Advertisement

சாரல் 3

            தேவராஜனின் ,சொல்லுங்க டாக்டரில்  அமுதினிக்கு புன்னகை வந்தது. அதனைக் கண்டுக் கொண்டவன் ,”ஒருவேளை எனக்கு ட்ரீட்மென்ட் பண்ணியிருப்பாங்களோ..” என்ற எண்ணத்தில் தேவராஜன் நிற்க… அவனுக்கு தன்னைத் தெரியவில்லை என்பதை நன்கு உணர்ந்தாள்.

 “அடடா..பட்டர்  நீ நல்லவன்னு தெரியும் .. ஆனா இவ்வளவு நல்லவன்னு தெரியாமப் போச்சே… சைட் அடிச்சப் பொண்ண நீ பார்க்கவே இல்ல போல.. ” என மனதினுள் கவுன்டர் கொடுத்துக் கொண்டவளுக்கு அவனை நினைத்து இன்னும் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு பேசப்போகயில் ரகுவரன் அவர்கள் அருகே வந்திருந்தான்.

மருத்துவராக தேவாவின் கையைப் பற்றி விசாரித்திருப்பாள் என நினைத்தவன் இயல்பாக ,

“அம்மு இவர் நம்ம பிஸ்னஸ் பார்ட்னர் தேவராஜன் … ” என்றவன் தேவாவிடமும் , ” இவங்க என்னோட கஸின் அமுதினி… ” என்றவன் அவள் முதுநிலைப் படிப்பதைத் தெரிவித்தான். “ஹாய்… ” என தலையசைத்தவனிடம் ,

” ரகு அத்தான் இவங்க என் ஃபிரண்டோட கஸின் தான் இவங்கள எனக்குத் தெரியும் … ஆனா இவங்களுக்கு என்னைத் தெரியலனு நினைக்கிறேன் கைக்கு என்னாச்சு ரிஸ்ட் பேண்ட் போட்டுருக்காங்க..” என்றவளிடம் ,

“மூணு மாச முன்ன நடந்த ஆக்ஸிடன்ட்ல கை மட்டும் இன்னும் சரியா ரெகவர் ஆகல… அதான் அக்கா கிட்ட கேட்டு ஸ்பெஷலிஸ்ட் பார்க்கலாம்னு அழைச்சுட்டு வந்தேன்.”

“ஓ…” என்றவள் ,தேவாவிடம் திரும்பி , ” நீங்க தாமரைசெல்வியோட கஸின் தானே….அதாவது திலோ மைனி யோட அண்ணன் தானே.. ” என்றதும் தேவாவின் முகம் ஒரு இறுக்கத்திற்குச் சென்றது.

“ஆம்..” என்பதை தலையசைப்பில் தெரிவித்து விட்டு, ”  ஒரு இம்பார்டன்ட் கால் இருக்கு… “என மொபைலை காட்டி விட்டு நகரப் போனவனை, ..”சாரி சாரி அன்ட்…ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்.. என்னைய நியாபகம் இல்லையா.. நான் உங்க தங்கை பையன் காதுகுத்து ஃபங்ஷனுக்கு தாமரையோட வந்திருந்தேன்..ஏன் தாமரை ஃபோன் அன்றைக்கிருந்து ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு… எல்லாரும் நல்லா இருக்காங்க தானே… கான்டாக்ட் பண்ணவே முடியல….” எனும் போதே தேவாவின் அலைப்பேசி ஒலி எழுப்பிக் கொண்டே இருக்க ,

” சாரி நான் உங்களை கவனிக்கல டாக்டர் , ஃபங்ஷன் முடிஞ்சு ரெண்டு நாள்ல மாமா தவறிட்டாங்க..” என்றவன் மேலும் பேசுவதற்குள் அவனது அலைப்பேசி அழைக்க , அமுதினியிடம் ,

“சாரி ..நான் ரகுவுக்கு கான்டாக்ட் நம்பர் அனுப்புறேன்.. எக்ஸ்கியூஸ் மீ” என்றவாறு மொபைலை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டான்.ரகுவும் அமுதினியிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு தேவாவோடு இணைந்துக் கொண்டான்.

“அடக் கடவுளே… தாமரை ரொம்பவே சென்சிட்டிவ்… அவங்கப்பாவ ரொம்ப மிஸ் பண்ணுவாளே… ” என யோசித்துக் கொண்டே விஜயகுமார் இருந்த அறைக்கு வந்தாள். செல்லக் கனியும் செல்வராணியும் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“என்னம்மா நீ இரு… நான் இருனு அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரும் சண்டைப் போட்டுட்டு இருக்கிங்க… ” என்ற அமுதினியிடம் ,

“அம்மு… பிள்ளை இவ்வளவு தூரம் கஷ்டபட்டப் பிறகு ஹாஸ்டல்ல விட முடியாது. பேசாம சென்னைல ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கிறோம். இப்பக்கூட சாந்தி அக்கா வீட்லதான் தங்குற மாதிரி இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் வீட்ல இருந்தே காலேஜ் போகிற மாதிரி ஏற்பாடு பண்ணனும் … துணைக்குத் தான் நான் இருக்கவா ராணி இருக்கவானு குழம்பிட்டு இருக்கிறோம்.

“ம்மா… அப்பாவ பார்க்க வேண்டாமா.. அவருக்கு பிபி வேற இருக்கு.. சித்தி நீங்களும் சித்தப்பாவ , ராஜன கவனிக்கனும் … அதுவும் அவன் டென்ட்த் வேற… ” என்றவளிடம்,

“உங்கப்பாவுக்கு பிரஷர் இருக்குனு உனக்கு இப்போ தான் தெரியுதா அம்மு… நீ பாட்டுக்கு நான் சொல்லும் போது மாப்பிள்ளைப் பாருங்கனு சொல்லிட்ட … இராத்திரி முழுசும் தூங்காம அவர் கஷ்டப்படுறது எனக்கு தான் தெரியும்.. ” என செல்லக் கனி பேச ஆரம்பித்து விட்டார்.

தினமும் ஃபோனில் அவர் பேசும் போது கேட்கும் ஒன்று தான். இன்று நேரில் புலம்பவும் , “அம்மா இப்ப என்ன கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே… மாப்பிள்ளைப் பாருங்க… ” என்று விட.. அக்காள் தங்கை இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டு இருக்க சோர்வோடு படுத்திருந்த விஜயகுமார் , “எக்கா….வ் … நீயா இது..” என்றவாறு மயக்கமாவது போல் செய்ய .. அவனை உணர்ந்த அமுதினி ,

” டேய் உடம்பு சரியில்லயேனு பார்க்கிறேன்… இல்ல” என கை முஷ்டியைக் காண்பித்து அவனை குத்துவது போல் .. செய்ய ., “சரி..சரி… தம்பி தானே… நிஜமா எங்களால நம்பவே முடியல அம்மு … விளையாடலயே … மாப்பிள்ளை பார்க்கலாம் தானே…’ என அமுதினி அருகில் வந்து தாடையைப் பிடித்து செல்லக் கனி கேட்கவும் ,

“நிஜமா தான் மா…” என்றதும்.. மகள் முகத்தை நன்குப் பார்க்க… அதில் எந்த உணர்ச்சியும் இல்லை. ராணியும் அருகில் வந்தவர் , “அது அம்மு…நீ யாரையோ விரும்புறதா சொன்ன .. அவங்க..” என தயங்கி நிற்க..

” சித்தி.. நான் அவங்கள பிடிச்சிருக்குனு தானே சொன்னேன்.. விரும்புறேன் காதலிக்கிறேன்னா சொன்னேன்.” என்றதும் கனிக்கு சுறுசுறுவென கோபம் பொங்க..

“ஏன்டி பிள்ளை யாரையோ விரும்புறா… அவ மனசு நோகக் கூடாதுனு உங்கப்பா என்கிட்ட என்னா வரத்து வந்தாரு தெரியுமா…” என செல்லக் கனி கூறினார் என்றால் , விஜயகுமார் ,

“ம்மா.. நான் அப்பாகிட்டயும் உன் கிட்டயும் சேலன்ஜ் பண்ணது போல நான் தான் ஜெயிச்சேன்… புதுவெர்ஸன் ஐ.. ஃபோன் ஆர்டர் பண்ணிருமா…” என்றதும் ராணி, “சும்மா இருடா” என அவன் தோளில் தட்ட , அவனருகில் வந்தவள் ,

“சேலன்ஜ்ஜா.. அதுவும் என்னைய வச்சு… என்னடா அது..” என கோபமாக கேட்க . . . “அக்கா நீ யார்கிட்டயோ ப்ரபோஸ் பண்ணிருக்கனு கேள்விப்பட்டதும் … அப்பா அம்மா நீ யாரையோ உருகி உருகி காதலிச்சு காதல் சொல்லிருக்கனு பேசிக்கிட்டாங்க… அப்பாக்கூட நீ காதலா இல்லையானு சொன்னாலும் காதல் தான்னு சொன்னாரு… ஆனா நான் யாரு…” என டிரிப்ஸ் ஏறாத கையால் தன் டீ ஷர்ட் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே ,

“அக்கா சைட் வேணும்னா அடிச்சுருப்பா… ஆனா லவ்லாம் பண்ணியிருக்கமாட்டான்னு அடிச்சு சொன்னேன்ல … “

“அடேய் தம்பி … நீ ஒருத்தனாவது என்னையப் புரிஞ்சு வச்சுருக்கியே… ” என வராத கண்ணீரைத் துடைப்பது போல் செய்தவள்.” சென்னையிலயே மாப்பிள்ளை பாரு மா… புண்ணாப் போன என் தம்பி வயித்துக்கு அவன் அத்தான் கையாலயே விதவிதமா சாப்பாடு ஆக்கிப் போடச் சொல்றேன்.” என்றதும் செல்லக் கனி அவள் கையைப் பிடித்து தன் புறம் திருப்பி ,

“அம்மு எல்லா நேரமும் விளையாடாதா.. உண்மையச் சொல்லு அந்தப் பையன் பதில் ஒன்னும் சொல்லலயா… இல்ல நீயா வேண்டாம்னு எதும் முடிவு பண்ணி எங்க கிட்ட வருத்தத்த காண்பிக்கக் கூடாதுனு இப்படியெல்லாம் பேசுறியா..” என தீவிரமாக கேட்கவும் விளையாட்டை எல்லாம் ஓரம் கட்டியவள் ,

“ம்மா… நிஜமாவே எனக்கு எந்த ஃபீலிங்சும் இல்ல.. அப்ப அது பேர் காதலும் இல்ல கத்திரிக்காயும் இல்ல போல… அவங்க ரொம்ப ஹேன்சம் … அதை விட  நல்லவிதமா  என் ஃபிரண்ட் சொல்றத வச்சு அவங்க குணமும்.. ரொம்ப பிடிச்சது … அவங்க  எப்பவாது கலேஜுக்கு வரும் போது போகும் போதெல்லாம் சைட் அடிப்பேன் அவ்வளவுதான்..

யாரோ  தெரியாதவங்கள தான் எனக்குப் பார்க்கப் போறீங்க… அவங்க யார் எப்படியோ.. நீங்க வேற படிப்ப முடிச்சதும் கல்யாணம் கல்யாணம்னு சொல்லிட்டு இருந்தீங்களா..

சரி இவர அஞ்சு வருஷமா அப்பப்ப பார்த்துட்டு இருக்கோம்.. குணமும் தங்கம்னு அவங்க முறைப் பொண்ணே சொல்றா… அப்புறமென்ன கேம்ப்ல தனியா என் முன்னாடி வந்து நின்னாங்களா.. நாமளே பேசிடுவோம்னு உங்களுக்கு பொண்ணுப் பார்த்தா என்னையும் கன்ஸிடர் பண்ணுங்கனு சொன்னேன். ஆனா அந்த நல்லவங்க என்னைய சும்மாக் கூடப் பார்த்தது இல்ல போல… ” என புன்னகைத்துக் கொண்டே சொல்ல , சுற்றி இருந்தவர்கள் அனைவரும் குழப்பத்திற்கு ஆளானார்கள்.

“என்ன உன்னையப் பார்த்ததுக்கூட இல்லையா..” என்ற செல்லக்கனி, அவள் முதுகிலேயே அடித்து , “இதுக்காடி இவ்வளவு நாளா கல்யாணத்த தள்ளிப் போடச் சொன்ன ..” எனவும் ராணி வந்து மகளைப் பிடித்து தன் பக்கம் நிறுத்திக் கொண்டவர் ,

“அக்கா.. வயசு பொண்ணு.. அதோட டாக்டர் க்கா அம்மு… இப்படி கை நீட்டுறது தப்பு…” என்றவாறே அவள் முதுகை தடவிக் கொடுக்க அமுதினியும் , ” நல்லா சொல்லுங்க சித்தி …” என்றவள் ,

” ம்மா நீயும் அப்பாவும் நான் பெரிய பொண்ணா ஆனதிலிருந்து என்ன சொன்னீங்க.. இந்த வயசுல சில சில மாற்றங்கள் வரும் … பசங்க எல்லாம் நம்ம பின்னாடி சுத்துவாங்க… ஆனா அதையெல்லாம் கண்டுக்க கூடாது … படிப்புல தான் உன் கவனம் இருக்கணும்னு சொன்னீங்க.. அதோட காலேஜ் போனதும் அப்பாவும் , பாப்பா உனக்கு யாரையாவது பிடிச்சா சொல்லு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னார்.அதனால யார் மேலயும் பெரிய இன்ட்ரஸ்ட் வரல ம்மா… இவர் மட்டும் காலேஜையும் தாண்டி அப்ப அப்ப வந்து தரிசனம் கொடுக்கவும் ஒரு ஈர்ப்பு அவ்வளவுதான். ..”என்றாள்.

விஜயகுமாருக்கு அமுதினியைப் பார்த்து சிரிப்பு வந்தது என்றால் செல்லக் கனிக்கும் செல்வராணிக்கும் மகள் காதல்… காதல் தோல்வி என்றெல்லாம் கூறாமல் இருந்ததே சிறிது நிம்மதியைக் கொடுக்க , செல்வராணி அமுதினியிடம் ,

“அம்மு தம்பிக்கூட கொஞ்சம் இரு.. நானும் அக்காவும் ஒரு ஃபோன் பேசிட்டு வாறோம்”என அறையை விட்டுச் சென்றனர். விஜயகுமார் அமுதினியிடம் ,

“அக்கா… நிஜமாவே நீ காதலிக்கலயா… பெரியவங்க வருத்தப்படுவாங்கனு இப்படி எல்லாம் சொல்றியா…”

“டேய் பெரிய மனுஷா நிஜமாவே எனக்கு காதல்னா என்னனு கூடத் தெரியலடா..என் கூடப் படிச்சதுங்க எல்லாம் லவ் பண்றோம் … லவ் பண்றோம்னு சுத்திட்டு இருக்கும்ங்க… அப்புறம் பிரேக் அப்னு சொல்லிட்டு இருப்பாங்க.. 

என் குளோஸ் ஃபிரண்ட் தாமரையோ ரொம்ப ரொம்ப அமைதி.. அவ உண்டு அவ படிப்பு உண்டுனு இருப்பா… அவக் கூட சேர்ந்து நானும் அப்படியே ஆகிட்டேன் போல … 

அதோட என் கிளாஸ்மேட் ஜனனிக்கு எங்க சீனியரோட சின்சியர் லவ்னு கிளாஸ்ல பேச்சு … இப்ப பார்த்தா யாரோ அமெரிக்கால வேலைப் பார்க்குற டாக்டரோட கல்யாணமாம் நேத்து இன்விடேஷன் வருது .எங்க வாட்சப் குரூப் சேட் எல்லாம் அது தான் டிஸ்கஷன் .. “

” அக்கா அவங்களுக்கு என்னப் பிரச்சினையோ .. எல்லாருக்கும் லாம் அப்படி நடக்காது.. “

“ப்ச் அது என்னவோ நோயாளிங்களப் பார்த்து பார்த்து எந்த ஃபிலிங்சும் இல்லாம போச்சுப் போல.. ஆமா… நீ என்ன பெரிய இவனாட்டம் காதலுக்கு சப்போர்ட் பண்ற … ” என இடுப்பில் கை வைத்துக் கொண்டு , “என்ன விஷயம்.. ம்… ” என புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“அக்…கா…” என்றவனின் அழைப்பிலேயே அவனது உணர்வு புரிய … “என்னலே இப்படி வெட்கப்படுற… காதல் காத்து உன் பக்கமும் வீசிடுச்சோ..” என்ற கேள்விக்கும் பதில்லாமல் சிரிக்க…

“ஃபர்ஸ்ட் இயரே இன்னும் முடிக்கல.. அதுக்குள்ள உனக்கு லவ் வாடா … யார் அந்த பொண்ணு… உன் கிளாஸ்மேட்டா… “

‘இல்லை’ எனப் புன்னகையுடன் தலையாட்டியவன் , “ஸ்கூல்ல… ” என்றதும் செல்லக் கனி அமுதினிக்கு தந்த அடியை குமாருக்கு இரண்டு மடங்குக் கொடுத்துக் கொண்டே..

“ஸ்கூல்ல … இந்த சினிமாக்காரங்கள சொல்லணும் … படிக்கும் போது காதல் வேண்டியிருக்கா உனக்கு.. எவ அவ.. அவளையும் வெளுக்கணும்.. உன்னைய உடம்பு சரியில்லாதவன்லாம் பார்க்க மாட்டேன் .. “

“ஐயோ  அடிக்காதக்கா. ஸ்கூல்ல ராஜன் கூடப் படிக்கிறப் பொண்ணுதான்.. .நான்  சைட் மட்டும் தான் அடிச்சேன்.. ஆனா இப்ப கூடப் படிக்கிறப் பொண்ணுங்கள எல்லாம் பார்த்தாக்கூடப் பேசினாக்கூட அந்த பொண்ணு நியாபகம் தான் கா வருது… அவள நினைச்சாலே….” என்றவன் வாயை மூடியவள் ,

“ஏலே….ஒழுங்காப் படிச்சு டிகிரி வாங்குற வேலையப் பாரு… அப்புறம் காதல் கிளாஸ் எடுக்கலாம்.. அந்தப் பொண்ணையும் டிஸ்டர்ப் பண்ணாத இதெல்லாம் பப்பிலவ்னு சொல்ற இன்ஃபாக்சுவேஷன் தான். பார்ப்போம் இன்னும் நாலஞ்சு வருஷம் போனாதான் உனக்கு அது காதலானுத் தெரியும்…” என்றவளின் கையைப் பிரித்து ,

” உண்மை தான்… நான் இதை ஏன் சொல்றேன்னா .. உனக்கும் என்னைப் போல உனக்குப் பிடிச்சவங்கள நினைச்சு உணர முடிஞ்சா அதுதான் காதல்னு சொல்ல வந்தேன்.. அந்த ஃபீல் இருக்கே… ” என மென்மையாக புன்னகைக்க , அவன் கூறுவதையே யோசித்துக் கொண்டிருந்தவளை, உள்ளே வந்த செல்லக்கனி,

“அம்மு நீ உறுதியா சொல்ற தானே மாப்பிள்ளை பார்திடலாம்தானே…” என வினவ , யோசனையில் இருந்தவளும் ‘சரி’ என்பதாக தலையாட்டினாள். அதற்குள் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த மற்றொரு பயிற்சி மருத்துவரான வைஷ்ணவி , “டாக்டர் விஜயலெட்சுமி வாங்க , வாங்க உங்களை திவ்யா மேடம் கூப்பிடுறாங்க…” என்றழைக்கவும் , 

” ம்மா நான் போய் பார்க்கிறேன்” என்றவாறு அறையை விட்டு வெளியேறினாள்.அமுதினி எனப்படும் விஜயலெட்சுமி.

                                                                            சாரல் வீசும் …

 “

Advertisement