தியாகு, இந்த ஐந்தாறு வருடங்களாக.. எதையோ மனதில் குழப்பிக் கொண்டிருக்கிறான். அவனால், அதை அவளிடம் கூட பகிர முடிந்ததில்லை இப்போது வரை.. இல்லை.. இரண்டு வருடம் முன்பு வரை.
சூழ்நிலை எந்த சத்தியத்திற்கும் கட்டுப்பட்டதில்லைதானே.. தியாகுவின் சூழ்நிலை எல்லா வகையிலும் அப்படியே அமைந்தது. தியாகு, லலிதாவின் கல்லூரி படிப்பு முடிவுறுகிறது என்பதால்.. தங்களின் காதல் பற்றி ஸ்ரீநிவான் அதுதான், லலிதாவின் அண்ணனிடம்.. தங்கள் விருபுவது பற்றி பேசினான்.
ஸ்ரீநிவாசன் அப்போது அமைதியாக கேட்டுக் கொண்டவர்.. தன் அன்னை தந்தையிடம் லலிதா தியாகு பற்றி சொல்லிவிட்டார்.
அடுத்த வாரத்திலிருந்து லலிதா கல்லூரி வரவில்லை.. கம்ப்யூட்டர் கிளாஸ் வரவில்லை.. என எங்கும் காணவில்லை அவளை.
தியாகு திண்டாடிபோனான்.. தான் ஸ்ரீநிவாசிடன் சொல்லியது தவறு என அப்போதுதான் உணர்ந்தான். தியாகு, நேராக லலிதாவின் வீட்டிற்கு சென்றான்.. அவளின் பெற்றோரிடம் பேசினான். அப்போதே ‘இல்லை, ஒத்து ஒத்து வராது தம்பி.. பெண் எதோ தெரியாமல் ஆசைப்பட்டுட்டா.. நீங்க எங்களை விட்டுடுங்கோ’ எனதான் தியாகுவிடம் சொல்லி அனுப்பினர். அடித்து சண்டையிட்டு.. சட்டையை பிடித்தால் கூட எதிர்த்து நிற்கலாம்.. இப்படி அமைதியாக இருப்பவர்களிடம் தியாகுவினால் பேச முடியவில்லை.
நாட்கள் கடந்தது.. ஆனாலும் லலிதா இன்னமும் வகுப்பிற்கும் கல்லூரிக்கும் வரவில்லை.. அவளின் போன் என்பது வேலை செய்யவில்லை. தியாகுவும் விடுவதாக இல்லை.
தியாகு, தன் வீட்டாரிடம் பேசி பெண் கேட்க்கலாம் என முடிவு செய்து, தன் வீட்டாரிடம் பேசினான். ஆனால், தியாகு விட்டில் அத்தனை எதிர்ப்பு. பிராபவதி சிறுவயதில் கணவனை இழந்தவர். அதனால், தன் அம்மா வீட்டின் அருகே வீடெடுத்து இருக்கிறார். அரசு பணி.. கணவரின் பென்ஷன்.. பிறந்தவீட்டின் அனுசரணை என ஒரு வாழ்க்கை. அத்தோடு, மகளை தியாகுவிற்குதான் என முன்பே குடும்பத்தில் பேச்சிருந்ததால்.. பிரபாவதி நிம்மதியாகவே இருந்தார்.
தியாகு, தன் அன்னை தந்தையிடம் லலிதா பற்றி சொன்னான். தியாகுவின் தந்தை கிருஷ்ணன் உறுதியாக மறுத்துவிட்டார், தன் மகனிடம்.. ‘உனக்கு ராஜியை தவிர வேறு இடம் பார்க்கும் எண்ணமில்லை.. உனக்கும் இது தெரியும். இப்படி திடீரென நீ வந்து நிற்பது சரியில்லை.. ஒழுங்காக.. எல்லாவற்றையும் தூக்கிபோட்டுட்டு ராஜியை கட்டிக் கொண்டு, குடும்பம் நடத்தும் வழியை பார்’ என்றனர்.
தியாகு ‘இதெல்லாம் தெரிந்தும், எனக்கு லலிதாவை பிடித்திருக்கிறேதே’ என்றான் தன் அம்மாவிடம். அன்னைக்கு, தெரியாத பெண்ணின் வாழ்க்கையை விட, கண்முன்னே தன் மகளின் எதிர்காலமும் தன் பேத்தியின் எதிர்காலமுமே பெரிதாக தெரிய.. வள்ளி ‘என்ன பா, ராஜியை உனக்கு ஏன் பிடிக்கலை.. நீ அவளிடம் அன்பாகத்தானே இருப்ப.. அவளை காலேஜ்ல் விடுகிறாய்.. வெளியே கூட்டி போகிறாய்.. நல்லா பேசுகிறாய்.. என்னடா ஆச்சு.. இப்படி திடீர்ன்னு.. எவளையோ பிடிச்சிருக்குன்னு சொல்ற. என்ன சொல்லி உன்னை மயக்கினாள்.. வேண்டாம்.. நம்ம பெண்ணை கட்டுட்டா.. ராஜிக்கு உன்னை தவர யாரையும் தெரியாது டா..’ என அழத் தொடங்கினார்.
உறவுகள் பகையானது தியாகுவிற்கு.
லலிதாவை பார்க்கவே முடியவில்லை.
இவன் லலிதா வீட்டில் பேசி வந்தது.. இன்னமும் பெரிதாகிற்று, அவர்கள் வீட்டில். மொத்தமாக ஊரைவிட்டு போகவே முடிவு செய்துக் கொண்டனர் லலிதாவின் குடும்பம்.
தியாகு, தினமும் லலிதா வீட்டிற்கும் தெருவில் நடமாடுவான்.. தன்வளை காணாத இந்த நாட்களில்.. எப்போதாவது எங்காவது அவள் தென்படுகிறாளா என. ஒருநாள் மதியம் வருவான்.. மற்றொருநாள் இரவு வருவான்.. கல்லூரி செல்லும் போதாவது பார்க்கலாம் என காலை வருவான். ஆனால், அவளை காணவேயில்லை. ஆனாலும் அவன் வருவதை நிறுத்திக் கொள்ளவில்லை.. அடுத்த ஒருமாதத்திற்கும். அப்போதுதான் இவர்களின், நடவடிக்கைகளில் மாற்றம் கண்டு.. என்னமோ நடக்கிறது.. அதற்குமுன் லலிதாவை பார்த்தே ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
மிகவும் சிரமம்பட்டு.. தன் தோழிகளின் உதவியோடு.. லலிதாவின் அன்னையை வெளியே கொணர்ந்து.. தான் வீட்டின் உள்ளே சென்றான். வீட்டில் ஒன்றுமேயில்லை.. எல்லாம் கிளம்புவதற்கு ஏதுவாக.. பெட்டியில் இருந்தது. பெண்ணவள் பூட்டிய கதவின் பின் இருந்தாள். பூட்டினை உடைத்து.. பெண்ணவளை தன்னோடு கொணர்ந்தான் தியாகு.
லலிதா.. முழு விருப்பத்தோடு தன்னவனோடு வந்தாள். லலிதாவின் பெற்றோருக்கு நடந்தது புரிய.. ஊரைவிட்டு கிளம்பினர்.. பெண்ணை தேடவில்லை.. எங்கோ நன்றாக இருக்கட்டும் என வாழ்த்தவும் இல்லை. கிளம்பிவிட்டனர்.
இருவரும், கம்ப்யூட்டர் சென்டரில் அன்று இரவு தங்கிக் கொண்டனர். மறுநாள் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்சில் திருமணம்.. இரண்டு கையெழுத்தில் தங்களின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டனர். நண்பர்கள்தான் சாட்சி கையெழுத்து. காதல் பிடிவாதம் வென்றது.
லலிதா தன் வீட்டிற்கு செல்ல ஆசைபட்டாள். ஆனால், வீடு பூட்டியிருந்தது. தியாகுவும் லலிதாவும் திரும்பினர்.
தியாகு தன் மனையாளோடு தன் வீடு வந்தான். எல்லோரும் வேலைக்கு சென்றிருந்தனர். அன்னை வள்ளி.. தன் மகன் வெளியே பெண்ணோடு நிற்பதை யாராவது பார்த்தால் என்னவாது என.. அவசரமாக உள்ளே அழைத்துவிட்டார்.
லலிதா கல்லூரி படிக்கும் பெண்போல.. புது சுடிதாரில் நின்றிருந்தாள் தியாகுவின் அருகில். அனுஷியா “வாங்க தம்பி.. வாங்க” என பொதுவாக வரவேற்றாள்.. தன் கொழுந்தனாரை குறுகுறுவென பார்த்துக் கொண்டு.
வள்ளிக்கு ‘இதுதான் அவன் சொன்ன பெண்ணா’ என கேள்விதான்.. அதனால், சும்மா கூட்டி வந்திருக்கிறான் என எண்ணிக் கொண்டு, தயக்கமாகவே “உட்காருங்க” என்றார்.
தியாகுவும் லலிதாவும் ‘தங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது’ என எப்படி சொல்லுவது.. என யோசித்துக் கொண்டே உள்ளே வந்து அமர்ந்தனர்.
தியாகுவின் தயக்கம் இரு பெண்களுக்கும் புரியவில்லை. அனுஷியாவிற்கு, தியாகு மற்றொரு பெண்ணை விரும்பும் விஷயம் தெரியாது எனலாம். அதனால், தன் மாமியாரின் பதட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். ‘ஒரு பெண்ணை கூட்டி வந்திருக்கார் தியாகு.. அத்தை பதறுகிறார் இப்படி’ என யோசனை.
லலிதா, ஆர்ப்பாட்டமில்லாத பாந்தமான அழகில் குளிர்ச்சியாக இருந்தாள். லலிதாவிற்கு, பயம்தான்.. இந்த வீட்டின் அமைப்பில். பெரிய தேக்கு சோபா.. அதில் அமர்ந்தாள்.. இரண்டு இஞ்சு உள்ளே அவளை இழுத்துக் கொண்டது அந்த இருக்கை. எதோ அண்ணாமலை படத்தில் வருவது போல.. வீட்டின் உள்ளே மாடி.. பெண்ணவள் திரும்பி தன் கணவனை பார்த்தாள். அவன் சாதரணமாக அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான்.
தியாகு, இப்போது அம்மாவிடம் சொல்லுவதற்கு எழுந்தான்.. பெண்ணவளும் காரணம் தெரியாமல் எழுந்து நின்றாள். கணவன் “நீ உட்கார்.. இரு” என சொல்லி அவளை அமர சொன்னான்.
அனுஷியா, வேலையாளிடம் சொல்லி.. டீ போட சொல்லியிருந்தாள்.. கையில் சின்ன தட்டில் பிஸ்கட் திண்பண்டங்கள் எடுத்து வந்தாள்.. “உன் பேரென்ன ம்மா” என கேட்டுக் கொண்டே, லலிதாவின் அருகில் இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
தியாகு சட்டென “அண்ணி, அவள் என் வைஃப்.. இன்றிலிருந்து. பேரு லலிதா” என்றான் திடமாக நின்று.
அனுஷியா எழுந்தாள் அதிர்வில்.
லலிதாவும் எழுந்து நின்றாள்.
அன்னையோ “என்ன டா சொல்ற.. என்ன டா சொல்ற.. வேண்டாம்ன்னு சொன்னோமே.. சும்மாதானே சொல்ற” என லலிதாவின் அருகே சென்றவர்.. “நீ சொல்லும்மா சும்மா விளையாடுகிறான் தானே” என கேட்டுக் கொண்டே அவளின் முகம் பார்த்து நின்றார்.
லலிதா கண்களில் கண்ணீர் சுரந்தது.. பயந்தாள்.. தன்னையே எண்ணி வெட்கம் கொண்டாள்.
அனுஷியா, தன் மாமியாரை பார்த்தாள்.. தியாகுவையும் கவனித்தாள்.. ‘முன்னவே சொல்லிட்டானோ தியாகு’ என யோசனை.
அனுஷியா, மெதுவாக தன் அறைக்கு சென்றாள். பட்டன் போனெடுத்து.. தன் கணவனுக்கு அழைத்து சொல்லிவிட்டாள் நடப்பதை.
ஹாலுக்கு வந்தாள்.
வள்ளி இப்போது சோபாவில் அமர்ந்திருந்தார்.. அருகே, கீழே மகன் அமர்ந்திருந்தான் பேச்சுகள் நடந்தது. லலிதா ஓரமாக நின்றிருந்தாள்.
வள்ளி “டேய்.. தாலி கூட இல்லாமல் எப்படிடா கல்யாணம். கையெழுத்து போட்டால் ஆச்சா.. இப்போது உன் அக்கா வருவாளே டா..” என பேச.. மகனோ “ம்மா..” என அதட்டினான்.
அனுஷியா என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றாள்.
வேலை செய்பவர் டீ ரெடி என்றார். அனுஷியா “பிளாஸ்கில் வைத்திடுங்க” என்றாள்.
இப்போது கிருஷ்ணன் வந்தார். சபரி சற்று நிமிடம் சென்று வந்தான்.
கிருஷ்ணன் உள்ளே வரும் போதே.. தன் பாகினை விட்டெறிந்தார்.. மகனின் கன்னத்தில் ஒரு அடி.. மகனின் உயரத்திற்கு சற்றும் குறையாத உயரம் அவர்.. நேரே நின்று இப்போது மகனை அடிக்கும் அளவிற்கு.. அவரின் உடல் திறன் இருக்க.. லலிதா இரண்டடி பின் சென்றாள் இதையெல்லாம் பார்த்து.