14

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள் இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம்
எனை நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்❤️

ஆதரவற்ற குழந்தை போல ஐஸ்வர்ய நந்தினி நடு வீட்டில் தரையில் படுத்து கதறியழ அவளது அழுகைக்கு அணை கட்ட வேண்டியவன் ஆற அமர எழுந்து அவள் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தான். அவனின் அருகாமையை கூட உணர முடியாத அளவுக்கு பரிதாபகரமாக அழுது கொண்டிருந்தாள் ஐசு.

திடுமென ஐசு முதுகில் திடமான கையின் ஸ்பரிசம். அருகில் குலுக்கி கொண்டிருந்த அவளது முதுகு விரைத்தது. கண்களில் வழியும் கண்ணீரோடு கொண்டவன் முகத்தை பார்த்தாள். இப்போதும் அவளின் பார்வை அவனை குற்றம் சாட்டியது.

“ஐஸ்..நீ அழும்போது ரொம்ப அழகா இருக்க. உன் முகம் முழுவதும் பிங்க் கலர்ல பாக்கவே ஒரு பிங்க் கலர் போகன்வில்லா செடி மாதிரி இருக்க.”

” அப்ப கூட காகித பூ மாதிரி வாசமே இல்லாத பூவா தான் என்ன நீங்க பாக்குறீங்க”

” அடிப்பாவி. வாசம் இல்லன்னா என்ன? மல்லிப்பூக்கு நிகரான வாசம் என்ன இருக்கு? ஆனா அதோட ஆயுட்காலம் ரொம்ப குறைவு. காகித பூ வாசம் இல்லனாலும் அதோட ஆயுட்காலமும் அதிகம். அதோட அழகு மல்லிகை பூவை விட  ஜாஸ்தியானது.”

இவனுக்கு இப்படியும் பேச தெரியுமா அவளது அழுகை அடியோடு நின்று போனது.

எழுந்து தரையில் சம்மனமிட்டு அமர்ந்தாள். அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் அவளது கன்னத்தை கைகளில் ஏந்தினான். கண்கள் இரண்டும் வெளியே வருவது போல ஐஸ்வர்ய நந்தினி அவனைப் பார்த்துக் கொண்டிருக்க

” என்ன ஐஸ் அப்படி பாக்குற? உன்கிட்ட நான் ஒன்னு கேட்க போறேன். உன்னால கொடுக்க முடிஞ்சா கொடு. இல்லனா பரவால்ல நீயே வச்சுக்கோ”

வாயைத் திறந்து என்னது என கேட்க கூட திராணியில்லாமல் கண்களால் அந்த கேள்வியைக் கேட்டாள் ஐசு.

” எனக்கு உன்னோட பெண்மை வேணும். அந்தப் பெண்மைய அதிரடியா எடுத்துக்காம மென்மையா, கொஞ்சம் வன்மையா, இந்த செவந்த முகம் இன்னும் சிவப்பாகுற அழக பாக்க உன்னோட கன்னித்தன்மைய எனக்கு கொடுப்பியா ஐஸ்”..

அவனை இத்தனை நாட்களில் கர்வம் பிடித்தவன் என பல தடவை எண்ணிருக்கிறாள் ஐஸ்வர்ய நந்தினி. அத்தனையும் தவிடு பொடியாக்கியது அந்த நொடி.

கர்வம் பிடித்தவன், கன்னம் தாங்கி, கன்னித்தன்மையைக் கேட்கும் போது, கன்னியவள் மனது மெழுகாய் உருகிப் போனது. அந்த நிமிடம் அவர்களுக்குள் எதுவும் சரியாகவில்லை. மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவில்லை. ஒருவரின் விருப்பத்தை இன்னொருவர் அறியவில்லை. முதற்கொண்டு ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருக்கிறதா என்ற வார்த்தையை முதன்மையாக கேட்கவில்லை. அனைத்தையும் தாண்டி ஆதி மனிதன் கடைப்பிடித்து  முதல் விஷயத்திற்கு காலடி எடுத்து வைத்தார்கள் அவ்விருவரும்.

உலகமே உருவானது காமத்தில். அன்று அது காதலாய் கலந்திருந்தது. அதிலிருந்து உருவானான் மனிதன். ஆதித்த கரிகாலன் காதல் எனும் ஒற்றை சொல்லை கூறி பெண்ணின் மனதை களவாடாமல், பணிவாகப் பண்பாக  நேர்மையாக கட்டிய மனைவியின் கற்பை தாரை வார்க்கச் சொல்கிறான். ஐஸ்வர்ய நந்தினியின் கண்கள் ஒரு முறை மூடித் திறந்தது.

இவ்வளவு நேரம் அழுகையில் கசங்கிருந்த அவளது முகம் குப்பென்ற  வெட்கத்தால் குங்கும நிறம் கொண்டது. அந்த அழகை ரசித்துக் கொண்டே அவளை கைகளில் ஏந்தினான் ஆதி.ஐசுவின் கரம் மெல்ல உயர்ந்து, வெட்கம் எனும் தடையை உடைத்து அவனது கழுத்தை கட்டிக்கொண்டது. அவனது மனதிற்கும் எதுவும் சரியாகவில்லை என்பது கூக்குரல் கூவியது.

ஆனால் அவளது உடல் அவனின் வசனம் தன்னை முழுதாய் இழந்து விட்டது. கண்ணுக்குத் தெரியாத மனதை விட கண்முன்னே தெரியும் உடலின் மொழிக்கு மரியாதை கொடுக்க அக்கணம் சித்தம் கொண்டாள் ஐசு. மென்மையாக அவளை படுக்கையில் கிடத்தியவன், காஞ்ச மாடு கம்பங் கொள்ளையில் பாய்வதைப் போல அவள் மேல் பாயாமல் ஒரு முழு நிமிடம் அவளை தன்னுள் நிறைத்துக் கொண்டான்.

கணவன் தன்னை ரசிக்கிறான் என்றதும் ஐசுவின் வெட்கம் பல மடங்கு ஆனது. இரு கரத்தாலும் முகத்தை மூடிக் கொண்டாள். சிறு புன்னகையோடு அவள் அருகே வந்து படுத்தவன், மூடிருந்த கைவிரல்களில் அழுந்த  முத்தமிட்டான். முத்தமிட்டு முத்தமிட்டு கை விரல்களை விலக வைத்தவன், மட்டும் படாமல் அவளது முகப்பருக்களின் மீது தன் உதட்டை பொருத்தினான்.

அனலாய் கொதித்த அவனது உதடு, மயிலிறகை காட்டிலும் மென்மையாக அவளின் முகப்பருக்களின் மேல் வருடி சென்றது. அவளது முகத்தில் மிருதுவாக அவன் முத்தம் கொடுக்கும் போதும், சில முகப்பருக்கள் உடைந்து விட்டது. கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அருகே இருந்த குட்டி மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து முகப்பரு உடைந்த இடத்தை மென்மையாய் துடைத்து விட்டான்.

அவனது தொடுதலில் தன்னிலை மறந்திருந்தவள் அவனது இச்செயலில் தன்னை முழுதாய் தொலைத்து விட்டாள். கண்கள்  மூக்கு இதழ்கள் காது கழுத்து இப்படி அவனது இதழ்கள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தது.

ஆதியின் கரங்கள் ஐசுவின் துப்பட்டாவிற்கு நிரந்தர விடுதலை கொடுத்தது. துப்பட்டா பரிதாபமாக மூளையில் கிடந்தது. வெயோண் காணாத இடங்கள் ஆதியின் கைபட்டு ஆடைக்கு மேலேயே சிவந்து நின்றது. கைகள் மட்டும் வேலை செய்ய கண்களுக்கும் விருந்து வைக்க எண்ணிய ஆதி, ஐசுவை  எழ செய்து அந்த சூழ்நிலைக்கு  சற்றும் பொருந்தாத ஆடைகளுக்கு சுதந்திரம் அளித்தான்.

அதன் பின் அங்கு நடந்த நிகழ்வு அழகான தாம்பத்தியத்திற்கு அச்சாரமிட்டது. சற்று முன்பு ஐஸ்வர்ய நந்தினியின் கதறலை கேட்ட வீடு இப்போது அவளின் இன்ப முனங்கலை கேட்டது. ஆதியின் வேகம் அதிகரிக்கும் போது, பயத்தில்  ஐசு உடல் விரைக்கும் சமயம்,ஐஸ் ஐஸ் அவளது பெயரை தவிர வேறு எதையும் ஆதி உச்சரிக்கவில்லை.

தன் ஆண்மையின் கர்வத்தை ஒரேடியாக சாய்த்தவளை விட்டுத் தள்ளி படுத்தான் ஆதி.ஐசு வேகமாக தன் உடலை போர்வையால் போர்த்திக் கொண்டாள்.

“ஐஸ்”

அவனது முகத்தை பார்க்க வெட்கமாக இருந்தது. கண்களை தாழ்த்திக் கொண்டு “ம்ம்ம்”என்றாள்.

” ஏ நெத்தியில கிஸ் பண்ணு”

இப்போது அவன் கண்களைப் பார்த்தாள் ஐசு.

” உனக்கு திருப்தியா இருந்தா அத சொல்ற விதமா என் நெத்தியில கிஸ் பண்ணனும். உனக்கு திருப்தியா இருந்துச்சா”

“என்னங்க இதெல்லாம் போய் கேட்டுகிட்டு”

” ஒவ்வொரு புருஷனும் இத அவன் பொண்டாட்டி கிட்ட கேட்டே ஆகணும். டைவர்ஸ் எதனால நடக்குதுன்னு நினைக்கிற? டைவர்ஸ்க்கு முக்கிய காரணமே இதுதான். இந்த ஒரு கேள்விய ஒவ்வொரு புருஷனும் கேட்டிருந்தா கண்டிப்பா அவங்க குடும்பம் பிரிஞ்சிருக்காது”..

ஐசு மனம் முழுவதும் நிறைந்திருக்க எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவளை தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன்

“ஐஸ் உனக்கு எது ரொம்ப பிடிக்கும்? “

“எதுனா”

“ம்ம்ம்.. எந்த ஒரு விஷயத்த செய்யும்போது நீ நீயா பீல் பண்ணுவ?”

” எனக்கு டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். டான்ஸ் ஆடும் போது மட்டும் என் மேல் எல்லாம் பூ பூக்குற மாதிரி ஃபீல் பண்ணி இருக்கேன். “

“வாவ்.. ஆமா ஐஸ் நீ ஒரு நாட்டிய பேரொளினு கேள்விப்பட்டிருக்கேன். ஏன் நீ இப்ப ஆடுறதே இல்ல”

” கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா டான்ஸ் ஸ்கூல் போக கூடாதுன்னு சொல்லிட்டாரு.”

ஐசுவின் குரலில் வண்டி வண்டியாய் சோகம்.

” என்னோட ஆசையை நீ நிறைவேத்துவியா ஐஸ்”

“என்ன ஆசை”

” இப்போ எனக்கு ஆடி காட்டு” அதிர்ந்து விட்டாள் ஐசு.

“இப்பவா? சரி குளிச்சிட்டு ஆடி காட்றேன்”

“நோ இப்போ இந்த ரூம்ல, நீ இப்ப எப்படி இருக்கியோ அப்படியே”

“ம்ஹும் நான் மாட்டேன் எனக்கு வெக்கமா இருக்கு”

” இவ்வளவு நேரம் இருந்த அப்போ வெக்கமா இல்லையா”

அவன் வேண்டுமென்றே இந்த கேள்வியை கேட்கவில்லை. இருந்தாலும் அவனது கேள்வி அவளின் மனதை கொன்றது. அவளிடமிருந்து பதிலே வராமல் போக

“ஹேய், நான் தப்பா ஒன்னும் கேட்கல. ரெண்டு பேருமே இவ்வளவு நேரமா டிரஸ் இல்லாம இருக்கோம். அப்போ நமக்குள்ள எந்த வெட்கமும் இல்ல. இப்ப மட்டும் எங்க இருந்து வெட்கம் வந்துச்சு?  சரி, இந்தா இந்த டவுல் கட்டிட்டு ஆடு”..

அவனது கோரிக்கையை நிராகரிக்க மனம் இல்லாமல் இந்த அளவிற்கு இறங்கி வந்ததை பெரிதான நினைத்து, துண்டை நெஞ்சில் முடிச்சிட்டு அவன் கைபேசியில் ஒலிற விட்ட புல்லாங்குழல் ஓசைக்கு தன்னை மறந்து அழகாய் நளினமாய் நடனம் ஆடினாள் ஐசு.

ஒரு கட்டத்தில் அவள் மேலிருந்து கழண்டு விழுந்ததை கூட கவனிக்காத அளவிற்கு  அந்த நடனத்தில் லாய்த்து போய்விட்டாள். ஆதித்த கரிகாலன் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். நொடியில் மாறும் அவளது முகபாவம். வெண்டை பிஞ்சுகலாய் கை விரல்கள். நளினமாய் வளையும் மெல்லிய இடை. தாளம் தப்பாமல் ஆடும் கால்கள்.

கொஞ்ச நேரத்திற்கு முன் ஆடையின்மை என்ற சொல்லுக்கே அலறிய ஐசு கட்டிருந்த துண்டு அவிழ்ந்து விழுந்ததை கூட தெரியாத அளவிற்கு மெய் மறந்த ஆடிக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்தாலே தெரிகிறது அவள் இந்த உலகத்தில் இல்லை. செவிகள் மட்டுமே புல்லாங்குழல் இசையை கிரகித்துக் கொள்கிறது. அவளது உலகத்தில் அவள் இன்பமயமாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். இந்தப் பெண்ணுக்கு நடனத்தில் இவ்வளவு ஆர்வமா?

அவளது உடலை சற்று முன்பு மோகத்தால் புசித்தபோது தோன்றாத உணர்வு அந்த நொடி அவனின் உள்ளத்தில் தோன்றியது. ஐஸ்வர்ய நந்தினி அவனே அறியாமல் அவனின் உள்ளத்தில் மெல்ல நுழைந்து விட்டாள்.

இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா உரைத்திடவா
மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல்
கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது..