Wednesday, November 11, 2026

    கொள்ளையடித்தவள் நீயடி!

    19 குழப்பம், அதற்கான தீர்வை கண்டுபிடித்து சரியாக்கி விட்டால் அங்கே இன்னொரு குழப்பத்திற்கு அவசியம் கிடையாது. குழப்பம் சந்தேகமாக உருமாறும் போது அங்கே பல யூகங்களுக்கு உயிர் கிடைக்கும். அர்த்தமற்ற யூகங்கள் நிம்மதியான வாழ்விற்கு உலை வைக்கும். சில நாட்களாகவே ஐஸ்வர்ய நந்தினி குழம்பித் தவித்தாள். மற்ற விஷயத்தைப் போல இந்த விஷயத்தையும் கணவனிடம் வாய்விட்டு கேட்டிருந்தால்...
    18 குழலி நாளுக்கு நாள் ஒரு சைக்கோவை போல நடந்து கொண்டாள். அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவளை பெற்றவர்களுக்கு கூட தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் திருமணம் நெருங்கி வரும்போது வம்படியாக ஒரு பிரச்சனையை இழுத்து அதை நிறுத்துவதையே வேலையாக செய்து வருகிறாள். முதன் முதலில் ஆதியை காதலித்து அது திருமணம் வரை வந்தது. ஊரெங்கும்...
    17 ஐஸ்வர்ய நந்தினி வழக்கம் போல நடனம் ஆடும் போது அவளது கனவுலகிற்குள் சென்று விட்டாள். எப்போதும் அந்த உலகத்தில் அவள் மட்டுமே சஞ்சரிப்பாள். இப்போதெல்லாம் அவள் மட்டுமில்லாமல் ஆதித்த கரிகாலனும் அந்த உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அவளது முகத்தில் காணப்பட்ட நவரசமும் நடனத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்களை கை தட்டவும் மறந்து பிரமிக்க வைத்தது. கொடி இடை வளைந்து,...
    16 ஐஸ்வர்ய நந்தினி மட்டுமே அன்று தன் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு, ஆதித்த கரிகாலனை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொண்டாள்.. அவளுக்கு அது அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் ஆதி அவளைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவளது விருப்பு வெறுப்புகள்.ஆசைகள் கனவுகள், இப்படி எதை பற்றியும் அவளிடம் வாய் திறக்கவில்லை ஆதி. காலையிலிருந்து விரதம்...
    15 எப்போதுமே அமாவாசை தினத்தன்று காலையில் கோவிலுக்கு செல்லும் அமுதன் பொழுது போன பிறகு தான் வீட்டுக்கு வந்து சேருவார். ஆனால் இன்று ஐசு வீட்டில் தனியாக இருப்பாள் என்பதால் மதியமே வீடு வந்து சேர்ந்து விட்டார். அவர் காலையில் கோயிலுக்கு செல்லும் போது தலை குளித்திருந்த ஐசு இப்போதும் அதிசயமாக தலை கொடுத்திருக்க, அவளின்...
    14 கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள் இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள் சொல் என்னும் ஓர் நெஞ்சம் எனை நில் என்னும் ஓர் நெஞ்சம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம்❤️ ஆதரவற்ற குழந்தை போல ஐஸ்வர்ய நந்தினி நடு வீட்டில் தரையில் படுத்து கதறியழ அவளது அழுகைக்கு அணை கட்ட வேண்டியவன் ஆற அமர எழுந்து அவள்...
    13 அமுதன் எவ்வளவோ ஆதித்த கரிகாலனிடம் சொல்லி பார்த்து விட்டார். ஐசுவை கூட்டிக்கொண்டு எங்காவது வெளிநாடு சென்று வரச் சொல்லி. அந்த வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று சுற்றிக் கொண்டிருந்தான் ஆதி. கார் ரேஸை தவிர அதில் வந்த கோடிக்கணக்கான வருமானத்தில், பல தொழில்களில் முதலீடுகள், பங்குதாரராக...
    12 மூன்று நாள் மறுவீட்டு விருந்து எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை. நான்காம் நாள் பொழுது விடிந்து காலை வழக்கம் போல் ஐந்து மணிக்கு எழுந்த ஐஸ்வர்ய நந்தினி காலைக்கடன்களை முடித்துவிட்டு, அழகிய தோற்றத்தில் விடியலை காண மெல்லமாக நடந்து கொண்டிருந்தாள். தாய் வீட்டிற்கு சென்று அன்றே, ஆதி ஈஸ்வரனை பிடித்து சோபாவில் தள்ளி விட்டான். மற்றவர்...
    11 மறுநாள் மறு வீட்டு விருந்துக்கு செல்லவிருந்தனர் ஆதியும் ஐசுவும். வரமாட்டேன் என எங்கே வீம்பு செய்யப் போகிறானோ என்று ரொம்பவும் பயந்து விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி. இரவு நெடுநேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தான். அப்போதும் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள் ஐசு. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று அவள் கேட்க நீ சாப்பிட்டியா என்று...
    10 ஆதித்த கரிகாலன் நல்லவனா கெட்டவனா?அவனை நம்பலாமா? நம்பக் கூடாதா?ஒரு நாளில் ஒருவரை கணிக்க முடியுமா? இந்த திருமணமே புதிராக இருந்தது ஐஸ்வர்ய நந்தினிக்கு. பாத்ரூமில் இருந்து தலையை வெளியே நீட்டினாள். ஆதி உடலில் ட்ரெக் பேண்ட் மற்றும் டி ஷர்ட் இடம் பிடித்திருந்தது. நிம்மதியோடு வெளியே வந்தவள் அறைக் கதவை மீண்டும் திறக்க போக சட்டென்று அவளை...
    காட்டுப் பேய் கத்துவதைப் போல நாராசமாக ஒலித்தது ஈஸ்வரன் குரல். நர்மதா ஈஸ்வரன் கையைப் பிடித்து " ஏங்க எதுக்கு இப்படி கத்துறீங்க? இது சம்பந்தி வீடு" இது ஒன்றும் உங்களது வீடு கிடையாது என்பதை குறிப்பால் உணர்த்த முயன்றார். மனைவி அவ்வாறு சொல்லிய பிறகே அமுதன் முகத்தை நோக்கினார் ஈஸ்வரன். அமுதனுக்கு, ஈஸ்வரன் வந்தவுடனேயே  தன் வீட்டு...
    8 காலை உணவாக மருமகளும் மாமனாரும் பேசிக்கொண்டே இட்லிகளும் தோசைகளையும் தயாரித்து சுட சுட உணவு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கும் போதே ஆதி இறங்கி வந்தான். அவனைப் பார்த்ததும் அமுதன் ஒரு வினாடி திடுக்கிட்டு பின் மௌனமாக தனக்குள் சிரித்துக் கொண்டார். காரணம் சில ஆண்டுகளாக அவன் காலையில் இவ்வளவு விரைவாக எழுந்ததே கிடையாது. பூஜை அறை...
    7 இயல்பாகவே திருமணமான பெண்கள் முதலிரவு அறைக்குள் நுழையும் போது இருக்கும் பதற்றமோ, பயமோ, எதிர்பார்ப்போ இப்படி எதுவும் இல்லாமல் குழம்பிய இதயத்தோடு அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் ஐஸ்வர்ய நந்தினி. அவளைப் பொறுத்தவரை இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதாவது அவளைப் பெற்றவரால் முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு வந்திருந்த அவள் வயதை...
    6 அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக "ஹேய் ஐசு கொஞ்சம் வெக்கப்படுடி" உறவுக்கார பெண்ணொருத்தி மாலையும் கழுத்துமாய் கடனே என நின்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினி தோளில் இடித்தாள். மாலையை விட பாரமாக...
    பிறவி பைத்தியத்தை பார்ப்பது போல குழலியை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அவனது சமாதானங்கள் கொஞ்சல்கள் கிஞ்சல்கள் மிஞ்சல்கள் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. தங்கையை காட்டி பொறுப்பை கூறினால் சமாதானம் ஆகி விடுவாள் என்று எண்ணி நடக்காத விஷயத்தை நடப்பதை போல திரித்து கூற, குழலி அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினியை அக்கினியாய்...
    ஈஸ்வரன் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே நாளை ஈஸ்வரனின் செல்வமகள், அதிர்ஷ்ட தேவதை, செல்வக்குமாரியின் திருமண நாள். நிச்சயம் முடிந்து மூன்று மாத இடைவெளி கடந்த நிலையில் வந்த முதல் முகூர்த்தத்திலேயே திருமணத்தை அவசரமாக குறித்து விட்டார் ஈஸ்வரன். என்னதான் அவர் சமூகத்தில் நல்ல மதிப்பான பெயரோடு, நாகரீகத்தில் ஊறிப் போயிருந்தாலும் சில...
    3 தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. தன்னுடைய முகத்தில் இருக்கும் பருக்களை நகத்தால் கீறி கொண்டிருக்கிறாளோ என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். ஐஸ்வரிய நந்தினி, அவளது முகம் முழுவதுமே பிக்மென்டேஷன் எனப்படும் சரும குறைபாடு. அதாவது...
    மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓடிடும் முன்பே விழி மடல் திறந்து அதற்கு முட்டுக் கட்டை போட்டாள்  ஐஸ்வர்ய நத்தினி. சில நேரங்களில் வாய் விட்டு கூற முடியாத பிரார்த்தனையை ஒரு...
    இறைவன் நினைத்து விட்டால் நீ எதையும் வெல்வாய்! வேகம் வேகம் வேகம்! ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வருமென புரியவில்லை. முதலில் வருவதை கணித்து அவர்கள் ஆரவாரம் செய்தால் இரண்டாவதாக வருவது அதனை முந்தி அவர்களின் கருத்தை பொய்யாக்கி வருகிறது.முதலில் வரும் காருக்காக ஒரு...
    error: Content is protected !!