15

எப்போதுமே அமாவாசை தினத்தன்று காலையில் கோவிலுக்கு செல்லும் அமுதன் பொழுது போன பிறகு தான் வீட்டுக்கு வந்து சேருவார். ஆனால் இன்று ஐசு வீட்டில் தனியாக இருப்பாள் என்பதால் மதியமே வீடு வந்து சேர்ந்து விட்டார். அவர் காலையில் கோயிலுக்கு செல்லும் போது தலை குளித்திருந்த ஐசு இப்போதும் அதிசயமாக தலை கொடுத்திருக்க, அவளின் மலர்ந்த முகமும், பொத்தி பொத்தி நடந்த நடைவாகும் அந்த அனுபவசஸ்தருக்கு நடந்ததை பறைசாற்றியது.

இதுவரை அவருகிருந்த மனக்கிலேசம் கூட விலகிச் சென்றது. ஆதித்த கரிகாலன், வக்கீல் ஈஸ்வரனின் இரண்டாவது பெண்ணை எனக்கு மணமுடித்து வை என்று சொல்ல அடுத்த வேலையாக ஈஸ்வரன் வீட்டின் முன்பு நின்றார் அமுதன். திருமணமே செய்து கொள்ளாமல் இத்தனை வருடங்கள், தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த மகன் அவனே வலிய வந்து  திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க, எங்கே விட்டால் மனம் மாறி விடுவான் எனும் பயத்தில் அவசர அவசரமாக இந்த திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்.

ஆனால் திருமணம் முடிந்த கையோடு ஆதித்த கரிகாலன் நடந்து கொள்ளும் முறையை பார்த்து, ஒரு நல்ல மனுஷனாக அவரின் மனம் குற்ற உணர்ச்சியில் துவண்டது. ஐஸ்வர்ய நந்தினி அழைத்துக் கொண்டு அவனுக்கு இருந்த பணத்தில் உலகத்தையே சுற்றி வந்திருக்கலாம். அவனும் வீட்டை விட்டு வெளியே அவளை அழைத்து செல்ல மாட்டேன் என்கிறான். இரவில் விரைவாக வீடு வந்து சேருவான் எனப் பார்த்தால் அதற்கும் வேட்டு வைத்தான்.

தன் முன்னாள் புன்னகை முகமாக காட்சியளிக்கும் ஐஸ்வர்ய நந்தினி, தனிமையில் கண்டிப்பாய் வேதனைப்படுவாள் என்பது அமுதனுக்கு நன்கு புரிந்திருந்தது. மகனை கண்டிக்கவும் அவருக்கு வழி தெரியவில்லை. மனதில் அளவுக்கு மீறிய அழுத்தம் கூடி போனது. மனைவி இறந்த நாளும்  நெருங்கிட மன பாரத்தை இறைவனிடம் கொட்டி தீர்த்து விட்டார்.

ஐசு தனியாக வீட்டில் இருப்பாள் என்று அவர் அடித்து பிடித்து வீட்டிற்கு வர, வந்து பார்த்தால் கடவுள் கண் திறந்து விட்டார். மனதால் இறைவனுக்கு நன்றி கூறினார் அமுதன். ஐசுவுக்கு மனதில் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கணவனின் அருகாமையும், அவனது உரிமையும் நிலைநாட்டிய பிறகும் ஏதோ ஒன்று அவளது மனதை அறித்துக் கொண்டே இருந்தது. மதிய உணவு நேரம் தாண்டியதும் அமுதன் சற்று நேரம் ஓய்வெடுக்க, ஆதி வெளியே சென்றிருந்தான்.

எப்போதும் போல அந்தப் பரந்த தோட்டத்தில் நடக்கும் போது ஐசுக்கு மனதில் இனம் புரியாத நிம்மதி தோன்றும். யாருமற்ற தனிமையோ, அவளை கண்காணிக்க ஆளில்லாத நிலையோ, ஏதோ ஒன்று அந்த ஏகாந்த நேரத்தை வசந்தமாக்கி கொண்டிருந்தது அவளுக்கு. இந்த தனிமையின் நேரத்தில் அவளின் சுய அலசலில் ஈடுபட்டாள் ஐசு. கட்டிருந்த துண்டு அவுந்து விழுவதை கூட பொருட்படுத்தாமல், தன்னை மறந்து அவள் ஆடியபோதும் அப்படியே கோழி அமுக்குவதைப் போல அவளை அமுக்கி அடுத்த கட்ட ஆட்டத்திற்கு அடி போடாமல், நொடியில் மாறும் அவளது முக பாவனைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

ஐசுவே ஆடி மூச்சரைக்கு நின்ற, தன் நிலையை உணர்ந்து, குடுகுடுவென ஓடிச் சென்று குளியலறைக்குள் மறையும் வரை அவனின் பார்வை தொடர்ந்தது. பல பார்வைகளை அவளது வயதிற்கு தாண்டி வந்தவளுக்கு, கணவனின் பார்வை சொன்னது புரியாமல் இல்லை. அவள் குளித்து வரும் வரை அவனும் காத்திருக்காமல், பக்கத்து அறை குளியலறையை பயன்படுத்திக் கொண்டான். வெட்கத்தில் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் ஐசு தவிக்க, அம்மாதிரி தவிப்பெல்லாம் அவனிடம் கிடையாது.அழகிய புன்னகையோடு அவளைத் தாண்டி சென்று விட்டான்.

அவள் படித்த பார்த்த விஷயங்கள் எல்லாம் அவள் ஞாபகத்திற்கு வந்தது. ஈருடல் ஓர் உயிராக மாறிய பிறகு மது உண்ட வண்டாக பெண்மையை வட்டமடிக்குமாம் ஆண்மை. இங்கானால் ரயில் சினேகிதம் போல அவளைக் கடந்து சென்று விட்டான் ஆதி. இளமையின் வேகத்தில் அவளை உபயோகப்படுத்தி விட்டானா? அப்படி என்றால் அவனின் தொடுகைக்கு இவளும் தானே இசைந்து கொடுத்தாள்?

ஒரு வார்த்தை இருவரின் மனநிலையை பற்றியும் பேசவில்லை. இதுவரை அவனுக்கு பிடித்த வண்ணம் எதுவென்று கூட ஐசுவுக்கு தெரியாது. அமுதனிடம் கேட்டால் தோளைக் குழுக்குவார். எதுவாக இருந்தாலும் இரவு அவன் வந்ததும் பேசிக் கொள்ளலாமென அப்போதைய குழப்பத்தை தள்ளிப் போட்டாள் ஐசு.

ஆனால் இரவு வீட்டிற்கு வந்தவன் சொன்ன செய்தியில் ஐசுக்கு மொழியே மறந்து விட்டது. வந்த புதிதில் அவன் உணவு விஷயத்தில் கொடுத்த தண்டனை எப்போதும் அவளுக்கு மறக்காது.  அதனால் அவன் வருகிறானோ இல்லையோ நேரத்திற்கு சாப்பிட்டு விடுவாள் ஐசு. சில நேரங்களில் தூங்கியும் போயிருப்பாள். ஆனால் இன்று அவனோடு கலந்துவிட்ட உரிமையில், அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய பாக்கியிருக்க அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

வழக்கத்தை விட சற்று முன்பே வீட்டிற்கு வந்த ஆதி, இரவு உணவை முடித்துவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான்.

” ஐஸ்”

“ம்ம்ம்”

” என்ன ஆச்சு, ஏன் கொஞ்சம் டல்லா இருக்க? காலையில நடந்ததை பத்தி யோசிச்சிட்டு இருக்கியா”

அவன் எதை குறிப்பிடுகிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

“ம்ஹும்”

” அப்ப.. காலையில அப்படி செஞ்சது ஏதாச்சும் வலிக்குதா”

அவனது முகம் இயல்பாய் இருந்தாலும் வார்த்தைகள் தடுமாறியது. அந்த தடுமாற்றம் ஐசுக்கு ஆறுதலாக இருந்தது.

“ஐயோ இல்ல” அவசரமாய் மறுத்தாள்.

” அப்புறம் என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? என்கிட்ட எதையோ சொல்ல வர. ஆனா சொல்ல மாட்ற. என்ன சொல்லணும் சொல்லு. காலையில அப்படி நடந்தது உனக்கு பிடிக்கலையா? உன்னை ஏதாச்சும் கஷ்டப்படுத்திட்டேனா? இனிமே அப்படி நடந்துரும்னு பயமா இருக்கா? இல்ல வேற எப்படியாச்சும் செய்யணும்னு உனக்கு கற்பனை இருந்துச்சா? எதுவா இருந்தாலும் தைரியமா பேசு ஐஸ்.”

அவனே சொல்லிய பிறகு வாய்மூடி கொண்டு சும்மா இருப்பதில் பயன் என்ன?

” அது வந்து.. நமக்குள்ள எதுவுமே செட் ஆகல. அப்படி இருக்கும்போது நமக்குள்ள அது நடந்தது சரியா”

திக்கி திணறி சொல்லியவளை கண்டு பொங்கி சிரித்தான் ஆதி.

“ஐஸ்.. உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த காலத்துல நம்ம பாட்டி தாத்தா எல்லாம் என்னத்த மனச விட்டு பேசிருக்க போறாங்க? மொதக்கொண்டு புருஷன் மூஞ்சியை நிமிர்ந்து பார்க்கிறதுக்கே அவங்களுக்கு மாசக்கணக்கா ஆகும்னு கேள்விப்பட்டிருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க பாத்துக்கிட்டது கூட இருக்காது. சில பேருக்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் புருஷன் பேரே தெரியாம கூட இருந்திருக்காங்க. அவங்க எல்லாருக்கும் என்ன பொருத்தம் இருந்திருக்கும்?

அவங்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே பொருத்தம் இந்த உடலுறவு மட்டும் தான். இந்த பொருத்தம் அவங்களுக்கு சரியா அமைஞ்சதுனால தான்  அவங்க காலத்துக்கும் ஒத்துமையா சந்தோஷமா வாழ்ந்தாங்க. அந்த காலத்துல எங்கேயாச்சும் விவாகரத்து இருந்திருக்கா? நம்ம பாட்டி தாத்தாவ எடுத்துக்கிட்டா, அவங்கள மாதிரி வாழ்க்கைய திட்டமிட்டு வாழ்ந்தவங்க யாராச்சும் இருக்காங்களா? அவங்கள மாதிரி ஒத்தும இப்ப இருக்கிறவங்க கிட்ட இருக்கா? அவங்கள மாதிரி புரிதல் இப்ப இருக்கிற எந்த யங் கப்பள் கிட்ட இருக்கு?

நம்ம அம்மா அப்பா காலத்துலயே கொஞ்சம் கொஞ்சமா கலாச்சார சீர்கேடு வர ஆரம்பிச்சிடுச்சு. நம்ம காலத்துல தலவிரிச்சு ஆடுது. நாட்டுல நடக்குற பாதி விவாகரத்துக்கு முக்கிய காரணமே இந்த உறவு தான். நமக்குள்ள எது சரியா இருக்கோ இல்லையோ, இது சரி ஆயிடுச்சு. மத்த எல்லாமே தானா சரியாயிடும். இதுல உனக்கு என்ன குழப்பம்”

அவனது நீண்ட விளக்கத்தைக் கேட்டு வாய்ப் பிளந்து அமர்ந்து இருந்தாள் ஐசு.

” குழப்பம்னு ஒன்னும் இல்ல. உங்களுக்கு எப்படி என்ன பிடிச்சது? உங்கள சுத்தி நிறைய பொண்ணுங்க இருந்திருப்பாங்க. குழலி அண்ணிய தான் நீங்க முன்னாடி கல்யாணம் பண்றதா இருந்துச்சு. உங்க ரெண்டு பேத்துக்கும் ஒத்துப்போல அதனால அந்த கல்யாணம் நின்னு போச்சுன்னு கேள்விப்பட்டேன்.

நீங்க, உங்க ஸ்டேட்டஸ்க்கு நிறைய அழகான பொண்ணுங்களை பார்த்திருப்பீங்க. அப்படி இருக்கும்போது எப்படி என்ன ஜூஸ் பண்ணீங்க? என்ன எங்க வச்சு பார்த்தீங்க? என்ன பார்த்ததும் அந்த செகண்ட் என்ன நெனச்சீங்க?

எதனால உங்களுக்கு என்ன பிடிச்சது? என் பேரு கூட உங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கும்போது எப்படி வாழ்க்கை மொத்தமும் என் கூட வாழ நினைச்சீங்க?”

அவள் மனதில் அரித்துக் கொண்டிருந்த அனைத்து கேள்விகளையும் கேட்டு விட்டாள் ஐசு.

” இதுதான் உன்னோட குழப்பமா? ஐஸ் மொத மொத உன்ன எங்க பார்த்தேன் தெரியுமா? உன் அக்கா செல்வகுமாரி மேரேஜ்ல. ஆகாஷ் என்னோட ஃப்ரெண்டு தான் ஒரு காலத்துல.

குழலி, என் வாழ்க்கையே அவதானு நினைச்சேன். என்னோட லைஃப்ல நான் ஆசைப்பட்டது ரெண்டு விஷயம். ஒன்னு குழலி இன்னொன்னு கார் ரேஸ். ஒன்னு பின்னாடி ஒன்னு கிடைச்சிருந்தா இங்க பிரச்சனையே கிடையாது. ரெண்டுமே ஒரே நேரத்துல கிடைச்சது. நானும் குழலியும் மூணு வருஷமா லவ் பண்ணோம். ரெண்டு சைடும் வீட்டில ஒத்துக்கிட்டாங்க. ஃபர்ஸ்ட் குழலி வீட்டுல கொஞ்சம் பிரச்சனை இருந்துச்சு. அத அவளே சமாளிச்சுட்டா.

கல்யாணத்துக்கு இன்விடேஷன் அடிச்சு வந்ததுக்கப்புறம், என் லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ன்ட் வந்துச்சு. அது ஒரு இம்போர்ட்டண்ட் கார் ரேஸ். என்னை நம்பி அவ்ளோ பெரிய ரேஸ்ல ஸ்பான்சர் பண்ணாங்க. என்னை என் திறமைய மட்டுமே நம்புனாங்க.. அவங்க என் மேல வச்ச நம்பிக்கை, ஒரு துளி கூட குழலி கிட்ட இல்லை.

அவளுக்கு நான் கார் ரேஸ்ல கலந்துகிறது பிடிக்கல. எனக்கு ஏதாச்சும் ஆயிரும்னு அவ பயந்தா. அந்த பயம் நியாயமானது. ஆனா பயம் மேல அவ வச்சிருந்த நம்பிக்கையை என் மேல வைக்கவே இல்ல. கடைசி வரைக்கும் எனக்கு ஏதாச்சும் ஆகிரும்னு அவ ஆணித்தரமா நம்பனா.

எவளவோ சொல்லி பாத்துட்டேன். அவளா, கார் ரேஸானு கேட்டா? யோசிச்சு பாரு இது எவ்வளவு பெரிய கஷ்டமான கேள்வி. அவ என்னோட சோல் மேட். கார் ரேஸ் என்னோட லைஃப். சோல் மேட்டா லைஃபா?

நான் லைஃப்ப சூஸ் பண்ணேன். குழலி என்னை விட்டு போயிட்டா. மேரேஜ் நின்றுச்சு. ஆகாஷுக்கு என் மேல ரொம்ப கோவம். அவனும் என்னை புரிஞ்சுக்கல. என்ன புரிஞ்சிக்காத யாரும் என் கூட இருக்கணும்னு அவசியம் இல்ல.

என் வாழ்க்கையே குழலி போனதுக்கு அப்புறம் வேற மாதிரி ஆயிடிச்சு. எல்லாத்து மேலயும் ஒரு வெறுப்பு. சீக்கிரம் செத்துட்டா ரொம்ப நல்லா இருக்கும்னு யோசிச்சேன்.என்னோட எல்லா கார் ரேஸ்லையும் கடவுளே இதுதான் என்னோட கடைசி கார் ரேஸா இருக்கனும்னு வேண்டிக்குவேன்.

உண்மையா லவ் பண்ணிட்டேன் போல. அதான் அவ இல்லாம வாழவே முடியல. அப்படியே வருஷம் ஓடிச்சு. ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு.. அஞ்சு வருஷம். எவ்வளவு லாங் கேப்.. அஞ்சு வருஷத்துல அவள நான் திரும்பவும் பார்த்தது உன் அக்கா மேரேஜ்ல.

என்ன பார்த்ததும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. உன் அண்ணன் கிட்ட இப்பவே அவள கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டா. அப்போதான் நீ உன் அண்ணனை கூப்பிட அங்க வந்த. அவ வாய்க்கு வந்த மாதிரி உன்ன பேசுனா. யார அவ இவ்ளோ கோவமா கழுவி கழுவி ஊத்திக்கிட்டு இருக்கான்னு எட்டி பாக்கும்போது தான் உன்ன நான் மொத மொத பார்த்தேன்.

நீ கேட்டியே? என்ன சுத்தி நிறைய பொண்ணுங்க இருந்திருப்பாங்கன்னு. ஆமா என்ன சுத்தி நிறைய பொண்ணுங்க இருந்தாங்க. என்ன இம்ப்ரஸ் பண்ண பார்த்தாங்க.எல்லாம் எதுக்காக? என் ஸ்டேட்டஸ். என் காசு. என்னோட பர்சனாலிட்டி. என்னோட டேலண்ட். என்னோட இமேஜ். என்னோட சொத்து. இப்படி என்னோட சேத்து பின்னால வர பேர் புகழுகாக நிறைய பேர் என்ன சுத்தி சுத்து போட்டாங்க.

நீ நம்ப மாட்ட ஐஸ். அவங்கள பாக்குறப்போ எல்லாம் எனக்கு எதுவுமே தோணல. குழலி உன்னை கேவலமா பேசும் போது தான் எனக்கு தோணுச்சு. இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? ஏன் இவ்வளவு கேவலப்படுத்தணும்? அழகு அசிங்கம் இதெல்லாம் எதோட வெளிப்பாடு? இந்த முகத்த வச்சு தான் ஒரு மனுஷன மதிப்பிடராங்களா? வெள்ளையா இருந்தாலோ கருப்பா இருந்தாலோ அவங்களுக்கு என்ன வந்துச்சு?

அந்த நிமிஷம் முடிவு பண்ணேன். எனக்கு மேரேஜ்னு நடந்தா அது உன் கூட தான்.. அப்புறம் இன்னொரு விஷயம் சொன்னா அடிக்க மாட்ட தானே. எனக்கு உன்ன விட உன்னோட ஃபேஸ்ல இருக்கிற பிம்பிள்ஸ் மேல ரொம்ப க்ரஷ்.

உன்னோட ஃபேஸ்ல இருக்கிற ஒவ்வொரு பிம்பிள்ஸ் மேலயும் பட்டும் படாமல் கிஸ் பண்ணனும்னு ஒரு வெறின்னே சொல்லலாம். இப்போ உன்னோட குழப்பம் தீர்ந்துவிட்டதா ஐஸ்”

ஐஸ்வர்ய நந்தினி அவனை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவ்வாறு கேட்டதும் முதல் முறை அவளது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தையும் உதறிவிட்டு ஆதித்த கரிகாலனை கட்டி அணைத்துக் கொண்டாள்.