தியாகராஜன் (45). இரண்டு பிஸினெஸ். ஒன்று சின்ன சின்ன கடைகளுக்கு சாப்ட்வேர் உருவாக்கித் தருவது. அது இப்போது முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. அடுத்து.. பெரிய நிறுவனங்களுக்கு லேப்டாப்.. சிஸ்டம்.. பிரிண்டர்.. கேமரா.. என எல்லாவகையான அலுவலக எஃக்யூப்மென்ட்ஸ்.. தேவையை பூர்த்தி செய்வது.
இவனிற்கு மனிதர்கள்தான் முக்கியம். அவர்களின் படிப்பு.. வசதி.. உடை என எதையும் பார்க்கமாட்டான்.. ஏன் நல்லவர்களா.. தனக்கு உதவுவார்களா என கூட பார்க்கமாட்டான்.. எல்லோரையும் மதிப்பான்.. நம்புவான்.. சிலநேரங்களில் ஏமாறுவான். ஆனாலும் மீண்டும் நம்புவான். அவர்களுக்காக எல்லாம் செய்வான்.. இதுதான் அவனின் பலம்.
ம்.. இதனால் அவன் இழந்தது அதிகம். ஆனாலும், இன்னமும் இந்த உலகத்தில் நல்லவர்களும் வாழலாம்.. என்பதற்கு இவன் சான்றுதான். இவனை மதிப்பவர்களும் உண்டு. இவன் நம்பிக்கையானவன்.. அதனால், நிறைய கஸ்டமர்ஸ் உண்டு.. இவனை யாராலும் அவ்வளவு எளிதில் தூக்கி எரிந்திட முடியாது. ஒவ்வொரு வேலையும் நின்று தரமாக.. பார்த்து.. வேலையை முடித்துக் கொடுப்பான். எனவே, அவனை மீறி மற்றொருவரிடம் எந்த பொருளையும் வாங்கிட முடியாது. அதனால் வியாபாரத்தில் நல்ல பெயர் உண்டு.
தியாகு தன் வீடு வந்தான். தன் பெற்றோர் இருக்கும் வீடு. மேலே தனதறைக்கு வந்தான்.. நேரம் மணி பத்து. குளித்து முடித்து.. பெட்டில் அமர்ந்தான்.
‘யாருமில்லை.. உண்டாயா’ என கேட்க.. ‘ஏன் லேட் என கேட்க..’ என நீண்ட பெருமூச்சு.
மேலே மொட்டைமாடி வந்தான். சின்னதாக ஒரு ஷெட் இருக்கும்.. அதன் பூட்டை திறந்து உள்ளே சென்றான்.. த்ரெட்மில் இருந்தது.. சிலபல உடற்பயிற்சி கருவிகள் இருந்தது. தியாகு.. அந்த த்ரெட்மில் பயிற்சியை தொடங்கினான்.
முகத்தில் இறுக்கம்.. இந்த சில வருடங்களாக… தங்களின் நிகழ்வுகளை இந்த உலகிற்கு காட்டாமல், மறைத்துக் கொள்ள பழகிய முகம். உழைப்பின் சாயலில் நல்ல கட்டுடல்.. அவனின் ஆரோக்கியத்தை சொல்லும் அடர் சிகை.. அறிவின் சாயலில் கண்களில் பிரகாசம்.. என அவனின் மனமும் புத்தியும் இன்னமும் இளமையில்தான் இருக்கிறது என உடல்மொழி சொல்ல.. ஹரீஸ்ஜெயராஸ் இசையை கேட்டுக் கொண்டே.. தனது வொர்க்அவுட் செய்தான்.
அப்படியே தனது பெண்ணின் எண்ணிற்கு ஒரு செய்தி அனுப்பினான் “ஜானும்மா.. படித்தாயா.. நாளை என்ன வேண்டும் உனக்கு” என செய்தி அனுப்பி வைத்தான். அவள் உறங்கியிருப்பாள் என தெரியும்.. காலையில் குழந்தை பார்க்கும் என எண்ணம்.
ஒருமணி நேரம் உடற்பயிற்சி முடித்து உறங்க சென்றான் தியாகராஜன்.
அன்று..
ராமகிருஷ்ணன் வள்ளியம்மாள் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். கிரிஷ்ணன் டெலிபோன் எக்ஸ்ச்சேஞ்சில் வேலையில் இருந்தார். அவரின் முதல் பெண்.. பிரபாவதி அரசு ஆசிரியை. இரண்டாம் மகன் சபரிநாதன் இன்கம்டாக்ஸ்சில் வேலை. மூன்றாமவன்.. தியாகராஜன். இவனையும் நன்றாக படிக்கச் வைத்தார்.. இஞ்சினியர் பட்டம் பெற்றான்.. சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையிலிருந்தான். இரண்டு வருடம். அதன்பின் எனக்கு ஊர் வேண்டும்.. மனிதர்கள் வேண்டும்.. என தன் சொந்த ஊர் வந்துவிட்டான். பெற்றோர்கள் ‘சரி அரசு வேலைக்கு தேர்வு எழுது’ என்றனர், அதையும் விட்டான். எங்கோ சின்ன சின்ன ஸ்டோர்களுக்கு பில்லிங் சாப்ட்வேர் செய்து கொடுத்துக் கொண்டும்.. கல்லூரி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுத்துக் கொண்டுமிருந்தான் அடுத்த இரண்டு வருடமும்.
தன்பின் தன் நண்பனோடு சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் வைத்தான். C C++ JAVA என கம்ப்யூட்டர் லாங்க்வேஜ் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். கூடவே முன்பு செய்துக் கொண்டிருந்த ப்ராஜெக்ட்களும் செய்தான்.
தியாகுவின் நடவடிக்கைகளில் குடும்பத்தாருக்கு எப்போதும் அதிருப்தி இருக்கும். தங்களை போல நல்ல உத்தியோகம் இல்லையே என ஒரு குறை. இவனின் பெற்றோர்.. உடன் பிறந்தவர்கள் என குடும்பத்தார் தங்களின் பதவி.. பணம்.. உணர்ந்து சொந்தம் நட்பு என எல்லோரிடமும் அளவாக பேசுவார்கள்.. நட்பு பாராட்டுவார்கள்.
ஆனால், தியாகு முற்றிலும் வேறுவிதம்.. தன் குடும்பத்திற்கே தெரியாத பங்காளி வகையறா உறவுகள்.. அவர்களின் தொடர்புகள் எல்லாம் இவனுக்கு தெரிந்திருக்கும். இன்னமும் தன் அம்மாவின் வழி உறவுகளோடு இவன் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறான். அதே போல நட்பு வட்டமும் பெரியதாகவே இருந்தது. தியாகு விசாலமானவன். எப்போதும் அவனை சுற்றி மனிதர்கள் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.
அண்ணனின் திருமணம் நான்கு வருடம் முன்பு நடந்தது.. அப்போது சபரியின் நண்பர்களை விட.. தியாகராஜனின் நண்பர்கள்தான் அதிகம்.
அப்படிதான், தியாகு ஊர் வந்தபின் அதிகமாக வீடு தங்குவதில்லை.. எல்லா நேரமும் சென்டரில்.. வீடு வந்தாலும் போனில் பேச்சு.. என அவர்களின் கட்டுசெட்டான குடும்பத்தில் ஒரே கருப்பு ஆடு இவனாக எண்ணினர் எல்லோரும். உறவுகளின் எல்லா விசேஷங்களுக்கும் செல்வதில்லை.. தேவையானது.. நெருங்கிய சொந்தம் என பெற்றவர்கள் தரம் பிரித்து செல்வதுண்டு. ஆனால், தியாகுவிற்கு, உறவுகளின் அழைப்புகள் எல்லாம் போனில் வர தொடங்கிற்று.. அருகில் இருக்கும் எல்லா விசேஷங்களுக்கும் சென்று வந்துவிடுவான். சிலசமயம் அன்னை தந்தையை அங்கே கண்டதும்.. “நீங்களும் வந்திருக்கீங்களா பா” என்பான், இவன். பெற்றோருக்கு கோவமாகவே வரும். இப்படி பொறுப்பில்லாமல்.. அடங்காமல் இருக்கிறானே என கவலை பெற்றோருக்கு இருக்குமே.
ஆக, ஓரளவு தொழில் பிடிபட்டுவிட்டது. இனி இவனுக்கு ராஜியை திருமணம் செய்து வைத்தால்தான் கொஞ்சம் வீட்டிற்கு அடங்குவான் என திருமணம் பேச்செடுத்தனர் குடும்பத்தார். ராஜி, அவனின் அக்கா பெண். அவள் அப்போது கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.
தியாகு, ‘இல்லை.. எனக்கு வேற எய்ம் இருக்கு.. அவ படிக்கட்டும் பார்த்துக்கலாம்’ என சொல்லி.. பெற்றோரை பார்ப்பதையே தவிற்கத் தொடங்கினான்.
நாட்கள் கடந்தது தியாகு.
லலிதா, பழமையான பழக்கவழக்கம் கொண்ட குடும்பம். கிராமத்திலிருந்து தங்களின் வருமானத்திற்கு என கோவில் பூஜையை ஏற்றுக் கொண்டு இந்த ஊர் வந்தனர். பத்து வருடமாகிறது இங்கே வந்து. சாரங்கன் விசாலாட்சி தம்பதி இருவரும். முதல் மகன் ஸ்ரீநீவாசன் ஆடிட்டர் படிப்பு படித்துக் கொண்டே.. வேலையில் இருந்தான். லலிதா, B.A எகனாமிக்ஸ் இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். கோவிலில் பணிபுரிவதால்.. அவர்களே வீடு கொடுத்திருந்தனர்.
லலிதா, B.A எக்னாமிக்ஸ் படித்திருந்தாள். இப்போதெல்லாம் அதற்கு தக்க வேலையில்லை TALLY கற்றுக் கொண்டால்தான் வேலை என்றனர். அதனால் அதனை கற்க ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வந்தாள் பெண். அங்கேதான் அறிமுகமானான் தியாகராஜன்.
லலிதா கள்ளமில்லாமல் அனைவரிடமும் பழகுவதுதான்.. அவனை முதலில் ஈர்த்து. அதன்பின் அவளின் கேர்லெஸ் பிஹேவியர். எதற்கும் அலட்டிக் கொள்ளமாட்டாள்.. அப்போதெல்லாம் ஆண் பெண் நட்பு வட்டம் என்பது மிக அரிது. பெண்ணவள்.. அந்த பாகுபாடும் பார்க்காமல் இயல்பாக பழகுவாள். சின்னதாக ஒரு பட்டன் போன் வைத்திருப்பாள்.. அவளின் அண்ணன் ஆபீஸ் முடித்து வரும் போது… அழைப்பான். அப்போதுதான் கிள்புவாள்.
அதுவரை சென்டரில் இருப்பாள். அங்கேயும் தேவையான உதவிகள் செய்வாள்.. பீஸ் ரெசிப்ட் எழுதி தருவாள். தண்ணீர் கேன் தூக்கி வைப்பாள். சேர்களை வரிசையாக்குவாள். ப்ளக் எடுத்து ஸ்விட்ச் ஆப்செய்து.. என நிறைய உதவுவாள். அந்த நேரங்களில் தியாகுவும் அவனின் நண்பனும் அதே வேலையை செய்துக் கொண்டு.. அவளின் அண்ணன் வரும் வரை இவளை பாதுகாத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பர். இவள் கிளம்பியதும் அவர்கள் பூட்டிவிட்டு கிளம்புவர்.
சிலநாட்கள் ‘இன்னிக்கு பிரெட்ன்ஸ்சோடு வெளிய போறேன்.. அண்ணா போன் செய்ததும் வந்திடுவேன்.. உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது சாரி’ என சொல்லி மாதத்தில் ஒருநாள் அப்படி நண்பர்களோடு, வெளியில் செல்வது உண்டு அவள். இவள் வெஜ்ஜிட்டேரியன் என தோழிகள்.. இங்க போலாமாடி.. நீ சங்கடபடுவியா என கேட்டாலும்.. “வாங்க போலாம் நான் ஜூஸ் குடிக்கிறேன்” என ஹோட்டலுக்கு தயங்காமல் வருவாள். ஆக, எல்லாம் ஒத்து வந்தது இருவருக்கும் இடையில்.
தியாகு மெல்ல மெல்ல அவளை நெருங்கி பேசத்தொடங்கினான்.
பெண்ணவளும் தியாகுவின் பார்வை மாற்றத்தை உணர்திருந்தாள்.
நல்லநாளில் இருவரும் காதல் பரிமாறிக் கொண்டனர்.
லலிதா, அவளின் அண்ணனுக்கு தெரிந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.
அப்படியே ஒருவருடம் சென்றது.
லலிதாவிற்கு திருமணத்திற்கு பார்த்தனர்.
தியாகராஜன் தன் வீட்டில் தன் காதல் பற்றி சொன்னான். குடும்பம் மொத்தமாக கோவம் கொண்டது. ராஜியை என்ன செய்வது.. அவளை சிறுவயதிலிருந்தே ஆசை காட்டி வளர்த்துவிட்டோம் என்ன செய்வது என சீறினர்.
லலிதா வீடு வந்தான் தியகராஜன்.
லலிதா வீட்டில் முற்றிலும் வேறுவிதம்.. அவர்கள் காதல் அதுவும் வேறு பிரிவு எனவும்.. பெண்ணினை தங்களின் சொந்த ஊர் அனுப்ப முயன்றனர். தாங்கள் பூஜை செய்துக் கொண்டிருந்த கோவில் விட்டுவிட்டு.. பெண்ணோடு தங்கள் ஊர் செல்ல முயன்றனர். அதற்கு பயந்து இருவரும் ரகசிய பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.