மௌனமதில் யுத்தம் ஏனடி?
அதோடு தாயின் இந்த குணமே தந்தையால் தானே! ராதிகா எந்த வம்புகளும் வேண்டாம் என ஒதுங்கி இருந்து கொள்வார். அவரால் எதிர்த்துப் போராட முடியாது என்றில்லை. உடலும் மனமும் அதற்குத் தயாராக இல்லை. அவருக்கு உறுதுணையாக, பக்கபலமாக ஒருவரும் நிற்க மாட்டார்கள். சிங்கிள் மதர் அனுபவிக்கும் மொத்த வலிகளையும் அனுபவித்தவர் அவர்.
அன்னை எதுவோ மறைக்கிறாரோ...
“அம்மா பி பிளாக்கில் பர்ஸ்ட் பிளோர்ல ரூம் நம்பர் 112 ல தான் அப்பா இருக்காங்க. நீங்க போங்க எனக்கு கொஞ்சம் வெளிய போக வேண்டியது இருக்கு...” என சொன்ன மகனை முறைப்புடன் பார்த்தவர்,
“இப்ப கூட உனக்கு வேலை தான் முக்கியம்...” என அவர் கடிந்து கொள்ள,
“ம்ப்ச் சொன்னா கேளுங்கம்மா... நான் இப்ப உடனே...
“ஏன் இதை மாத்தணும்ன்னு நினைக்கறீங்க? இந்த பேச்சை தொடங்கினதே நீங்க தான்னு எனக்கு நியாபகம்... அம்மா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துவாங்கன்னு தோணுது... என்ன பண்ணறதுன்னு புரியலைன்னு நீங்க இழுத்து நிறுத்தினப்ப நான் விலகி இருக்கணும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன் தானே? அதே மாதிரி தான் இருக்கவும் செய்தேன். இப்ப கூட இங்கே வந்தே இருக்க மாட்டேன். ஆனா...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 4
புதிதாக வளர்ந்து வரும் பகுதியில் அமைந்திருந்தது லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்ஷன் கட்டியிருந்த அந்த தனி வீடு. அனைத்து வேலைகளும் முடிந்திருந்தது. ஆனால், இன்னும் விலை போகவில்லை.
அதனை பார்க்கத்தான் ஜீவனா வந்திருந்தாள். கிட்டத்தட்ட வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்கள் கழித்து ஒரு வழியாக இன்று தான் சைட் விசிட் வர முடிந்தது...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 6
“தனியே தன்னந்தனியே நீ காத்து காத்து நின்றாய்…
நிலவே! பொறு நிலவே!
உன் பொறுமை வென்று விடுவாள்!”
என்ற பாடல் நகை ஒலி கலந்து ஒலித்த திசையில் ஜீவனாவின் தலை நிமிர மறுத்தது.
அவள் பாட்டிற்கு கொஞ்ச நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு போகலாம் என்று தனிமையைத் தேடி வந்தால், இங்கும் இவன் வந்து என்ன...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 7
இவர் யார் என்று தெரியாத குழப்பம் ஒருபக்கம், என்ன இது என்னென்னவோ சொல்கிறாரே என்ற மிரட்சி ஒரு பக்கமுமாய் ஜீவனா நின்றிருக்க,
“அப்பா… ரிலாக்ஸ்…” என்று கௌதமன் தான் அவளின் நிலை புரிந்து தந்தையின் அருகில் வந்து அவரை கலைக்க முயற்சி செய்தான்.
அவன் தலையிட்டதும் மங்கையவளுக்குத் தலையே வெடிக்காத குறை...
அதற்கு வேதவல்லியோ வேண்டுமென்றே பூச்சி மருந்தைக் குடித்து விட்டு தற்கொலை நாடகம் நடத்தினார். அவர் ஏமாற்ற பார்க்கிறார் என்று அனைவருக்கும் புரிந்தாலும் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்குமா திடீரென்று எதுவும் ஆகிவிட்டால் என்ன செய்வது என குடும்பத்தினருக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
அதன்பிறகு பெரிதாக அவர் செய்வதைக் கண்டுகொள்வதில்லை. ஒரு மாதிரி ஒதுக்கி...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 10
மகளின் திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் மாணிக்கம் இதய நோயால் உயிரிழந்து விட்டார்.
சுபத்ரா படிப்பை முடிக்கும் தறுவாயில் ராஜேஷுடன் திருமணம் பேசலாம் என வேதவல்லி இம்முறை பேச்சைத் தொடங்க, அதற்குள் சம்பந்தி வீட்டிலிருந்து ராஜேஷுக்கு பெண் அமைந்து விட்டதாக சொல்லி அழைப்பு கொடுக்க வந்து விட்டார்கள்.
அவ்வளவுதான் வேதவல்லி மீண்டும்...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 5
பல போராட்டங்களைக் கடந்த அந்த வீடு விலை போனதில் கம்பெனி முழுக்க பிரபலமாகியிருந்தாள் ஜீவனா.
திருமூர்த்தி மகளை தன் கேபினிற்கு அழைத்து, “செம ஜீவனா அசத்திட்ட. எனக்கு உன்னோட திறமையைப் பத்தி தெரியும். நீ என் வாரிசு ஆச்சே…” என பெருமையாகப் பேச சுபத்ராவின் முகத்தில் எரிச்சல்.
என் ரத்தம், என்...
“அவங்க நம்பிக்கையானவங்க தான்… டிரைவர் சரியா கொண்டு போயி அவங்க வீட்டுல சேர்த்துடுவாரு…” கௌதமன் வந்து சொல்ல, அவன் எப்பொழுது பின்னால் வந்து நின்றான் என்றே அவளுக்குத் தெரியவில்லை. திடீரென்று பின்னாலிருந்து வந்த அவன் குரலில் ஒரு நொடி திக்கென்று ஆகி விட்டது.
பிறகு அவன் தான் என திரும்பிப் பார்க்காமலேயே புரிந்து கொண்டவளுக்கு மிதமிஞ்சிய...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 8
நரசிம்மர், லட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் செல்வம், மாணிக்கம். நரசிம்மர் இறந்து விட லட்சுமி அம்மாள் தான் தங்கள் பிள்ளைகளை மிகுந்த சிரமப்பட்டு வளர்த்தார்.
செல்வம் வேதவல்லியையும், மாணிக்கம் லதாவையும் திருமணம் முடித்துக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் இருவரும் தொடங்கியது தான் லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். தொழில் மிகவும் ஏறுமுகம்...
யாருக்கோ என்ன அது நிச்சயம் திருமூர்த்திக்காகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தெரியும்.
கடுப்புடன் கைப்பேசியை எடுத்து, “இன்னைக்கு முழுக்க நீ வெயிட் பண்ணினாலும் அவங்க வர போறதில்லை. டூ யூ வான்னா ஜாயின் டுடே ஆர் நாட்?” என்கிற கேள்வியுடன் ஒரு மெசேஜை தட்டி அனுப்பி விட்டான்.
மெசேஜை படித்ததும் புரிந்து விட்டது அவன்தான் என்று! இன்னமும்...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 9
தாமரைக்கும் ராதிகாவுக்கமான புரிதல் மிகவும் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் வேலை சரியாக நடந்தால் சரி, மருமகள் தனக்கு அடங்கி இருந்தால் சரி என்று இருந்த வேதவல்லிக்கு இவர்களின் ஒற்றுமை போகப்போக எரிச்சலை கொடுக்கத் தொடங்கியது.
தாமரையின் அம்மா, அப்பா மகளைப் பார்க்க சம்பந்தி வீட்டிற்கு வந்து பார்த்து விட்டுச் செல்லும்போது...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 12
ஜீவனா பேருந்தில் தான் பயணம் செய்தாள். பயணம் முழுவதும் சொல்லத் தெரியாத பாரம் ஒன்று மனதை அழுத்திக் கொண்டே இருந்தது.
கௌதமனை பார்த்த நாளிலிருந்தே அவன் இப்படித்தான் என அவனை ஒருநாளும் கணிக்க முடிந்ததில்லை.
ஆரம்பத்தில் அவன் மீது கோபம் கொட்டிக்கிடந்தது தான். அடித்து விட்டானே என்கிற கோபம். அதற்குப் பதிலுக்கு...
ஆனால், யாராவது ஒருவர் வந்து, “இப்படின்னு விஷயம் கேள்விப் பட்டோம். நிஜமா? இதுக்குத்தான் பொம்பிளை பிள்ளைங்களை படிக்க எல்லாம் அனுப்ப கூடாதுன்னு சொல்லறது. அதுவும் அம்மா இல்லாத புள்ளை வேற. யாரு உரிமையா நல்லது கெட்டது எல்லாம் சொல்லித்தர போறாங்க. அம்மா சொல்லறதுக்கும் மத்தவங்க சொல்லறதுக்கும் வித்தியாசம் இருக்கும் தானே?” என புத்திமதி கூற...
அங்கு வேதவல்லியோ ராதிகா இனி இங்கு வந்து போய் இருக்கக் கூடாது அது சுபத்ராவின் வாழ்வைப் பாதிக்கும் என்று மனசாட்சியே இல்லாமல் மகன், மருமகளிடம் பேசினார்.
“ஏம்மா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா? அவளோட வாழ்க்கையை அபகரிச்சுட்டு எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால பேச முடியாது. உங்க பொண்ணுக்கெல்லாம் ஊருல ஆம்பிளையா கிடைக்காது. போயி அக்கா...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 2
ஜீவனா ஏன் தான் இந்த விருந்துக்கு வந்தோமோ என நொந்து போனாள்.
அவளை இதுவரை ஒருவரும் அடித்ததில்லை. வளர்ந்து விட்ட பெண்ணல்லவா… அவளைப் போய் ஒருவன் அடிப்பதா? அதுவும் அவள் மேல் தவறில்லாத நிலையில், முன்பின் அறியாத ஒருத்தியைக் கொஞ்சமும் யோசிக்காமல் அடிக்க அவனுக்கு எப்படி தான் மனம் வந்ததோ?
சின்ன...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 1
ஈ.சி.ஆர்., சாலையில் அமைந்திருக்கும் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த மிகப்பெரிய ரிசார்ட் அது! அந்த பொன் மாலைப் பொழுதில் கண்ணைப் பறிக்கும் ஒளி அலங்கார தோரணங்கள் அவ்விடத்தின் அழகைப் பன்மடங்கு உயர்த்தி காட்டியதோடு, அதன் ஆடம்பரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே சிறு சிறு குரோட்டான்ஸ், அதன் மேல் படர்ந்து ஒளிர்ந்து கொண்டிருந்த அலங்கார...
மௌனமதில் யுத்தம் ஏனடி? – 13
“ராஜேஷ் நீ என்ன சொல்லற? அவளுக்கு இன்னும் நாப்பத்தஞ்சு வயசு கூட ஆகலை... அதுக்குள்ள... இதென்ன சாகற வயசா?” என தவிப்போடு தேவராஜன் கேட்க, தாமரையும் பதறினார்.
“தம்பி காப்பாத்தவே முடியாதா? கொஞ்சம் ரிப்போர்ட்ஸ் நல்லா செக் பண்ணி சொல்லு...”
“ஸ்பெஷலிஸ்ட் கிட்ட செக் பண்ணனும். நான் இன்னைக்கே பார்த்து பேசறேன்....