பார்வை கற்பூர தீபமோ?
திங்கள் காலை பத்து மணிக்கு ராக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் கம்பனியின் வரவேற்பில் நின்றிருந்தாள் ஸ்ரீ. மனித வளத் துறை தலைவர் ராமலிங்கத்தைப் பார்க்க கடந்த பத்து நிமிடமாகக் காத்திருந்தாள்.
அழைப்பு ஒரு வழியாக வரவும், மூன்றாவது மாடியில் இருந்த ஹெச். ஆர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே சென்றதும், அமைதியாக இருந்தது அலுவலகம். எட்டு பத்து பேர் ...
“போ… அப்ப நவீன் இப்ப வரமாட்டார். “, என்று சொன்னவள் அதன் பிறகு பிட்ச் பற்றிய பேச்சுகள் அங்கிருந்த டீ.வி.யில் வருவதில் ஆர்வமில்லாமல் எழுந்து கண்ணாடி வழியே நவீன் தெரிகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆட்டம் களை கட்டத் தொடங்க, ராகுல் அதில் மொத்தமாக மூழ்கியிருந்தான். சற்று நேரம் ஆர்.சி.பியின் ஆடாத சில வீரர்கள் வந்திருக்க, அவர்களைப்...
மறு நாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சேப்பாக்கம் மைதானத்தை அடைந்திருந்தார்கள் ஸ்ரீ நிதியும் ராகுலும். நவீன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைக் காட்டி, அங்கிருந்த ஆஃபீசில் ஐ.டி. ப்ஃரூஃபும் காட்டி, அந்த விருந்தினர் பாட்ஜை வாங்கிக்கொண்டவர்களுக்கு காதில் ரத்தம் வராத குறையாக அறிவுரையும் அளிக்கப்பட்டது. தேவையில்லாமல் ப்ளேயர்சை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் ஆரம்பித்து, நிறைய பேசியவனிடம் பயபக்தியாக...
அத்தியாயம் – 1
வழக்கம்போல தாமதமாக எழுந்த ஸ்ரீநிதி அதற்காக பதட்டப்படாமல் கிளம்பிக்கொண்டிருந்தாள். ‘ம்ப்ச்… ராக்குதானே… வந்தா இரண்டு குதி குதிப்பான்… ஆஃப் பண்ணிக்கலாம் ‘, என்கிற அலட்சியம்.
காது வளையங்களை மாட்டி, இந்தப்புறம் அந்தப் புறம் என்று தன் அழகை திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படி ஒன்றும் பேரழகியெல்லாம் இல்லை. இருபத்தி இரண்டு வயது பருவ மங்கைக்கு...
எழுந்து வந்த வெங்கட்ராமன், “ என்னடா இது விளையாட்டுன்னு முதல்ல நினைச்சேன். ஸ்ரீநிதி தன்னோட கலகலப்பான பேச்சால உங்க எல்லாரையும் மகிழ்ச்சியாக்கவும், அதுதான் நோக்கம்னு நினைச்சேன். ஆனா, நிச்சயமா இந்த விளையாட்டுக்குள்ள இப்படி ஒரு பாடம் கத்துக்கலாம்னு நினைக்கவேயில்லை. அடிப்படை விதிகள்தான், ஆனா நாம அடிக்கடி நினைவு படுத்திக்க வேண்டிய விஷயங்கள் இது. “,...
அத்தியாயம் – 13
உற்ற நண்பன் ராக்கியோடு அவளக்குப் பிடித்தமான காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.
நவீன் பற்றிய பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது.
“நீ சொல்றதெல்லாம் பார்த்தா, அன்னிக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லத்தான் ட்ரை பண்ணிருக்காரு. நீதான் லாவா கேக் சாப்பிடற குஷியில எதையும் கண்டுக்கலை. சரியான தின்னிப் பிண்டம்… சோத்து மூட்டை….”, ராகுல் அவளை திட்டிக் கொண்டிருந்தான்.
முகத்தை...
அத்தியாயம் - 22
அவள் அடுக்கின வாதங்கள் எல்லாம் நியாயமாகத்தான் பட்டது. ஆனாலும் நவீன் மனசு ஒத்துக்கொள்ளவில்லை.
“ஸ்ரீ ? நிஜமா சொல்லு ? உனக்கு இஷடமில்லையா ? பட் … ராகுல் . அன்னிக்கு நைட் …. உனக்கும்… என் மேல விருப்பம்னு….”, நவீன் யோசித்தபடியே இழுத்தான். ‘ ராகுல் ஸ்ரீ லவ் பண்ணுகிறாள் என்று...
தந்தை அருகில் இல்லாமல் எதிரில் இருந்ததில் கேட்கவும் முடியவில்லை. ஸ்ரீ திரும்பிச் சென்று முல்லை அருகில் அமர்ந்து கொண்டாள். அவனுக்கு பக்கவாட்டில் தெரிந்தாள்.
நவீனின் பெரியப்பாவே பெரியவராக பேச்சை தொடங்கினார். “ஆக பெண் வீட்டுக்கும் பிள்ளை வீட்டுக்கும் இந்த கல்யாண ஏற்பாட்டுல சம்மதம் தானுங்களே ? மேற் கொண்டு பேச்சை தொடங்கலாமா?”
பெரியவர்கள் கல்யாணம் எங்கே வைப்பது,...
மாலை மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ஸ்ரீயும் ராகுலும். மதியம் நடந்தவற்றை கேட்டு பொறாமையில் வெந்துகொண்டிருந்தான் ராகுல்.
“அடிப் பாவி…. வீடு வரதுக்கு முன்னாடி மெசேஜ் போட்டிருந்தா கூட நான் ஓடி வந்திருப்பேன். இப்படி கண்லயே காட்டாம அனுப்பிட்டயேடி…. “, என்று மூன்றாவது முறையாக புலம்பினான்.
“டேய்… இங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…. நீ என்ன...
அத்தியாயம் – 10
ஸ்ரீ வீட்டிற்குள் நுழைய இரவு மணி எட்டரையானது. களைப்பாக வந்தவளை,
“கையோட போய் ஒரு குளியலை போட்டுட்டு வா ஸ்ரீ. ஹீட்டர் போட்டு வெச்சிருக்கேன்.”, என்றார் ரோஜா.
“மா…. டையர்டா இருக்குமா…”, என்று சுணங்கினாலும், ரோஜா விடமாட்டார் என்று நன்றாக தெரிந்திருதவள், குளிக்கச் சென்றாள்.
ஒரு வழியாக சாப்பிட வரவும், அவள் தந்தையும் வந்து அமர்ந்தார்.
“ஏன்ப்பா…...
அத்தியாயம் – 7
இரவு தூங்கவே வெகு நேரமானதால், காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள் ஸ்ரீ. அலுவலகத்திற்கு இரண்டாம் நாளே நேரம் கழித்துச் சென்றால் நன்றாக இருக்காதே என்று அரக்க பரக்கக் கிளம்பினாள்.
ஒருவழியாக சரியான நேரத்திற்கு வந்து அவளது இருக்கையை அடைந்த பின் தான் நிம்மதியானது. வந்த அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போதே, அலுவலக தொலைபேசி...
“ம்க்கும்… அப்படின்னா கூட தேவலாம். ஆனா இங்க படுத்தறதே என் புருஷன்தான். அம்மா, பொண்டாட்டின்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இரண்டு பேர்ல யார் மாட்டினாலும் திட்டி தீர்த்துடுவார். அவர்கிட்டருந்து தப்பிக்க அப்பப்ப மாமியாரோடதான் கூட்டு சேரணும்.”, என்றாள் மைதிலி.
“இதென்னக்கா புதுசா இருக்கு. அவ்வளவு டெரா உங்க ஹஸ்பண்ட்? எதுக்கு திட்டுவார் ?”
“எதுக்கு வேணாலும் திட்டுவார். இன்னிக்கு...
தனது சிக்கன், மஞ்சள் பூசணி சாஸ் போட்ட பாஸ்தாவை அவள் புறம் நீட்டினான். சுவாதீனமாக தன் ஸ்பூனால் எடுத்து தட்டில் போட்டவள், சுவைத்து உண்டாள்.
“வாசனை இழுத்துகிட்டே இருந்துச்சு. எப்படி கேட்கறதுன்னு நினைச்சேன். நீங்களே குடுத்துட்டீங்க.”, ஸ்ரீ சொல்லவும்,
“ஸ்ரீ… உங்க அம்மா உன் நாக்கை எவ்வளவு வளர்த்துவிட்டிருக்காங்கன்னு தெரியும். கூச்சப்படாம கேளு. நான் தப்பா நினைக்க...
அத்தியாயம் – 5
ஸ்ரீயின் சித்தப்பா ராஜனிற்கு தலை கால் புரியாத சந்தோஷம். பின்னே, ஐ.பி.ல் வீரர் நவீன் சந்திரசேகர் அவர் வீட்டில், அவருடன் உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றால் பெருமைதானே.
சராசரி இந்தியக் குடிமகனாக ராஜனும் ஐ.பி.ல் கிரிக்கெட் ஆர்வமாகப் பார்ப்பவர்தான்.நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது என்றாலும் மாட்ச் பார்க்கப் பிடிக்கும் என்னும் ரகம்.
ஸ்ரீ போன் செய்து அவள்...
அத்தியாயம் – 23
சென்னையின் பாரம்பரியமிக்க் பெரிய நகைக் கடை. கல்யாணத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்க ஆடி மாதம் முடிந்து தாலி எடுக்க மீண்டும் இரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்திருந்தது.
புடவை எடுப்பதில் ஏற்கனவே பட்டிருந்ததால், இந்த முறை சிப்ஸ், பிஸ்கெட் என்று நொறுக்குத் தீனியுடன், பொழுது போக நண்பன் ராக்கியையும் இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஸ்ரீ.
சிறப்பாக...
“ஸ்ரீ சொன்னாளா? அவளையே நான் வாங்க போங்கன்னு சொல்லாதேன்னு சொல்லிகிட்டு இருக்கேன். ஏன் டா இப்படி மரியாதை குடுத்து தள்ளி வெக்கறீங்க? ஸ்ரீ எனக்கு ரொம்ப இம்பார்ட்டண்ட் ராகுல். புரியுதா?”, நவீன் தீவிரமாய் சொல்ல, ராகுல் புன்னகையோடு ஆமாம் என்று தலை ஆட்டினான்.
“புரியுது நவீன். இல்லாட்டி உங்க .. ஐ மீன் உங்கிட்ட நான்...
மறு முனையில் நிற்கும் வேளை, பைக் ஆசாமி ஒருவனை மஃப்டியில் இருந்த போலீஸ் ஒருவர் நிறுத்தி கேள்வி கேட்பது தெரிந்தது. பைக் ஆசாமியின் விறைப்பான உடல் மொழியில் காரை அவர்கள் புறம் செலுத்த, பைக் ஆசாமி போலீசை தள்ளி விட்டு பைக்கை சீற விடவும் சரியாக இருந்தது.
நொடியில் காரை சீறவிட்ட கைலாஷ் பைக்கை லேசாக...
அத்தியாயம் – 8
அன்றிரவு பத்து மணி போல, ‘முழிச்சிருக்கியா ? பேசலாமா?’, என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் நவீன்.
ஆன்-லைனில் இருந்த ஸ்ரீ, உடனே அவனை அழைத்தாள்.
“ஹே… நாளைக்கு மாட்ச்… இன்னும் தூங்க போகலியா நீங்க?”, என்றாள் ஸ்ரீ.
“ம்ம்.. போகணும். இப்பதான் போலர்ஸ்க்கான மீட்டிங் முடிஞ்சுது. ரூமுக்கு வந்தேன். அம்மாகிட்ட பேசிட்டு, உனக்கு மெசேஜ் பண்ணேன்.:, என்று...
அத்தியாயம் – 17
கரண் அதீத கோபத்தில் இருந்தான்.
“எப்படி… எப்படி இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சாங்க போலீஸ்? ஏய் பொண்ணு… உண்மையை சொல்லு ? உங்க அப்பா பெரிய ஆளா? எப்படி நேரா க்ரைம் ப்ராஞ்ச் ஆஃபீசர் உன்னை தேடி வரான்?”, ஸ்ரீயின் தோளைப் பிடித்து உலுக்கிய வேகத்தில் அவள் கழுத்து ஆடியது.
“தெரியாது… சத்தியமா எங்க அப்பாக்கு...
சற்று நேர இலகுவான பேச்சுக்கள் ஓட, நவீன் விடை பெறுவதாகக் கூறி எழுந்தான்.
“அத்தை…ஒரு விஷயம்…. ரிக்வெஸ்ட்ன்னு கூட சொல்லலாம். ப்ளீஸ், ஸ்ரீயை அடிக்காதீங்க. அவ என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னதுக்கான காரணம் எல்லாம் நியாயமான காரணம்தான். அது என்னன்னு கூட நீங்க கேட்காம அடிச்சு, போனை எடுத்து வெச்சிகிட்டு…. வேணாமே. அவ எங்கிட்ட...