Advertisement

சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 11
“என் போன் மிஸ் பண்ணிட்டேன்… கொஞ்சம் எடுத்துத் தரீங்களா?” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டு அனைவரும் வாசலைப் பார்த்து அதிர்ந்தனர், மானவைத் தவிர.
கண்களில் நீர் வழிய, கையில் சிலம்பில்லாத கண்ணகியென, கோபத்தில் சிவந்த கண்களும், முகமுமாய் ரவுத்திரமாக சம்யுக்தா நின்று கொண்டு இருந்தாள். 
“சம்யுக்தா” என்று சொல்லிக்கொண்டே பவித்ரா அவளருகேச் செல்ல,
ஒற்றை விரல் நீட்டி அவரை நிற்குமாறு சைகை செய்தவள், “என்னோட போனை உங்க வீட்ல மிஸ் பண்ணிட்டேன் மேம், கொஞ்சம் எடுத்துக் குடுத்திங்கன்னா நல்லா இருக்கும்” என்று,
அவள் சொல்லச் சொல்ல அவளுடைய போன், “சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா” என்று பாட்டுப் பாடி அதன் இருப்பை, வீட்டினுள்ளே உறுதி செய்தது.
அந்த பாடலின் சத்தம் கேட்டு டைனிங் டேபிள் பக்கம் திரும்பிய மானவ், அங்கிருந்த அவளின் போனை வேகமாக எடுக்கச் சென்றான்.
“அம்மாடி உள்ள வாம்மா… எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்” என்று பவித்ரா அவளை அழைக்க, அவளோ சற்றும் இளகாமல் நின்று கொண்டு இருந்தாள்.
சம்யுக்தாவின் போனை எடுத்துக்கொண்டு வந்த மானவ் “இந்தா உன் போன்” என்று அவள் மீது தூக்கி எரிய, அது அவள் மேனியில் பட்டு, அவளது காலடியில் விழுந்தது.
அவனது செயலில் மேலும் கோபம் கொண்ட சம்யுக்தா,
“உன் வீட்டு வாசல்ல நிக்கிறேன்னு டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்ஸ், கிவ் ரெஸ்பக்ட் அண்ட் டேக் ரெஸ்பக்ட்” என்று மானவைப் பார்த்துச் சொல்ல,
“அடச்சீ… நீயெல்லாம் ஒரு பொம்பளை, என்னவோ உத்தமி மாதிரி சவுன்ட் விடற? நீயே ஒரு ஒழுக்கம் கெட்டவ, இதுல உனக்கு மரியாதை தந்து பேசனுமா? நேரத்துக்கு ஒருத்தன் கூட சுத்தற, லண்டன்ல அந்த ரிக்கி, இங்க அந்த பிரித்வி, இதுல புருசன்ன்னு ஒரு கேரக்டர்… ஆமா நீ எதுக்கு இங்க வந்த? எதுக்கு இப்ப கிளம்பற?… இதுல எதுக்காவது பதில் சொல்லுடி பார்க்கலாம்”
“நீ ரொம்ப ஓவரா பேசீட்ட…. தென் நீ சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு, நான் உனக்கு பதில் சொல்ல, நீ எனக்கு யாரு? என்னைப் பத்தி எனக்குத் தெரியும்… உன்கிட்ட நான் உத்தமியா இல்லையான்னு, புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை, தேவையும் எனக்கு இல்லை, அதே நேரம் ஒரு விஷயம் நியாபகம் வைச்சுக்கோ…. இதுக்கும் சேர்த்து, நீ நல்லா அனுபவிப்ப… என்னிக்கு இருந்தாலும், ஒரு நாளைக்கு நீ என் காலடில வந்து விழுவ… அன்னிக்கு இருக்கு உனக்கு…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய சம்யுக்தா, குனிந்து போனை எடுக்க முயற்சிக்க, 
அதற்குள், அவளது போனை மகள் எடுத்திருந்தாள்.
“நீ பெரிய இவ, இதுல நான் உன் கால்ல விழுவேன்ன்னு சவால் வேற, மனசுல கண்ணகின்னு நினைப்பா? உன்னை என் கால்ல விழ வைக்கிறேன்டி… எண்ணி பத்தே நாள்… பொறுத்திருந்து பார்…”
அவனுக்கு பதில் சொல்லாமல், 
“வா ஜுவா போகலாம்….” 
“ஒரு நிமிசம்மா…” என்றவள், பவித்ராவின் பக்கம் திரும்பி,
“மேம் நீங்க குடுத்த திங்க்ஸ் எல்லாம் வெளிய வைச்சிருக்கேன், எடுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு, மானவின் பக்கம் திரும்பி, “சார், நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் என்னிக்காவது ஒரு நாள், கண்டிப்பா என் அப்பா பதில் சொல்வாங்க… டோன்ட் பீ ஜட்ஜ்மேன்ட்டல்” என்று சொல்லிவிட்டு அன்னையின் கரம் பற்றி அவர்களது காருக்கு அழைத்துச் சென்றாள்.
துவண்டிருந்த சம்யுக்தா கூட மகளின் செயலில் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.
நடந்த சம்பவங்களில் அனைவரும் திக் பிரம்மை பிடித்து நிற்க, எதையும் கண்டு கண்டு கொள்ளாமல் மானவ் அவனது அறைக்குச் செல்ல மாடியேற,
“நில்லு”
“அப்பா… அவ பேச்சை பேசற மாதிரி இருந்தா ஐ டோன்ட் ரெடி டூ டாக் நவ்… ”
“நான் அவ பேச்சை பேசலை, இந்த வீட்டு விஷயம் பேச கூப்பிடறேன்”
“சொல்லுங்க”
“இந்த வீட்டை விட்டு வெளிய போ”
“அப்பா…” என்று அவன் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நிற்க,
“சம்யுக்தா என்னிக்கு இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கிறாளோ, அன்னிக்குத் தான் இந்த வீட்டுக்குள்ள உனக்கு இடம், அதுவரைக்கும் இந்த வீட்ல நீ காலடி எடுத்து வைக்க நான் அனுமதிக்க மாட்டேன், கூடவே எனக்கு விருப்பமும் இல்லை”
“யாரோ ஒருத்திக்காக என்னை வீட்டை விட்டு வெளியேற சொல்றீங்களா?”
“யாரோ ஒருத்திக்காக இல்லை… எங்க மகளுக்காக…. எங்க சொந்த ரத்தத்துக்காக…. இந்த வீட்ல அவளுக்கும் ஒரு பங்கு இருக்கு, எப்ப அவ இந்த வீட்ல காலடி எடுத்து வைக்க முடியாம போச்சோ… இனி அதுக்கு காரணமான உனக்கும் இங்க இடமில்லை…”
“என்னப்பா சொல்றீங்க? அம்மா என்னமா? அப்பா என்ன சொல்றாங்க?” என்று தந்தையின் கூற்றில் அதிர்ந்தவனாக அன்னையிடம் சென்று அவரை உலுக்க,
அதுவரை நிகழ்ந்த செயல்களில், சிலையென சமைந்து நின்ற பவித்ரா, அவனது உலுக்கலில் நிகழ்வுக்கு வந்தார்.
“உனக்கு விளக்கம் சொல்ற நிலைமைல நாங்க இல்லை, ஒன்னு தெரிஞ்சுக்கோ, அவ என் ரத்தம், எப்ப நீ அவளோட பெண்மையை கேவலப்படுத்தி பேசினியோ, அது என்னைப் பொறுத்த வரைக்கும், நீ அவளை பேசினது இல்லை, என்னை பேசியதுக்கு சமம்…. இனி என் முகத்துல விழிக்காத…” என்றவர் அவரது அறைக்குள் கண்ணீருடன் நுழைந்து கொள்ள,
“அப்பா…. இதென்னப்பா புது கதை… எப்படிப்பா….?” என்று அதிர்ச்சியுடனும், நம்ப முடியாமலும் மானவ் துவண்டு கீழே அமர,
“நித்யா… எங்களை புரிஞ்சுகிட்டு இருப்பன்னு நினைக்கிறேன், உன் மாப்பிள்ளையை நாளைக்கு காலைல நாங்க இந்த வீட்ல பார்க்க கூடாது… மனிஷா இங்க இருக்கறது மனிஷா விருப்பம்… நீ இங்க தான் இருக்கிற, இவனுக்கு மாமியார் ஆகறதுக்கு முன்னாடி, நீ எனக்கு தங்கை… புரிஞ்சுதா”
“நான் நீங்க போக சொன்னா கூட, இங்கதான் இருப்பேண்ணா… தனுவை விடறதும் கூட்டிப்போறதும் அவங்க விருப்பம்”
“மானவ், உன்கிட்ட இதுவரைக்கும் நான் எதுவும் கேட்டதில்லை, முதல் தடவையா கேட்கிறேன், சம்யுக்தா எங்க பொண்ணுன்னு அவளுக்கேத் தெரியாது, இன்னும் பத்து நாள்ல இங்க இருந்து கிளம்பப்போறா, அவ நிம்மதி கெடாம பார்த்துப்பேன்னு நினைக்கிறேன், தென் சம்யுக்தா இந்த வீட்டுக்குள்ள வர்ற வரைக்கும் உனக்கு இந்த வீட்ல அனுமதி இல்லை, நான் அபிசியலா மட்டும் தான் உன்கிட்ட இனி பேசுவேன்… புரிஞ்சுதா” என்றவர் மனைவியைக் காண அவரது அறைக்குள் நுழைய,
நித்யா எதுவுமே பேசாமல் பேத்தியைத் தூக்கிக்கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தார்.
மானவ் தான் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் சிலையென வீற்றிருந்தான்.
வேலையாட்கள் அவனை ஒரு மாதிரிப் பார்த்துக்கொண்டே, வெளியே ஜுவாலா வைத்துச் சென்ற பொருட்களைக் கொண்டு வந்து, ஹாலில் கிடந்த டீபாயில் வைத்துவிட்டு வெளியேறினர்.
இன்னொரு பக்கம், சம்யுக்தாவின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த பரத், காரில் இருந்து இறங்கிய அவளுடைய சோர்ந்த தோற்றத்தில் திகைத்துப்போய் நின்று விட்டார்.
“சம்யு… என்னம்மா… என்னாச்சு?”
“இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காதிங்க மாமா” என்றவள் அவளுடைய அறைக்குள் நுழைய,
ஜுவாலா நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள். கூடவே டிரைவரும் அவர் பங்குக்கு சொல்லி முடிக்க, பரத் கோபத்தின் உச்சிக்கேச் சென்றிருந்தார்.
கார் சத்தத்தில், அன்னையைக் காண வந்த சர்வேஷ் அனைத்தையும் கேட்டுவிட்டு, ஜுவாலாவின் கையில் இருந்த போனை வாங்கிக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தான். 
உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டவன், தந்தைக்கு அழைக்க முயற்சி செய்ய,
“யாருக்குண்ணா கால் பண்றீங்க?”
“அப்பாக்கு”
“அப்பாக்கு தெரியும்”
“யார் சொன்னது?”
“யாருமே சொல்லலை, அந்த சார் போனைத் தூக்கி போடும்போது டச் ஆகி கால் ஆனாகிடுச்சு, நான் தான் போன் எடுத்தேன், கார்ல வைச்சுத்தான் ஆப் பண்ணேன்”
அவள் சொல்லி முடிக்கவும், பவித்ரன் கால் அட்டென்ட் செய்யவும் சரியாக இருந்தது,
“சொல்லு சர்வா…”
“அப்பா ஹவ் யூ நொவ்? இட்ஸ் மீ, தோ இன் மாம் போன்…”
“அப்பா, இப்ப இம்பார்ட்டேன்ட் மீட்டிங்க்ல இருப்பேன்னு அம்மாக்கு தெரியும், அம்மா என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க… சோ ஐ நோ இட்ஸ் யூ”
“அப்பா வாட் அபவுட் நெக்ஸ்ட்… ஐ குடின்ட் சீ மாம் லைக் திஸ்…”
“ஐ வில் டேக் கேர்… நீ அம்மாக்குத் துணையா இரு…”
“அப்பா… அவங்களை விடவே கூடாதுப்பா… அந்த சார் அம்மா பேஸ்லையே போனை தூக்கி போட்டுட்டார், நல்ல வேளை அது அவங்க செஸ்ட்ல பட்டு கீழ விழுந்துடுச்சு”
“நீ தான் சொல்லிட்டு வந்திருக்கைல, அப்பா பதில் சொல்வாங்கன்னு, நான் சொல்லிக்கறேன்”
“ரிக்கி அங்கிளை கூட அவர் சொன்னார்ப்பா… அவரை எப்படிப்பா அந்த சார்க்கு தெரியும்…?”
“ஜுவா… அப்பா எல்லாத்தையும் பார்த்துக்கறேன்… நீங்க போயி அம்மாக்கூட இருங்க… தென் நாளைக்கு அந்த பாட்டி உனக்கு சாப்பாடு கொண்டு வந்தா, என்ன பண்ணனும்?”
“நான் சாப்பிட மாட்டேன்ப்பா… பேசக்கூட மாட்டேன்ப்பா…”
“வெயிட்… வெயிட்… வாட்ஸ் கோயிங் ஹியர்….”
“சர்வா… அப்பா சொன்னதை பாப்ஸ் செஞ்சா… சோ டோன்ட் ஆங்க்ரி வித் ஹர்…”
“ஓகேப்பா…”
“சோ இப்ப போயி அம்மாகிட்ட இருங்க, வீ வில் மீட் சூன்…”
“அப்பா மீட்டிங் என்ன ஆச்சு?”
“இட்ஸ் கேன்சல்ட்… டோன்ட் டெல் திஸ் டூ மாம்.. ஓகே”
“ஓகே ப்பா… பை… லவ் யூ…” என்று இருவரும் கோரஸாகச்சொல்ல,
“லவ் யூ டூ” என்று சொன்ன பவித்ரனும் காலை கட் செய்தான்.
வீட்டிற்கு வந்த மனிஷாவிற்கு நிகழந்த சம்பவங்களை நித்யாவின் வாயிலாக கேட்டு பெரும் அதிர்ச்சியே…
அந்த இரவு உறங்கா இரவாக அனைவருக்கும் நீடிக்க,
மறுநாள், எவ்வித தடங்கலும் இன்றி தானாக பொழுது புலர்ந்தது…
மானவுடன் வீட்டின் பின் பக்கம் உள்ள அவுட் அவுசிற்கு மாறிக்கொள்ள மனிஷா ஆயத்தம் செய்துகொண்டு இருந்தாள்.
நேரம் கழித்து கீழே வந்த மானவ், காபிக்காக காத்திருக்க,
பவித்ரா, சிவாவுடன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தார்.
“அம்மா காபி”
“நித்யா, மனிஷாட்ட சொல்லி, அவுட்டவுஸ்ல காபி போட சொல்லு” என்றவர், முன்தினம் வேலையாட்கள் எடுத்து வந்து வைத்திருந்த பொருட்களை, மீண்டும் எடுத்து பையில் அடுக்கிக்கொண்டு இருந்தார்.
அப்பொழுது அதில் பணமும், ஒரு சீட்டும் இருக்கக் கண்டவர், அதை எடுத்துப்பார்த்து அதிர்ந்து போய் சோபாவில் அமர்ந்துவிட்டார்.
அவரது அதிர்ச்சியைக் கண்ட சிவா, “என்னமா? என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே அவளருகே செல்ல, கையில் இருந்த சீட்டை அவரிடம் நீட்டினார்.
“மணி பார் யுவர் புட்… ஐ நோ இட்ஸ் வோர்த்லஸ் டு கால்குலேட், டியூ டூ புட் வித் யுவர் லவ், பட் இன் திஸ் சிச்சுவேஷன் ஐ ஹேவ் நோ ஆப்ஷன்… சாரி சார்… சாரி மேம்… தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்…” என்ற சீட்டுடன் புது இரண்டாயிரம் நோட்டுகள் ஐந்து பறந்து கொண்டு இருந்தது.
“எழுந்திரி… நேர்ல போயி பேசிக்கலாம்…” என்று சிவா கிளம்ப,
“அப்பா… ஒரு நிமிஷம்… எங்க போறீங்க?”
“அதை உன்கிட்ட சொல்லனும்ன்னு எங்களுக்கு அவசியம் இல்லை”
“அம்மா… மன்னிப்பு கேட்கற மாதிரி இருந்தா தயவு செஞ்சு அங்க போகாதிங்க… பிளீஸ்… அட்வைஸ் பண்ற மாதிரி இருந்தா போங்க…”
“போலாமா பவி…”
“அம்மா நானே என் கண்ணால பார்த்திருக்கேன்ம்மா… அவ லண்டன்ல அந்த ரிக்கி கூட சுத்துனத… பிளீஸ் ம்மா… புரிஞ்சுக்கோங்க…”
இருவரும் அவனது பேச்சைக் கேட்காமல் வெளியேற,
“உங்க திங்க்ஸ் ஏதாவது மறந்து வைச்சிட்டா பார்த்துட்டு எடுத்துட்டு வாங்க… டைம் ஆச்சு… நான் இன்னும் குக் பண்ணிட்டு கிளம்பனும்” என்று அவனருகே வந்து சொன்ன மனிஷா அவனது பதிலைக் கூடக் கேட்காமல் அவுட்டவுஸ் நோக்கி நடந்தாள்.
“மனிஷாம்மா…” என்று நித்யா அழைக்க,
“சொல்லும்மா….”
“எல்லா வேலைக்கும் மரகதத்தை பிக்ஸ் பண்ணி இருக்கு, நீ கிளம்பு, மரகதம் பார்த்துப்பா”
“சரிம்மா”
மானவ் வேறு வழி இல்லாமல், அவனது அறை நோக்கி நடந்தான். ஆனாலும் அவனது மனமோ சம்யுக்தாவை பழி வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டே இருந்தது.
ஒரே நாளில், அவனது வீட்டையும், பெற்றோரையும் விட்டு அன்னியப் படுத்தி இருந்த அவளின் மீது கட்டுக்கடங்கா கோபம் தலைவிரித்து ஆடியது.
சம்யுக்தாவைப் பழிவாங்கும் நோக்கில், அவளைப் பற்றிய தகவல்களை ஆதாரத்துடன் பெற்றோரிடம் நிரூபிக்கும் பொருட்டு, மானவ் லண்டனில் வசிக்கும், அவனுடைய நெருங்கிய நண்பனுக்கு அழைத்தான்.
வீட்டு வாயிலில், பள்ளியின் பேருந்துக்காக காத்திருந்த சர்வாவும், ஜுவாலாவும், வீட்டிற்குள் சிவாவின் கார் நுழைவதைப் பார்த்து எழுந்து நின்றனர்.
வீட்டு காம்பவுண்டில் நுழையும் போதே, சர்வாவைக் கண்ட பவித்ரா, காரை விட்டு கீழே இறங்கியதும் அவனை நோக்கித்தான் முதலில் சென்றார்.
அவனோ எவ்வித அலட்டலுமின்றி, “எஸ் வாட் யூ வான்ட்?” என்று நிதானமாக கேட்க,
“சர்வா… ஏன்ப்பா நேத்து வரல?”
“வை? பீ ஹேப்பி அபவுட் மை அப்சென்ஸ் தேர், எல்ஸ் எவரிதிங் டிபெனட்லி, வெண்ட் ராங்” என்றவன் பள்ளி பேருந்தின் ஹாரன் சத்தம் கேட்டு, பைகளை எடுத்துக் கொண்டு, “நோபடி இன் ஹோம், இப் எனிதிங் பிளீஸ் கால் கிரான்ட்ப்பா” என்று சொல்லிவிட்டு, பேருந்தை நோக்கிச் சென்றான்.
ஜுவாலா அவனது பின்னால் மவுனமாக நடந்தாள்.
இருவரும் பேருந்தில் ஏறுவதை, கண்களில் நீர் கசிய பார்த்துக்கொண்டிருந்த பவித்ராவின் தோளைத் தட்டி ஆறுதல் சொன்ன சிவா,
“வா உள்ள போகலாம்”
“யாரும் இல்லைன்னு சர்வா சொன்னானே”
“வேலையாள் இருந்தா விவரம் கேட்போம்”
“சரிங்க…”
இருவரும் வீட்டு வாயிலை அடைய, அங்கு ஒரு பணியாள் பெருக்கிக்கொண்டு இருந்தார்.
“அம்மா… பரத் இருக்காரா?”
“அண்ணா, எமர்ஜென்சி கேசுன்னு ஹாஸ்பிட்டல் போயிருக்கார் சார்”
“சம்யுக்தா?”
“பாப்பாக்கு உடம்பு சரியில்லைங்க சார்… ரெஸ்ட் எடுக்கறாங்க”
“உடம்பு சரியில்லையா? என்னாச்சு?”
“நேத்து நைட் முழுக்க தூங்காம கிடந்தா உடம்பு என்ன ஆகும்?”
“இப்ப எப்படி இருக்கும்மா?”
“பரவால்லம்மா…  அர்த்த ராத்திரிலேயே முடியாம அண்ணாவை எழுப்பிடிச்சு, அவர் எழுந்து செக் பண்ணி பார்த்துட்டு, நம்ம டாக்டரம்மாவை வரச் சொல்லி, இப்ப டிரிப்ஸ் இறங்குது”
“நாங்க பார்க்கலாமாம்மா?”
“அண்ணா வந்தா திட்டுவார்ம்மா… போகும் போதே சொல்லிட்டுத்தான் போனார், யார் வந்தாலும் விட வேண்டாம்ன்னு”
“நான் சொல்லிக்கறேன்… வந்ததே அவளைப் பார்க்கத்தான்… ஒரு பத்து நிமிஷம்மா”
“வாங்கம்மா…”  என்றவர் அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார், “நீங்க இங்க உட்காருங்க, நான் பாப்பாட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்” என்றவர்,  கீழே இருந்த கெஸ்ட் ரூமில் நுழைந்தார்.
அவர் உள்ளே செல்லும் போதே, சம்யுக்தா கையில் இருந்த டிரிப்ஸ்சைக் கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.
“என்ன பாப்பா? என்ன வேணும்? ஏன் கழட்டற?”
“வந்துட்டீங்களா? பசிக்கற மாதிரி இருந்துச்சு… உங்களைக் கூப்பிட்டேன்… நீங்க வரலை அதான் வெளிய இருப்பீங்கன்னு எழுந்தேன்… ”
“இரு பாப்பா, ஜுஸ் கொண்டு வரேன்…” என்றவர், கிட்செனுக்கு சென்று ஜுஸ் கொண்டு வந்தவர், ஹாலில் இருந்தவர்களிடம், “உங்க பேர் என்ன சார்?” என்று கேட்க,
“சிவாப்பா, பவித்ராம்மான்னு சொல்லுங்க”
“சரிங்க சார்” என்றவர், சம்யுக்தாவிடம் சென்றார்.
“இந்தா பாப்பா ஜுஸ்… உன்னை பார்க்க ரெண்டு பேர் வந்து இருக்காங்க”
“யாரு சித்தி?”
“சிவா, பவித்ரான்னு சொன்னாங்க”
“அவங்களா?”
“யாரு பாப்பா அது?”
“அப்புறம் சொல்றேன், அவங்களை வரச் சொல்லுங்க… எனக்கு அப்படியே கொஞ்சம் சாப்பிடற மாதிரி ஏதாவது குடுங்களேன்…”
“கொண்டு வரேன்ம்மா” என்றவர் அறையை விட்டு வெளியே வந்தார்”
“போயி பாருங்க சார்” என்றவர் கிட்ச்செனுக்குள் நுழைய,
இருவரும் சம்யுக்தாவின் அறைக்குள் நுழைந்தனர்.
இருவரையும் பார்த்தவள், “வாங்க சார்.. வாங்க மேடம்…”
“என்னம்மா இது… சார்.. மேடம்ன்னு சொல்ற…?”
“மேடம், எது சரியோ அதைத்தான் சொல்றேன்… என்ன விஷயமா வந்திருக்கீங்க?”
“நேத்து நடந்ததுக்கு மானவ் சார்பா மன்னிப்பு கேட்டுக்கறேன்ம்மா…”
“என்ன சார் நீங்க?… அவர் சார்பா நீங்க மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சா, எங்க வீட்ல இருக்கற ஒவ்வொருத்தர்க்கிட்டையும் கேட்கனும்… அதுவும் இல்லாம, நீங்க இதைப் பத்தி பேசறதா இருந்தா தயவு செய்து கிளம்புங்க…” என்றவள், 
“எனக்கு வீடு தேடி வந்தவங்களை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கும் பழக்கம் கிடையாது, அதான், இவ்ளோ நடந்தும் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்” என்றவள், சட்டென்று பேச்சை நிறுத்தி, வாயில் கை வைத்துக் கொண்டாள்.
“சித்தி…” என்று சத்தமாக அழைத்தவள், கைகளில் இருந்த டிரிப்ஸ்சைக் கழட்ட முயற்ச்சிக்க, அதற்க்குள் வயிற்றைப் பிரட்டி வாந்தி எடுக்க ஆரம்பித்து இருந்ததாள்.
சட்டென்று அவளைத் தாங்கிய பவித்ரா, அவளது தலையைத் தாங்கிகொள்ள, அவளது மேனியில் கிடந்த பெட்சீட்டை சிவா சரி செய்தார்.
அதற்குள் அங்கு வந்த அந்த பெண்மணி,
“பாப்பா..” என்று சொல்லிக்கொண்டே வந்து உதவி செய்ய ஆரம்பித்தார்.

Advertisement