோ நீங்களே சைன் பண்ணி இஸயூ பண்ணிடுங்க, தென் எனக்கு லஞ்ச் வந்திடுச்சா?”
“இன்னும் இல்லை தம்பி, வீட்டுக்கு போன் பண்ணேன், நித்யா மேடம் எடுத்தாங்க, மனிஷாட்ட குடுத்து விடறேன்னு சொன்னாங்க”
“ஹாஸ்பிட்டல் போறேன்னு சொன்னா, கேஸ் இருக்குன்னா, இப்ப எப்படி வீட்ல? காலைல லேப் மெட்டீரியல்ஸ் வேற வருதுன்னு சொன்னா…”
“தெரியலை தம்பி… உங்க மீட்டிங்கை நினைச்சு டென்சனா இருந்து இருப்பாங்க, இந்நேரம் வந்துகிட்டு இருப்பாங்க, அதுக்குள்ள, இந்த பைலை பார்த்து சைன் பண்ணிட்டீங்கன்னா, ஆடிட்டருக்கு அனுப்பிடுவேன்”
“சரி குடுங்க, நீங்க சாப்பிட போங்க, நான் பார்த்துடறேன்” என்றவன் பைலை வாங்கிக்கொள்ள, ரகு வெளியேறிவிட்டார். 
“ஏன் நிஷா ஹாஸ்பிட்டல் போகல?” என்று சில நிமிடங்கள் குழம்பியவன், மனிஷாவுக்கே கால் செய்தான்.
டிரைவிங்கில் இருந்தவள், அவனது காலை அட்டென்ட் செய்து,
“நான் ரீச் ஆகிட்டேன், இன்னொரு பைவ் மினிட்ஸ், நீங்க ரெப்ரெஷ் ஆகிட்டு உட்காருங்க, வந்துடறேன்” என்று அவனை பேச விடாமல் அவளே பேசிவிட்டுக் காலை கட் செய்ய, 
மானவ் ரகு தந்த பைலை பார்வையிடத் தொடங்கினான்.
காரை அலுவலக வளாகத்தில் பார்க் செய்துவிட்டு இறங்கிய மனிஷா, அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தனுவை தூக்கிக்கொண்டு, அவளது கைப்பையை எடுத்துக்கொண்டு, அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள்.
எதிர்பட்ட பியூனிடம் கார் சாவியைத் தந்தவள், “கார்ல சாப்பாடும், பாப்பாவோட திங்க்ஸ் இருக்கற பேக்கும் இருக்கும், எடுத்துட்டு சார் ரூம்க்கு வந்துடுங்க” என்று சொல்ல, அவரும் சாவியை வாங்கிக்கொண்டு அவளது காரை நோக்கிச் சென்றார்.
அவள் லிப்ட்டில் ஏற, இரண்டாவது மாடியில் ரகுவும் அவளுடன் ஏறிக்கொண்டார்.
“அட வாம்மா, காலைல உங்களை பார்க்க முடியலை, மீட்டிங் வேலையா இருந்தேன், தனு… வாங்க… வாங்க…” என்று அவர் கை நீட்ட, 
குழந்தை உதட்டை பிதுக்கிக்கொண்டு மனிஷாவின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டது.
“என்னாச்சும்மா? அழுகையும் கோபமும்மா இருக்காங்க குட்டி பாஸ்”
“காலைல என் கூட வர்றேன்னு ஒரே அடம் அங்கிள், விட்டுட்டு வந்துட்டேன், இப்பையும் கூட வர்றேன்னு அடம், சரின்னு கூட்டிட்டு வந்தா, கார்ல இருந்து இறங்கவும் கோபம் வந்துடுச்சு”
“கார் ரைட்லையே இருக்கனுமா, குட்டி பாஸ்க்கு?”
“வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா அங்கிள்?”
“நல்லா இருக்காங்கம்மா” அவர்கள் பேசிக்கொண்டு இருக்கவே, ஐந்தாம் தளம் வந்துவிட,
லிப்டை விட்டு வெளியே வந்தவர்கள், அங்கிருந்த வராண்டாவில் நின்று பேச ஆரம்பித்தனர்.
“மீட்டிங் எப்படி போச்சு அங்கிள்?”
“உன் புருஷன் பின்னிட்டார்… சக்சஸ்”
“ரெண்டு நாளா நைட்டெல்லாம் தூங்கலை”
“நீ வந்துட்டு போற வரைக்கும் ஒரே டென்ஷன், டென்சன்ல தண்ணி கூட ஒழுங்கா குடிக்க முடியாம புரை ஏறி ரொம்ப கஷ்டப்பட்டார்”
“அச்சோ அப்புறம்?”
“நீ தான் நினைச்சு இருப்பேன்னு சொன்னேன், அப்புறம் தான் நின்னுச்சு” அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சாப்பாடு வந்துவிட,
“ஓகே அங்கிள், போறப்ப உங்களை மீட் பண்றேன், அவர் ஏற்கனவே கால் பண்ணிட்டார்”
“ஓகே ம்மா, என்கிட்டேயே ரெண்டு தடவை கேட்டுட்டார், கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவர்ட்ட பைலை வாங்கப் போனேன், களைச்சு போயிட்டார், சீக்கிரம் போங்க…” என்றவர் அவரது அறைக்குள் நுழைய, மனிஷா மானவ்வின் அறையை நோக்கிச் சென்றாள்.
பியூன் கதவைத் திறந்து உள்ளே வந்து உணவுக்கூடையை மானவின் டேபிளுக்கு அருகில் வைத்துவிட்டு வெளியேற, மனிஷா குழந்தையுடன் உள்ளே நுழைந்தாள்.
மானவ் உள்ளிருந்த அறையில் இருப்பதை உணர்ந்தவள், குழந்தையை கீழே இறக்கி விட முயற்சிக்க, குழந்தையோ அன்னையின் புடவையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்க மறுத்து அழ ஆரம்பித்து விட்டது.
மானவ் உள்ளிருந்த அறையில் இருந்து ரெப்ரெஷ் செய்து கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வர, குழந்தையின் அழு குரல் அவன் செவிகளைத் தீண்டியது. 
அந்த அறையை விட்டு வெளியே வந்து இருவரையும் கண்ட மானவ் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் இருவரையும் நோக்கி வந்தான்.
“தனு குட்டி, ஏன் செல்லம் அழறீங்க?” என்று மனிஷாவிடம் இருந்து குழந்தையை வாங்க முயற்சிக்க, 
அவளோ மனிஷாவை விட்டு இம்மியும் நகர மறுத்துவிட்டாள்.
“என்னாச்சு நிஷா? பேபிக்கு என்ன கோபம்?”
“நான் கிளம்பினதும் என் கூட வர்றேன்னு ஒரே அடம், சரின்னு கூட்டிட்டு வந்தேன், இங்க காரை விட்டு இறங்கினதுல இருந்து அடம், மறுபடியும் கார்ல ரைட் போகனுமாம்”
“தனு… நீ அப்பாட்ட வருவியாம், நான் உன்னை கார்ல கூட்டிட்டு போவேனாம்”
அவனுடைய வார்த்தைகளில், மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்த தனுவின் கண்கள் அழுகையில் சிவந்து வீங்கி இருந்தது.
“அச்சோ… என் செல்ல குட்டில்ல.. அழக்கூடாது…  பாருங்க என் பட்டு குட்டி கண்ணெல்லாம் எப்படி சிவந்து போயி இருக்கு, நீங்க அப்பாட்ட வாங்க, நாம ஜாலியா கார்ல சுத்தலாம்” என்று கை நீட்ட,
குழந்தை திரும்பி மனிஷாவைப் பார்த்தது.
“அப்பா கார்ல ரைட் கூட்டிட்டு போவாங்க… நான் இங்க தான் இருப்பேன்… உனக்கு ரைட் வேணும்ன்னா அப்பாட்ட போ… இல்லையா அம்மாட்ட இரு…” என்று அவளும் சொல்ல,
அடுத்த நொடி மானவிடம் தாவி இருந்தது.
அவன் குழந்தையை வாங்கி முத்தமிட்டுக் கொஞ்ச ஆரம்பிக்க, மனிஷா உணவை எடுத்துக்கொண்டு உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவள் அவனுக்கு தட்டில் உணவை எடுத்து வைக்க, மானவ் மகளுடன் உள்ளே நுழைந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”
“ம்ம். நீங்க உட்காருங்க” என்றவள், “தனு அம்மாட்ட வா”
“ம்ஹும்..” என்பதாய் குழந்தை தலையசைத்துவிட்டு மானவை இறுக்கிக் கட்டிக்கொண்டது.
“அப்பா சாப்பிட்டதும், நாம கார்ல போகலாம்”
“ம்ஹும்..” என்று தலையசைத்துவிட்டு,
மானவ்வின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனை இறுகக்கட்டிகொண்டது.
“அவ இப்போதைக்கு என்னை விட மாட்டா, பேசாம நீயே ஊட்டிவிடு” என்று கண்கள் மின்ன மானவ் சொல்ல,
“என்ன… நானா?” என்று அதிர்சியுடன் மனிஷா கேள்வி எழுப்பினாள்.
“பின்ன? இதுக்கு வேற யாரையாவதையா கூப்பிட முடியும்? நீ தான ஊட்டிவிடனும், எனக்குப் பயங்கர பசி, சீக்கிரம் ஊட்டிவிடு…”
வேறு வழியில்லாமல் அவளே ஊட்டி விட ஆரம்பிக்க, இருவரையும் கண்டு குழந்தைக்குப் பொறுமை பறக்க ஆரம்பித்தது.
பொறுமை குறைய குறைய அழுகை பெரிதாக ஆரம்பித்தது. அதனை சமாதானம் செய்யும் பொருட்டு மனிஷா கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“தனு இப்ப வெளிய பெரிய யானை வந்து அட்டகாசம் பண்ணுதாம், டோலக்பூர்ல இருந்து பீம் வந்து அந்த யானையை சங்கிலி போட்டு கட்டி வைச்சதுக்கு அப்புறம் தான் நாம வெளிய போக முடியும்”
“இப்ப போனா?”
“இப்ப போனா அந்த யானை நம்மல அதோட தும்பிக்கைலத் தூக்கி அப்படியே வீசிடும்”
“அச்சுச்சோ…”
“அப்பா சாப்பிட்டதும், நாம போகலாம்? சரியா?”
“பீம் கூட போத்தோ எடுக்காமா?”
“பீம் சண்டை போட்டு முடிச்சுட்டு பிரியா இருந்தா எடுக்கலாம்”
“ஐ… ஜாலி”
“நீ பிஸ்கட் சாப்பிடறியா?”
“வேணாம்…”
“சரி நீ என்ன பண்ணு, அப்பாவோட கைல இருக்கற வாட்சை கழட்டுவியாம், நாம எடுத்துட்டு போவோமாம்”
“ஏக்கு?”
“அப்பா கைல வாட்ச் இல்லைன்னா தாத்தா அப்பாவை அடிப்பாங்கள்ல”
“ப்பா பாவ்ம்”
“அப்பா நேத்து பாப்பா கூட விளையாடலைல்ல?
“ம்ம்”
“அதுக்கு பனிஷ்மென்ட்”
“ச்சேரி… பாப்பா கலட்டேன்”
அவள் வாட்சில் கவனமாக, மானவ் இருவரையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
இடையிடையில் தனு வாட்சைக் கழட்ட முடியாமல் அழ ஆரம்பிக்க, மனிஷா மீண்டும் பீம் கதையைச் சொல்லி சமாளித்துக்கொண்டே அவனுக்கு உணவை ஊட்டி முடித்திருந்தாள்.
பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்தவள், “சரி நாங்க கிளம்பறோம்” என்றவாறே பைகளை எடுத்துக்கொண்டு நகரப் போக,
“ஏய் இரு… இரு… இப்படியே எங்கப் போற?”
அவனுடைய பதட்டத்தில் அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
“பர்ஸ்ட் அதெல்லாத்தையும் கீழ வைச்சிட்டு அப்படியே உள்ள கண்ணாடில போயிப் பாரு”
அவள் குழம்பியவளாக, பைகளை கீழே வைத்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், நொடியில் பதறிப்போய் உடையைச் சரி செய்ய ஆரம்பித்தாள்.
“ப்ச் எப்ப இருந்து இப்படி இருக்கேன்னு தெரியலையே, எத்தனை பேரை கடந்து வந்தேன், போச்சு… என் மானமே போச்சு…” என்று கண்கள் கலங்க புலம்பிக்கொண்டே அவனுக்கு அருகில் வந்து தலையில் கைவைத்து அமர்ந்தவளைப் பார்த்தவன்,
அவளுடைய தோளில் கைபோட்டு அவன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, “ரிலாக்ஸ், நீ இந்த ரூம்க்குள்ள வர்ற வரைக்கும் நல்லாதான்  இருந்த”
“அப்படின்னா?”
“உன் பொண்ணு பார்த்த வேலை இது… நான் அவளை வாங்க முயற்சி பண்றப்ப அவ தான் கலைச்சு விட்டா”
“ஷ்.. பயந்தே போயிட்டேன்… சரி அவ கலைக்கும் போது பார்த்தீங்கள்ல, இதை முதல்லையே சொல்ல வேண்டியதுதானே”
“சைட்டடிக்க சான்ஸ் கிடைக்கிறதே என்னிக்காவது ஒரு நாளைக்கு, அதை விடச் சொல்றியா?”
அவனது பதிலில் முகம் மாறியவள், பதில் பேசாமல், பைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மவுனமாக வெளியேறினாள்.
அவள் பின்னாலேயே எழுந்து வந்த மானவ், இன்டர்காமில் ரகுவையும், அவனது செக்கரட்டரியையும் அழைத்தான்.
உள்ளே நுழைந்த செக்கரட்டரியிடம் வேலைகளைத் தந்தவன், ரகுவிடமும் சில விஷயங்களைப் பேசிவிட்டு மகளுடன் அவனது இருக்கையில் இருந்து எழுந்தான்.
“நாங்க கிளம்பறோம்” என்று மனிஷா எழுந்துகொள்ள,“மூனு பேரும் தான் கிளம்பறோம். வா போகலாம்”
“எனக்கு ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்கு”
“சரி…”
“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிடுங்க, நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்”
“நான் இப்ப வீட்டுக்கு போறேன்னு சொன்னேனா?”
“அப்புறம்?”
“உன் வொர்க்கை முடிச்சுட்டு, மூனு பேரும் இன்னிக்கு ஜாலியா ஊரை சுத்தப் போறோம்” 
“எனக்கு வேலை இருக்கு, நீங்க ரெண்டு பேரும் போங்க”
“இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வைச்சுக்காத, என்னைப்பத்தி உனக்குத் தெரியும், மூனு பேரும் இன்னிக்கு ஊர் சுத்தப் போறோம்” என்றவன்,
 “வா போகலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனது அறையில் இருந்த விளக்குகள், ஏசி முதலியவற்றை அணைத்துவிட்டு, கோட்டையும், டையையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற, மனிஷாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சென்றவன், “நிஷா உன் கார் கீ தா” என்று அவளது கார் கீயை வாங்கி அவளிடம் தந்தவன்,
“டிரைவர் மாதேஷை வரச்சொல்லி, நிஷா காரை வீட்ல விடச் சொல்லுங்க”
“ஓகே சார்”
“இப்ப வா போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு அவனது காரை நோக்கிச் சென்றான்.
“என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?”
“ஜாலியா ஊரை சுத்த கூட்டிக்கிட்டு போறது உனக்கு பனிஷ்மென்ட் மாதிரி இருக்கா?”
“திடீர்ன்னு என்ன? எல்லாத்தையும் ஒரே நாள்ல மாத்தறிங்க?”
“எல்லாமே மனசுக்குள்ள இருக்கு, வெளிய வர இவ்ளோ நாள் தேவைப்பட்டு இருக்கு”
“இப்ப மட்டும் வெளிய வர வேண்டிய தேவை என்ன? மாமா, அத்தை ஏதாவது சொன்னாங்களா?”
“அவங்க ஏதாவது சொன்னா, நானே உன்கிட்ட சொல்லி இருப்பேனே, ஏன் இப்படி மறைச்சு கூட்டிக்கிட்டு போறேன்”
“————————————————-“
“இங்க பாரு இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்காம, சந்தோசமா வா, எனக்குத் தெரிஞ்சு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், இன்னிக்குத்தான் நாம முதன் முதலா, நம்ம டெசிஷன்ல வெளிய போறோம், தயவு செய்து முகத்தை இப்படி வைச்சுக்காத”
“ப்பா… பீம் எங்க?”
“பீம் அந்த யானையை டோலக்பூர் கூட்டிகிட்டு போய்ட்டான்”
“அங்க எக்கு?”
“அங்க பெரிய பாரெஸ்ட் இருக்குல்ல, அதுல கூட மங்கள் சிங் இருப்பனே”
“ம்ம்…”
“அந்த காட்ல கொண்டு போயி விடப் போயிட்டான்”
“ச்சேரி”
முதலில் ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றவன், மனிஷா ஹாஸ்பிட்டலில் இருந்த சில வேலைகளை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்து, அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
கார் கடை வீதி பக்கம் செல்லாமல், ஊருக்கு வெளியே திசை மாறிச் செல்வதைப் பார்த்தவள்,
“இப்ப எங்க போறோம்?”
“நம்ம தீம் பார்க்குக்கு”
“இதே டிரெஸ்லையா?” என்று அவளுடைய புடவையை ஒரு முறை குனிந்து பார்த்துக்கொண்டாள்.
“இன்னிக்கு மெயின்டனன்ஸ் டே… கவலைப்படாம வா, உள்ள நாம தான் இருப்போம், லேடி ஆப்பரேட்டர் இருக்காங்க, அவங்களை கூப்பிட்டுக்குவோம்”
“சரி… டிரெஸ் சேஞ் பண்ண என்ன பண்ணுவீங்க?”
“சொல்றேன்” என்றவன், நித்யாவுக்கு கால் செய்தான், 
“அத்தை, நானும் நிஷாவும் தீம் பார்க் போறோம், நீங்க எங்க ரெண்டு பேருக்கும் டிரெஸ் எடுத்து வைங்க, நிஷா காரை டிரைவர் கொண்டு வந்து விடுவார், அவர்கிட்ட குடுத்துவிடுங்க, அவரை ஆட்டோ பிடிச்சு வரச்சொல்லுங்க”
“சரிப்பா” என்று போனை அணைத்தவர் உள்ளத்தில் மகிழ்ச்சி துளிர் விட ஆரம்பித்தது.
அதே போல் மாதேஷிடமும் சொல்லியவன், 
“இப்ப உன் பிராப்ளம் சால்வ்ட்டா?”
“ம்ம்”
இருவரும் புதுவித மனநிலையுடன் தீம் பார்க்கிற்கு செல்ல, இன்னொரு பக்கம், பேரக்குழந்தைகளைப் பார்த்த மகிழ்ச்சியில் சிவாவும் பவித்ராவும் வீடு திரும்பினர்.
“என்னங்க வீடே அமைதியா இருக்கு? பாப்பா தூங்கறாளா?”
“அப்படித்தான் இருக்கும்”
“உள்ளே நுழைந்தவர் சத்தமில்லாமல் பைகளை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, ஹாலுக்கு வர,
மாடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு நித்யா கீழே வந்தார்.
“என்ன நித்யா, பாப்பாவை தனியா விட்டுட்டு போயிட்ட?”
“பாப்பா எங்க இங்க இருக்கா?”
“வேற எங்க இருக்கா? மனிஷா கீது வெளிய கூட்டிக்கிட்டு போய்ட்டாளா? அவ கார் இருக்கு”
“இன்னிக்கு வீட்ல ஒரு அதிசயமே நடந்து இருக்கு”
“என்ன அதிசயம் நித்யா?”
“இன்னிக்கு காலைல மானவுக்கு சாப்பாடு கொண்டு போன மனிஷா ஹாஸ்பிட்டல் போகாம வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகிட்டா, என்னன்னு கேட்டா, ஒன்னுமில்லைன்னு சமாளிச்சுட்டா, மதியம் அவளே சாப்பாடு எடுத்துக்கிட்டு போனா, காலைலயே நம்ம குட்டி அவ கூட போறேன்னு அடம், மதியம் அதுக்கு மேல சரி அடம், அவ அழுகை தாங்காமல், அவளையும் கூட்டிக்கிட்டுப் போனா, போறப்ப ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்கு, முடிச்சிட்டு வர்றேன்னு சொன்னா, அப்புறம் மானவ் போன் பண்ணி, மூனு பேரும் தீம் பார்க் போறோம், டிரெஸ் குடுத்து விடுங்கன்னு சொன்னான். டிரைவர் வந்தார், குடுத்துவிட்டு இருக்கேன்”
“எப்படியோ ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா சரி, ஆமா காலைல சிசேரியன் இருக்குன்னு சொன்னா”
“வேற டாக்டரை மாத்திவிட்டுட்டா, அதை விடு நீங்க போன வேலை என்னாச்சு? ஏன் மதியம் சாப்பாடு உங்களுக்கு மட்டும் குடுத்துவிட சொன்ன?”
“நம்ம பேரன் இருக்கானே, ஒரே பிடிவாதம், உங்கண்ணனையும், என்னையும் சேர்த்தா கூட அவன் அளவுக்கு வர முடியாது”
“அப்படி என்ன பண்ணினான்?”
பவித்ரா நடந்ததை சொல்ல, 
“பேத்தி பேச ஆரம்பிச்சு இருக்காள்ல, போகப்போக பார்த்துக்கலாம்”
“இப்போதைக்கு அது தான் ஆறுதல்”
“போகப் போக சரி ஆகிடும் பவி…”
“எனக்கு இப்பக் கவலையே, சர்வாவை நினைச்சுத்தான், அவன் வீட்ல ஏதாவது சொல்லி, சம்யுக்தா யோசிக்க ஆரம்பிச்சா?”
“இங்க பாரு, என்னிக்கு இருந்தாலும், அவளுக்கு தெரிய வேண்டியது தானே, உனக்கு வயசாகிடுச்சு, தேவை இல்லாத டென்ஷனை கிளப்பி, உடம்பை கெடுத்துக்காதே”
“நித்யா, இன்னிக்கு மீட்டிங் நல்ல படியா போச்ச்சாம், உன் மருமகன் கலக்கிட்டானாம்”
“அண்ணா, உங்க பையன் வேற எப்படி இருப்பான்… ரகு சொன்னாரா? எனக்கு காலைல இருந்து அந்த டென்சன் ஒரு பக்கம், சரி மதியாம கேட்டுக்கலாம்ன்னு நினைச்சேன், மானவ் போன் பண்ணி தீம் பார்க் போறதை சொன்னதும், அதை கேட்க வேண்டாம்ன்னு விட்டுட்டேன்”
“ஆமாம்மா, ரகு தான் சொன்னான், கூடவே நான் கூட இத்தனை வருசத்துல இந்தளவுக்கு சிறப்பா மீட்டிங் நடத்தி, எல்லா தவறையும் சரி செஞ்சது இல்லையாம், ஆபிஸ் முழுக்க உன் மருமகன் மேல கண்ணு வைச்சு இருக்காங்களாம், சுத்தி போடச் சொல்லி சொன்னான்”
“இன்னிக்கு ரெண்டு பேரும் அவங்களா ஊர் சுத்த கிளம்பினதுக்கு, என் கண்ணே அதிகம், வந்ததும் அது தான் முதல் வேலை, சரி நீங்க போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, காபி தரேன்”
“நித்யா நீயும் கிளம்பு, இன்னிக்கு பாப்பா வேற இல்லை, நாம ரெண்டு பேரும் போயி வெள்ளிக்கிழமை பூஜைக்கு வேண்டிய பொருளெல்லாம் வாங்கிட்டு வந்துருவோம்”
“ஐயர் யாகத்துக்கு வேண்டிய மத்ததெல்லாம் வாங்கிட்டு வந்துடுவாரா?”
“ம்ம்.. அவரையே வாங்கிட்டு வரச் சொல்லிட்டேன், அப்புறம், மனிஷாக்கும், சம்யுக்தாவுக்கும் அன்னிக்கு வைச்சு குடுக்க புடவை எடுத்துடுவோம், தனுக்கும், ஜுவாலாக்கும் பட்டுப்பாவாடை எடுத்துடுவோம், சர்வாக்குத்தான் என்ன டிரெஸ் வாங்கறதுன்னு தெரியலை”
“உன் பையனுக்கு என்ன வாங்கப்போற?”
“அவனுக்கு வழக்கம் போல வேட்டி, சட்டை தான் சிவா”
“அதையே அவனுக்கும் வாங்கிடு”
“உங்க ஐடியா ஓகே, இப்ப சர்வா அப்பாக்கு என்ன வாங்கறது?”
“வேட்டி சட்டை தான்”
“சட்டை சைஸ்? சம்யுக்தாகிட்ட கேட்டா சொல்ல மாட்டா, வேண்டாம்ன்னு சொல்லுவா, சபைல வைச்சு குடுக்கும் போது மறுக்க முடியாதுல்ல”
“ஒன்னு பண்ணு, நீ மூனு பேருக்கும் வாங்கிடு, சர்வா அப்பாக்கு நாளைக்கு ஜுவாலாகிட்ட சைஸ் கேட்டு வாங்கிக்கலாம்”
“நீங்க சொல்றதும் சரி தான்”
“நித்யாக்கும் வாங்கிடுங்க”
“நீங்க சொல்லலைனாலும் வாங்கிடுவேன், பொண்ணுங்களுக்கு மட்டும் வாங்கலை”
“ஏன் பவி, அவங்களுக்கும் வாங்கிட்டு வந்துடு”
“பூஜை முடிச்சு தர்றது, பூஜைல கலந்துக்கறவங்களுக்கு மட்டும் தான் டிரெஸ், அவங்க தான் இன்னும் ரெண்டு வாரத்துல வந்துடுவாங்களே, வந்ததும் வாங்கித் தரலாம்”
“சரி கிளம்புங்க, தனு வந்தா, அவளைப் பார்க்கனும், உன் பையன் இன்னிக்குத்தான் அவனா ரெண்டு பேரையும் வெளில கூட்டிக்கிட்டு போயிருக்கான், அவங்க வந்ததும் தனுவை கீழ படுக்க வைச்சிக்கோங்க”
“ஆக மொத்தம் பையனும் அப்பாக்குத் தப்பாம பிறந்து இருக்கான், இந்த தீம் பார்க்கை விட்டா, உங்க பரம்பரைக்கே வேற எதுவும் தெரியாது போலியே”
“உன்னை எங்கேயும் நான் கூட்டிக்கிட்டு போனதில்ல? நீயே சொல்லு பார்க்கலாம்”
“அண்ணா… பவி… இப்ப ரெண்டு பேரும் ஒழுங்கா போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க… இல்லை நாளைக்கு உங்க கூட உங்க சின்ன பேத்தியையும் பேக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பி வைச்சிடுவேன், உங்க பேரப்பசங்க கூட இப்படி அடம் பண்ணாதுங்க”
“நல்ல பனிஷ்மென்ட்…” என்று சிவா சிரித்துக்கொண்டே அவரது அறைக்குச் சென்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், பெண்கள் இருவரும் கிளம்பி கடைவீதிக்குச் சென்றனர்.
அழகும், கம்பீரமும் ஒருங்கே அமைந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்து உறையூர் வெட்காளியம்மனின் சன்னதியில் அமர்ந்து மன நிம்மதியைத் தேடிக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.
காலையில் பிரித்வி கிளம்பியதும் கிளம்பி வீட்டிற்கு சென்றவள், மன நிம்மதி கிடைக்காமல் மாலையில் கிளம்பி கோவிலுக்கு வந்துவிட்டிருந்தாள்.
அம்பாளின் முகத்தில் தெரிந்த தேஜஸில், அவளின் மனக்குழப்பங்கள் மறைந்து மனதும், முகமும் தெளிவடைய ஆரம்பித்தது.
குழம்பிய மனதுடன் வந்தவள், தெளிந்த மனதுடன் புறப்பட எண்ணி எழுந்திருக்க முயற்சி செய்ய, அவளருகே பிரித்வி வந்து அமர்ந்து, அவள் கையைப் பற்றி அவளையும் அமர வைத்தான்.
“என்ன மேடம் சாமி கும்பிட்டாச்சா? என்ன வேண்டிக்கிட்ட?”
“என் புருஷன், என் குழந்தைங்க நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்” என்றவள் எழுந்திருக்க மீண்டும் முயற்சி செய்ய,
“ஷ்.. ஒழுங்கா உட்கார், கோவிலுன்னு பார்க்கிறேன், இல்லைன்னா என் மடில இழுத்து உட்கார வைச்சிருப்பேன்”
“என் பசங்க எனக்காக வெயிட் பண்ணுவாங்க, நான் போகனும், உங்க கதையெல்லாம் எனக்கு வேண்டாம், அது எனக்குத் தேவையும் இல்லை, தென் நானும் இது கோவில்ன்னு பார்க்கிறேன், இல்லன்னா இந்நேரம் என் கைதான் பேசிருக்கும், எல்லா நேரமும் அமைதியா இருப்பேன்னு நினைக்க வேண்டாம்”
“உன் கை பேசினாலும் எனக்கு சந்தோசம் தான்… காலைல நீ மூட் அப்செட் ஆனதைப் பார்த்ததுல இருந்து எனக்கு மனசே சரி இல்லை, பட் இப்ப, இங்க வந்து உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கும் மனசு கிளியர் ஆகிடுச்சு”
“இன்னும் ரெண்டு வாரம், அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி”
“எந்த கச்சேரியா இருந்தாலும், நான் பார்த்துப்பேன், நீ என்ன பண்ற, நீ எனக்கு சொன்ன அதே டூ வீக்ஸ் டைம்மை நான் உனக்குத் தர்றேன், அதுக்குள்ள நீ என் வீடு, சாரி நம்ம வீட்டுக்கு வரனும், இல்லை வர்ற”
“உன் வீட்டுக்கு நான் எதுக்கு வரனும்?”
“நீ தான சொன்ன, டூ வீக்ஸ்ல இங்க இருந்து கிளம்பறேன்னு, அதான் உனக்கு டிரீட் தரப் போறேன்”
“உலகமே அழிஞ்சு போனாலும் சரி, உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன்”
“நீ வருவ… நீ கண்டிப்பா வருவ, உன்னை வர வைப்பேன்…”
“உலகமே அழிஞ்சு, உன் வீட்ல வந்து நுழைஞ்சா நான் பிழைக்கலாம்ன்னு ஒரு சூழ்நிலை வந்தா கூட உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன்”
“நீ உறுதியா என் வீட்டுக்கு வருவ, உன்னை வர வைப்பேன்”
“என்னை வர வைக்கிற அளவுக்கு உங்கிட்ட என் வீக்கன்ஸ் பாயின்ட் எதுவும் இல்லை”
“இருக்கு… ஒன்னுக்கு ரெண்டு இருக்கு”
“——————————————–“
“புரியலையா? பாயின்ட் நம்பர் ஒன். சர்வேஷ்வர், பாயின்ட் நம்பர் டூ, ஜுவாலா”
“பசங்களை வைச்சு பிளாக் மெயிலா? முடிஞ்சா டிரை பண்ணி பாருங்க மிஸ்டர் பிரித்விராஜ்”
“என்கிட்டேயே சவாலா? இதுவரை என்கிட்டே சவால் விட்டு ஜெயிச்சவங்க யாருமே இல்லை”
“மே பீ பர்ஸ்ட் பெர்சன் நானா தான் இருப்பேன், வெயிட் பண்ணி பாருங்க”
“ஸ்வீட் சேலேஞ் மிசர்ஸ் சம்யுக்தா”
“ராஸ்கல்” என்று முணகிக்கொண்டே சம்யுக்தா அங்கிருந்து எழுந்து பிரகாரத்தை விட்டு வெளியேறினாள்.
அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்தவன், மெல்ல அருகில் இருந்த பிரசாதப் பையை எடுத்துக்கொண்டு பிரகாரத்தை விட்டு வெளியேறினான்.
அதே நேரம் மறந்துவிட்டிருந்த பிரசாதப் பையை எடுக்கத் திரும்பிய சம்யுக்தா அவனது கைகளில் பையைக் கண்டதும், மீண்டும் திரும்பி காரை நோக்கிச் சென்றாள்.
அவளது காரை நெருங்கியவன், திறந்திருந்த கண்ணாடியின் வழியே பையை அவளது மடியில் வைத்துவிட்டு, அதிலிருந்த தேங்காய் மூடியில் இருந்த திருநீரை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டான்.
“பசங்க பேர்ல அர்ச்சனை பண்ணி இருப்ப, எடுத்துட்டு போயி அவங்களுக்கு வைச்சுவிடு… பை…” என்று சொல்லிவிட்டு, அவனது காரை நோக்கிச் சென்றான்.
சம்யுக்தா புறப்பட, அவளது காரை அவன் பின் தொடர்ந்து சென்றான்.
அவளது கார் வீட்டிற்குள் நுழைந்து, அவள் அதிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்த பின்னரே அங்கிருந்து பிரித்வி அகன்றான்.
“சர்வா.. ஜுவா… ஹோம் வொர்க் முடிச்சாச்சா?”
“முடிசுட்டோம்மா…”
“குட்” என்று சொல்லிக்கொண்டே இருவருக்கும் அவள் திருநீறும், குங்குமமும் வைத்துவிட,
“மா… டுடே தட் கிரான்ட் பேரன்ட்ஸ் கால்ட் அஸ் செப்பரேட்லி”
“விட்ச் கிரான்ட் பேரெண்ட்ஸ்?”
“அவர் கரஸ்பாண்டேன்ட் அன்ட் ஹெர் ஹஸ்பென்ட்”
“அவங்க கிரான்ட்பேரெண்ட்ஸ் ன்னு உங்களுக்கு யார் சொன்னா?”
“தே ஒன்லி ஆஸ்க் அஸ் டூ கால் தெம் லைக் திஸ்”
“அவங்க சொன்னா நீங்க கூப்பிடுவீங்களா?”
“ஐ டோல்ட் தெம்ம்மா, ஆனா அவங்க கான்பிடென்ட்டா சொன்னாங்க, தென் அவங்க உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சும் இருக்கலாம் இல்லன்னா தெரியாமையும் இருக்கலாம்னு சொன்னாங்க”
“நீ ஒன்னு தமிழ்ல பேசு, இல்லை இங்க்லீஷ்ல பேசு, இப்படி கலந்து பேசாத”
“டன் ம்மா”
“வேற என்ன சொன்னாங்க?”
“தே என்குயரி எபவுட் அஸ், ம்மா ரியலி தே ஆர் அவர் கிரான்ட் பேரெண்ட்ஸ்?”
“தே ஆர் அவர் ரிலேஷன்ஸ் மே பீ, பட் வீ டோன்ட் ரெடி டூ கீப் எனி ரிலேஷன்ஷிப் வித் தெம்…”
“அம்மா அந்த பாட்டி இன்னிக்கு பிரேக் பாஸ்ட் கொண்டு வந்தாங்க” என்று இருவருக்கும் இடையில் ஜுவாலா ஆரம்பித்தாள்.
“ப்ரேக் பாஸ்ட்டா?”
“ஆமாம்மா… நல்லா இருந்துச்சு… ஊட்டி விடறேன்னு சொன்னாங்க, நாங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டோம்”
“சர்வா நீங்க சாப்பிட்டீங்களா?” என்று சம்யுக்தா கோபமும் அதிர்ச்சியும் கலந்து கேட்க,
“மாம், இட்ஸ் ஜஸ்ட் பார் சம் கர்ட்ஸி, பட் ஐ ஸ்டிரிக்ட்லி டோல்ட் தெம் தட் வித்தவுட் அவர் பேரெண்ட்ஸ் பெர்மிஷன் வீ போத் டோன்ட் லைக் டூ கீப் எனி ரிலேஷன்ஷிப் வித் தெம்”
“பைன்… ரெண்டு பேரும் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க, நமக்கும் அவங்களுக்கும் உறவு இருக்கு, பட் நாம அதை புதுப்பிக்க இங்க வரலை, ஜஸ்ட் அவங்களை பார்க்க வந்தோம், பார்த்துட்டோம், பட் எப்படியோ அவங்களுக்கும் உங்களை பத்தி தெரிஞ்சுடுச்சு, தட்ஸ் இட்… நாம இன்னும் ரெண்டு வாரத்துல இங்கிருந்து கிளம்பறோம், அதுக்கு அப்புறம் நாம இங்க வர்றது எப்பைன்னு நமக்குத் தெரியாது”
“புரியுதும்மா”
“குட்… தேவை இல்லாம அவங்க மனசில எந்த ஆசையையும் வளர்த்து விடாதிங்க, தென் எனக்கும், அப்பாக்கும் அவங்க நமக்கு ரிலேசன்னு தெரியும்ன்னு அவங்களுக்கு இதுவரைக்கும் தெரியாது, நீங்களும் எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்கக்கூடாது, புரியுதா?”
“ஓகே ம்மா”
“ஓகே, இப்ப இந்த விசயத்துக்கு அப்பா என்ன சொல்லப் போறார்ன்னு தெரியலை?”
“ஐ அல்ரெடி டோல்ட் ஹிம் ம்மா… ஹி ஆஸ்க் யூ டூ கால் ஹிம்”
“ஓகே ஐ வில் டாக் வித் ஹிம், நீங்க இனி அவங்ககிட்ட பேசக்கூடாது, புரியுதா?”
“ஸ்யூர் ம்மா”
சம்யுக்தா பவித்ரனுடன் போன் பேசச்செல்ல, இன்னொரு பக்கம் பரத், பவித்ராவும், நித்யாவும் உடையெடுத்துக்கொண்டு இருந்த அதே கடைக்குள் நுழைந்தார்.
“எனக்கு இந்த டிசைன் பிடிச்சு இருக்கு நித்யா”
“அதை விட இந்த மெரூன் நல்லா இருக்கு பவி”
“கரை ரொம்ப பெரிசு, இப்ப யாரு இப்படி கட்டறாங்க?”
“ஒன்னு பண்ணு, இந்த கிரீன் எடுத்துக்கலாம், ரெண்டு பேருக்கும் சூட் ஆகும், சேம் டைம் ஒரே மாதிரியும் இருக்கும்”
“சரி இதே எடுக்கலாம்”
“தம்பி அப்படியே எட்டு வயசு பொண்ணுக்கு ரெடி மேட் பட்டுப்பாவாடை காட்டுப்பா”
“அந்த பக்கம் வாங்கம்மா” என்று கடை ஊழியர் முன்னே செல்ல, இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
“ஏய் பவி அது சம்யுக்தா மாமனார் தானே”
“ஆமா நித்யா”
“அவர்கிட்ட பேசுவோமா?”
“வேண்டாம்…”
இருவரும் சென்று மற்றொரு பக்கத்தில் அமர,
அவர்களுக்கு நேர் பின் பக்கம் கடை நிறுவனருடன் பேசிக்கொண்டே பரத் வந்து நின்றார்.
“என்னப்பா? இந்த பக்கம்? என்ன விசேஷம்?”
“மருமகளுக்கு பர்சேஸ் பண்ணத்தான்”
“உன் பையன் எப்படி இருக்கான்? மருமக நல்லா இருக்காளா? பேரப்பசங்க எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க”
“எங்க மருமகளைக் காணலை?”
“மேடம் பிசி, அதான் என்னை அனுப்பி இருக்காங்க”
“சரி யாருக்கு டிரெஸ், உனக்கா? மகன் மருமகளுக்கா? ”
“எல்லாருக்குமே, மருமகளுக்கு சாரி, பேத்திக்கு பாவாடை சட்டை, மகனுக்கும், பேரனுக்கும் வேட்டி சட்டை”
“உனக்கு?”
“அது பையன் வரனும், நான் வாங்கினா சண்டைக்கு வந்திடுவான்”
“என்ன விசேஷம்? ஊருக்கு கொண்டு போகவா இல்லை யாருக்காவது பிறந்தநாளா?”
“ஊருக்கு போக, மருமக வந்து எடுப்பா, பிரைடே ஒரு பங்கசன், அதுக்கு கட்டிட்டு போக புது புடவை வாங்கனுமாம், அப்புறம் அவ பிறந்த நாளுக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு, இந்த முறை அவ பிறந்த நாளுக்கு பவுர்ணமி வருது, அதனால வழக்கம் போல ஸ்பெசல் சேரி ஆர்டர் தரச் சொல்லி இருக்கா, அது விஷயமாவும் வந்து இருக்கேன், எப்பவும் போல இந்த வருஷமும் அவ தர்ற டிசைன்ல வேணும்”
“பண்ணிக்கலாம், இந்த பவுர்ணமி இல்லாம அடுத்த பவுர்ணமி இல்லாம அதுக்கு அடுத்த பவுர்ணமி தான, இடைல இன்னும் ரெண்டு பவுர்ணமி இருக்கு”
“நாங்க இன்னும் இருபது நாள்ல ஊருக்கு கிளம்பறோம், டிக்கெட் வந்தாச்சு, அதுக்குள்ள வேணும்”
“வாங்கிக்கலாம், இல்லாட்டி எப்பவும் போல அனுப்பி வச்சிடறேன்”
“டிசைன் உனக்கு மெயில் பண்றேன் பார்த்துக்கோ, பையன் நேரடியா காஞ்சிபுரத்துல குடுக்கறேன்னு சொன்னானாம், மருமகளுக்கு இங்கத்தான் ராசி, கல்யாணப் புடவைல இருந்து எல்லாமே இங்க தானே வாங்கறா, அதான் பிடிவாதமா இங்கேயே தரச் சொல்லி அனுப்பி வைச்சிட்டா…”
“அதான் நாங்க போட்டோ அனுப்பின உடனே மருமக கிட்ட இருந்து ஆர்டர் வந்துடுமே… வொர்க்கர்ஸ் கூட கேட்பாங்க… இந்த மந்த் கனடா ஆர்டர் இருக்கான்னு?”
“அங்க மேடம் டிரடிஸ்னல் டிரெஸ் தான் பாலோ பண்ணுவாங்க, என் பையன் கைத்தறி புடவை கட்டச்சொல்லுவான், அவளுக்கு பட்டுன்னா இஷ்டம், அவன் சொன்னதுக்கு ஒரு நாளைக்கு கட்டுவா, அப்புறம் கேட்டா, பட்டுப்புடவையும் கைத்தறிப் புடவைன்னு அவன்கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசி காரியம் சாதிச்சுக்குவா, அங்க டெய்லி வியரே பட்டு சேரி தான்”
“சம்யுக்தா மாதிரி ஆளுங்களால தான் எங்க பிழைப்பே ஓடுது, உன் பையனை ஒரு டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கச் சொல்லு, சரியாகிடும்”
“இப்ப அவன் பார்க்கிற வேலைக்கே, என் மருமக அவனை வறுத்து எடுப்பா, இன்னும் புதுசுன்னு ஐடியா தந்தா, என்னை அடிக்காம விட மாட்டா” என்று பரத் சிரிக்க,
“சரி வா… முதல்ல உன் பையனுக்கு பார்க்கலாம்” என்று அவரும் சிரித்துக்கொண்டே பரத்தை அழைத்துச் சென்றார்.
“பவி, மானவ் பிறந்த நாளும், சம்யுக்தா பிறந்த நாளும் ஒரே நாள்” என்று போனை ஆராய்ந்து கொண்டிருந்த நித்யா சந்தோஷத்துடன் ஆர்பரிக்க,
பவியும் போனை வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.
“கடவுளே, அப்ப சம்யுக்தா என் பொண்ணா?”
“ஆமா பவி… சரி நீ இங்க பாப்பாக்கு எடு, நான் போயி உன் மருமகனோட சட்டை சைஸ் பார்த்துட்டு வரேன்”
“சரி” என்ற பவித்ரா மகிழ்ச்சியுடன் பேத்திகளுக்கு உடை எடுக்க,
நித்யா இன்னொரு பக்கத்தில் பரத் மூலமாக பவித்ரனின் சட்டை அளவை தெரிந்து கொண்டு அவனுக்கும், மானவுக்கும் உடை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
பரத் சம்யுக்தாவுக்கு மட்டுமில்லாமல் பவித்ராவுக்கும் சேர்த்தே புடவை எடுத்துக்கொண்டு, மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.
பவித்ராவும், நித்யாவும், அனைத்து உடைகளையும் இறுதியாக தேர்வு செய்து வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினர்.
 வீட்டிற்குள் நுழைந்த பவித்ரா, சிவாவைத் தேடி அவரது அலுவல் அறைக்குள் வேகமாக நுழைந்தார்.
“சிவா….”
“என்ன பவி? ஏன் இப்படி ஓடி வர்ற?”
“நம்ம குழந்தை யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்”
“சம்யுக்தா தானே”
“எப்படி சிவா? சரியா சொல்றீங்க?”
“இப்பத்தான் சம்யுக்தாவோட டேட் ஆப் பர்த் என் கைக்கு வந்துச்சு, சரி உனக்கு எப்படித் தெரியும்”
“இன்னிக்கு சம்யுக்தா மாமனார் அவ பிறந்த நாளுக்கு புடவை ஆர்டர் குடுக்க வந்தார், நம்ம நித்யா தான் அவர் பேசறதைக் கேட்டு, கண்டு பிடிச்சா”
“நீங்க அவரைப் பார்த்து பேசுனீங்களா?”
“இல்லை சிவா, நித்யா பேசுவோமான்னு கேட்டா, நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”
“சோ இப்ப சம்யுக்தா நம்ம பொண்ணு”
“ஆமா சிவா, டிக்கெட் வந்துடுச்சாம், இருபது நாள்ல கிளம்பிடுவாங்களாம், அதுக்குள்ள புடவை வேணும்ன்னு ஆர்டர் பண்ணி இருக்காங்க”
“விடு பேசிக்கலாம், இப்ப நம்ம ரெண்டு பொண்ணும் கல்யாணம் ஆகி அவங்க புகுந்த வீட்ல இருக்கறது இல்லையா?”
“அவளுக்கு இன்னும் நாலு புடவை சேர்த்து வாங்கி இருக்கேன், நாளைக்கு நகைக்கடைல போயி அவளுக்கு நகை வாங்கனும், என்ன நகை வைச்சு இருக்காளோ தெரியலை?”
“அதெல்லாம் அப்புறம், நீ குடுத்தா அவ வாங்கிக்குவாளா? ஒரு புடவை தந்து பாரு, அதை வாங்கிட்டா அதிசயம், முதல்ல நம்ம பொண்ணு நம்ம வீட்டுக்கு வரட்டும், அவளுக்கு வேண்டிய எல்லாமே வாங்கித்தருவோம், இப்ப நீ போயி பால் பாயாசம் வை, இன்னிக்கு எல்லாமே நல்லதா நடந்திருக்கு”
“சரிங்க” என்றவர் கிட்செனை நோக்கிச் செல்ல,
இன்னொரு பக்கம், 
“வருஷாவருஷம் லட்சக்கணக்கா பணம் செலவு பண்ணி பட்டுப்புடவை வாங்கறியே அதை ஒரு தடவைக்கு மேல கட்டி இருக்கியா?”
“என் புருஷன் வாங்கித்தர்றார், கட்டிக்கறேன், பிறந்த நாள் அன்னிக்கு பளிச்சுன்னு இருக்க வேண்டாமா, பார்ட்டி கிராண்டா இருக்கும் போது, நான் மட்டும் டல்லா இருந்தா நல்லா இருக்குமா? நீங்களும் என்னை மாதிரியே வாங்கிப் போடுங்க, யார் வேண்டாம்ன்னு சொன்னது?”
“எது? நானும் உன்னை மாதிரி? ரெண்டு பேரு பிறந்த நாளும் ஒரே நாள், ஒரே நேரம், என்ன இந்த உலகத்தோட ஒரு மூலைல நீ பிறந்த, இன்னொரு மூலைல நான் பிறந்ததேன். உன் புடவை ஜொலிப்புக்கு பக்கத்தில் என் டிரெஸ் எடுக்குமா? இல்லை என்னிக்காவது எடுத்திருக்கா? அதுவும் தள்ளி நிற்கறியா? என்னை பாதி மறைச்சு தான் நிற்ப, மீதியை என் பசங்க மறைச்சுக்குவாங்க, இதை விட டாப் மேட்டர் என்னன்னா, நீ பட்டுப்புடவை கட்ட, நான் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை தான் போட்டாகனும்…”
“அது தான் விதி… பிறந்த நாள் மட்டும் இல்லை, நம்ம இறந்த நாள், நேரம் எல்லாமே ஒட்டுக்காத்தான் இருக்கும், உங்களை ஒவ்வொரு ஜென்மத்திலேயும் நான் துரத்திக்கிட்டே வந்து, உங்ககிட்ட சேர்ந்திடுவேன்”
என்று சம்யுக்தா பவித்ரனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
ராகம் இசைக்கும்…

Advertisement