“பாருங்கப்பா.. உங்க அக்கா மக எவ்வளவு செல்வாக்கா இருக்காங்கன்னு.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் பூ மாதிரி தான் இருக்காங்க..” என்றான் அப்பாவிடம் கூர் பார்வையாக. குருமூர்த்திக்கு மகன் சொல்வது புரிய, தனா விடாமல்,
“அப்புறம் அத்தை மாமா எங்க..?” கேட்டான்.
“அவர் கிடக்குகிறார் வீட்ல..”
“அவருக்கு சாப்பாடு..”
“ஒரு நாளைக்கு வெளியே வாங்கி திங்கட்டும்..” என்றார் அலட்சியமாக.
“அது சரி தான் அத்தை, ம்மா.. அப்பாக்கு சட்னி வைங்க..” என்றான்.
அவ்வளவு தான் குருமூர்த்தி எழுந்துவிட்டவர், “எனக்கு போதும், நீங்க சாப்பிடுங்க, எனக்கு வேலை இருக்கு..” ஓடியே விட்டார்.
சாரு, வெளியே இருந்த குகன் எல்லாம் சிரிப்பை வாய்க்குள் அடைக்க, வைதேகிக்கு எதுவும் தோன்றவில்லை. பாம்பு கொத்தாமல் இருந்தால் தான் ஆச்சரியம். சில நேரங்களில் அடக்கி வாசிக்குமே தவிர அதன் சீறலை விடாது. இத்தனை வருடங்களில் எவ்வளவு பட்டிருப்பார்.