மனம் மறுபடி சரிகிறதே!
மனம் மறுபடி சரிகிறதே!
4
அனுஷாவின் தம்பி வினோத் அழைத்தான், தியாகுவின் எண்ணுக்கு இப்போது. தியாகு வண்டியை ஓரமாக நிறுத்தி தன் அழைப்பினை எடுக்க முற்பட்டான். போன் அழைப்பு நின்றது.
தியாகுவிற்கு யோசனை.. எதற்கு அழைக்கிறான் இவன், அண்ணி ஏதாவது சொல்லியிருப்பார்களோ.. விஷயம் தெரிந்து கேட்க அழைக்கிறானோ.. பேசுவதா வேண்டாமா என யோசனை.
தியாகு தன் மனையாளை பார்த்தான். முழு...
மனம் மறுபடி சரிகிறதே!
7
தியாகு லலிதா இருவருமே மகிழ்ந்தனர்.. ராஜியின் காதல் என்ற செய்தியில். ராஜி திருமணத்திற்கு சம்மதித்தது என்பது லலிதா தியாகுவிற்கு அவ்வள்ளவு ரெலீப். தியாகுவிற்கு, ராஜியின் மனம் மாறினால்.. மீண்டும் குடும்பம் தங்களை ஏற்கும் என எண்ணம். மீண்டும் உறவு புதிதாகும் என திடமாக நம்பினான்.
ராஜி மேல் உண்மையான பாசம் உள்ளவன்.. அத்தோடு...
தியாகராஜன் (45). இரண்டு பிஸினெஸ். ஒன்று சின்ன சின்ன கடைகளுக்கு சாப்ட்வேர் உருவாக்கித் தருவது. அது இப்போது முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. அடுத்து.. பெரிய நிறுவனங்களுக்கு லேப்டாப்.. சிஸ்டம்.. பிரிண்டர்.. கேமரா.. என எல்லாவகையான அலுவலக எஃக்யூப்மென்ட்ஸ்.. தேவையை பூர்த்தி செய்வது.
இவனிற்கு மனிதர்கள்தான் முக்கியம். அவர்களின் படிப்பு.. வசதி.. உடை என எதையும் பார்க்கமாட்டான்.....
மனம் மறுபடி சரிகிறதே!
6
இரவு பத்து மணிக்கு மேலாகிற்று.. பெண் வரவும் இல்லை.. போனும் செய்யவில்லை. நேரம் கடக்கவும்.. ஜனனியை அழைத்தாள், லலிதா. பெண் அந்த அழைப்பினை ஏற்கவில்லை. லலிதா அனுவிற்கு அழைத்தாள் அப்போதுதான்.
அனு அழைப்பினை ஏற்று “சொல்லு லலிதா, எப்படி இருக்க” என்றார்.
லலிதா அதை காதில் வாங்கியது போலவே தெரியவில்லை “அக்கா, ஜானு அங்கே...
மனம் மறுபடி சரிகிறதே!
1
மாலை மணி 5. லலிதா, கல்லூரியிலிருந்து கிளம்பினாள். சிவப்பு வண்ண ஆக்டிவா எடுத்துக் கொண்டு.. டிராபிக் சாலையில் பயணித்து.. வக்கீல் அலுவலகம் வந்தாள்.
சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே.. ஒரு வணிக வளாகத்தில் அந்த வக்கீல் அலுவலகம். உள்ளே நுழைந்தாள்.. மணி ஆறு. அங்கே பணிபுரிந்துக் கொண்டிருந்த ஜூனியர் வக்கீல் “வாங்க மேம்.....
தியாகு கண் திறந்தான்.. எதிரே தந்தையின் புகைப்படம். வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
பிரபாவதி “அவருக்கு எல்லாம் தெரிந்துதான் உன்னிடம் பொறுப்பை கொடுத்துட்டு போய்விட்டார் டா..” என ஆரம்பித்தார்.
தியாகு அமைதியானான்.
“என்ன செய்வது.. உங்க ரெண்டுபேருக்கும் வாய்த்தது சரியில்லை. அதுக்குதான் இந்த காதல் வேண்டாம் வேண்டாம் என தலைபாடாக அடித்துக் கொண்டது. என்னமோ போ..” என்றார்.
அவனோ அமைதியாகவே இருந்தான்.
“வாழ...
ஜனனி “அப்பா.. எங்க போனீங்க” என்றாள்.
தந்தை “அம்மு, அப்பாக்கு அவசர வேலைடா.. நீ இரு.. நாளைக்கு போலாம். ராஜி சித்தி, எதோ உனக்கு நோட்ஸ் எடுத்துட்டு வந்திருக்காள் போல.. நீ படி.. நாளைக்கு நம்ம போலாம்.” என்றான்.
ஜனனி “அப்பா, அம்மா திட்டுவா” என்றாள்.
“நீ அப்பா சொன்னாங்க சொல்லிடு” என்று அழைப்பினை துண்டித்தான். நேராக தன்...
மனம் மறுபடி சரிகிறதே!
2
லலிதா தியாகு காதலிப்பர் என அவர்களின் நண்பர்களே நம்பவில்லை. அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை.. பெரிதாக அவர்களின் காதல் மேல் யாருக்கும் நம்பகமில்லை. இருவரும் பெரிதாக பேசிக் கொண்டனர்.. அங்கே இங்கே நின்று பார்த்துக் கொண்டனர் என ஏதும் அவர்கள் கண்களில் கூட தென்பட்டதில்லை.
வலுவில்லாத மெலிதான நேசம்தான் இருவருக்குள்ளும். தியாகு தன்...