Thursday, July 23, 2026

    பார்வை கற்பூர தீபமோ?

    அத்தியாயம் – 21 ஞாயிறு மாலை  ராகு காலம் முடிந்த சில நிமிடங்களில் வந்து இறங்கினார்கள் மாப்பிள்ளை வீட்டார். வாசலுக்கே வந்து வரவேற்றனர் பாண்டியனும் அவரது தமையன் சங்கரும்.   சக்ரவர்த்தி தன்னோடு வந்திருந்த கோகிலாவின் தம்பி குடும்பத்தையும், தன் ஒன்று விட்ட அண்ணன் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்த, பாண்டியனும் தன் தமையன், வனரோஜாவின் அக்காள் முல்லை குடும்பத்தினரயும் அறிமுகப்படுத்தி,...
    ‘எது எப்படியோ, மாப்பிள்ளை நவீந்தானே?’, என்ற மனதுக்கு, ‘அதுதான் எப்பவோ தெரியுமே?  ஆனால் விருப்பப்பட்டு நடக்கும் கல்யாணம் இல்லையே’, என்றது  மற்றொரு மனது. நவீனுக்கும் தன்னை பிடிக்குமா என்பதும் ஒரு சந்தேகம். அன்று டின்னர் போய்விட்டு வந்த போது அப்படித்தான் என்று நினைத்த மனது, ‘அப்பவோ அதுக்கு அப்பறமோ எதுவுமே சொல்லலை. ஒரு வேளை...
    அத்தியாயம் -20 பின் மதிய வேளையில் மணி அடிக்கவும், யார் இந்த நேரத்தில் என்று எட்டிப்பார்த்த ரோஜா, அங்கே பாண்டியனைப் பார்க்கவும், அவசரமாக கதவைத் திறந்தார். “என்னங்க ? தீடீர்னு இந்த நேரத்துல வந்திருக்கீங்க ? உடம்புக்கு எதாவது செய்யுதா?”, சற்று படபடப்பாகக் கேட்டார். “ஹே… அதெல்லாம் இல்லை. பயப்படாதே. ஸ்ரீ எங்க?”, என்றார் பாண்டியன் அவர்கள் படுக்கை...
    “ராஜா…. என்னப்பா… ? எதுவும் பிரச்சனையா ?”, சக்கரவர்த்தி கேட்டபடி உள்ளே வர, நிமிர்ந்து அமர்ந்தான் நவீன். “இல்லை… ஒன்னும் இல்லை பா.” “அந்த பொண்ணு ஸ்ரீக்கு பேசினியாடா? எப்படி இருக்காங்க?”, தந்தை கேட்கவும், அவள் நிலையை ராகுலிடமும் அவளிடமும் கேட்டதை மறைக்காமல் சொல்லிவிட்டான். அவனையே உற்றிப் பார்த்தவர், அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, “ அதனால இப்ப நீ...
    அத்தியாயம் – 19 முல்லை மாலை கிளம்பிப் போயிருக்க இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். எண்ணெய் கடாயில் தண்ணீர் பட்டு வெடிப்பது போல வனரோஜா வெடித்துக்கொண்டிருந்தார். “வனா… எதா இருந்தாலும் நான் பேசிக்கறேன். நீயும் ஸ்ரீயும் பேச வேணாம். புரியுதா? “, பாண்டியம் நூறாவது முறையாக எச்சரிக்கும் போது வாசலில் மணி அடித்தது. பாண்டியனே சென்று கதவை...
    “நீ போனது தப்பில்லைடா… எதுக்கு பந்தை எடுத்து வீசின ? அதுதான் எனக்கு புரியலை. போலீஸ்தான் சுத்தி வளைச்சிருந்தாங்களே. அந்த பையனைப் போல நீயும் வேடிக்கைதானே பார்த்திருக்கணும் ?”, சக்கரவர்த்தி நேராக பாயிண்ட்டை பிடித்தார். இந்தக் கேள்விக்கு விமானம் ஏறியதிலிருந்து இறங்கும் வரை யோசித்துப் பார்த்துவிட்டான். ஒரு சரியான பதில் அவனுக்கு சிக்கவில்லை. ஸ்ரீயை அப்படி...
    அத்தியாயம் – 18 அனைவர் கவனமும் அவன் மேல் இருப்பதை உறுதி செய்தவன், “சித்தார்த் தொழில் சம்மந்தமா முன் விரோதம். அதுக்கு அவரை மிரட்ட அவரோட ஸ்டாஃப் தூக்கியிருக்காங்க. சின்ன வயசு பொண்ணுன்னா பிரஷர் அதிகமா இருக்கும்னு ப்ளான் பண்ணி கடத்தியிருக்காங்க. அவர் அதை உயர் அதிகாரிங்களுக்கு நேரடியா கொண்டு வரவும், உடனே போலீஸ் ஆக்ஷன்...
    “ரொம்ப ரொம்ப நன்றிப்பா நவீன். உன்னாலதான் இது சட்டுனு முடிஞ்சுது. இல்லை போலீஸ் எவ்வளவு நேரம் இழுத்திருப்பாங்களோ… மீடியாக்கெல்லாம் ந்யூஸ் போயிருந்தா ரொம்ப பிரச்சனை ஆகியிருக்கும்.”, என்று பாண்டியன் நவீனுக்கு மீண்டும் தன் நன்றியை கூறிக்கொண்டிருந்தார். காபியை பருகி முடித்த நவீன் தான் கிளம்புவதாகக் கூற விடை கொடுத்தனர். ஸ்ரீயிடம் அதிகம் பேச முடியாதவன், அவள்...
    அத்தியாயம் – 17 கரண் அதீத கோபத்தில் இருந்தான். “எப்படி… எப்படி இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சாங்க போலீஸ்? ஏய் பொண்ணு… உண்மையை சொல்லு ? உங்க அப்பா பெரிய ஆளா? எப்படி நேரா க்ரைம் ப்ராஞ்ச் ஆஃபீசர் உன்னை தேடி வரான்?”, ஸ்ரீயின் தோளைப் பிடித்து உலுக்கிய வேகத்தில் அவள் கழுத்து ஆடியது. “தெரியாது… சத்தியமா எங்க அப்பாக்கு...
    மறு முனையில் நிற்கும் வேளை, பைக் ஆசாமி ஒருவனை மஃப்டியில் இருந்த போலீஸ் ஒருவர் நிறுத்தி கேள்வி கேட்பது தெரிந்தது. பைக் ஆசாமியின் விறைப்பான உடல் மொழியில் காரை அவர்கள் புறம் செலுத்த, பைக் ஆசாமி போலீசை தள்ளி விட்டு பைக்கை சீற விடவும் சரியாக இருந்தது. நொடியில் காரை சீறவிட்ட கைலாஷ் பைக்கை லேசாக...
    அத்தியாயம் - 16 கைலாஷ் அலுவலகம் வந்து அரை மணி நேரம் ஆகியும், மாற்றி மாற்றி போனில் இருந்தான். அவன் பேசியதில் நாலைந்து இடங்களில் ஸ்ரீயை கடத்துபவனைத் தேடும் வேலை நடக்கிறது என்பது வரையில் புரிந்தது. நேரம் நடு நிசியைத் தாண்டியும் கைலாஷ் சோர்வடையவில்லை. மும்பையில் யாரையோ எதற்கோ சம்மதிக்க சரளமான இந்தியில் பேசிக்கொண்டிருந்தான். “எதோ கிரிக்கெட் பெட்...
    “ஸ்ரீ சொன்னாளா? அவளையே நான் வாங்க போங்கன்னு சொல்லாதேன்னு சொல்லிகிட்டு இருக்கேன். ஏன் டா இப்படி மரியாதை குடுத்து தள்ளி வெக்கறீங்க? ஸ்ரீ எனக்கு ரொம்ப இம்பார்ட்டண்ட் ராகுல். புரியுதா?”, நவீன் தீவிரமாய் சொல்ல, ராகுல் புன்னகையோடு ஆமாம் என்று தலை ஆட்டினான். “புரியுது நவீன். இல்லாட்டி உங்க .. ஐ மீன் உங்கிட்ட நான்...
    அத்தியாயம் – 15 ஒரு வழியாக பாண்டியன், வனரோஜாவை சாப்பிட வைத்து, இவனும் உண்டு, அவர்கள் வீட்டை விட்டு தன் பைக்கில் கிளம்பிய ராகுலின் கைப் பேசி அழைக்க, வண்டியை ஓட்டியபடியே ப்ளூ டூத்தில் ஆன் செய்தான். “ஹலோ… ராகுல் ? நான் நவீன் பேசறேன்.” “ஓஹ்… சொல்லுங்க நவீன். என்ன….?”, என்றாலும் ஒரு மாதிரி அனுமானிதிருந்தான். நாளை வெளியில்...
    “சில ட்ரக்ஸ் இருக்கு, ட்ரூத் சீரம்னு சொல்லுவாங்க. அது நம்ம மூளையில இருக்க நரம்புகளை மந்தமாக்கும். நமக்கு இயற்கையா இருக்க முன்னெச்சரிக்கை ஃபீலிங்கை குறைக்கும். பொய் சொல்ல முடியாதுன்னு இல்லை. இப்படி நமக்கு ஒரு ட்ரக் குடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சு, கொஞ்சம் மெனக் கெட்டா சொல்லலாம். ஆனா இதைப் பத்தி தெரியாதவங்க அதிகம் உண்மைதான் சொல்லுவாங்க....
    அத்தியாயம் – 14 பாண்டியனுக்கு விஷயம் சொல்லப்பட, அவரால் அதை கிரகித்துக் கொள்ளவே முடியவில்லை. சத்தியமாக இதை அவர் எதிர்பார்க்கவில்லை. கடத்தல் என்பதெல்லாம் சினிமாக்களில், செய்திகளில் வரும் விஷயம். அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு நடப்பதில்லை. கைலாஷ் சற்று பொறுமையாக, அவரது கைபேசி எண்ணை வாங்கி, அவன் எடுத்து வந்த ஒரு கருவியோடு இணைத்தான். பின் யாருக்கோ தொடர்பு கொண்டு,...
    வேகமாக இவர் தெரு முனையை திரும்ப, வேனையும் காணவில்லை, ஸ்கூட்டியையும் காணவில்லை. மிதமான வாகன போக்குவரத்து எப்போதும் போல இருந்தது. தான் பார்த்தது நிஜமா என்றே சந்தேகம் வந்துவிட்டது. லேசாக வியர்க்க, அவசரமாக அடுத்து வந்த ஒரு சந்தில் திரும்பி, ஐந்து நிமிடத்தில் மீண்டும் அலுவலக வாசலுக்கு வந்து சேர்ந்தார். செக்யூரிட்டியிடம், “டேய்… சார் கிளம்பிட்டாரா ?”,...
    அத்தியாயம் – 13 உற்ற நண்பன் ராக்கியோடு அவளக்குப் பிடித்தமான காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. நவீன் பற்றிய பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது. “நீ சொல்றதெல்லாம் பார்த்தா, அன்னிக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லத்தான் ட்ரை பண்ணிருக்காரு. நீதான் லாவா கேக் சாப்பிடற குஷியில எதையும் கண்டுக்கலை. சரியான தின்னிப் பிண்டம்… சோத்து மூட்டை….”, ராகுல் அவளை திட்டிக் கொண்டிருந்தான். முகத்தை...
    தனது சிக்கன், மஞ்சள் பூசணி சாஸ் போட்ட பாஸ்தாவை அவள் புறம் நீட்டினான். சுவாதீனமாக தன் ஸ்பூனால் எடுத்து தட்டில் போட்டவள், சுவைத்து உண்டாள். “வாசனை இழுத்துகிட்டே இருந்துச்சு. எப்படி கேட்கறதுன்னு நினைச்சேன். நீங்களே குடுத்துட்டீங்க.”, ஸ்ரீ சொல்லவும், “ஸ்ரீ… உங்க அம்மா உன் நாக்கை எவ்வளவு வளர்த்துவிட்டிருக்காங்கன்னு தெரியும். கூச்சப்படாம கேளு. நான் தப்பா நினைக்க...
    அத்தியாயம் – 12 விருந்து அன்று மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தாள் ஸ்ரீ. ராக்கியிடம் முன்னரே பேசியிருந்தது போல, வனரோஜாவிடம் “மா…ராக்கி நேத்து எதோ சாப்பிடதல ஒத்துக்கலையாம். டிசென்ட்ரி, இன்னிக்கு வர முடியாதுன்னு போன் பண்ணான் மா.”, என்று கூறினாள். “அச்சோ… மருந்து மாத்திரை எதாவது போட்டானா ?” “ம்ம்… எதோ மாத்திரை போட்டிருக்கானாம். இன்னும் சரியாகலைன்னான். சரி…  நான்...
    எழுந்து வந்த வெங்கட்ராமன், “ என்னடா இது விளையாட்டுன்னு முதல்ல நினைச்சேன். ஸ்ரீநிதி தன்னோட கலகலப்பான பேச்சால உங்க எல்லாரையும் மகிழ்ச்சியாக்கவும், அதுதான் நோக்கம்னு நினைச்சேன். ஆனா, நிச்சயமா இந்த விளையாட்டுக்குள்ள இப்படி ஒரு பாடம் கத்துக்கலாம்னு நினைக்கவேயில்லை. அடிப்படை விதிகள்தான், ஆனா நாம அடிக்கடி நினைவு படுத்திக்க வேண்டிய விஷயங்கள் இது. “,...
    error: Content is protected !!