மௌனமாய்…💕

அத்தியாயம் 05

இருள் மெல்ல கசியத் தொடங்கி இருந்தது.

திவ்யாவின் வீட்டின் முற்புற பூங்காவில் அம்ர்ந்து இருந்தாள்,
மகா.
பணியை முடித்து விட்டு நேரே இங்கு தான் வந்திருந்தாள்,
திவ்யாவுடன்.

அவள் இருக்கும் மனநிலையில் திவ்யாவுடன்  கதைத்தாலாவது மனம் சற்று மட்டுப்படும் என்று தோன்றிற்று.

முன்னே வடிவமைக்கப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்து இலக்கில்லாமல் வானை வெறித்துக் கொண்டிருந்தாள்.

ஆங்காங்கே பெரிய மேகங்களும் கரு வானமும்
கொஞ்சமாய் மின்ன முயன்று கொண்டிருந்த பிறை நிலவும் அவளின் விழியில் வீழ்ந்தாலும் சிந்தையில் பதியவில்லை.

சோகம் இழையோடிய அவனின் விழிகள் அவளை அதிகம் இம்சித்தன.

“ஏனாம்..?
கொஞ்சம் தெளிந்தால் என்னவாம்..?”
அவனிடம் கேட்பதாக தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

“ப்ச்ச்..”
சலிப்புடன் வந்தது அவள் குரல்.

இன்று அவனை காணாமல் இருந்திருந்தால் அவள் இயல்பு கொஞ்சமாவது அவள் அழுத்தங்களை குறைத்திருக்கும்.

இன்று அவள் இயல்பு அவளிடம் இருந்து தூரப் போயிருந்தது,
சற்றே.

தோழியை பார்த்தபடி அவள் எதிரே வந்து அமர்ந்தாள்,
திவ்யா.

மகாவின் மனதில்,
எதுவோ உறுத்திக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.

“மகா..”

“…….”

“மகாஆஆஆ..”

“ஹான்..”

“யென்ன யோசன..”

“இன்னிக்கு மித்து..மித்ரன் சார பாத்தேன்..”
என்றாள்.
பார்வையை அவள் கண்களை சந்திக்காமல் வெளியே அலைந்து கொண்டிருந்தது.

அவள் சொன்னது கொஞ்சம் திகைப்பை தந்தாலும் திவ்யா அதனை வெளிக்காட்டிட விரும்பவில்லை.

“யெங்கடி..”

“பஸ்ல..”

“வாட்ட்ட்ட்..”

“ம்ம்ம்ம்ம்..”

“யெப்போ..”

“காலைல..”

“சரி..” என்று எதையோ மறுத்து சொல்ல வந்தவளின் மனமோ வேகமாய் ஏதோ இரண்டுக்குள் முடிச்சு போட்டு பார்த்தது.

அவள் சந்தேகம் தெளிய இதை விட வேறெந்த வாய்ப்பும் சிறந்ததாக அமைந்திட போவதில்லை.

“யெப்டி இருந்தாரு..?”

“ரொம்ப அப்சட்..யேதோ யோசிச்சிகிட்டு இருந்தாரு..கண்ணுல லைட்டா டென்ஷன்..
ஒரு சின்ன சிரிப்பு கூட இல்ல மொகத்துல..
ஒரு நாலஞ்சு நாளா ஷேவ் கூட பண்ணிருக்க மாட்டாரு போல..
கொஞ்சம் கூடுதலா தாடியும் இருந்துச்சு..
நெத்தியில வலது பக்கம் சின்னதா ஒரு காயம்..
யெங்கயோ இடிச்சிகிட்டு இருப்பாரு போல..”
தன்னிடம் ஒப்புவித்ததை கண்டு அவள் விழிகள் விரிந்ததை மகா கவனிக்கவில்லை.

திவ்யாவுக்கு,
ஏதோ ஒன்று புரிவது போல்.

“ஆன அதுல கூட ரொம்ப நீட்டா இருந்தாரு டி..முன்ன யெப்டி இருப்பாரோ அதே போல..
எப்போவும் மிஸ்டர் பர்பெக்ட் தான் போல..”
சொன்னவளின் உதரங்களின் துளிர்த்தது,
சிறு புன்னகை.

இமைக்காமல் மகாவைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்,
திவ்யா.

சற்றே தெளிவாய் இருந்த மனம் மீண்டும் கல்லெறிந்த குளமாய் குழம்பிப் போனது.

“யென்ன இவ இப்டி சொல்றா..அந்த மனுஷன இவ்ளோ நோட் பண்ணி இருக்கா..ஏதோ தப்பா தெரிதே..”
தனக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு தோழியிடம் கேட்டிட மனம் வரவில்லை,
சிறிதும்.

அவள் சிந்தனையின் இடையில் மகா பேசியது எதையும் உணரவில்லை,
அவள்.

அவனைப் பற்றி மொத்தமாய் சொல்லி விட்டு திவ்யாவின் முகத்தை ஏறிட்டாள்,
பெண்.

சட்டென சுதாரித்து கொண்டாள்,
திவ்யா.

“மகாஆஆஆ..”

“யென்னடி..”

“காலைல யேதோ சொல்ல வந்தியே..”

“ம்ம்ம்ம்..”

“யென்னடி அது..”

“அதுவா..நேத்து நா போன நோண்டிகிட்டு இருக்கும் போது தவறி போன் போயிருச்சு…”

“யாருக்கு..”

“மிஸ்டர் பர்பெக்டுக்கு தான்..”

“அப்றம்ம்ம்ம்..”

“ஷாக்காகதடி..படக்குன்னு கட் பண்ணிட்டேன்..”

“ம்ம்ம்ம்ம்..”

“ஆனாஆஆஆஆ..”

“ஆனா..?”

“காலைல பர்பெக்டு யென்னோட போனுக்கு கால் பண்ணி இருந்துச்சு..”

அவள் சொல்லி முடிக்க மீண்டும் திகைப்பு இவளுக்கு.
மித்ரனா அப்படி செய்தது..?
விஷ்வமித்ரனா..?

“இன்னிக்கு நா மயங்கி விழுந்துருவேன் போல இருக்கே..”

“திவ்யா..யென்னடி யோசிக்கிற..”

“ஹான் ஒன்னுல்ல..நீ மேல சொல்லு..”

“ரொம்ப பயமா இருந்துச்சு..எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..
ஒரு தடவ தான் வந்தருந்துச்சு..
யாருனு தெரிஞ்சுக்க எடுத்துருப்பாரு போல..”

“அப்டியா..ட்ரூ காலர்ல போட்டு பாத்தா யென்னடி பண்ணுவ..”

“அது யெங்க தாத்தா பேர்ல இருக்குற நம்பர்பா..அதா நா இவ்ளோ நார்மலா இருக்கேன்..”
ஒற்றைக் கண் அடித்து கூறினாள்,
பெண்.

திவ்யாவின் மனதில் சந்தேகம் துளிர்விட்டு இருப்பதை அவள் அறியவில்லை.

“மகா..இன்னிக்கு அஜய் இங்க வர்ரன்னு சொல்லி இருக்காரு..அண்ணன பாக்க..”

“அப்டியா..”
துள்ளல் வந்திருந்தது,
அவள் குரலில்.

“யெஸ்..”என்று கை மடக்கிக் கூறியவள்..

“திவ்ஸ்..அவனுக்கு இன்னிக்கு தண்ணி ஊத்த போறேன்..அன்னிக்கு யென்ன சேத்துல தள்ளி விட்டான்ல..”

“ஏய்..வேணாண்டி..”

“ம்ஹும்..அவன் இன்னிக்கு நனய தான் போறான்..”

அலைப்புறுதலில் இருந்த தோழியின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் தென்படவே அதற்கு மேல் அவளும் மறுக்கவில்லை.

நுழைவாயிலுக்கு சரி நேராய் பாதை.
பாதையின் சரி பாதி வரை  இருபுறமும் நேர்த்தியாய் வெட்டப்பட்ட அலங்காரத் தாவரங்கள்.

நபரொருவர் நின்றால்,
இடைவரை மறையும் அளவு வளர்ந்திருந்தன அவை.
பாதையின் இருபுறமும் பரந்த புல்வெளி.

அஜய்யின் வண்டி சத்தம் கேட்டது.

ஓடிச்சென்று தோட்டத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்த மூடியில்லா பூவாளியில் நீரை நிரப்பிக் கொண்டு
வந்தவள்,
தாவரங்களின் கீழே குனிந்து அமர்ந்து கொண்டாள்.

தோழியின் செயலில் சிரிப்பு வந்தது,
திவ்யாவுக்கு.
அவளையும் அல்லவா தன்னுடன் இழுத்துக் கொண்டு மறைந்திருந்தாள்.

நுழைவாயிலை திறக்கும் சத்தம் கேட்டது.
அத்தனை குதூகலம் பெண்ணுக்கு.

நடந்து வரும் பாதச்சத்தம் செவிகளை உரசிச் சென்றன.

புன்னகை நிரம்பி வழியும் முகத்துடன் மெல்ல எழத் தயாரானாள்,
மகா.
அவர்களுக்கு சற்றுத் தள்ளி அந்த நடை தடைப்பட்டது போல் இருந்தது.

ஆம்,
அவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்தான்.

செடிகளின் இடைவெளியே வழியே பார்வையை நகர்த்தி அவன் இருக்கும் இடத்தை கண்டு கொண்டாள்.
அளவான இடைவெளியில் அவன் பாதங்கள்  நிலைத்திருந்தன.

அவளுக்கு எதிர்ப்புறம் பார்வையை பதித்தவாறு நின்றிருந்தான்,
அவன்…!

பட்டென எழுந்தவள்,
“செத்தடி மவனே..”
உள்ளுக்குள் கருவியவள்..
“அஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்”
என்று கத்த அவன் திரும்பும் முன் நீரை விசிறிவிட்டிருந்தாள்,
அவன் மீது.

சட்டை தொப்பலாய் நனைந்து போனது.

“திவ்ஸ் அஜய்ய்ய் நனச்சிட்டேன்டி..”
என்று எழுந்து நின்றிருந்த திவ்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு துள்ளிக் குதிக்க அசைய மறுத்தவளாய் நின்றிருந்தாள்,
அவனின் தோழி.

“திவ்ஸ்..யென்னாச்சு…அந்த பக்கிக்கு தண்ணி பட்டு எங்கயாச்சும் கன்னிப் போயிருச்சா..இப்டி ஷாக்கா பாக்கற…”

“……..”

“திவ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”

“பக்கி பிசாசு..முன்னால பாருடி..”

விழிகளால் முன் நின்றிருந்தவனை ஸ்பரிசிக்க நிலைகுத்தி நின்றது,
பாவையவளின் பார்வை.

“பயர்பேங்க்க்க்க்” இதழ்கள் தன்னாலே அசைந்து உச்சரித்துக் கொண்டன.

நெற்றியில் மையம் கொண்டிருந்த  நீர்த்திவலைகளை இருவிரல் மடித்து அழுத்தம் கொண்டு வழித்து..
ஆட்காட்டி விரலை நாடியில் அழுத்தி நாவிரலால் முகத்தை துடைத்த படி…

விழிகளில் எல்லை மீறிய கோபம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க…. கனல் பார்வையால் அவளை சுட்டெரித்த படி உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்,
விஷ்வமித்ரன்…!

அவன் இதழ்கள் தமக்குள் அவளை திட்டிக் கொண்டிருந்தன.

அரண்டு அதிர்ந்து அயர்ந்து போய் நின்றிருந்தாள்,
அவள்.

அந்த மெல்லிய இருட்டிலும் அந்த விழிகளில் தெரிந்த கோபமும் அவனிதழ்கள் இசைத்துக் கொண்டிருந்த அர்ச்சனையும் அவளுக்கு புரிந்தது.

இருவரினதும் பார்வையும் தமக்குள் மோதிக் கொண்டன.
அவன் கோபமாய்..
இவள் பாவமாய்..

திவ்யாவோ,
இவர்களை குழப்பத்துடன் பார்த்த படி நின்றிருந்தாள்.

“இவ சொல்றத பாத்து விஷ்வா சார பாத்ததும் அவ கண்ணுல ஸ்டார் வரும்..காதல் வழியும்னு பாத்தா..
ஒன்னயும் காணோம்..
ஸ்டார் கூட பரவால..
ஒரு ஸ்பார்க் கூட இல்ல..
ஆண்டவா யென்ன காப்பாத்து..”
மனதால் இறைவனிடம் கேட்டுக் கொண்டாள்.
அத்தனை குழப்பம் அவளுக்கு.

“அரமெண்டல் பாக்கறத பாரு..”
தனக்குள் கூறியவன் அவளை மேலும் உறுத்து விழிக்கவே தன்னிலை மீண்டாள்,
மகா.

ஒரு நொடி பயந்தாலும் மறு நொடி தன்னை சுதாரித்துக் கொண்டு வாயில் கைகளை குவித்து வைத்து “சாரி சார்..”
என்று கத்தி விட்டு எதை பற்றியும் சிந்தியாது அவ்விடத்தை விட்டு வீட்டினுள் ஓடியிருந்தாள்.

கோபத்தில் இருந்த மித்ரனும் அவள் சுடிதாரை கவனிக்கவில்லை.

கவனித்து பார்த்திருந்தால் அவன் அருகில் காலையில் பேரூந்தில் அமர்ந்து இருந்தா பெண் இவளாயிருக்குமோ என்று சந்தேகமாவது துளிர் விட்டிருக்கும்.
கோபம் கண்ணை மறைத்திருந்தது.

ஒருவேளை,
கண்டுகொண்டு இருநதாலும் அவனின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சமான ஒன்று.

“பிசாசு..யென்ன மாட்டி விட்டுட்டு போறா..”
தோழியை திட்டிய திவ்யாவோ அவனை பார்த்து சங்கடமானதொரு புன்னகையை சிந்தி அஜய் வருவதை கண்டவள் தானும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டு பின் தொடர்ந்தாள்,
தோழியை.

தோழனின் நிலை கண்டதும் அஜய்க்கு என்ன நடந்திருக்கும் என்பது சொல்லாமலே புரிந்து போய் விட நொந்து கொண்டான்,
தன்னையே.

“இதுங்க ரெண்டயும் சேத்து வக்க கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணா சொதப்புறாளே..பிசாசு..”
மகாவைத் திட்டியவனின் நடை மித்ரனை நோக்கி நீண்டது.

தோழன் அருகில் வரவே,
அவனை முறைத்தான் மித்ரன்.

“அந்த அரமெண்டல் இங்க யென்ன பண்றா..?”
நிறுத்தி நிதானமாய் அழுத்தமாய் இதழசைக்க அவனின் கேள்வி புரிந்தது,
அஜய்யிற்கு.

“அது மச்சி..தவறுதலா வந்துருப்பா போல..சாரி..”
சற்று சங்கடத்துடன் மன்னிப்பு கேட்டான்,
தோழனிடம்.

தோழன் அவள் மீது கொண்டிருந்த எரிச்சல் அவனுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்தது.

மகா அவன் மீது கொண்டிருக்கும் வகையறியா நேசம் பற்றி அவன் அறிந்திருக்கிறான் அல்லவா..?

“எனக்கு இப்போ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுன் அஜய்..”
இம்முறையுற் இதழசைத்தான்.
ஆனால்,
முன்பிருந்த எரிச்சல் அவன் முகத்தில் இருந்து மறைந்து போயிருந்தது.

“சரி வா..உன் ஷர்ட் இருக்கு யென்கிட்ட வா..”
தோழனை அழைத்துக் கொண்டு நுழைந்தான்,
தன்னறைக்கு.

மித்ரனோ,
ஷர்ட்டை அழுத்திக் கொண்டிருக்க அஜய்யின் சிந்தனையோ மகாவில் படிந்தது.

அவனின் சித்தி மகள்.
சிறுவயதில் தாயை இழந்தவனுக்கு பாலூட்டி வளர்த்து மகாவின் அம்மா சாரதா தான்.

அதனால்,
அவரிடம் ஒட்டுதல் அதிகம்.

சாரதாவுடன் உடன் பிறந்தவர் தான்,
திவ்யாவின் தந்தை சர்வேஷ்வரன்.
இரண்டு தங்கைகள் கொண்ட குடும்பத்தின் மூத்தவர் அவர்.

மகாவுடன் இருந்த பிணைப்பு அஜய்யிற்கு திவ்யாவுடன் இருக்கவில்லை.
சிறு வயதில் நெருங்கிப் பழகாமல் போனது தான்,
காரணமாய் இருக்கலாம்.

குறிப்பிட்ட வயது வரை சித்தியிடம் வளர்ந்தவனின் பொறுப்பை சாரதா வேலைக்குச் செல்லத் துவங்கியது முதல் ஏற்றுக் கொண்டது,
திவ்யாவின் தாய் பார்வதி தான்.
அன்று முதல் அவன் வசிப்பது இங்கு தான்.
ஆனால்,
வாரம் தவறாமல் மகாவின் வீட்டிற்கும் தங்கச் சென்றிடும் பழக்கம் இருந்தது.

சாரதாவின் நெருங்கிய தோழி அவர்.
பார்வதியின் செயலில் எந்த வித பாராபட்சமும் இருக்கவில்லை.
அவருக்கு தன் மகன் எப்படியோ..
அதே,
போல் தான் அஜய்யும்.
கனிவும் மட்டுமல்ல கண்டிப்பும் அவர் மக்களுக்கு போலவே.

தோழனை உலுக்கினான்,
மித்ரன்.

“யென்னடா..”

“கனவு காண்றியா..?”
இதழசைத்தான்.

“இல்ல மச்சி சின்னதா ஒரு யோசன..சரி இரு அத்த கிட்ட பொய்ட்டு ஏதாச்சும் வாங்கிட்டு வர்ரேன்..
சாப்டனும் போல இருக்கு..
உனக்கு யென்ன வேணும்..?”
என்க,
அவனை உறுத்து விழித்தவன் கடிகாரத்தை விழியால் சுட்டிக் காட்ட அசடு வழிய சிரித்துக் கொண்டான்,
அஜய்.

அவன் இப்படி அடிக்கடி உண்பவனா..?

“சாரி..”

“இப்டி கண்ட கண்ட டைமல் சாப்டு..அப்டியே பலூன் மாதிரி ஆயிட போற..”
இதழசைத்து சொல்ல அஜய் ஒரு புன்னகையுடனேயே நகர்ந்து விட்டான்.

இங்கு திவ்யாவின் அறையில்,

“யென்னா ருசி..யென்னா கைப்பக்குவம்..
ரொம்ப வாசமா இருக்கு..
டேஸ்ட் ஆசமா இருக்கு..”

“யென்னோட நெலம படு மோசமா
இருக்கு..”
உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அத்தையின் கைப்பக்குவத்தில் தட்டில் இருந்த பிரியாணியை புகழ்ந்த படி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்,
மகா.

“யெந்த நேரத்துலயும் இந்த மொக்க பன்ச விடமாட்டியா டி..?

“கோச்சிக்காத திவ்ஸ்ஸ்..இந்த மாச சம்பளத்துல உங்கம்மா கைக்கு மோதரம் போடப் போறேன்..”
என்றவளை புதிராய் பார்த்தாள்,
திவ்யா.

“இவள புரிஞ்சிக்கவே முடியலயே…விஷ்வா சார பத்தி கவலபட்டுகிட்டு இருந்தவ இவதான்னு சொன்னா  யென்ன செருப்பால அடிப்பாங்க..
ஓ மைட் காட் காப்பாத்து…”

“திவ்ஸ்ஸ்..யென்ன யோசிக்கற..”

“ஒன்னுல்ல..யெதுக்குடி குடுகுடுன்னு ஓடி வந்த..”

“அதுவா..நம்ம பயர்பேங்க இருக்குல..கடுகடுன்னு நின்னுச்சா..நா குடுகுடுன்னு ஓடியந்துட்டேன்..”
என்றாள்.
முகத்திலோ அத்தனை அப்பாவித்தனம் குடிகொண்டிருந்தது,
அந்தக் கணம்.

“அடி வாங்கப் போற நீ..
விஷ்வா சாருக்கு யெப்டி கோபம் வந்துச்சு தெரியுமா..?”

“ஆமாடி..ஆளு செம்ம பயராகிட்டாப்ல..அரமெண்டல்..இடியட்..ஸ்டுபிட்டுன்னு திட்டுனாரே..நா தா அவர் லிப்ப ரீட் பண்ணனே..”
என்றவளின் இடது கையோ அணிந்திருந்த சுடிதாரின் காலரை தூக்கிவிட்டுக் கொண்டது.

“விஷ்வாவுக்கு ஆக்சிடன்ட் ஆனதுல இருந்து அவன் பக்கத்துல இருக்கேன்..
அதனால யெனக்கு அவன் பேசுறத லிப்ஸ் அசைறத வச்சே கண்டுபிடிக்கலாம்..
புதுசா வர்ரவங்களுக்கு கஷ்டம் தான்..”
அஜய் ஒருமுறை
தன்னிடம் சொன்னது நினைவில் வந்தது.

“இவள்..?
இவளுக்கு எப்படி..?”
திகைப்புடன் ஏறிட்டாள்,
மகாவை.

அவளின் கவனம் முழுக்க உணவின் மேல் இருந்தது.
சம்மணமிட்டு அமர்ந்து ஒரு வித புன்னகையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“சாவடிக்கிறாளே..”
நினைக்க மட்டுமே முடிந்தது,
அவளால்.

அஜய் சாப்பிட்டுக் கொண்டிருக்க மித்ரனோ தன் அலைபேசியில் கவனம் பதித்து இருந்தான்.

அந்த இலக்கத்தை பார்த்த படி இருந்தான்,
இமைக்காமல்.

“சம்திங் டிபரென்ட்..”
மனம் கூவியது,
மௌனமாய்.

அந்த இலக்கத்தை இன்னும் அவன் சேமித்து இருக்கவில்லை.
என்ன பெயரில் சேமிப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தான்.

“அன்னவுன்..”
என்று சேமிக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

அஜய்யிற்கு அவன் செயல்கள் சிறிது வித்தியசாமாய் தோன்றினாலும்,
இப்படி ஒரு உணர்வில் தோழன் உழன்று கொண்டிருப்பான் என்று எண்ணவில்லை,
அவன்…!

அலைபேசியை தூர வைத்தவன் மேசையில் இருந்த புத்தகத்தை புரட்ட அதில் முற்கையெம் முழுவதும்  கிறுக்கல் கையெழுத்தில் மகா என எழுதப்பட்டிருந்தது.

கோபம் கனன்று கொண்டு வந்தது.
அவனுக்கு இப்படி கிறுக்கித் தள்ளுவதெல்லாம் பிடிக்காது.
அநேகமாக பள்ளிப் படிக்கும் காலங்களில் கூட அவன் பெயரை புத்தகங்களில் நேர்த்தியாய் ஒரு மூலையில் எழுதி வைத்திருப்பான்.

புத்தகம் எங்கும் தன் பெயர் கொண்டு கிறுக்கும் பழக்கம் அவனுக்கு இல்லை.
சிறு கோடு கூட வரையவும் மாட்டான்..
வரைய விடவும் மாட்டான்..
அத்தனை நேர்த்தி.

“இடியட்..யென்ன பண்ணி வச்சிருக்கா பாரு..அரமெண்டல்..
இவளயெல்லாம்..
இரிடேட்டிங்க்..கொஞ்சம் கூடவா சென்ஸ் இல்ல..யாருனு பாக்கமா தண்ணிய வீச வேண்டியது..
துள்ளிக் குதிக்க வேண்டியது பக்கத்துல யாரு இருக்கான்னு பாக்காம..
ஸோ சைல்டிஷ்..இரிடேட்டிங்க்..”
மெல்ல அணைய முற்பட்ட கோபம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அவளைத் தெரியுப் இவனுக்கு.
அவளின் நேரத்தியின்மையும் சிறு பிள்ளைத்தனமும் பிடித்ததில்லை.

அதனாலோ என்னவோ,
அத்தனை கோபம் வரும் அவளது செயல்களில்.

அவன் மனம் அவளை அர்ச்சித்துக் கொண்டிருந்து…
அவள் மனமோ அவனின் அரவணைப்புக்கு வழி தேடிக் கொண்டிருந்தது.

            ●●●●●●

அதே நேரம்…

காரிருள் கவிழத் துவங்கி சில நிமிடங்கள் கடந்திருக்கும்.

அந்த கடற்கரையில் கால் நனைய நின்றிருந்தான்,
அவன்…!
அந்த நெடியவன்…!

என்ன நடந்தாலும் அவளின் முகம் காணும் போது அவனுள் ஒரு சில்லென்ற உணர்வு பரவுவது உண்மையே.

எப்படி அவன் மனதினுள் நுழைந்தாள் என்று அவனுக்கே தெரியாது.
ஆனால்,
அவன் மனம் முழுவதும் அவள் மட்டுமே நிரம்பியிருக்கிறாள்,
என்பது மறுக்க இயலாத உண்மை.

அவள் நினைவில் அவன் இதழ்கள் விரிந்திருந்தன.

அவள் அவனுக்கானவள்…
அதை உணர்ந்த நொடி அவன் மனதில் தோன்றிய நேசம்..!
வார்த்தைகளால் வரிக்க இயலாதது தான்.

அருகில் நின்றவன் புரியாமல் பார்த்தான்.
“யெதுக்கு இப்டி இருக்காரு..?”
நினைத்தாலும் கேட்க முடியவில்லை.

கேட்டாலும் பதில் சொல்ல மாட்டானே…!

அருகில் நின்றிருந்தவனுக்கு அழைப்பு வந்தது.
மெல்ல எடுத்துப் பேசியவன் நெடியவனை பார்த்தான்.

அவனின் கவனம் அழைப்பு வந்த போதே இவனில் படியத் துவங்கி இருந்தது.

“சார்ர்ர்ர்ர்…”

இவன் புறம் திரும்பியவன் என்னவென்று கேட்டான்,
விழிகளினால்.

“சார் உங்க பேரு என்னன்னு கேக்கறாங்க..?”

அவன் சிரித்தான்,
இதழ் விரிக்காமல்.
அந்த மென் புன்னகைக்கே அவனின் இடது கன்னக்குழி தலைகாட்டியிருந்தது.

அந்த புன்னகையில் அறிய முடியாத அவன் மட்டுமே அறிந்த ஆயிரம் அர்த்தங்கள்.

“யென்ன சார் சொல்ல..”

ஒரு நொடி தான் யோசித்தான்.
“டேன்ஜர்னு சொல்லு..”
என்றான்.
இதழ்களில் புன்னகை நிலைத்திருந்தது.

அவன் தன் ஜீப்பை நோக்கி நடக்கத் துவங்க அவனை குழப்பத்துடன் பின் தொடர்ந்தான்,
மற்றையவன்.

தொடரும்.

🖋️அதி…!
2023.04.25