Advertisement

*மௌனமாய்…*

*அத்தியாயம் 04*

“யார் அது..?
எனக்கு அழைத்திருப்பது..?”

ஏதோ
ஓர் எண்ணம் என்றுமில்லாமல் வந்து அலை மோத அழைப்பெடுத்து விட்டான்,
மித்ரன்.

தலையை துவட்டிக் கொண்டிருந்த கைகள் அழைப்பு வந்திருப்பதை கண்டதுமே,
வேலை நிறுத்தம் செய்து விட்டிருந்தன.

அவன் செயலில் அவனுக்கே திகைப்பு தான்.
யாருடனும் பேச விரும்புவதில்லை..
அவன்.

அவனின் அலைபேசிக்கு தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் இருக்கும்.

அவன் குரல் இழந்ததில் இருந்து
அவ்வப்போது,
நண்பர்களுக்கு அழைப்பெடுத்து விட்டு துண்டித்து விடுவான்.

சம்பாஷணைகள் எல்லாம் குறுஞ்செய்திகளில் தான்.

அப்படி இருக்க..
அழைப்பு வந்ததும் அவன் தன்னிலை மறந்து மீண்டும் அழைப்பெடுப்பதும்..
சற்று வித்தியாசமானது,
தானே.

அழைப்பு போய்க் கொண்டிருந்தது.

அவனுக்கோ,
இந்த அழைப்பை மறுமுனையில் ஏற்று விட வேண்டும் என்று புதிதாய் ஓர் தவிப்பு.

அந்த தவிப்பை அறிந்திருக்க மாட்டாள்,
மறுமுனையில் இருந்த அவள்.

“டேக் இட்..டேக் இட்..டேக் இட்..”
அவன் மனம் கத்திக் கொண்டிருந்தது,
மௌனமாய்.

அவனின் அந்த கூரிய கருவிழிகள் இரண்டும் வழமைக்கு மாறாய் அவன் உணர்வுகளை பிரதிபலிக்க..
நேரெதிரே இருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன் அப்படியே நின்று விட்டான்,
அசையக் கூடிய மறுத்தவனாய்.

இமைகளின் முத்தம் நின்று போனது,
சில நொடிகளுக்கு.

அவனின் அந்த விழிகள்..
அதில் தெரிந்த பரிதவிப்பு..
படர்ந்திருந்த ஒரு வித ஆர்வம்…!

என்னவாயிற்று எனக்கு…?
மௌனமாய் கேள்வி கேட்டுக் கொண்டான்,
தனக்குள்ளே.

அழைப்பு மறுமுனையில் ஏற்கப்படாதிருக்க அலைபேசியில் வந்த சத்தத்திலேயே தன்னிலை மீண்டான்,
கட்டுண்டு கிடந்த உணர்விலிருந்து.

அலைபேசியின் ஒரு கணம் ஆழ்ந்து நோக்கினான்,
ஒரு வித தவிப்பை சுமந்த விழிகளுடன்.

ஏன் இந்த தவிப்பு…?
காரணம் தெரியாது,
அவனுக்கு.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படாதது,
அவனுக்கு மனதில் ஒரு வித ஏமாற்றத்தை தந்தது,
நிஜம் தான்.

ஏன் அந்த ஏமாற்றம்..?
எதற்கு இந்த தவிப்பு…?
என்ன நடந்ததால் இத்தனை சோர்வு..?
பதில் தெரியாத பல கேள்விகள் சுழற்றிப் போட்டது,
அவனை…!

தன் பிம்பத்தை நிலைக் கண்ணாடியில் ஏறிட்டான்.

“விஷ்வா..வாட் ஹாப்பன்ட்..ஜஸ்ட் ஒரு போன் கால்..அதுக்கு யேன் இப்டி ரியாக்ட் பண்ற..
ரிலாக்ஸ் விஷ்வா..ரிலாக்ஸ்..”
மௌனமாய்
தனக்குள்ளே பேசிக் கொண்டான்,
*விஷ்வமித்ரன்…!*

ஆனால்,
எத்தனை முயன்றும் அவன் மனச் சோர்வை தகர்க்க முடியவில்லை,
முழுதாய்.

மீண்டும் என்ன நினைத்தானோ..
அலைபேசியின் திரையை பார்த்தான்.
சிறு புன்னகையை சிதறவிட்டன,
அவன் இதழ்கள்.

அந்த தொலைபேசி இலக்கம்  அவன் மனதினில் ஆழப் பதிந்து போனது,
அவன் அறியாமலேயே.

மீண்டும் தலையை துவட்டிக் கொண்டு பால்கனிக்கு சென்றான்…
வழமைக்கு மாறாய் இதழ்கள் தாங்கியிருந்த  மெல்லிய புன்னகையோடு…!

அறக்கப் பறக்க குளித்து விட்டு தயாராகிக் கொண்டிருந்தாள்,
மகா.

ஏழுமணி என்றால் பத்து நிமிடங்களுக்கு முன்பு தான் வீட்டில் இருந்து கிளம்பும் பழக்கம் அவளுக்கு.

எத்தனை முறை முயன்று விட்டாள் அப்பழக்கத்தை மாற்றிட…!
எப்போதும் தோல்வி தான்.

ஈரம் சொட்டிய கூந்தலை தளர்வாகப் பின்னி பின்னே இட்டவள்..
துப்பட்டாவை சரி செய்து கொண்டு வந்தாள்,
உணவு மேசைக்கு.
தாய் ஒரு கனல் பார்வை பார்க்க கண்டாலும் காணதது போல் நகர்ந்து விட்டாள்,
பார்வையை வேறெங்கேயோ அலையவிட்ட படி.

நேரம் தாமதமாகி இருக்கவே,
அவசரகதியில் இட்லியை வாயில் அடைத்துக் கொண்டு
தன் அலைபேசியை நோண்ட அரண்டு விட்டாள்,
அவள்.

வாயில் நிறைந்து இருந்த இட்லியால் கன்னங்கள் உப்பிப் போயிருக்க..
இப்போது அதற்கு மேலாய் கண்களும் விரிந்து கொள்ள புறையேறப் பார்க்க ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு விட்டாள்.

அவளைக் கடந்து சென்ற அவளின் தாயோ
தன்னை ஒரு வித யோசனையுடன் பார்ப்பதை அறியவில்லை,
பெண்ணவள்…!

“ஐயையோஓஓஓஓஓஓ”
அலறியது அவள் அகம்.

“பெர்பெக்ட் நமக்கு கால் பண்ணி இருக்கே..கிறுக்கு புடிச்சவ..யெரும மாடு..”
தன்னையே திட்டிக் கொண்டாள்.
அவனிடம் இருந்து ஒரு அழைப்பு மட்டுமே வந்திருக்க அதுவே,
அவளுக்கு பெரும் நிம்மதியாய்.
அந்த ஒற்றை அழைப்பு சொன்னது,
அவன் தனக்கு அழைத்தது யாரென்று கண்டுபிடிக்க முயலவில்லை என்று.

அவன் மன எண்ணத்தை எப்படி அறிந்திடுவாள் அவள்…?

நேரம் நெருங்கிக் கொண்டிருக்கவே அவனைப் பற்றிய யோசனை எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது,
தற்காலிகமாக.
நிரந்தரமாக பின் தள்ள விட்டிடுவானா அவன்…?
இல்லை,
அது அவளால் தான் இயலுமா…?

அடித்து பிடித்து பேரூந்து நிறுத்ததைத் அடைந்ததாயிற்று.
அவள் கழுத்திலும் நெற்றியிலும் ஆங்காங்கே வியர்வை முத்துக்கள் துளிர்த்திருந்தன.

பாதையை எட்டிப்பார்ப்பதும் கைக்கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தவளை காக்க வைக்காமல் பேரூந்து வர ஏறியவள் யன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டாள்.

முகத்தில் மோதிச் சென்ற அந்த காலை நேர மென்  காற்றும்..
அந்த நேரம் நிலவிய இதமான வானிலையும்  அவள் பதட்டத்தையும் அழுத்தத்தையும் சற்றே குறைத்திருந்தன.

கண்களை மூடிக் கொண்டு முன் இருக்கையின் கம்பியில் தலை வைத்து சாய்ந்து கொண்டாள்,
அவள்.
தன் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயன்றாள்.

எத்தனை முயன்றும் அவள் மனதின் சிறு துளி இடத்தில் வந்து நின்றான்,
அவன்…!

பின்னந்தலையை அழுந்தக் கோதி,
விசிலடித்தான்…!
இதமான புன்னகையை இதழில் இருத்தி இழுத்துப் போட்டான்…!

தனக்குள் புன்னகைத்து கொண்டாள் அவள்,
மெல்லமாய்.

அவன் புன்னகை…!
அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
இதழ்களோடு சேர்த்து விழிகளும் சிரிக்க அவன் அதரங்களின் அரும்பிடும் அந்த அழகிய புன்னகை..!

ரசிப்பவர்களை ரசிக்கச் செய்திடும்.
விரும்புவர்களை லயித்திடச் செய்யும்.
ஏனோ,
அவன் இப்போதெல்லாம் அப்படி புன்னகைப்பதில்லை.

அந்த புன்னகையை கொண்டு வந்திடத் தானே,
இத்தனை போராடுகிறாள் அவள்.

என்னதான், அவனைப் பிடித்தாலும் மித்ரன் என்றால் இவளுக்கு அத்தனை பயம்.
சில நேரம் அவன் அதட்டலில் கண் கலங்கியதுமுண்டு.

இன்னும் நான்கு நிறுத்தங்கள் கடந்திட வேண்டும்.
அதன் பின்னர் தான் அவள் பணியிடம்..!

அதே,
நிலையில் தான் அவள்.

ஆங்காங்கே ஆட்கள் ஏற நிரம்பத் தொடங்கியது,
பேரூந்து.
அவளின் அருகில் இருந்த வெற்று இடத்தில் யாரோ வந்தமர்வது புரிய..
கொஞ்சமே கொஞ்சமாய் இமை திறந்து விழி உயர்த்தி பார்க்க…

தொட்டுக் கொள்ள மறந்தன அவள் இமைகள்.
அவன் பெயரை உச்சரித்து தமக்குள் தொட்டுக் கொண்டன அவள் இதழ்கள்.

அவன் தான்..!
அவனே தான்..!
அவள் சம்மதம் கேளாமலே
அகன்ற விழிகள் விரிந்து தமக்குள்  அவன் விம்பத்தை நிரப்பிக் கொண்டன.

படபடத்தது அவள் இதயம்.
இதயத்தாளம் எக்குத்தப்பாய் எகிறி இருந்தது.

“நிஜமா…?
இல்லை,சிந்தனைகள் முழுக்க அவனைச் சுற்றி வருவதால் கனவு காண்கிறேனா…?”
தன்னிடம் கேட்டுக் கொள்ள அவள் கைகள் மறுகையை கிள்ளிப் பார்த்து அவன் நிஜம் தான் என்பதை,
பறைசாற்றின.

என்ன நினைத்தாளோ..
சட்டென தன் விழிகளை தாழ்த்தி இமைகளால் அழுந்த திரையிட்டுக் கொண்டாள்.

அவன் தான்…
அவனே தான்…
துள்ளியது,
ஆழ்மனம்.

மெலிதான நீர்ப்படலம் அவள் விழிகளில்.
அவள் மனம் ஒரு நிலையில் இல்லை என்பது அவளுக்கே புரிந்தது.

பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டாள்.
கைகள் தாமாகவே இறுகப் பிணைந்து கொண்டன.

“ஏன் இவன் பேரூந்தில்..?”
எண்ணம் மீண்டும் தாவியது,
அவனிடம்.

பொதுவாக அவன் பேரூந்துகளில் பயணம் செய்வதில்லை.
அலைச்சலும் நெருக்கமும் அவனுக்கு பிடிக்காத ஒன்று.

அப்படி இருக்கையில்,
இன்று பேரூந்தில்…?

என்னதான் முயன்றும் விழிகள் அவள் கட்டளையை ஏற்க மறுத்தன.
ஓரப் பார்வையால் அவன் முகத்தை துழாவி அவன் வதனத்தின்  விம்பத்தை பொதிந்து கொண்டன,
தமக்குள்.

கண்களில் இழையோடிய ஒரு வித சோகம்…
இறுகிப் போய் சிரிக்க மறுத்த அவன் இதழ்கள்…

முகத்திலோ அலைப்புறதலின் ரேகைகள்.
ஓரிரு நொடிகளுக்குள்ளே அவன் முகத்தை துல்லியமாய் படித்திருந்தாள்,
மகா…!

எதைச்சையாக அவன் பார்வை அவள் மீது படியும் சாத்தியக் கூறு  இருப்பதால்
மீண்டும் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

“ஒரே ஒரு தடவ சிரிச்சுடுங்க மித்து பாஸ்”
மானசீகமாய் கேட்டுக் கொண்டாள்,
அவனிடம்.
இவை,
எல்லாவற்றிற்கும் மேலே பயம் வேறு.

சட்டென ஒரு வித தவிப்பு.
“யெப்டி டிக்கேட் எடுப்பாரு…?”

இமைகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.
அவன் மீண்டும் காயப்பட்டு விடுவானோ என்ற பயம்.
அப்படி நடந்து விடக் கூடாது என்ற தவிப்பு.

அதற்கென்று,
அவளால் எதையும் செய்திட இயலாதே.
அவனுக்கு தான் அவளை பிடிக்காதே.

“கடவுளே…மித்து பாஸ் ஹர்ட் ஆகிரக் கூடாது..ப்ளீஸ்..யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது..ப்ளீஸ் கடவுளே..ப்ளீஸ்..ப்ளீஸ்..”
இறைஞ்சினாள்,
கடவுளிடம்.

அவள் முன்பே பயணச்சீட்டை பெற்றதாயிற்று.
அதனால்,
அவனிடம் மாட்டிக் கொள்ளத் தேவையில்லை.

சத்தம் போட்டுக் கொண்டே நடத்துனர் அவன் அருகில் வருவது புரிந்தது.

“ப்ளீஸ் கடவுளே…ப்ளீஸ்..அவரு ஹர்ட் ஆகிர கூடாது”
அடித்துக் கொண்டது,
அவள் மனம்.

பேசாமல் தானே அவன் இறங்குமிடத்தை சொல்லிடுவோமா என்ற எண்ணமும் மனதோரம் வரத் தான் செய்தது.

ஆனால்,
அது அவனுக்கு பிடிக்காதே.
என்ன உரிமையில் அவள் செய்ய..?
அப்படியே அவன் கேள்வி கேட்டாலும் என்ன பதில் சொல்ல..?

விழியுயர்த்தி அவனை பார்த்தாள்.
அவன் நடத்துனரிடம் கோயில் போன்று சைகை செய்வதும் அவர் “சரி தம்பி” என்று புன்னகையுடன் பயணச் சீட்டை கொடுத்து விட்டு கடந்து செல்வதும் வீழ்ந்தது,
அவள் விழிகளில்.

அந்த நொடி தான்,
நிம்மதியாய் உணர்ந்தது அவள் மனம்.

“ரொம்ப தாங்கஸ் முத்தண்ணா..”
மனதில் நன்றி சொல்லிக் கொண்டாள்,
அந்த நடத்துனருக்கு.

சுற்றி யாரினதும் பார்வை அவன் மீது வித்தியாசமாய் வீழாது இருந்தது,
அவனை விட அவளுக்கே பெரும் நிம்மதியாய்.

தவறுதலாக கூட அவன் பார்வை இவள் புறம் திரும்பவில்லை.

அவள் பார்வை அவன் அவனது மடியில் வைத்திருந்த கை மீது படிந்தது.
நாவிரல்களும் உள்ளங்கையும் அலைபேசியை தாங்கியிருக்க பெருவிரல் அலைபேசியின் முகப்பு பகுதி  விளிம்பை அழுத்தமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஏதோ,
சிந்திக்கிறான் அவன்.
அதனால் தான்,
அவனின் பார்வை சற்றும் படிந்து மீளவில்லை,
அவள் புறம்.

அவள் ஒரு கணம்,
அவனை ஓரக்கண்ணால் ஆழ்ந்து பார்த்து விட்டு தலையை  திருப்பி பார்வையை யன்னல் புறம் பரவ விட்டாள்.

இலக்கின்றி பார்வை படிந்திருந்தது.

எண்ணவலையில்
ஏதேதோ நினைவுகள்…
இன்னும் ஆறிப்போகாத காயங்கள்…
சற்றே வலியைத் தந்திடும் நிதர்சனங்கள்…

விழிகள் கலங்கி ஒரு துளி கண்ணீர் கன்னத்தை தொட்டுக் கொண்டு வந்து மடியின் வைத்திருந்த அவள் உள்ளங்கையில் மோதி நின்றது.

அந்த கணம் தான்
தனை மீறி கண்ணீர் வழிவது புரிந்தது,
அவளுக்கு.

தன்னையே நொந்து கொண்டாள்.
மித்ரனின் அருகாமையில் அவள் பலவீனமாவது புரிந்தது.

“மகி..காம்..காம்..காம் டவுன்..யெதுக்கு இப்டி அழுதுகிட்டு இருக்க..
அதுவும் பஸ்ஸுல..”
தன்னை திட்டிக் கொண்டாள்.

பேரூந்தில் யாரின் கவனத்தையாவது தன் செயல் தன் மீது திருப்பி இருக்குமோ என்கின்ற அலைப்புறுதல் வேறு.

உள்ளங்கையில் விழுந்திருந்த ஒற்றைத் துளி கண்ணீரை பார்த்தாள்.
ஒய்யாரமாய் வீற்றிருந்தது.

துடைக்கத் தோன்றவில்லை,
அதனை.
யாரும் பார்த்திட மாட்டார்கள் என்கின்ற தைரியத்தில் அதை துடைத்திடாமலேயே வெளியில் பார்வையை பதித்தாள்.
விழிகளின் நீர்த்திரள் வற்றிப் போயிருந்தது.

மித்ரனின் பார்வை அவளில் படியவில்லை.
அவளின் உள்ளங்கை தாங்கியிருந்த கண்ணீர்த் துளியின் மேல் படிந்து நின்றது,
சில நொடிகளுக்கு.

எதேச்சையாக அவள் புறம் திரும்பியிருந்தான் அவன்.

அவளின் பிடரிப் பகுதியே அவள் பார்வையில் விழ
“பஸ்ஸுல தூங்குது..இடியட்..”
திட்டிக் கொண்டான்,
அவன்.

அவனுக்கு இப்படி தூங்கி வழிவது பிடிக்காது.
அதுவும் பொது இடங்களில்…!
அறவே பிடிக்காது.

அவளை முறைத்தவன் முன்னே திரும்பும் போதே அவளின் கண்ணீர்த்துளி பட்டது அவன் கண்களில்.

சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தான்.
அவள் தூங்கி இருக்கவில்லை,
என்பது புரிந்தது.

“யாரிவள்..?
ஏன் அழுகிறாள்..?
என்னவாம் அவளுக்கு..?
மனதிடன் கேள்வி கேட்டான்,
அவன்.

யாரோ அழுகிறார்கள்..
என்னவோ பிரச்சினை அவர்களுக்கு..
என்று நினைத்துக் கொண்டு விட்டுப் போயிட முடியவில்லை,
அவனால்.

அவன் கண்ணீர் கண்டு அவனுக்குள்ளும் ஏதோ பாரம் ஏறியது போன்றதோர் உணர்வு.

“விஷ்வா..வட் த ஹெல் ஈஸ் திஸ்..
யாரோ ஒரு பொண்ணு யெதுக்கோ அழுகுறா..நீ யெதுக்கு கவலபட்ற..
இவளவும் அவள போல அழுது சீன் க்ரியேட் பண்றவ போல இருக்கு..உன் வேலய மட்டும் பாரு..”
திட்டித் தீர்த்து ஒரு முடிவுக்கு வந்தவன்,
கண்மூடி சாய்ந்து கொண்டான்.

மூடிய விழிகளில் அந்த ஒற்றைத் துளி கண்ணீர்.

“விஷ்வாஆஆஆஆஆஆ”
கோபத்தில் வெகுண்டு சீறியது
அவன் மனம்,
மௌனமாய்.

அதன் பின் அவனும் சமப்பட்டு போனான்.
மறந்தும் திரும்பவில்லை,
அவள் புறம்.

அவள் இறங்கும் தரிப்பிடத்திற்கு முன்னே உள்ள தரிப்பிடத்தில் இறங்கி இருந்தான்,
அவன்.

அவன் இறங்கிப் போனது அவளுக்கு புரிந்தாலும் அவன் வெளியிருந்த தன்னை பார்த்திடக்கூடும் என்ற எண்ணமும் அப்போது எட்டவில்லை,
அவள் சிந்தையை.

அதை எல்லாம் துருவி யோசிக்கும் மனநிலை காணாமல் போயிருந்தது.

பயணிகள் நிரம்புவதற்காக பேரூந்து சற்று நேரம் நின்றிருக்க..
இறங்கி வந்த மித்ரனுக்கு அவன் அருகில் இருந்த பெண்ணை பார்த்திட வேண்டும் என்ற ஓர் எண்ணம்.

ஏனென்று காரணம் கேட்டாலும் மனம் மழுப்பியது,
பதில் சொல்லாமல்.

ஆனால்,
மனதில் கட்டளை மட்டும்..
அவளை பார்த்திடு என்பதே.

பேரூந்துக்கு வெகு நெருக்கமாய் அவன் நின்றிருந்ததால் எம்பிக் குதித்து தான் அவள் முகம் பார்க்க வேண்டும்.
அதற்கும் தயாராகியது அவன் மனம்.

வேறு நேரங்கள் என்றால்,
இப்படி அவன் செய்யவே மாட்டான்.
அதுவும் எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருப்பவன் பாதையில் இப்படி நடந்து கொள்வது நடந்திராத ஒன்றே.

அவனுக்கு மனதின் ஆணை முக்கியமாய் பட்டது.

யன்னல் கம்பியை பிடித்திருந்த அவள் கைகளை கண்டு கொண்டவன் அவள் அருகில் வந்து
கால்களை அழுத்தி துள்ளி எழுந்தான்,
அவள் முகம் பார்க்க.

ஆனால்,
அது முடியாமல் போயிற்று.

உள்ளிருந்த மகாவோ தனக்கு பக்கத்தில் விழுந்திருந்த கர்சீப்பை  எடுக்க கீழே குனிந்து இருந்தாள்.
அவன் எம்பிய போது அவளின் பிடரியே இப்போதும் கண்களில் பட்டது.

அவன் எம்பிக் குதித்து கீழே விழவும் அவள் குனிந்தெழுந்து மேலே வரவும் சரியாய் இருந்தது.

அவன் அவளைப் பார்க்கவில்லை.

“ஷட்ட்ட்ட்..”
தனக்குள் கூறிக் கொண்டான்,
அவன்.

அவளுக்கு தெரியாது,
அவன் அவளை பார்க்க முற்பட்டது.
தெரிந்திருந்தால் இன்னும் ஒடுங்கி ஒளிந்து கொண்டிருப்பாள் என்பது நிச்சயம்.

பேரூந்து கிளம்பி விடவே,
மித்ரனை பாதை வழியே நடக்கலானான்.

காலையில் உணர்ந்த அதே தவிப்பை இப்போதும் அவள் முகம் பார்க்க முற்பட்ட போது அவன் உணர்ந்து இருந்தான்.

அது அவனுக்கு புதிராய் இருந்தது.
அதிலும் தான் பாதை என்றும் பாராமல் இப்படி எம்பிக் குதித்து,
சற்றே கோபத்தையும் தந்தது.

“நமக்கு காலைல கால் பண்ணது இந்த பொண்ணா இருக்குமோ…?”
அவன் மனம் சரியாய் கணக்கு போட…
“லூஸா நீ..இப்டி நடக்க..சும்மா கிறுக்குதனமா யோசிக்காத விஷ்வா..”
தன் மனதை அடக்கினான்,
அவன்.

“விஷ்வா…ஒரு பொண்ணு கண்ணீர பாத்து ஏமாந்தது போதாதா..
கன்ட்ரோல் யுவர் செல்ப்..”
அவன் மூளை எச்சரித்தது.

அதையெல்லாம் அவன் மனம் கேட்டிடுமா..?
இல்லை கேட்கத் தான் விட்டு விடுவாரா கடவுள்…!

ஒரு கணம் நின்று முழுதாய் திரும்பி இடுப்பில் கைகுற்றிய படி தனக்கு எதிர்ப்க்கமாக நகரந்த பேரூந்தை பார்த்தான்,
எச்சரிக்கையை மீறி.

இறுகி இருந்த இதழ்களில்  இதமாய் ஒரு புன்னகை.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டு மீண்டும் தன் வழியில் நடக்கத் துவங்கியவன் வியர்வையை துடைக்க தன் கர்சீபை தேட அது அவன் பாக்கெட்டில் இல்லை.

அவன் கர்சீப்பை தன் பைக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்,
மகா.

“யெப்டி சரி..நாளக்கி இத அந்த பெர்பெக்ட கைல சேத்துரனும்..”
தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்,
அவள்.

தொடரும்.

🖋️அதி…!
2023.04.24

Advertisement