ஜனனி “அப்பா.. எங்க போனீங்க” என்றாள்.

தந்தை “அம்மு, அப்பாக்கு அவசர வேலைடா.. நீ இரு.. நாளைக்கு போலாம். ராஜி சித்தி, எதோ உனக்கு நோட்ஸ் எடுத்துட்டு வந்திருக்காள் போல.. நீ படி.. நாளைக்கு  நம்ம போலாம்.” என்றான்.

ஜனனி “அப்பா, அம்மா திட்டுவா” என்றாள்.

“நீ அப்பா சொன்னாங்க சொல்லிடு” என்று அழைப்பினை துண்டித்தான். நேராக தன் அலுவலகம் வந்துவிட்டான்.

ஜனனி மீண்டும் மேலே தன் தந்தையின் அறைக்கு சென்றாள்.

!@!@!@@!@!@!@!@!@! 

அன்று..

ராஜி அடுத்தநாள் முதல்  கல்லூரி செல்லவில்லை. அழுது அழுது தேய்ந்தாள்.. உண்ண மறுத்தாள்.. அவளின் மனநிலையில் பிடிவாதம் வந்து அமர்ந்துக் கொண்டது.

கிருஷ்ணன், தன் பேத்தியின் நிலையை பார்த்துதான் வருந்தி போனார். தன் மனையாள் வள்ளிக்கு, மகன் சென்றதில், வருத்தம் என தெரிந்தாலும் அதை பெரிதாக்கிக் கொள்ளவில்லை கிருஷ்ணன். மகன் பற்றி எண்ணுகையில் கோவமே வந்தது அவருக்கு.

அன்று இரவே மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.. கிருஷ்ணன்னை. BP சுகர் எல்லாம் அதிகமாக சற்று தள்ளாடினார். மருத்துவமனையில் சேர்த்தனர். வள்ளிக்கும் அங்கேயே சிகிச்சை நடந்தது.

அவர்கள் இருவரும் அடுத்த இரண்டுநாளில் வீடு வர.. ராஜி அடுத்து.. உண்ணாவிரத போராட்டத்தால் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அனுஷியாதான் எல்லாவற்றையும் தியாகுவிடம் சொன்னாள்.

தியாகு அந்த வார இறுதியில் பெரியவர்களை பார்க்க வீடு வந்தான். ராஜியும் வீடு வந்திருந்தாள். பிரபாவதி தன் மகளோடு தன் பெற்றவரின் வீட்டில் தங்கி எல்லோரையும் கவனித்துக் கொண்டார்.

அனுஷியா அப்போதுதான் இரண்டாவது பிள்ளையை வயிற்றில் தாங்கியிருந்தாள்.. பெரிதாக அவளை சிரமப்பப்டுத்தவில்லை யாரும்.

அப்போது, தியாகு வீடு வந்தான்.

தியாகுவின் வண்டி சத்தம் கேட்டதும்.. ராஜி நாலுகால் பாய்ச்சலில் வாசலுக்கு வந்து.. தியாகுவை கட்டிக் கொண்டாள். அவன் உள்ளே கூட வரவில்லை. வாரயிறுதியில் பெரும்பாலும் தோட்டவேலை செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.. இப்போது.

தியாகுவிற்கு அதிர்ச்சிதான்.. அவனுக்கு ராஜியின் கண்ணீர் சட்டையை நனைக்கவும் ஒருமாதிரி பதட்டம் கோவம் எல்லாம் சேர்ந்தது. அவனுக்கு அன்னை தந்தை தன்னை அங்கீகரிக்கவில்லை என கோவம்.. அதில் ராஜி இப்படி வந்து அனைத்துக் கொள்ளவும் பெரும் பதட்டம்.. அவளை தன்னிலிருந்து பிரித்து வைக்க நினைத்தான். ராஜி இறுக்கமாக கட்டிக் கொண்டிருந்தாள் அவனை.

பிரவாவதிதான் பெண்ணின் ஓட்டத்தை அறிந்து வந்து பார்க்க.. தியாகு அங்கே. பிரபாவதி இருவரும் நின்ற நிலையை பார்த்து “பார்த்தியாடா.. என் பெண்ணு எவ்வளவு உன்மேல் பையித்தியமாக இருக்கிறாள் என.. இப்படி பண்ணிட்டியேடா.. எல்லோரையும் எப்படி செய்துட்டு நீ எப்படி டா நல்லா இருக்க.. இப்போது எதுக்கு  வந்த” என ஆதங்கத்தை கொட்டிக் கொண்டே தன் மகளை.. தன் தம்பியிடமிருந்து விளக்கினார்.

“ராஜி, வா.. உடம்பு முடியவில்லைதானே.. உள்ளே வா.. அவன் வரட்டும். எதுக்கு வந்திருக்கான்.. அந்த பெண்ணை விட்டு வந்திட்டானா கேட்க்கலாம்” என்றார்.

பெண் அப்போதுதான் அசைந்து உள்ளே வந்தாள்.

தியாகு, தன் வீட்டிலேயே விருந்தினனாக.. அப்படி கூட இல்லை.. மூன்றாம் மனிதனாக உள்ளே நுழைந்தான். ம்.. யாரின் முகமும் வரவேற்பினை காட்டவில்லை. அன்னையின் முகம் மட்டுமே லேசான சந்தோஷத்தில் கண்கள் பளீச்சிட்டது. ஆனாலும், அவர்.. ஜீவனில்லாமல் அமர்ந்திருந்தார். வீடே என்னமோ அன்னியமாக இருந்தது தியாகுவிற்கு. வேகமாக.. என்னை எப்படி நீங்க.. தள்ளி வைக்கலாம் என கேட்டிடவே முதலில் வந்தான். ஆனால், அன்னையின் நிலை பார்த்து அமைதியானான்.  தியாகு “அம்மா என்னாச்சு ம்மா” என நலம் விசாரித்தான்.

தந்தைதான் பதில் சொன்னார் “என்னடா முடிவெடுத்திருக்க” என்றார்.

தியாகு நிமிராமல் அமர்ந்திருந்தான்.

சபரியும் அனுவும் தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தனர்.

தியாகு தந்தையை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. மேலும் அவரின் பேச்சு இன்னமும் எரிச்சலாகியது அவனுக்கு.. அதனால்  “எனக்கு சொல்லியிருக்கலாமில்ல.. அம்மாக்கு உடம்பு முடியலைன்னு” என அண்ணனிடம் கேள்விகேட்டான்.

தந்தை “நான்தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்” என்றார்.

“அப்பா.. என்ன பா இது. அவளை பதிவு திருமணம் செய்து கொண்டேன் பா.. எனக்கு அவள் வேண்டும். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் பா” என்றான்.

தந்தை கெட்ட வார்த்தையில் வதைத்தார்.. “… விட்டுட்டு வாடா.. எப்படி அந்த பெண் வீட்டையே விட்டு வந்திருக்கு.. இதெல்லாம் நல்ல குடும்பத்து பெண்ணா?. ராஜியை பாரு.. எப்படி ஆகிவிட்டால் பாரு.. உன்னை நம்பின எங்களை இப்படி ஏமாத்திட்டு எப்படி டா வாழுவ.. போடா.. காசோ பணமோ எதோ கொடு.. வீடு வருகிற வழியை பாரு” என்றார். மனதில் ஈரமில்லாமல். உள்ளேயும் சென்றுவிட்டார்.

தியாகுவின் பிடிவாதமும் அதிமாகியது. தந்தையின் வார்த்தையும் செய்கையும் அவனை வதைத்தது. இவர்கள் தங்களை ஒதுக்கும் போது தானும் இவர்களை ஒதுக்க வேண்டும் என எண்ணம் எழுந்தது.

பிரவாவதி.. வள்ளி என எல்லோரும்.. மகனை உண்ணச் சொல்லினர். தியாகு மறுத்துவிட்டான். பொறுமையாக அன்னையும் தன் கணவனின் பேச்சினைதான் பேசினார் நாசுக்காக.

தியாகு அண்ணனிடம் “இனிமேல் எதுவும் என்னிடம் சொல்லாத சபரி.. நீ சொல்லாதது நல்லதுதான்.” என்றான் கோவமாக.

ராஜி “மாமா, ஏன் மாமா அப்படி பேசுறீங்க.. மாமா வந்திடுங்க மாமா.. வீட்டுக்கு வந்திடுங்க மாமா.. நான் உங்களை நல்லா பார்த்துக்கிறேன். நீங்களும் எப்போதும் போல இருங்க.. மாமா உங்களை பார்க்காமல் இருக்க முடியலை” என அழுதாள்.

தியாகுவிற்கு, ராஜி என்பவள் மித்ரா போல.. அதனால் “ராஜி, மாமா நல்லா இருக்கேன்.. உனக்கு மாமாவை பிடிக்கும் என்றால்..  மாமாவின் முடிவும் பிடிக்கனும். நீ முதலில் படி.. எதுக்கு சாப்பிடாமல் இருந்த” என்றான் இன்னமும் சிறுபிள்ளை என பாவித்து.

ராஜி “மாமா என்னால் முடியலை.. என்னையும் கட்டிக்கோங்க மாமா.. என்னையும் உங்ககூட கூட்டிட்டு போ மாமா” என்றாள் கோவமும் காதலுமாக.

தியாகு தலையை கோதிக் கொண்டான் “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி டா..” என்றான் சிறு நாணத்தோடு. ராஜிக்கு, புதிதாக இருந்தது.. மாமாவின் இந்த வெட்கம்.. அவன் பற்றியிருந்த  கையை உதறிக் கொண்டு எழுந்து.. மீண்டும் தன் அறைக்கு ஓடினாள்.

பிரபாவதி “நீ முதலில் கிளம்பு டா” என்றார்.

தியாகு கோவமாக “அக்கா.. உன்வேலையை நீ பாரு.. போதும்” என்றான்.

சபரி “டேய், விடுடா..” என அருகில் வந்தார்.

தியாகு “சாரி, உனக்குதான் எல்லா பிரச்சனையும்” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல வா..” என வெளியே கூட்டி சென்றார்.

“நீ இப்போதைக்கு இங்க வராத டா” என சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவாறே.. கத்தையாக பணம் எடுத்து கொடுத்தார். தியாகு புன்னகையோடு அண்ணனை பார்த்தான்.. பின் அந்த பணத்தினை திரும்ப கொடுத்தான் அவரிடமே “அண்ணா.. அண்ணி ஏதாவது சொன்னாங்களா” என்றான்.

“ம்.. எல்லாம் சொன்னால்.. நல்லவேளை.. எனக்கு இங்க இவர்களை சாமளிக்கவே நேரம் சரியானதால்.. உன்னை பற்றி அப்போது யோசிக்க முடியலை. அதன்பின் அனு எல்லாம் சொன்னால். நல்லது டா.. நானும் அவளும் வருகிறோம்.. அப்புறமாக. நீ எதையும் யோசிக்காத. ராஜி படுத்துகிற பாடுதான். சரியாகிடுவாங்க. நீ குடும்பமாக வாழ்ந்து காமி போதும்” என்றார்.

தியாகு ஒரு சல்யூட் வைத்தான் அண்ணனுக்கு “கண்டிப்பா.. தேங்க்ஸ்.” என்றான்.

“கிளம்பு கிளம்பு… பிரபா வந்திடும் கிளம்பு” என அனுப்பி வைத்தான், சபரி.

இப்படியாகத்தான் தியாகுவின் வாழ்க்கை தொடங்கியது.. நடந்ததும் கூட இப்படிதான். குடும்பம் அவனை ஆதரிக்கவில்லை.

லலிதா கல்லூரியில் சேர்ந்தாள். 

குறிப்பிட்ட நாட்கள் சென்று, சபரி அனு இருவரும்.. வந்து தியாகு லலிதாவை பார்த்து சென்றனர். 

பின்னொருநாள் ராஜி வந்தாள்.. தியாகு இல்லாத நேரமாக பார்த்து. அப்படிதான் சொல்ல வேண்டும். ராஜியின் பார்வையில் வீடு.. தகித்தது.. லலிதா கதவை திறந்ததும் கண்டுக் கொண்டாள்.. அன்று பார்த்த பெண் என. அதனால் “வாங்க” என இன்முகமாகவே வரவேற்றாள்.

கல்லூரி சென்றுவிட்டு அப்போதுதான் வீடு வந்திருந்தாள் லலிதா. ராஜியும் அதே நிலையில்தான் இங்கே வந்தாள்.

ராஜி சுற்றிலும் பார்வையை சுழலவிட்டாள்.. பின் லலிதாவை ஆராய்ந்தாள்.. மஞ்சள் கயிறு கண்ணில் பட்டது.. அதில் தன் உக்ரத்தை செலுத்தினாள். ‘மாமாவின் கையால்.. என்னால் இந்த வரத்தை பெற முடியவில்லையே’ என கண்கள் கலங்கியது ராஜிக்கு. கண்ணீர் கண்களை தாண்டாமல் பார்த்துக் கொண்டாள். மனது இறுகியது.. ‘இது ஒருநாள் என்னிடம் வரும்..’ என அலட்சியமாக புன்னகைத்தாள் லலிதாவை பார்த்து. ம்.. அப்படிதான் லலிதாவிற்கு தோன்றியது. ஆனால், ராஜி தனக்குள் தீயை வளர்த்துக் கொண்டிருந்தாள். தனக்கானதை மற்றவர்கள் வைத்திருக்கும் போது அமைதியாக இருப்பது என்பது கடினம்தான். ஆனால், ராஜி அமைதியாக இருந்தாள். ஆழ்கடலின் அமைதி. அவளுக்கு லலிதாவை பார்க்க பொறாமையாக இல்லை.. பாவமாகவே இருந்தது. ‘மாமா எனக்கு யார் தெரியுமா.. உன்னால், அவரை முழுமையாக காதலித்திட முடியுமா.. என்னை மீறிட முடியுமா’ என அலட்சியமாகவே பார்த்தாள்.

லலிதா என்ன செய்வதென தெரியாமல் “காபி..” என எதோ சொல்ல வர.

ராஜி “கண்டிப்பா, கொடுங்க..” என்றாள்,  நிதானமாக காபி குடித்தாள்.

லலிதா “அவருக்கு கூப்பிட்டிருக்கேன்” என்றாள்.

“மாமாக்கா.. வரட்டும்.. பார்த்துட்டு போறேன்” என்றாள்.

சற்று நேரத்தில் தியாகுவும் வந்தான். தியாகு, புன்னகையோடு வரவேற்றான் ராஜியை. ராஜி எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பாக தியாகுவை அணைத்தாள். தியாகு அவளுக்கு பிடித்த தின்பண்டகளை வாங்கி வந்திருந்தான்.

லலிதாவிற்கு, மனது வாடியது. என்னமோ எதோ புரியாத ஒரு உணர்வு.. ராஜி தன் கணவனோடு பேசும் போது. லலிதா, தன்னையே திட்டிக் கொண்டாள். கண்பார்த்து பேசினால் இருவரிடமும். தான் தப்பாக பார்க்கிறோமோ என எண்ணுமளவு.. இயல்பாகவே பழகினர் இருவரும். லலிதா தன்னையே நொந்துக் கொண்டு வேலையை கவனித்தாள்.

ராஜி தியாகு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். தியாகு அவளை வீட்டில் இறக்கிவிட்டு வரேன் என கிளம்பினான்.

லலிதா அதெல்லாம் ஏதும் சொல்லவில்லை. கபடமில்லாமல் வழியனுப்பினாள்.

“காவியம் போலொரு 

காதலை தீட்டுவான்..

காரணம் ஏதுமின்றி 

காட்சியை மாற்றுவான்..

ரயில் சிநேகமாய்..

புயலடித்த மேகமாய்..

களைந்து வந்து கூடும்ம்..

பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே..”