Advertisement

சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 8
திங்கள் கிழமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர்.
காலை ஆறு மணிக்கே மான்வித் அலுவலகத்திற்குப் புறப்பட்டு நிற்க, சிவா எதுவும் பேசாமல் பேப்பரில் மட்டுமே கவனத்தைப் பதித்திருந்தார்.
அவன் அந்த நேரத்திலயே அதிசயமாக கிளம்பி நிற்பதைக் கண்ட பவித்ரா தான் கவலை மேலிட மகனிடம் வந்தார்.
“என்னடா? இப்பவே கிளம்பி நிக்கிற?”
“அதான் சொன்னேனே மா… இன்னிக்கு மீட்டிங் இருக்குன்னு”
“அதுக்கு இப்பவே போகனுமா?”
“எனக்கு இன்னும் கொஞ்சம் டீட்டெயில் ரெடி பண்ணனும்மா… அதெல்லாம் ரெடி பண்ண இப்பவே கிளம்பினாத்தான் சரியா இருக்கும்”
“சரிப்பா இந்தா காபி”
“எனக்கு டிரைவர்ட்ட பிரேக்பாஸ்ட் & லஞ்ச் குடுத்து விட்ருங்க, சீக்கிரமே குடுத்து விடுங்க, டைம் எப்படின்னு தெரியலை”
“சரிப்பா பத்திரம்”
“பை ம்மா…”
“பை ப்பா…”
“சரிப்பா… ஆல் தி பெஸ்ட்”
“தேங்க்ஸ் ப்பா”
அவன் கிளம்பியதும், இந்தப் பக்கம் பவித்ரா சிவாவைப் பிடித்துக்கொண்டார்.
“பாவம் பையன்… ரெண்டு நாளா எவ்ளோ கஷ்டப்படறான், நீங்க வீட்ல தான இருக்கீங்க, கொஞ்சமாச்சும் அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல… இப்படியே உட்கார்ந்து இருக்கீங்க, முதல்ல நீங்க கிளம்பி ஆபிஸ் போங்க.”
“இப்ப எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற?”
“அவன் எவ்ளோ வருத்தத்தோட போறான், நீங்களும் போய் இருக்கலாம்”
“அவன் இப்பத்தான் சரியான பாதைல போறான், அவனை அப்படியே விடு”
“என்னங்க சொல்றீங்க?”
“நான் நேத்து காலைல அவன் ரூம்க்கு போனப்ப, அவன் எடுத்து வைச்சு இருந்த டீட்டைல்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன், அவன் இப்பத்தான் தெளிவா யோசிக்க ஆரம்பிச்சு இருக்கான், இது வரை என்னோட நிழல்ல இருந்துட்டு, அவனோட சுயத்தை தொலைக்க ஆரம்பிச்சு இருந்திருக்கான்”
“அப்படின்னா…”
“என்னதான் நான் சொல்லிக்குடுத்தாலும், அவன் அவனோட ஸ்டைல்ல நிர்வாகம் பண்ணி இருக்கனும், ஆனா அவன் அவனோட ஸ்டைலை விட்டுட்டு என்னையே பாலோ பண்ணி இருக்கான். இனி அவனைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நீ ஆசைப்படற மாதிரி இனி நான் வீட்லையே இருப்பேன்”
“நீங்க சொல்ற மாதிரி நடந்தா எனக்கும் சந்தோஷம் தான்”
“மனிஷா எங்க?”
“இன்னும் கீழ வரலை, தூங்கிகிட்டு இருப்பான்னு நினைக்கிறேன், நைட் லேட்டா தான் வந்தா”
“அந்த லாவண்யா கேஸ் சம்பந்தப்பட்ட நியூஸ் பார்த்தாளோ என்னவோ? கொஞ்சம் அவளைப் பார்த்துக்கோ”
“இன்னிக்கு மேடம்க்கு ஒரு சிசேரியன் இருக்கு, நைட்டே சொல்லிட்டா, மார்னிங் பதினோரு மணிக்கு டைமாம், அலாரம் வைச்சு இருக்காளாம், ஒரு வேளை எழுந்துக்கலைன்னா என்னை அதிக பட்சம் எட்டு மணிக்குள்ள எழுப்பிவிடச் சொல்லி இருக்கா”
“சரிம்மா, நீ பிரேக் பாஸ்ட் முடிச்சுட்டு, ஸ்கூல்க்கு கிளம்பு, அப்புறம் அங்க பசங்களுக்கு லஞ்ச் ஸ்கூல்லையா? இல்லை வீட்ல இருந்து கொண்டு வர்றாங்களான்னு கால் பண்ணி விசாரி”
“அதெல்லாம் விசாரிச்சுட்டேன், ரெண்டு பேருக்கும் மார்னிங் ஹிந்தி கிளாஸ் இருக்கு, அதோட இல்லாம அதுக்கப்புறம் மெயின் லைப்ரரில தான் இருப்பாங்களாம். அதனால ஸ்கூல்ல தான் பிரேக்பாஸ்ட் அன்ட் லஞ்ச்”
“சரி, அவங்களுக்கு வீட்லையே ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வா, இனி ஸ்கூல்ல புட் வேண்டாம், டெய்லி இங்க இருந்தே கொண்டு போயிடலாம்.”
“அதெல்லாம் வித விதமா ரெடி ஆகுது, நீங்க முதல்ல கிளம்புங்க”
“ஒன்பது மணிக்கு ஸ்கூல்ல இருப்போம், அதுக்கு நான் கேரண்டி, நீ என்ன பண்ற, அன்னிக்கு பசங்க கேசரியை விரும்பி சாப்பிட்டாங்க, ரெண்டாவது தடவையும் போயி வாங்கிட்டு வந்தாங்க, நீ அதையும் செஞ்சுடு, அப்புறம் நீயே செய்… இனிப்பு அதிகமாகாம பார்த்துக்கோ, நெய் கொஞ்சம் நிறையா விடு… அப்புறம்..” என்று சிவா சொல்லிக்கொண்டே போக, அவரை இடை மறித்த பவித்ரா,
“பேசாம நீங்களே வந்து கேசரி கிண்டீடுங்களேன்! எனக்கு ஒரு வேலை மிச்சம், உங்களுக்கும் எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்கற ஒரு வேலை மிச்சம்” என்று கோபப்பட,
“இல்ல பவி, சும்மாத்தான்” என்று சமாளிக்கப்பார்த்தார் சிவா,
“என்ன சும்மா? என்னவோ நான் முதன் முதல்ல கேசரி கிண்டர மாதிரி என்ன ஒரு ஆர்ப்பாட்டம்? இன்னிக்கு முழுக்க உங்களுக்கு கேசரி இல்லை. அதான் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பனிஷ்மென்ட்”
“பவி… சும்மா சொல்லிட்டேன்… நீ செய்யற கேசரி மாதிரி இந்த உலகத்துல யாருமே செய்ய மாட்டங்க… ஐ நோ… பாசத்துல கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன், பிளீஸ்… செல்லம்ல…”
“மாமா…”
“குட் மார்னிங் மா”
“குட் மார்னிங்லாம் இருக்கட்டும், இன்னிக்கு என்ன அத்தைக்கிட்ட இவ்ளோ கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க?”
“கேசரி சாப்பிடனும் போல இருந்துது, அதுக்குத்தான் இந்த கெஞ்சல்”
“நீ வேற மனிஷா… சாப்பிட கேட்டு இந்த கெஞ்சல் இல்லை, உங்க மாமா எனக்கே கேசரி செய்ய சொல்லித்தந்தார். அதான் அவரையே சமைக்கச் சொல்லிட்டேன், நான் சொன்னதும் ஜகா வாங்கறார்”
“என்ன மாமா திடீர்ன்னு கேசரி? உங்களுக்குத்தான் அது பிடிக்காதே”
“அது ஒன்னும் இல்லைம்மா… நேத்து என் பிரன்ட் வீட்ல கேசரி செஞ்சாங்களாம், அதைப்பத்தி சொன்னான், நானும் அதையே நினைச்சேனா, அதான் செய்யச்சொன்னேன்”
“உங்க மாமாக்கு என்ன வேலை? நீ யோகா முடிச்சுட்டியா?”
“முடிச்சுட்டேன், குளிச்சுட்டேன், ரெடி ஆகிட்டேன், இனி ஹாஸ்பிட்டல் போகிற வரை பாப்பா கூட இருக்கப்போறேன்”
“சரி… முதல்ல நீ காபி குடி, பாப்பா எழுந்துடுவா, குடிச்சுட்டு, அவளுக்கு பாலை கலக்கு…”
“டன்…”
“நீங்க என்ன பண்றீங்க?” என்று மனிஷாவிடம் முடித்து சிவாவிடம் ஆரம்பித்தார்.
“ரெண்டு பேருக்கும் வெளிய கொஞ்சம் வேலை இருக்குல்ல, அதுக்கு ரெடி ஆகப்போறேன்”
“அதெல்லாம் அப்புறம், முதல்ல வந்து எனக்கு காய் நறுக்கிக் குடுங்க”
“இதுக்கு நான் என் பையன் கூடவே போயிருக்கலாமோ?”
“இப்பையும் ஒன்னும் கெட்டு போகலை… கிளம்புங்க, என்ன, நீங்க எப்ப காய் நறுக்கித் தர்றீங்களோ அன்னிக்குத்தான் வீட்ல சாப்பாடு”
“அம்மா தெய்வமே, கொண்டா எல்லா காயையும் நானே நறுக்கித் தர்றேன்”
இவர்களது கலாட்டாவைக் கண்டு மனிஷா சிரித்துக்கொண்டே காபி குடிக்க, அவளுக்கு புரையேறி இரும்பத்தொடங்கினாள்.
“பார்த்தும்மா… பார்த்து” என்று பவித்ரா அவளது தலையைத் தட்ட,
“என் பையன் உன்னை நினைக்கிறான் போல” என்று சொல்லிக்கொண்டே சிவா டைனிங் டேபிளை நோக்கி காய் நறுக்கச் சென்றார்.
மனிஷாவின் எண்ணம் தானாக மானவ் பக்கம் நகர, புரையேறுவது தானாக நின்றது.
“சொன்னேனா… என் பையன் தான் உன்னை நினைச்சு இருக்கான். அதான் அவனை சொன்னதும் நின்றுடுச்சு” என்று சொல்லிக்கொண்டே சிவா காய் நறுக்கிக்கொண்டு இருந்தார்.
அதே நேரம் இன்னொரு பக்கம், 
“பார்த்தீங்களா தம்பி… மனிஷா தான் உங்களை நினைச்சு இருக்கு, அதோட பேரை சொன்னதும் புரை ஏறினது நின்றுடுச்சு” என்று ரகு சொல்லிக்கொண்டே, கையில் இருந்த கோப்புகளுடன் அறையை விட்டு வெளியேறினார்.
கோப்புகளை ஆராய்ந்து கொண்டே, தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தவனுக்கு புரையேறிவிட, அருகில் இருந்த ரகு பதறிப்போய் அவனது தலையைத் தட்டினார்.
“மனிஷா தான் நினைக்கும் போல தம்பி, ரெண்டு நாளா ஊர்ல இல்லை, இன்னிக்கும் நீங்க இங்க காலைலயே வந்துட்டீங்க, எழுந்திரிச்சதும் நீங்க இல்லைன்னு, உங்களைப் பார்க்க முடியலையேன்னு நினைச்சிருக்கும்” என்று சொல்ல,
மானவின் மனம் மனிஷாவைச் சுற்றி வர ஆரம்பித்தது. அதே நேரம் புரை ஏறியதும் தானாக நின்றிருந்தது.
மீண்டும் அதை நியாபகப்படுத்தும் விதமாக ரகு சொல்லிவிட்டுச் செல்ல மானவ்வின் கண்கள் அவனது செல்லின் முகப்பில் இருந்த மனிஷாவின் படத்தைப் பார்க்க ஆரம்பிக்க, விரல்கள் அவளது முகத்தில் கோலமிட ஆரம்பித்தது.
“நீ என்னை மிஸ் பண்றியா?” என்று அவனது இதழ்கள் அவளுடைய பிம்பத்திடம் கேள்வி கேட்டது.
இன்னொரு பக்கம் பள்ளி பேருந்துக்கு கிளம்பி நின்ற பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் வந்தமர்ந்த சம்யுக்தாவையும், குழந்தைகளையும் கண்ட பரத்,
“கிளம்பியாச்சா?”
“கிளம்பிட்டோம் தாத்தா”
“சர்வா, ஜுவா இன்னிக்கு மே பீ உங்க கரஸ்பாண்டன்ட் மேடம் உங்களை மீட் பண்ண வரலாம்”
“எதுக்கு தாத்தா” என்று இருவரும் கோரசாய் கேட்க,
“சம்திங் பர்சனல்”
“யாருக்கும் யாருக்கும் பர்சனல்?”
“உங்களுக்கும், உங்க கரஸ்பாண்டன்ட் மேடம்க்கும்”
“எங்களுக்கு இடைல என்ன பர்சனல்?”
“இனிமே இருக்கலாம்”
“புரியலை தாத்தா”
“சர்வா, ஜுவா இன்னிக்கு மே பீ தாத்தா சொல்ற மாதிரி, அவங்க உங்களை மீட் பண்ணா, கர்டசிக்கு விஷ் பண்ணிட்டு வந்துடுங்க, தேவையில்லாம எதுவும் பேச வேண்டாம், தென் அடிக்கடி மீட் பண்றதையும் அவாய்ட் பண்ணிடுங்க”
“நீங்க ரெண்டு பேரும் சொல்றது எங்களுக்கு புரியவே இல்லை, யூ போத் ஆர் கன்பியூசிங் அஸ் ம்மா”
“இது பெரியவங்க சம்பந்தப்பட்ட விஷயம் பசங்களா. இதுல நீங்க ஜாக்கிரதையா இருங்க, என்னோட, அப்பாவோட அனுமதி இல்லாம எதையும் யார்கிட்டையும் டிஸ்கஸ் பண்ணக்கூடாது”
“ஓகே மாம்… சோ வீ நீட் டூ கீப் டிஸ்டன்ஸ் வித் தெம்”
“அப்கோர்ஸ்”
“வீ வில் மா”
“சொன்னது நியாபகம் இருக்கட்டும், டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுங்க, இன்னும் டூ வீக்ஸ் தான், வீ வில் கோ பேக் ஆப்டர் தட்”
வீட்டின் முன் வந்து நின்ற பஸ் ஹார்ன் ஒலி எழுப்ப,
“பை ம்மா… பை தாத்தா” என்று இருவரும் கோரஸாக சொல்லிவிட்டு, இருவருக்கும் முத்தமிட்டுவிட்டு பேருந்தை நோக்கிப் பறந்தனர்.
இங்கு சிவாவின் இல்லத்தில்,
“மனிஷா நீ எப்ப ஹாஸ்பிட்டல் போகனும்?”
“நான் கிளம்பிட்டேன் அத்தை, இப்பதான் கால் பண்ணாங்க, இன்னிக்கு லேப்க்கு புது மிசின்ஸ் வருது, சீக்கிரம் போனா, இன்ஸ்ட்ரக்க்ஷன் குடுத்துட்டு நான் தியேட்டர் போயிடுவேன்”
“சரிம்மா போறப்ப, மானவ்க்கு பிரேக்பாஸ்ட் குடுத்துட்டு போயிடு, நானும் மாமாவும் வெளிய வேலையா போறோம்”
“சரிங்கத்தை”
“நித்யாட்ட லஞ்ச் பார்த்துக்க சொல்லிருக்கேன், இங்க இருந்து டிரைவர்ட்ட ஆபிஸுக்கே லஞ்ச் குடுத்துவிட சொல்லிட்டேன், நீ ஆபிஸ் போயிட்டு, அங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கோங்க, அவன் மீட்டிங் மீட்டிங்க்ன்னு ஒழுங்கா சாப்பிடாம இருப்பான், இங்கேயே ரெண்டு நாளா நான் தான் ஊட்டிவிட்டேன், நீ அவனை சாப்பிட வைச்சிட்டு கிளம்பு.”
“சரிங்கத்தை. நான் பார்த்துக்கறேன். நீங்க டென்ஷன் ஆகாதிங்க”
“சரிம்மா… சிவா கிளம்பிட்டீங்களா?”
“கிளம்பிட்டேன்ம்மா”
“பை ம்மா”
அவர்கள் இருவரும் விடை பெற, மனிஷா உணவருந்தி முடித்துவிட்டு, மானவுக்கு காலை உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி கிளம்பினாள்.
அங்கு மானவ்வோ அனைத்து வேலைகளுக்கு மத்தியிலும் அவ்வப்போது செல்லில் மனிஷாவின் படத்தைப் பார்ப்பதையும் ஒரு வேலையாகச் செய்து கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்து, ஓய்வாக அமர்ந்தவன், அவனது லேப்டாப்பில் ஸ்க்ரீன் சேவராக வைத்திருக்கும் மனிஷா மற்றும் தனுவின் புகைப்படத்தொகுப்பை ஓட விட்டுப் பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்தான்.
அவன் அதில் லயித்திருக்கும் போதே, வெளியே அறைக்கதவு தட்டப்பட,
“எஸ் கமின்” என்று சொல்லி நிமிர்ந்தவனின் கண்கள் கதவைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்ததும், தானாக அவனது முகத்தில் புன்னகை மிளிர ஆரம்பித்தது.
எளிய சாட்டின் புடவையில், மிதமான ஒப்பனையில் இருந்த மனிஷாவை அவன் கண்கள் உரிமையுடன் ரசிக்க, அவளோ அவனது முக மாற்றத்தையும், அவனது பார்வையையும் கண்டு ஒரு நொடி உள்ளம் அதிர்ந்து போனாள், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், பேச்சை திசை திருப்பி,
“பிரேக் பாஸ்ட் கொண்டு வந்தேன். வாங்க சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனது அறைக்குள் இருந்த சிறு அறையை நோக்கிச் சென்றாள்.
அவனும் புன்னகையுடன், இன்டர்காமில் அழைத்து, விவரம் சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைந்தான்.
அங்கிருந்த சிறு டைனிங் டேபிளில், தட்டும், டிபன் பாக்ஸையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவளைப் பார்த்துக்கொண்டே, சர்ட்டை முழங்கை வரை மடித்துவிட்டு, அங்கிருந்த வாஸ்பேசனில் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தான்.
“இன்னிக்கு என்ன இவ்ளோ ஸ்பெஷல்?” என்று அவள் கடை பரப்பி இருந்த உணவு வகைகளைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“தெரியலை… மாமா செய்யச்சொல்லி சொன்னாராம்”
“நீ சாப்பிட்டியா?”
“ம்ம்… சாப்பிட்டுட்டேன்…”
“பாப்பா என்ன பண்றா?”
“நான் கிளம்பறப்ப ஒரே அடம், காரைப் பார்த்துட்டு, ஈவ்னிங் ரைட் கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்”
மானவ் சாப்பிட்டாலும், அவன் கண்கள், அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து பரிமாறிக்கொண்டு இருந்த மனிஷாவின் மீதே நிலைத்திருந்தது.
எதேச்சையாக அவன் முகம் கண்டவள், அவன் கண்கள் தன்னையே மொய்ப்பதைக் கண்டு உள்ளம் பதறியவளாக, அவன் முகத்தைப் பார்க்க முடியாமல், தன் முகத்தை திருப்பிக்கொண்டு அருகில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“என்னாச்சு இவனுக்கு? எப்பயும் போல தான் சாப்பாடு கொண்டு வந்தேன், இன்னிக்கு என்ன? இப்படி பார்த்து வைக்கிறான். காலைல கூட முகத்தை திருப்பிக்கிட்டு போனான். அதுக்குள்ள அப்படி என்ன அதிசயம் நடந்திருக்கும்?” என்று மனதிற்குள் அவள் குழம்பிக்கிடக்க,
“இன்னும் கொஞ்சம் கேசரி கிடைக்குமா? இல்லை அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு போக ஐடியாவா?” என்ற அவன் குரலில், அவன் பக்கம் திரும்பியவள், அவனது தட்டில் கேசரியை எடுத்து வைத்தாள்.
அவன் சாப்பிட்டு முடித்ததும், பாத்திரங்களை அவள் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க, அவன் கை கழுவிவிட்டு வந்து அதே நாற்காலியில் அமர்ந்தான்.
“அந்த பிளாஸ்கில் காபி இருக்கும், எடு குடிக்கலாம்” என்றவன் அவன் பக்கமாக இருந்த கப் இரண்டை எடுத்து வைக்க, அவளும் பிளாஸ்க்கை எடுத்து அதில் இருந்த காபியை அங்கிருந்த கப்பில் ஊற்ற ஆரம்பித்தாள்.
அதே நேரம் அவளுடைய போன் அடிக்க,
அதை அட்டென்ட் செய்தவள்,
“சொல்லுங்க மாமா..”
“எங்கம்மா இருக்கற?”
“இங்க ஆபிஸ்ல, உங்க பையனுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்”
“சரிம்மா… லேப்க்கு மெசின் வந்துடுச்சு, அதான் கேட்டேன், உனக்கு டிரை பண்ணி இருக்காங்க, நாட் ரீச்சபிள்ன்னு வந்துச்சாம்”
“இதோ காபி குடிச்சுக்கிட்டு இருக்கேன், குடிச்சதும் கிளம்பிடுவேன்”
“நான் சொல்லிட்டேன்ம்மா… சரி இன்னிக்கு என்ன ரெண்டு காபி? அவ்ளோ சீக்கிரம் குடிக்க மாட்டியே?”
“என்ன? ரெண்டு காபியா? காலைல நீங்க ரெண்டு பேரும் என்னை ஒழுங்கா காபி குடிக்க விட்டீங்களா?”
“நாங்க என்னம்மா பண்ணோம்?”
“நீங்க ரெண்டு பேரும் பார்த்த வேலைல, எனக்கு புரை ஏறி கடைசில காபியே குடிக்கல”
“உன் புருஷன் உன்னை நினைச்சதுக்கு, நாங்க என்ன பண்ணுவோம் மனிஷா”
“அவர் சொன்னாரா? என்னை நினைச்சேன்னு… உடனே அவர் மேல பழி போட்டுடுவீங்களே…”
“அவன் பேரை சொன்னதும் நான் உனக்கு சரியாச்சு மறந்திடாத… சரி சரி… நம்ம சண்டைய ஈவ்னிங் வைச்சுக்குவோம், நான் டிரைவிங்க்ல இருக்கேன், நீ பொறுமையா போ…”
“ஓகே மாமா பை…”
என்றவள் போனை அணைத்துவிட்டு, ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்து அவர்கள் செய்யவேண்டியதைப் பேசிக் கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தாள்.
அமைதியாக இருந்த அறையினுள் போனில் எதிர்பக்கம் பேசிய சிவாவின் குரல், அவளருகே அமர்ந்திருந்த மானவுக்கும் தெளிவாகவே கேட்க, அவனையுமறியாமல் அவனது முகத்தில் இருந்த புன்னகை மேலும் அதிகமாகியது.
மனிஷா போன் பேசி முடித்துவிட்டு, கப்பை கழுவி வைத்துவிட்டு,
“ஓகே நான் கிளம்பறேன்.. ரெண்டு பேருக்குமே லஞ்ச் வீட்ல இருந்து அம்மா குடுத்துவிடுவாங்க, எனக்காக வெயிட் பண்ண வேண்டாம், எனக்கு இன்னிக்கு சிசேரியன் இருக்கு, நான் வர லேட் ஆகிடும், நீங்க சாப்பிட்டுடுங்க” என்று பையை எடுக்கப் போனவளின் கரம் பற்றித் தடுத்தவன், 
“இன்னிக்கு முக்கியமான மீட்டிங், அதை நல்லபடியா முடிக்க விஷ் கிடையாதா?”
“ஆல் தி பெஸ்ட்” என்று நகர முற்பட்டவளைத் தன் கைச்சிறைக்குள் கொண்டு வந்தவன்,
“அடுத்தவங்களுக்கு சொல்ற மாதிரி சொல்லாத, எனக்கு ஸ்பெசலா சொல்லு”
“ஸ்பெஷலான்னா?” என்று அவன் கைகளை விலக்கிக்கொண்டு வெளியேற முயற்சி செய்து கொண்டே அவள் கேட்க,
“ஒரு கிஸ் குடுக்கலாம்”
“என்ன?” என்று அவனது பதிலில் அதிர்ந்தவள், “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி நடந்துக்கறிங்க, விடுங்க முதல்ல” என்று அவள் அவனை விட்டு விலக முயல,
“இப்ப கிடைக்குமா? கிடைக்காதா?”
“அதெல்லாம் முடியாது, என்னை விடுங்க, எனக்கு லேட் ஆச்சு” என்றவள் அவனை விட்டு விலக முயற்சிக்க,
அவள் எதிபாரா வேளையில், அவளை அருகில் இருந்த சுவரின் மேல் சாய்த்தவன், சட்டென்று அவள் முகம் நோக்கிக் குனிந்திருந்தான்.
நொடிகள் நிமிடங்களாக மாற, கணவனின் சட்டையில் இருந்த அவளுடைய கரம் மெல்ல மெல்ல மேலேறி அவனது சிகைக்குள் குடிபெயர்ந்திருந்தது.
தீரா வேட்கையுடன் அவன், அவளது இதழமுதம் பருகத்தொடங்க, அதிர்சியில் திளைத்திருந்தவள், அவளையுமறியாமல் அவனது இதழ் யுத்தத்தில் பங்கேற்க ஆரம்பித்து இருந்தாள்.
மனைவியின் இணக்கம் உணர்ந்தவனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள, அவனது கைகள், எல்லை மீறிப் பயணிக்க ஆரம்பித்தன.
அவனது செயலில், உள்ளம் விழித்துக்கொண்டவள், சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.
“போச்சு… இப்படியே எப்படிடி நான் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவேன்?” என்று கத்திய மானவின் குரலில் பதறி அவன் பக்கம் திரும்பியவள் அவனது கசங்கியச் சட்டையைக் கண்டு வெட்கம் கலந்த புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளது காதருகே குனிந்தவன், “சொல்லுடி…” என்று தாபமாக உரைக்க,
“நான் கிளம்பறேன்” என்றவள் அவனை விட்டு நகர,
“டிரெஸ்ஸ கரெக்ட் பண்ணிட்டு கிளம்பு & தேங்க்ஸ்… ரொம்ப ரிலாக்ஸாவும், ஹேப்பியாவும் இருக்கு” என்று சொன்னவன், அந்த அறையில் இருந்த பாத்ரூமில் சென்று கசங்கிய உடையை சரி செய்து, தலையை வாரிக்கொண்டான்.
மனிஷா கலைந்திருந்த புடவையைக் களைந்து, மீண்டும் சரியாக கட்டிக்கொள்ள, பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவன், அவளையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டு நின்றான்.
“இன்னிக்கு முக்கியமான மீட்டிங்ன்னு யாரோ சொன்னாங்க” என்று அவனைத் தாண்டி பாத்ரூமிற்குள் அவள் நுழைய,
“அதைத்தானே டீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்ற அவனது பதிலில்,
“ஷ்… நான் கிளம்பிட்டேன்” என்றவள் சாப்பாட்டு பையைத் தூக்கிக்கொண்டு நகர,
“உன்னோட போன் வேண்டாமா?” என்று போனை டேபிளில் இருந்து மானவ் எடுத்துத்தர, அதை வாங்கிக்கொண்டு மனிஷா வெளியேற அவள் பின்னாலேயே மானவ்வும் வெளியே வந்தான்.
“நிஷா… கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகிட்டு போ… உன் பேஸ் புல்லா ரெட்டா இருக்கு” என்று புன்சிரிப்புடன் கூறியவன்,
டையைக் கட்டிக்கொண்டு, ஓவர் கோர்ட் அணிந்துகொண்டு மீட்டிங்கிற்கு கிளம்ப ஆயத்தமாக, அவனது இன்டெர்காம் அலறியது.
“என்னன்னு கேளு நிஷா” என்று சொல்லிவிட்டு, உடையை சரி செய்வதில் அவன் முனைப்பாகிவிட,
மனிஷா காலை அட்டென்ட் செய்தாள்,
“மனிஷா ஸ்பீக்கிங்”
“மேம் நான் அக்கவுண்ட்ஸ்ல இருந்து பேசறேன், சார் கேட்ட டீடைல்ஸ் மெயில் பண்ணிட்டேன், அவர்கிட்ட இன்பார்ம் பண்ணனும்”
“சார் முக்கியமான வொர்க்கா இருக்கார், நான் சொல்லிடறேன்”
“தேங்க்ஸ் மேம்”
“அக்கவுண்ட்ஸ்ல இருந்து கால், நீங்க கேட்ட டீடைல்ஸ் மெயில் பண்ணி இருக்காங்களாம்”
“அப்படியே டவுன்லோட் பண்ணி பிரிண்ட் எடு”
எதிர்பக்கம் இருந்து நகர்ந்து, அவனுடைய சேரில் சென்று அமர்ந்தவள், அவனுடைய லேப்டாப்பை உயிர்பிக்க, அதில் தெரிந்த அவளுடைய படங்களைக் கண்ட, அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது.
கோர்ட்டை அணிந்து கொண்டு அவளது பக்கம் திரும்பியவன், அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டவன், 
“ஏய்… நிஷா… என்னாச்சு?” என்று அவள் பக்கம் வந்து அவளது தோள் தொட,
கண்களைத் துடைத்துக்கொண்டவள், 
“நான் கிளம்பறேன்” என்று சொல்லிக்கொண்டே, 
சாப்பாட்டுக்கூடையையும், கைப்பையையும் எடுத்துக்கொண்டு அவனது அறையை விட்டு வெளியேறப் போனவள் ஒரு நொடி நின்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்து, அவனது கன்னத்தில் முத்தமிட்டு, “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு, அவனது அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் அழுத காரணம் தெரிந்து வருந்தினாலும், அவள் மீண்டும் வந்து தந்துவிட்டுச் சென்ற முத்தத்தில் உள்ளம் மகிழ்ந்தவன், அதே மகிழ்ச்சியுடன் அன்றைய மீட்டிங்கை எதிர்கொள்ள, கான்பிரன்ஸ் ஹாலை நோக்கிச் சென்றான். 
இன்னொரு பக்கம், சிவாவும், பவித்ராவும் காலை உணவுடன் அவர்கள் அறையில் ஆஜராகி இருந்தனர்.
பியூனை விட்டு பிள்ளைகள் இருவரையும் அழைத்து வரச்சொல்லி இருந்தனர், சிவா நிதானமாக இருந்தாலும், பவித்ராவால் ஆவலை அடக்க முடியவில்லை.
“மே ஐ கமின் மேம்” என்ற குரலில், வந்தவர்களை அடையாளம் கண்டு கொண்ட இருவரும் உற்சாகமாக, 
“எஸ் கமின்” என்று பவி சொல்லிவிட்டு, அவரது இருக்கையில் இருந்து எழுந்து பிள்ளைகளை நோக்கிச் சென்றார்.
உள்ளே வந்த இருவரும், கோரசாக,
“குட் மார்னிங் மேம்”
“குட் மார்னிங் சார்” என்று சொல்ல,
இருவரும் பதிலுக்கு, 
“குட் மார்னிங்” என்று கோரசாக சொல்ல,
சிறியவர்கள் இருவரும் அவர்களது செயலில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.
இருவரின் தோளிலும் கைபோட்டு அழைத்து வந்த பவித்ரா,
“ரெண்டு பேரும் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டீங்களா?”
“நோ மேம்… ஆக்சுவலி வீ ஆர் ஆன் தி வே டூ கேன்டீன், பட் ப்யூன் ஆஸ்க்ட் அஸ் டு மீட் யூ பிபோர் இட்”
“ஓகே… இனிமே மேம், சார்ன்னு சொல்லக்கூடாது. தாத்தா, பாட்டின்னு சொல்லனும்”
சிறியவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“சரி வாங்க சாப்பிடலாம்”
“வேண்டாம் மேம்”
“இப்போதானே சொன்னேன்… மேம் சொல்லக்கூடாது, பாட்டின்னு சொல்லனும்”
“வேண்டாம் பாட்டி, நாங்க ரெண்டு பேரும் கேண்டீன்ல சாப்பிட்டுக்கறோம்”
“இன்னிக்கு ஒரு நாளைக்கு சாப்பிடலாம்”
“அம்மா, அப்பா சொல்லி இருக்காங்க, அவங்க பெர்மிஷன் இல்லாம வெளிய சாப்பிடக்கூடாதுன்னு”
“கரெக்ட்… பட் இது உன் ஸ்கூல் தான, நான் உங்களுக்கு பாட்டி தான், அதனால பிராப்ளம் இல்லை, வாங்க சாப்பிடலாம்.” என்றவர், அவர்கள் தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பையை வாங்கி கீழே வைத்தார்.
அவரது வற்புறுத்தலின் பேரில், சிறியவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
பவித்ரா பரிமாற பிள்ளைகள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
“நான் ஊட்டி விடவா?” என்று இருவரையும் பார்த்து பவித்ரா கேட்டார்.
“வேண்டாம் பாட்டி” என்று இருவரும் ஒரு சேரக் கூற, புன்னகையுடன் அவர்களது கன்னங்களைத் தட்டினார்.
“உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று சர்வேஷைப் பார்த்து சிவா கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
“எனக்கு அம்மா தான் பிடிக்கும்”
“ஜுவாலாக்கு யாரை பிடிக்கும்?”
“எனக்கு அப்பா தான் பிடிக்கும் தாத்தா”
“உங்களுக்கு வேற பாட்டி, தாத்தா இருக்காங்களா” என்ற சிவாவின் கேள்வியில் சர்வேஷ் யோசனையாக,
“ம்ம்… எனக்கு பரத் தாத்தா, ஜாஸ்மின் பாட்டி, பிரபாகர் தாத்தா, ரேவதி பாட்டின்னு நிறையா இருக்காங்க” என்று ஜுவாலா பதில் சொன்னாள்.
“உங்க அப்பாக்கு யாரை பிடிக்கும்? அவரோட அம்மாவையா? அப்பாவையா?”
“எங்க அப்பாக்கு ஜாஸ்மின் பாட்டியை தான் பிடிக்கும். அத்தை பிறந்தப்ப கூட, அப்பா ஜாஸ்மின் பாட்டிக்கிட்ட தான் தூங்குவாங்களாம். அப்புறம் தாத்தா தூக்கிட்டு போயி அப்பா ரூம்ல படுக்க வைப்பாங்களாம்.”
“அம்மாவுக்கு யாரை பிடிக்கும்?”
“அம்மாவுக்கு பிரபாகர் தாத்தா தான் பிடிக்கும்” என்று ஜுவாலா அவளையுமறியாமல் சிவாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“இந்த பாட்டியோட சமையல் நல்லா இருக்கா?”
“பைன் தாத்தா”
“நாளைக்கும் பாட்டியையே கொண்டு வரச் சொல்லவா?”
“வேண்டாம் தாத்தா… அம்மா, அப்பா அலவ் பண்ண மாட்டாங்க”
“நாங்க பேசவா”
“அம்மா கூட ஓகே சொல்வாங்க தாத்தா, அப்பா நோ வே…”
“ஜுவாலா மட்டும் பேசறா, சர்வேஷ் பேச மாட்டியா?”
“ஐ வான்ட் டூ நோ சம்திங் ப்ரம் யூ?”
“எஸ்… வாட் யூ வான்ட்ஸ் டு நோ?”
“வீ போத் ஹேவ் எனி ரிலேஷன்ஷிப்?”
“அப்ஸல்யூட்லி”
“சோ யூ போத் ஆர் கிரான்ட் பேரன்ட்ஸ் டு அஸ் இன் சம் வே”
“அப்கோர்ஸ்”
“பை தி வே, ஐ வான்ட்ஸ் டூ கிளியர் யூ ஒன் திங், தட், இப் அவர் பேரெண்ட்ஸ் ஹைட் சம்திங் எபவ்ட் யூ ப்ரம் அஸ், இட்ஸ் கிளியர் தட் தை டோன்ட் லைக் அஸ் டூ கீப் எனி காண்டக்ட் வித் யூ, ஆர் தை பிளான் டு ரிவில் திஸ் இன் பியூச்சர் மே பீ. சோ வித்தவுட் தெயர் பெர்மிஷன், வீ போத் நாட் லைக் டூ பில்ட் எனி ரிலேஷன்ஷிப் வித் யூ. ஸாரி” என்ற சர்வா,
“தேங்க்ஸ் பார் யுவர் பிரேக் பாஸ்ட் மேம் & சார்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்டசிக்காக சாப்பிட, ஜுவாலாவும் அதையே பின்பற்றினாள்.
அவனது பேச்சில் வருத்தம் மேலிட்டாலும், அதனையும் மீறி பெருமையாகப் பார்த்த இருவரும், உள்ளம் மகிழ்ந்தனர்.
“சர்வா, உன் அம்மா, அப்பாக்கு உண்மை தெரிஞ்சும் இருக்கலாம், மே பீ தெரியாமலும் இருக்கலாம், ஆனா என்னிக்கா இருந்தாலும் நீங்க எங்களுக்கு பேரப்பசங்க தானே, உங்க மேல எங்களுக்கும் பாசம் இருக்கும்ல”
“அப்கோர்ஸ், பட் நவ் வீ போத் வில் பாலோ அவர் பேரன்ட்ஸ் டெசிசன் ஒன்லி” என்று சொல்லிக்கொண்டே, அங்கிருந்த வாஸ்பேசனில் சர்வா கைகழுவச் செல்ல, ஜுவாலாவும் அதையே பின்பற்றினாள்.
கை கழுவிவிட்டு வந்து, பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டவன், “தேங்க்ஸ் பார் எவ்ரிதிங், ரியலி ஐம் சாரி டு சே திஸ், ஐ டோன்ட் லைக் டூ  ஹர்ட் யூ ஹியர் ஆப்டர், சோ பிளீஸ் கீப் டிஸ்டன்ஸ் வித் அஸ்” என்றவன் தங்கையை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
ஜுவாலா மட்டும் இரண்டு முறை திரும்பி இருவரையும் பார்த்துக்கொண்டே வெளியேறினாள்.
பவித்ரா இருவரும் சென்ற பின்னர், கண்கள் கலங்க அமர்ந்துவிட்டார்.
வெளியே வந்த சர்வாவோ,
“ஜுவா, அம்மா மார்னிங் என்ன சொன்னாங்க? நீ எதுக்கு நம்மை பத்தின டீட்டைல்ஸ் ஷேர் பண்ற?”
“சாரின்னா” என்றவள், அமைதியாக உடன் நடந்தாள்.
திடீரென நியாபகம் வந்தவளாக,
“அண்ணா ஐ பர்கெட் மை புக் தேர்”
“சரி நீ போ, நான் போயி எடுத்துட்டு வரேன்”
“ஸ்கூல் அசெம்ப்ளி ஸ்டார்ட் ஆக போகுது, நீங்க என் பேக் எடுத்துட்டு போங்க, நான் ஓடி போய் எடுத்துட்டு வந்துடறேன், ஐ கான்ட் டேக் தீஸ் டூ பேக் அட் சேம் டைம்”
“ஓகே.. பட் பீ கேர்புல் டோன்ட் டெல் எனிதிங் டூ தெம், கீப் டிஸ்டன்ஸ் வித் தெம், ஜஸ்ட் பிரிங் யுவர் புக் அன்ட் கம் இம்மீடியட்லி”
“ஷ்யூர்”
தன் அண்ணனிடம் பையைக் குடுத்துவிட்டு, வேகமாக முதல் மாடியில் இருந்த பவித்ராவின் அறையை நோக்கி ஜுவாலா ஓடினாள்.
“பவி அழாத, சின்னப் பையன் தான”
“சின்னப்பையான, அவனா, அவன் எப்படி பேசறான் பாருங்க, உங்களையே வித்துட்டு வந்துடுவான்”
“அழாத, இன்னிக்கு இல்லைனாலும், இன்னொரு நாளைக்கு அவனே வந்து பேசுவான்” என்று அவர் பவித்ராவுக்கு ஆறுதல் சொல்லும் போதே,
“மே ஐ கமின்” என்ற குரலில் பவித்ரா அழுகையை நிறுத்திவிட்டு சிவாவைப் பார்த்தார்.
“எஸ் கமின்” என்ற சிவாவின் குரல் கேட்ட ஜுவாலா, கதவை நன்கு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள், 
“என்னோட புக் இங்கேயே மிஸ் பண்ணிட்டேன் தாத்தா, எடுத்துக்கவா?” என்று கேட்ட ஜுவாலாவை புன்னகையுடன் பார்த்த சிவா, 
“ம்ம்” என்று தலையாட்ட,
அவர்கள் பையை வைத்திருந்த டீபாயின் மீது இருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டவள், கதவை நோக்கிப் போகாமல், நேராக பவித்ராவை நோக்கி வந்தாள்.
இருவரும் அவளையேப் பார்க்க,
“நீங்க என் கிரான்ட் பேரன்ட்ஸா?”
“ஆமாம்மா” என்று சிவா சொன்னார்,
“எப்படி?”
“அது சீக்ரெட்”
“ஹோ..” என்று யோசித்தவள் பவித்ராவின் அருகில் சென்று,
“நீங்க கொண்டுவந்த புட் நல்லா இருந்துச்சு, பாட்டி உங்களுக்கு டர்மரின்ட் ரைஸ் செய்யத் தெரியுமா?”
“ம்ம்.. நல்லாவே செய்வேன்”
“ஹை… அப்படின்னா நாளைக்கு செஞ்சு கொண்டு வரீங்களா?”
“கண்டிப்பா செல்லம், உனக்கு இல்லாமையா?”
“தேங்க்ஸ் பாட்டி” என்றவள் சட்டென்று பவித்ராவின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, 
“பை பாட்டி…” என்று கதவை நோக்கிச் சென்றவள் மீண்டும் இருவரின் அருகில் வந்து, “ஷ்.. அண்ணாக்கு தெரிய வேண்டாம், தெரிஞ்சா என் கூட பேச மாட்டாங்க, டீலா?” என்று கட்டை விரலை உயர்த்தி அவள் கேட்க,
“டீல்” என்று சிவா சொல்ல,
அவரது கன்னத்திலும் ஒரு முத்தம் பதித்துவிட்டு கதவை திறந்து கொண்டு சர்வாவைத் தேடி ஓடினாள்.
அவளது செயலில் பெரியவர்கள் இருவரும் மனம் நிறைந்து போயினர்.
“பார்த்தியா? என் பேத்தியை?”
“எப்படியோங்க, இவளாவது நம்ம அன்பை புரிஞ்சிக்க முயற்சி பண்றாளே”
“சரி மதியம் நாம குடுக்கற சாப்பாட்டை உன் பேரன் சாப்பிட வர மாட்டான், நாளைக்கு எப்படி உன் பேத்திக்கு புளி சாதம் தரப்போற?”
“கிளாஸ் இடைல தான்”
“சரி வா வீட்டுக்கு போகலாம்”
“இல்லைங்க, நான் இங்கேயே இருந்து மதியம் பசங்க எப்படி சாப்பிடறாங்கன்னு பார்க்கனும்”
“சரி அழாம இரு, நான் அப்படியே ஸ்கூலை ஒரு ரவுன்ட் போயிட்டு வரேன், எல்லாமே சரி ஆகும், சர்வா என்ன தான் பத்து வயசா இருந்தாலும், இப்ப அவன் குணம் அப்படியே பதினாறு, பதினேழு வயசு மாதிரி இருக்கு, அதனால, ஜுவாலாவை விட சர்வா நிச்சயம் நம்மை புரிஞ்சுப்பான்”
“சரிங்க”
சிவா பள்ளியை பார்வையிடச் செல்ல, பவித்ரா சர்வாவின் பேச்சை எண்ணிக் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்.
அவரவர், அவரவர் பணியில் இருக்க, 
சம்யுக்தா பிரித்வியிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள்.
“உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?”
“உன்னைத்தான்”
“எத்தனை தடவை சொல்றேன், ஹாஸ்பிட்டல் பக்கம் வராதீங்கன்னு”
“எனக்கு உன்னை பார்க்கனும்னு தோணிச்சுனா நான் வருவேன், நீ எங்க இருந்தாலும்”
“நீங்க இங்க வர்றது மாமாக்கு தெரிஞ்சது?”
“தெரிஞ்சா? என்ன பண்ணுவார் உன் மாமா?”
“பல்லைத்தட்டி கைல குடுத்துடுவார், இன்னும் ரெண்டு வாரம் தானே, பொறுமையா இருப்போம்ன்னு பார்த்தா, ஓவரா ஆடறீங்க?”
“நான் உட்கார்ந்து தானே இருக்கேன், ஆடலையே?”
“ச்ச… நீங்க வந்து போறதால, என்னைப்பற்றி ஹாஸ்பிட்டல்ல என்ன பேசறாங்கன்னு தெரியுமா?”
“என்ன பேசறாங்க?”
“அசிங்கமா பேசறாங்க… உங்களோட தப்பான லிங்க்ல இருக்கேனாம், என் புருஷன் வெளிநாட்ல இருக்கறதால இங்க உங்க கூட சுத்தறேனாம், இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று அவள் கண்கள் கலங்கி அழ ஆரம்பிக்க,
“ஐம் ரியலி சாரி, இனி நான் இங்க உன்னை பார்க்க வரலை, போதுமா?” என்றவன் கோபத்துடன் அவளது அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பின்னரும், சில நிமிடங்கள் அழுதவள், அங்கிருக்கப்பிடிக்காமல் வீட்டிற்குத் திரும்பினாள்.
ராகம் இசைக்கும்…

Advertisement