மலர் சாரலாக...
சாரல் 2
"சித்தப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ்... ஊருகிட்ட போகும் போது நான் டிரைவ் பண்றேனே.." என உலக நாதனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் அமுதினி. "என்னது…நீ ஓட்டப் போறியா… அதெல்லாம் வேண்டாம்… " என செல்லக் கனிப் பதற… செல்வராணியோ,
"ஏன் கா பதறுர.. பாப்பா அழகா ஒட்டக் கத்துக்கிட்டா.. போன தடவை ஊருக்கு வந்தப்ப தென்னந்தோப்பு...
சாரல் 1
செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே..
பாட்டு அதிரத் துவங்க மெத்தையிலிருந்த தலையணையை இரு காதோடும் அழுத்திப் பிடித்துக் கொண்டு... மறுபக்கம் புரண்டுக் கொண்டிருந்தவள் தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டே , "அம்மு எழுந்திரி ,, எவ்வளவு நேரம் அலாரம் அடிக்குது.. முருகன் பாட்டு வைக்கச் சொன்னா.. டம்டம்னு சத்தம் தான் வருது...