Raaja Bavani
இராஜ பவனி 8
“இப்பவே வீட்டுக்கு போகணுமா..? டேய் மணி ஏழு தாண்டா ஆகுது..” கடையை விட்டு வீட்டுக்கு போக வேண்டும் என்ற தனாவிடம் கேட்டான் குகன்.
“அம்மா வர சொன்னாங்கடா, ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்..” தனா சொல்லி வெளியே செல்ல, குகனும் அவனுடன் கிளம்பினான்.
அங்கு குகனின் அம்மா பரிமளம் இருக்க, குகனுக்கு ஆச்சரியம்...
தேர் ஊர் சுற்றி வரும் முன்னே விஷயம் ஊருக்குள் பரவிவிட, தனா, அனுவின் ரகசிய காதல் ஊரின் பேசும் பொருளானது. சிலர் ஆதரித்து, சிலர் எதிர்த்து, பெரியவர்கள் வியாக்கினம் பேச, இளையவர்கள் கொண்டாட.. என்று எங்கும் இவர்கள் காதல் கதை தான்.
குருமூர்த்திக்கு அங்கம் எல்லாம் கொதிக்க, தேரை இடம் சேர்த்து வீட்டிற்க்கு வந்தவர், எதிரில்...
இராஜ பவனி 7
“எங்க உன் மகன் கிளம்பிட்டானா..?” குருமூர்த்தியின் சத்தம் வீட்டில் எங்கும் அதிகாரமாக எதிரொலிக்க, ரூமில் இருந்த தனா கண் மூடி திறந்தான்.
“இதோ கிளம்பிடுவான்ங்க..” வைதேகி சொல்ல,
“ஏன் துரைக்கு இன்னும் விடியலையாமா..? அப்படி என்ன வெட்டி முறிக்கிறான்..?” என்றார் மேலும் குருமூர்த்தி.
“இல்லைங்க.. காலையிலே போய் நீங்க சொன்ன வேலையை முடிச்சுட்டு தான் வந்தான்..”...
“அவ படிக்கணும் ஆசைபடுறா, இருபது வயசிலே என்ன கல்யாணத்துக்கு அவசரம்..?” தனா சொல்ல,
“டேய்.. வந்திருக்க வரன் ரொம்ப நல்ல மாதிரிடா, என்னோட பங்காளி தான், MNCல வேலை, ஊர்லயும் தோட்டம், துரவு, ஒரே பிள்ளை, வசதியான குடும்பம், சாரு ரொம்ப சந்தோஷா இருப்பா..” என்றான் குகன்.
“வசதி இருந்தா மட்டும் போதுமா..?”
“மாப்பிள்ளை பையன் குணமும் நல்ல...
இராஜ பவனி 6
“இந்த மாச கடைசில சித்திரை திருவிழா வருது இல்லை, அது முடியவும் வைகாசி முதல் வாரத்திலே கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்க..” அன்பழகன் வீட்டிற்கு வந்ததும் சொன்னார்.
“நல்லதுங்க.. நமக்கும் நேரம் கிடைக்குது, ஜவுளி, தாலி, கல்யாண பத்திரிக்கைக்கு நாள் சொன்னாங்களா..?” சுஜாதா கேட்டார்.
“அதையும் குறிச்சு கொடுத்துட்டாங்க சுஜா, இந்த வாரத்துலே...
“ஓஹோ.. அப்படி.. க்கா.. நீ சரியான ஆளு, மனசுல உனக்கும் அவர் மேல ஆசை இருக்கு, அப்படித்தானே..?” அனு அக்காவிடம் சந்தோஷ சிரிப்புடன் கேட்டாள். சித்ரா முகத்தில் சட்டென ஒரு வெட்கம், இளக்கம். அன்று சஞ்சய் அவளை பார்த்து பளிச்சென்று சிரித்தது நினைவிற்கு வந்தது.
“இதுவரைக்கும் நான் பார்த்ததுல அவர் வித்தியாசமான ஆளுடி..” என்றாள்.
“உனக்கு அவரை...
இராஜ பவனி 5
இருவரும் கோவில் வாசலில் வைத்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, உடன் இருக்கும் பூமிகா, குகனுக்கு பதட்டம் ஆனது.
“அனு.. கிளம்பலாம்.. யாராவது பார்த்தா பிரச்சனை..” பூமிகா தோழியின் கை பிடித்தாள். அனுவோ கலங்கிய கண்களுடன் தனாவை பார்த்து நின்றாள்.
இங்கு குகனும், “தனா.. நாம போலாம்.. அக்கம், பக்கம் ஆளுங்க இருக்காங்க..” என்றான்...
“இதுல நம்ப, நம்பாம போக என்ன இருக்கு, இங்க என்ன சம்மந்தமா பண்றாங்க, யார் சரக்குல பித்தலாட்டம் இருக்கோ அங்க தானே கேட்க முடியும்..” குருமூர்த்தி எகத்தாளமாக சொன்னார்.
“ப்பா..” தனா அவர் பக்கத்தில் சென்றவன், “என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரியாம கூட இருக்கலாம்.. பொறுமையா பேசலாம், இருங்க..” என்றான்.
“பொறுமையா பேச என்ன இருக்கு தனா,...
இராஜ பவனி 4
“மிஸ் உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க..” ஸ்டாப் ரூமில் இருக்கும் சித்ராவிற்கு தகவல் வர, யாரா இருக்கும் என்ற கேள்வியுடன் வெளியே வந்தாள் சித்ரா.
“நான் தான்..” குரல் பின்னால் கேட்க, திரும்பி பார்த்தால் சஞ்சய்.
சஞ்சய் அவளை பெண் பார்த்து சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்க, எந்த தகவலும் இல்லாமல் இருந்தவன்,...
“பாருங்கப்பா.. உங்க அக்கா மக எவ்வளவு செல்வாக்கா இருக்காங்கன்னு.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் பூ மாதிரி தான் இருக்காங்க..” என்றான் அப்பாவிடம் கூர் பார்வையாக. குருமூர்த்திக்கு மகன் சொல்வது புரிய, தனா விடாமல்,
“அப்புறம் அத்தை மாமா எங்க..?” கேட்டான்.
“அவர் கிடக்குகிறார் வீட்ல..”
“அவருக்கு சாப்பாடு..”
“ஒரு நாளைக்கு வெளியே வாங்கி திங்கட்டும்..” என்றார் அலட்சியமாக.
“அது...
இராஜ பவனி 3
“இதெல்லாம் சரிப்பட்டு வருமா அனு..? அப்பா என்ன சொல்வார் தெரியலையே..” மகள் யோசனைக்கு சுஜாதா தயங்கினார்.
“ம்மா.. நான் அப்பாகிட்ட கேட்டுக்கிறேன், உனக்கு இது பத்தி தெரியும் தானே..?” மகள் கேட்க,
“எனக்கும் இப்படின்னு உன் பெரியம்மா சொல்ல தான் செஞ்சாங்க, நான் தான் இந்த சம்மந்தம் முடிஞ்சிடும் நினைச்சேன்..” அவர் வருத்தத்துடன் சொன்னார்.
“இப்போ...
“என்ன இருபத்தி ஆறா..? சஞ்சய்க்கே இருபத்தி ஆறு தான் ஆகுது..” என்றார் அவனின் அம்மா. “ஏங்க ஜாதகம் பார்த்தப்போ நீங்க இதை பார்க்கலயா..” கணவரிடம் வேறு பாய்ந்தார்.
அவர் என்ன சொல்வார், மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பதால் சீக்கிரமே ஜாதகம் எடுத்துவிட்டனர். முதல் சம்மந்தமே சித்ரா தான். தரகரும் இவர்கள் குடும்பத்தை பத்தி சொல்லியிருக்க,...
இராஜ பவனி 2
தனாவின் உரிமை பார்வையும், அனுவின் முகச்சிவப்பும் மற்றவர் கண்களுக்கு நன்கு தெரியும்படியும், புரியும்படியே இருக்க, “தனா..” என்று எச்சரிக்கை குரல் எழுப்பினான் குகன்.
கடையில் வச்சு எல்லாம் பார்க்கிற இடத்துல இது என்ன..? குகன் கண்டிக்கும் பார்வை பார்க்க, தனா புரிந்து தலை கோதி கொண்டான்.
“அனு.. நாம கிளம்பலாமா..?” பில் போட ஆட்கள்...
“அப்புறம் சொல்லுங்ண்ணா.. எலக்ஷன் வருது, வேலை எல்லாம் எப்படி போகுது..?” தனா பேச்சு கொடுக்க,
“அதெல்லாம் அமோகமா போகுது, இந்த முறை நான் தான் MLA, நம்ம கட்சி தான் ஆட்சி..” என்றார் அவர் உற்சாகமாக.
“நல்லதுண்ணா.. டீ எடுத்துக்கோங்க..” தனா சொல்ல, எடுத்து கொண்டவர்,
“இன்னும் கொஞ்ச நாள் தான், அப்புறம் இந்த ஏரியா எல்லாம் நாம...
இராஜ பவனி 1
“குகன் மாமா.. பிரசாதம் எடுத்துக்கோங்க..” குரல் கேட்க, கணக்கு பார்த்து கொண்டிருந்த குகன் நிமிர்ந்து பார்த்தான்.
சாருலதா கோவில் சென்று வந்த அடையாளத்துடன் நின்றிருக்க, ஆச்சரியமாக புருவம் தூக்கியவன், “எதுக்கு அடிப்போட இப்படி பக்தி மயமா காட்சி தரீங்க மேடம்..?” எழுந்து பிரசாதத்தை வாங்கியபடி கேட்டான்.
“இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்..” அவள் முகம்...