Advertisement

மௌனமாய்…

அத்தியாயம் 02

மாலைநேரம்…
சற்று பதட்டத்துடன் தான் இருந்தாள்,
மகா.

சரியென்று சொல்லிய பின் மறுக்க முடியாது..
ஆனால்,
பின் விளைவுகளை எப்படி கையாள்வது என்பது பற்றி உள்ளூர சிறிது கலக்கம் தான்,
பெண்ணுக்கு.

ஒத்துக் கொண்டிருக்க கூடாதோ என்ற எண்ணமும் அவ்வப்போது எட்டிப்பார்க்காமல் இல்லை.

ஆனால்,
இப்போது எதையும் மாற்றிட இயலாதே.
குழப்பமான மனநிலையுடன் அவள் இருக்க அழைப்பு மணி ஒலிக்கப்பட யாரென்று தெரியாமலா இருக்கும்…?

பரபரப்புடன் கதவை திறந்து வெளியே நின்றிருந்தவளை உள்ளே இழுத்து பட்டென சாற்றினாள்,
கதவை.

மகாவின் செயலில் என்றும் போல் இன்றும் புன்னகை எழத்தான் செய்தது,
வைஷ்ணவிக்கு.

“யென்ன மகா..வீட்ல யாரயும் காணோம்..”

“யெல்லாரும் வெளில போயிருக்காங்க..அதான் உன்ன வர சொன்னேன்..”

“அப்போ இது சீக்ரெட் மீட்டிங்கா..”

“பின்ன..யாராவது பாத்தா காது கிழிர வர அட்வைஸ் தான்..”

“ம்ம்ம்ம்..இதெல்லாம் ரொம்ப ஓவர்டி..பாத்துக்க..”

“ஓவரோ..ஸ்டார்ட் அப்போ..வந்த வேலய மட்டும் பாப்போம் வா..”
கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவளை தன்னறைக்கு கூட்டிச் சென்றாள்.

வைஷ்ணியோ சிரிக்க முயன்ற தன் இதழ்களை அடக்கிக் கொண்டாள்,
கடினப்பட்டு.
சிரிப்பதை பார்த்து விட்டால் மகா ஏகத்துக்கும் பொறிந்து தள்ளுவாள் என்பது அவள் அறிந்த விடயம் ஆயிற்றே.

கட்டிலில் அமர்ந்திருந்த தோழியை கனிவுடன் பார்த்தாள்,
வைஷ்ணவி.

கல்லூரியில் துவங்கிய நட்பு தான்.
ஏனென்று தெரியவில்லை,
மகா மீது அவளுக்கு சொல்லத் தெரியாத ஒரு பாசம்.
அத்தனை பிடிக்கும் அவளை.

அதனால் தானே,
இத்தனை முயல்கிறாள் அவள் வாழ்வை வெளிச்சப்படுத்திட..!

“மகா..”

“நா சொன்னத யோசிச்சு பாத்தியா..”

“ம்ம்ம்..”
என்றாள்,
கட்டிலின் மீது அமர்ந்திருந்த அவளுக்கு பின்னே பார்வையை செலுத்திய படி.

“யென்னோட கண்ண பாத்து சொல்லு மகா..”

“உண்மய தான் சொல்றேன் வைஷு..
எனக்கு ஓகே..”

“ம்ம்ம்ம்ம்..”

வைஷ்ணவி ஒப்புக் கொண்டாலும் அத்தனை எளிதில் நம்பிட முடியவில்லை,
தோழியை.

அவள் மறுக்க தான் எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கையில் இப்படி தனக்கு வேலை வைக்காது அவளும் ஒத்துக் கொண்டால் நம்புவது சற்று சிரமம் தானே.

கதிரையில் அமர்ந்து மேசை மீதிருந்த பென்சிலை உருட்டிக் கொண்டிருந்த தோழி மீது ஆராய்ச்சியாகத் தான் படிந்தது,
வைஷ்ணவியின் பார்வை.

“நெஜமாதா தான் சொல்றியா மகா..?”

“ம்ம்ம்ம்..”

“அலும்பு பண்ணாம ஒத்துகிட்டு இருக்க..யென்ன ரீசன்…?”

“………”

“சரி..சரி மொறக்காத..ரொம்ப ஷாக்க இருந்துச்சா..அதான் கேட்டேன்..”

“ஒத்துக்கலனா யென்னோட மனசே யென்ன கொன்னுரும்..
அதுக்காக தான்..”

“ம்ம்ம்..அதான பாத்தேன்..”

“சரி..வந்த விஷயத்த பாப்போம்..”

“ம்ம்ம்..சரி..”

“உங்கண்ணன் பேரு மித்ரன்…இது மட்டுந்தான் யெனக்கு தெரியும்..மத்த டீடெயில்ஸ் எல்லாம் நீ தான் சொல்லனும்..அப்போ தான் உங்கண்ணன பழய மாதிரி கொண்டு வரலாம்..”
என்றாள்,
விட்டேற்றியான குரலில்.

மித்ரனின் விருப்பு வெறுப்புக்கள் , குணங்கள் பற்றி தெரிந்தாலும் அவனின் வழமையான நடவடிக்கைகள் பற்றி அவ்வளவாய் அறிந்ததில்லை,
அவள்.

“வா செல்லம்..அப்டி வா வழிக்கு..”
மனதில் நினைத்தவாறு
அவளின் நடவடிக்கை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்,
வைஷ்ணவி.

“சரி..”

“ம்ம்ம்ம்ம்..”

“எங்கண்ணன பத்தி சொல்லனும்னா..”

“அதா தான் கேக்குறேன்..பில்டப் பண்ணாம சொல்லு..”

“பேரு மித்ரன்..”

“அது தெரியாதா..சீக்கிரமா சொல்லு..எங்க வீட்டாளுங்க வந்துர போறாங்க..”

“ஹேய்..யென்ன இப்டி அதட்டுற..போ நா யெதுவும் சொல்ல மாட்டேன்..நீ வேற யார்கிட்டயாவது கேட்டுக்க..”
முறுக்கிக் கொண்டாள்,
மித்ரனின் தங்கை.

“ஐயோஓஓஓஓஓ….
அண்ணனுக்கு தப்பாத தங்கச்சியா இருப்பா போல இருக்கே..முடில..”
உள்ளுக்குள் நினைத்தவள் சமாளிப்பாக சிரித்தாள்,
வைஷ்ணவியை பார்த்து.

“இல்ல வைஷு..நீ சொல்லு நா யெதுவும் பண்ண மாட்டேன்..”
என்றாள்,
அப்பாவியான குரலில்.

“ம்ம்ம்..அது..”

“……….”

“அண்ணன் பேரு மித்ரன்..ரொம்ப ஸ்ட்ரிக்ட்..காலைல நாலர மணிக்கே எந்திருச்சுவாரு..”

“யேன் உங்க அண்ணன் சாமக்கோழியா..”
இயல்பான துடுக்கில் கேட்டு விட வைஷ்ணவியின் முறைப்பிலேயே அவளின் அசட்டுத்தனம் புரிய மெல்ல நாக்கை கடித்து ஒற்றைக் கண்ணை பொத்திக்க கொண்டு மன்னிப்பு கேட்க அசருவாளா..?
வைஷ்ணவி..!

“நீ இப்டி யேதாவது சொன்ன..நா கெளம்பிருவேன் பாத்துக்க..”
இல்லாத கோபத்கை வரவழைத்து போலியாகச் சொன்னாள்.

“இல்ல இல்ல..அப்டிலாம் பண்ணிராத..பழக்க தோஷத்துல வந்துருச்சு..நீ சொல்லு..”

“காலைல நாலர மணிக்கு எந்திரிப்பாரு..
வன் அவர் எக்சர்சைஸ்..”

“யென்னதுஉஉஉ”

“ம்ம்ம்ம்..டெய்லி பண்ணுவாரு..”

“பத்து நிமிஷம் எந்திரிச்சு நடந்தா தான யென்ன…
கால் ஒடஞ்சி போய்டவா போகுது..
யெப்போ பாரு தூக்கம் தான்..”
தினமும் தனக்கு விழும் வசவுகளை சரியான நேரத்தில் நினைத்துப் பார்த்தது,
அவள் மனது.

“மகாஆஆஆ”

“………”

“மகாஆஆஆஆஆஆஆ”

“ஹான்..”

“யென்ன கனவா..”

“இல்ல..இல்ல நீ சொல்லு..”

“அதுக்கப்றம் சத்துமா கஞ்சி குடிப்பாரு..”

“அப்போ காபி குடிக்கிறதில்லயா..?”

“ம்ஹும்..டீ காபி பால் யெதுவும் அவ்ளவா குடிக்க மாட்டாரு..எப்போவாச்சும் தான்..”

“யென்னது..?”
அதிரச்சியில் அவளுக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.

“இப்டி காபி டீன்னு குடிச்சிட்டே இரு..
உடம்புல ரெத்ததுக்கு பதிலா காபீ டி பால் எல்லாத்தோட மிக்ஸிங்கும் கலந்து ஓடப் போகுது..”
தோழி எப்போதும் கடுப்பில் திட்டுவது நேரம் காலம் தெரியாமல் நினைவில் வந்து தொலைக்க முயன்று தன்னை சமப்படுத்திக் கொண்டாள்,
பெண்.

வைஷ்ணவிக்கும் அவள் தன்னோடு ஒப்பிட்டு மிரள்வது புரிய சிறு புன்னகையொன்று இதழோரம்.

“மகா..”

“ஹான் சொல்லு..”

“அப்றம்..கரெக்டா எட்டு மணிக்கு ப்ராக்பாஸ்ட்..சாப்டுடு அப்டியே அவரு வேலய பாக்க கெளம்பிருவாரு..”

“ம்ம்ம்ம்..”

“அப்றம் வன் தர்ட்டிக்கி லன்ச்..
ஈவ்னிங் ஒரு போர் கு போல ஒரு க்ளாஸ் லெமன் ஜுஸ் சாப்டுவாரு..
அதுக்கப்றம் நைட் நைன்கு டின்னர்..”

“கொஞ்சம் இருடி..நானும் யெத்துன ஷாக்க தான் தாங்குறது..?”
என்றவள் தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்.

மித்ரன் நேர்த்தியானவன் என்று அறிந்தவள் தான்..
இப்படி நேரத்தையும் நேர்த்தியாக கையாள்பவன் என்பது அவள் அறிந்திடாத விடயம் ஆயிற்றே.

“வைஷு..”

“இது நெஜமாவே உங்கண்ணன் தானா..?”

“ஏய்ய்ய்ய்..யென்னடி..”

“இல்லபா..நானெல்லாம் பத்து மணிக்கு யெழும்பி பதினொரு மணிக்கு கால சாப்பாடு சாப்டுடு திரும்ப பசிக்கிறப்போ மதியம் சாப்புட்ற ஆளு..யென்கூட பழகுனதுனால உனக்கும் அந்த பழக்கம் தொத்திகிருச்சு..
அதே மாதிரி உன்கூட இருக்குறதால உங்கண்ணனுக்கும் அந்த பழக்கம் வந்து இருக்கனும்ல..
அவரு மட்டும் இப்டி பர்பெக்டா இருக்காறே..
அதா கேட்டேன்..”

“………”

“சரி சரி..மொறக்காத..சொல்லு..”

“நைட் டென் தர்டிக்கு தூங்கப் போய்ருவாரு..”

“பத்தர நாலர..அப்போ உங்கண்ணன் ஆறு மணி நேரம் தான் தூங்குவாரு..”

“ம்ம்ம்ம்ம்..”

“சரி நெக்ஸ்ட்..”

“இப்போ எங்க அண்ணனுக்கு புடிக்காத விஷயங்கள சொல்றேன்..ஓகே..”

“ம்ம்ம்ம்ம்”

“வளவளன்னு பேசுனா புடிக்காது..”

“அது தெரியுமே..நாம வாய மூடவே மாட்டோமே..நெக்ஸ்ட்..”

“யெல்லாம் ரொம்ப நீட்டா இருக்கனும்..”

மகாவின் அனுமதி கேளாமலே அவள் பார்வை என்றுமில்லாமல் தன் அறையை சுற்றிச் சுழன்றது.

அலங்கோலமாய் கிடந்த மேசையும்..
பொருட்களும் நேர்த்தி என்ற வாசனையை கூட உணர்ந்து இருக்காததை பறை சாற்ற அவளிடமிருந்து பெருமூச்சொன்று.

“ஹும்ம்ம்..நெக்ஸ்ட்..”

“சுத்தி இருக்குற யெடம் மட்டுல்ல..தானும் நீட்டா இருக்கனும்..
ஐ மீன் ஒழுங்கா ட்ரெஸ் பண்ணனும்..
தன்ன பத்தி கேர் பண்ணிக்கனும்..”

இருமி விட்டாள்,
பெண்.
அறிந்தவை என்றாலும் மீண்டும் கேட்கும் போது அதிர்ந்தது உண்மை தான்.

அனிச்சையாக அவள் கைகள் தன் கலைந்த தலைமுடியை சரி செய்ய முற்பட்டிட கண்களோ மதியம் குளித்து விட்டு அணிந்திருந்த நைட்டியையும் அதற்கு சம்பந்தமே இல்லாதவாறு தோளில் விரிந்து கிடந்த துப்பட்டாவையும் கணுக்காலுக்கு கீழே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த ஜீன்ஸையும் ஆராய்ந்து சுணங்கிப் போனது.

“யப்பாஆஆஆஆ..நெக்ஸ்ட்..”

“கண்ட கண்ட டைம்ல சாப்டா புடிக்காது..”

“நா சாப்டாத டைம் தான கம்மி..நெக்ஸ்ட்..”

“அமைதியா அடக்கமா இருக்கனும்..”

“ஆல் அவுட்டு..ஆள விடுடி..நா இந்த மிஷன ட்ராப் பண்றேன்..”
என்றாள்.
அவளுக்கு தனை மீறியதோர் கலக்கம்.

“மகாஆஆஆ”

“பின்ன யென்னடி..உங்க அண்ணன ப்ரெண்டு புடிக்கவே யெனக்கு ரெண்டு வருஷம் தேவப்படும் போல இருக்கு..
அதுக்கப்றம் நல்ல ப்ரெண்டா மாறி நீங்க பாத்துருக்குற பொண்ண கல்யாணம் பண்ண சம்மதம் சொல்ற மாதிரி அவரு மனச மாத்தனும்னா அவருக்கு அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும்..பாத்துக்க”

கேலியை கைவிட்டு விட்டு தீவிரமாக தான் சொன்னாள்,
மகாலக்ஷ்மி..!

பின்னே,
அவளும் என்ன தான் செய்வாள்..?
மித்ரனை மாற்றுவதற்கு உதவி புரிவதாய் ஒப்புக் கொண்டவளுக்கு அவன் அப்படியே தலைகீழ் எனத் தெரிந்தாலும் சற்று பயமாக இருந்தது,
இப்பொது.

“ப்ளீஸ் மகா..”

“சும்மாலே உங்க அண்ணனுக்கு யென்ன புடிக்காது..யென்ன பாத்தாலே அவரு மொகத்துல கடுகு வெடிக்கும்..அப்டி இருக்கும் போது…”

” ………”

“கொஞ்சம் பயமா இருக்குடி..அது மட்டுல்ல..உங்கண்ணன வீட்லே இருக்குறாரு..அப்போ   நா யெங்க மீட் பண்ணி ப்ரெண்டு புடிக்கிறது..?”

“அண்ணன் டெய்லி சாயந்தரம் அஞ்சர ஆகும் போது இங்க உங்க வீட்டு பக்கத்துல இருக்குற லைப்ரரிகு வந்துரும்..அங்க மீட் பண்ணலாம்ல..”

“ம்ம்ம்..சரிதான்..
ஆனா யென்னமோ போல இருக்குடி..”

“ப்ளீஸ் மகா..யெனக்கு வேற யார்கிட்டயும் ஹெல்ப் கேக்க முடில..நீதான் ஹெல்ப் பண்ணனும்..நீதான நம்ம ரமேஷ பேசி திருத்தி மாத்தி எடுத்த..”

“பக்கிப் பயலே..அவன் சின்ன வயசுல இருந்து தெரிஞ்சவன்டி..
கேரக்டரும் கொஞ்சமா ஒத்துப் போகும்..
அதான் சொல்றத கேட்டு மாறிட்டான்..
உங்கண்ணன் அப்டியா..?”
ஒற்றைப் புருவத்தை ஏற்றி விழிகளிலும் கேள்வியை படரவிட்டு அவள் கேட்க சின்னச் சிரிப்பொன்று உதயமானது,
வைஷ்ணவியின் முகத்தில்.

“மகாஆ..
யெங்கண்ணன பத்தி தெரிஞ்சு தா உங்கிட்ட ஹெல்ப் கேக்குறேன்..
ப்ளீஸ்டீஈஈஈஈஈஈஈஈஈ”

அவள் இத்தனை கேட்டும் மறுக்க முடியவில்லை அவளால்.
ஆமென்று சொல்லியும் விட்டதாயிற்றே.

ஒப்புக் கொண்டாள் பெண்,
பின் விளைவுகள் பற்றி அறியாமல்.

“வைஷு..”

“ம்ம்ம்ம்..”

“யெனக்கு ஒரு டவுட்..”

“யென்னடி…”

“உங்கண்ணனுக்கு பொண்ணு பாத்துட்டீங்கல..”

“ஆமா..”

“பேசாம அந்த பொண்ணயே இந்த மிஷன்ல யெறக்கினா என்ன..?”

“அதான்டி உன்ன யெறக்குறோம்..”

“வைஷு..யென்ன பதிலயே காணோம்..மைண்ட் வாய்ஸா…”

“ஹான்..அதுவா..
அந்த பொண்ணு ரொம்ப பயந்தாங்கொல்லிடி..
அண்ணன் ரெண்டு திட்டு திட்டுனாலும் பயந்து ஓடிரும்..”

“ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்”

“ம்ம்ம்ம்ம்..”

“சரிஇஇ..அந்த பொண்ணுக்கு விஷயம் தெரியும் தான..”

“யெது..”

“உங்கண்ணன் கிட்ட நா ப்ரெண்டா பழக போறது..”

“ஆமா..”
வேகமாக ஆட்டினாள்,
தலையை.

“வைஷு..திரும்ப ஒரு தடவ அந்த பொண்ணுகிட்ட சொல்லிரு..
அப்றம் தப்பா நெனச்சிக்க கூடாதுல்ல..
அப்டியே யேதாச்சும் நடந்தா யென்னால தான் உங்கண்ணன் வாழ்க்க பாழாப்போன மாதிரி ஆய்டும்..
புரிதுல..?”

“ஆமாடி..நா சொல்லிட்டேன்..”

“சரி..அந்த பொண்ணுக்கு உங்கண்ணன புடிக்குமா..?”

“புடிக்குமே..”

“உங்கண்ணனுக்கு..”

“கண்டிப்பா புடிச்சுரும்..”

ஏனென்று தெரியவில்லை,
அப்படி ஒரு நிம்மதி அவள் மனதில்.
மித்ரனின் வாழ்க்கை இனி சீராகிடும் என்று தோன்றிற்று.

மகாவின் முகத்தில் தோன்றிய நிம்மதியை கண்டு பிரம்மித்து தான் போனாள்,
வைஷ்ணவி.

இன்னும் பிடித்தம் கூடிக் கொண்டு தான் போனது,
தோழியின் மீது.

“சரி..இரு காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்..”
என்றவள் அறையில் இருந்து வெளியேற கனிவுடன் தோழியை பார்த்து நின்றாள்,
வைஷ்ணவி…!

           ●●●●●●

அந்த பூங்காவில் மனம் வெறுத்தவனாய் அமர்ந்திருந்தான்,
அவன்.

மனதோ பலவித எண்ணங்களின் பிடியில் குமுறிக் கொண்டிருந்தது.

உறவோ…
நட்போ…
காதலோ…
எல்லாம் அவரவர் தேவைக்காக தான் என்று தோன்றிற்று.

அவன் காதல் கற்றுக் கொடுத்த காயம் அது.
இனி அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்று திடமாய் முடிவெடுத்து இருந்தாலும் அவ்வப்போது அவள் நினைவுகள் தொட்டுச் செல்வது உண்மையே.

அவன் அறிந்து அவன் தாய்க்கு பின் நேசித்த முதல் பெண்..
அதனாலோ,
என்னவோ மறப்பது ஒன்றும் அத்தனை எளிதாய் இருக்கவில்லை.

இருவர் மனதிலும் காதல் இருந்தது.
சிந்தனைகள் ஒத்துப் போக அவர்கள் இருவர் இடையேயும் தம்மை கேட்காமலே காதல் துளிர்விடத் தான் செய்தது.

காதலை வெளிப்படையாக  சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் அடுத்தவருக்கு தன் மீது காதல் இருப்பதை அவரவர் மனது அறிந்து தான் இருந்தது.

இல்லை..இல்லை..
அவனுக்கு மட்டும் தான் அது காதல்.
அவளுக்கு வந்தது வெறும் ஈர்ப்பாக தான் இருந்திருக்கும்.

இல்லையென்றால்,
விபத்தில் அவன் குரலை இழந்தாலும் விட்டுச் சென்றிருப்பாளா…?
அவள்…!

“விஷு..நா உன்ன லவ் பண்ணேன் தான்..
உன் மேல பர்ஸ்ட நா அட்ராக்ட் ஆக காரணமே உன் வாய்ஸ் தான்..
இப்போ உண்மய சொல்றேன் விஷு..
உன் கூட லைப் லோங் இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு..
நீ யென்னோட ட்ரீம்ஸ்கு சப்போர்ட் பண்ணுவனு தோணுச்சு…
ஆனா இப்போ அது முடியாது..
யென்னால லைப்லோங் சாக்ரிபைஸ் பண்ணிகிட்டு வாழ முடியாது..
அது மட்டுல்ல ஒரு ஊமய யென்னோட லைப் பார்ட்னரா யேத்துக்குற அளவு பரந்த மனசும் யென்கிட்ட இல்ல..
எக்ஸ்பிரஸ் பண்ணிகாட்டியும் நா உன்ன லவ் பண்ணது உனக்கு புரிஞ்சுருக்கும்னு தோணுது..
எனிவே நாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்..”
குரல் இழந்து தவித்துக் கொண்டிருந்தவனின் மனதில் அவள் பேசிய வார்த்தைகள்
இன்னும் பச்சை புண்ணாய்…!

ஊமை…
எத்தனை ஆழமான உண்மை…!

அவள் சொன்னதும் நியாயமாய் தான் தோன்றிற்று..
அவனுக்கு..!

தனக்கு குரல் போனதற்காக அவள் தனது வாழ்க்கையை பாழாக்க வேண்டிய அவசியம் இல்லையே.

ஆனால்,
அவனுக்கு ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
அவளுக்கு அந்த விபத்து நடந்து குரல் போயிருந்தால் நிச்சயம் அவன் விட்டுச் சென்றிருக்க மாட்டான் என்பது.

அவன் மனதை அவள் உணராமல் போனது அவள் பிழை தான்.

ஆனால்,
நாளை அவள் உணராமல் போனதே அவனுக்கு வரமாகிடப் போவது அவன் அறிந்திடாதது.

அவள் தன் கருத்தை சொன்னாள்..
ஆனால்,
சொன்ன இடமும் சந்தர்ப்பமும் பிழையானதே.

காயம் ஆறுவதற்கு மருந்திட கத்தியால் கீறிடுவதும்…
பச்சைப் புண்ணின் மேல் கத்தியால் குத்துவதும் ஒன்று இல்லையே.

ஒருவேளை,
இடம் பொருள் ஏவல் பார்த்து அவள் தன் எண்ணத்தை எடுத்துரைத்து இருந்தாலும் அவனுக்கு வலி சற்று குறைந்திருக்குமோ
என்னவோ…?

விழிகளுக்கு இமையினால் திரையிட்டுக் கொண்டான்,
அவன்.

சிறுவர்களின் சிரிப்பொலியும்..
விளையாடும் அவர்களின் மீதான
பெரியவர்களின் கண்டிப்பு குரலும் கேட்க அதில் தனை மறந்து லயித்தான்,
அவன்…!

அவனுக்கு இந்த வலிகளில் இருந்து விடுதலை வேண்டும்.
அதற்கு தான் இந்த பூங்காவுக்கு வருவதும்..
புத்தகத்தில் மூழ்கிப் போவதும்..
அவனுக்கான தற்காலிக
ஆறுதல்கள் இவை.

பூங்காவில் அமர்ந்து இருந்த அவனை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்,
மகா.

தான் எத்தனை மறுத்தும் தன்னை இங்கு விட்டுச் சென்ற வைஷ்ணவியின் மேல் மலையளவு கோபம் வந்தது.

ஆனால்,
என்ன செய்திட இயலும்..?
ஒப்புக் கொண்டது தான் தானே.

விழிகளை மூடி எதில் இருந்தோ தப்பிக்க முயல்வது போல் அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவள் மனதை அசைத்து பார்த்தது,
ஆழமாய்..
ஏனோ…?

அவளுக்கு மனம் வலிப்பது போல் இருக்க….
“மகி..என்ன இது..நீ யெதுக்கு இப்போ எமோஷன் ஆகற..கூல்..
காம்டவுன் மகி..காம்டவுன்..”
தன்னை சமப்படுத்திக் கொள்ள முயன்றாள்,
பெண்.

ஆனால்,
அத்தனு எளிதான காரியமா அது..?

அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.
அவன் கண்களில் சிக்காத இடத்தில் அவள் அமர்ந்திருந்து தன் நெஞ்சை நீவி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

பட்டென அழுவதும்..
சட்டென உணர்ச்சிவசப்படுவதும்..
அவள் பழக்கம் இல்லை.
இப்போது மட்டும் அவள் மனம்,
முரணாய்.

அவனிடம் என்ன பேசுவதென்ற யோசனை வேறு..
மண்டையை குழப்பியது.

“யென்ன பேசலாம்..”

“பேசாம போயிரலாமா..?”

“வைஷு பிசாசு வேற திட்டுவாளே..”

“ம்ஹும்..கை கால் வேற ஆடுது..நாளக்கே ஸ்டார்ட் பண்ணலாம்..”

“ஆமா..ஆமா..அது தா கரெக்ட்..இந்த பயர்பேங்க் கண்ணாலே பஸ்பமாக்கிரும்..”

“பேசாம கெளம்பிரலாம்..”
தனக்கு தானே பேசி ஒரு முடிவை எடுத்துக் கொண்டாள்,
பெண்.

அவளை கடந்து செல்பவர்கள் விசித்திரமாக பார்ப்பதை கணக்கில் கொள்ளவில்லையே,
அவள்.

தீர்மானமாக எண்ணிக் கொண்டவள்,
ஒருவாறு பூங்காவின் வாயிலுக்கு
வர…

அங்கு தன்னையே முறைத்தபடி நின்றிருந்தவனை கண்டதும்..
இன்னும் விரிந்து கொண்டன,
அவளின் அகன்ற விழிகள்.

தொடரும்.

🖋️அதி…!
2023.04.17

Advertisement