mounamaai
மௌனமாய்...
அத்தியாயம் 02
மாலைநேரம்...
சற்று பதட்டத்துடன் தான் இருந்தாள்,
மகா.
சரியென்று சொல்லிய பின் மறுக்க முடியாது..
ஆனால்,
பின் விளைவுகளை எப்படி கையாள்வது என்பது பற்றி உள்ளூர சிறிது கலக்கம் தான்,
பெண்ணுக்கு.
ஒத்துக் கொண்டிருக்க கூடாதோ என்ற எண்ணமும் அவ்வப்போது எட்டிப்பார்க்காமல் இல்லை.
ஆனால்,
இப்போது எதையும் மாற்றிட இயலாதே.
குழப்பமான மனநிலையுடன் அவள் இருக்க அழைப்பு மணி ஒலிக்கப்பட யாரென்று தெரியாமலா இருக்கும்...?
பரபரப்புடன் கதவை திறந்து...
*மௌனமாய்...*
*அத்தியாயம் 01*
எதையும் எதிர்ப்பார்க்காமல் நடப்பதை அப்படியே நன்மைக்கு என்று ஏற்றுக் கொள்ள பழகிவிட்டால் ஏமாற்றங்கள் என்பது கிடையாது,
தானே...!
அந்த நிலையில் தான் அவளும் இருந்தாள்,
இது நாள் வரை.
ஆனால்,
இந்த நொடி...
முற்றிலும் மாறுபட்டதாய்.
அவளால்,
சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட இன்னும் வற்றிப் போய் இருக்கவில்லை.
திருமணம் முடிந்து வரும் நேரம் இப்படி ஒரு விபத்து நிகழ்ந்திடும்...