IN
இமை – 2
அழகான ஆலிவ் நிற கிரேப் சில்க் சேலையில் சிறு நாணத்துடன் நின்றவளின் தலையில் பூ வைத்து விட்ட சுந்தரி, “பவி.... நீயும் எனக்குப் பொண்ணு போலதான்.... பார்த்து பதவிசா நடந்துக்கணும்..... நான் பால் எடுத்திட்டு வந்திடறேன்....” என்று அடுக்களைக்கு செல்ல, அவள் மனதிலோ இனம் புரியாத ஒரு குழப்பமும், திகிலும் சிறு...
இமை – 10
நாட்கள் நகரத் தொடங்கின.
மீனாவுடன் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரோஹிணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“அத்தானைப் பார்த்துக்க தானே அந்த நர்ஸைக் கூட்டிட்டு வந்தோம்... அப்புறம் இவ எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கா... மனசுல பெரிய அன்னை தெரேசான்னு நினைப்பு... பெருசா சேவை செய்ய வந்துட்டா...”
“ரோஹி... விடும்மா... நாம எல்லாரும்...
இமை – 7
“ஹலோ...”
எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த கம்பீரமான மித்ரனின் குரல் அவளது செவி வழியாய் இதயத்தை அடைந்து உயிரைத் தீண்ட தன்னை மீறிப் புறப்பட்ட சிறு விசும்பலுடன் அப்படியே நின்றாள் பவித்ரா.
“ஹலோ... நான் மித்ரன் பேசறேன்...” அவன் மீண்டும் கூறவும் இயல்புக்கு வந்தவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்.
“நா..நான் பவித்ரா...
இமை – 8
மீனா மயங்கி விழவும் பதறிப் போன பவித்ரா அவரை எழுப்ப முயன்றாள்.
“அத்தை... என்னாச்சு... போன்ல அவர் என்ன சொன்னார்...” கேட்டவள் அலைபேசி அழைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு காதுக்குக் கொடுத்தாள்.
அதில் கேட்ட விஷயம் இடியாய் இதயத்தைத் தாக்க அனிச்சையாய் கண்ணில் வழிந்த நீருடன் உறைந்து போனவள் சிலையாய் மடங்கி அமர்ந்தாள்.
அதற்குள்...
இமை – 24
வெகுநாட்களுக்குப் பிறகு மண் தொட்ட மழையால் மண்ணோடு மனதும் குளிர்ந்திருந்தது ரோஹிணிக்கு. ஒரு நொடியில் உலகம் மிகவும் அழகாய் மாறிவிட்டது போல சந்தோஷமாய் உணர்ந்தாள். மழை ஓய்ந்து மிகவும் மெல்லிய தூறல் மட்டுமே இருந்தது. அது உற்சாகமாய் அவள் மனதுக்குள்ளும் தெறித்துக் கொண்டிருந்தது.
அந்த உற்சாகத்துக்குக் காரணம் ராகவ். மித்ரனின் நண்பன் ராகவ்...
இமை – 3
காலையில் எப்போதும் போல நேரமாய் எழுந்தவள் குளித்து சாமிக்கு விளக்கு வைத்து அடுக்களைக்குள் நுழைய அப்போதுதான் பணிப்பெண் சாவித்திரி பால் பாத்திரத்துடன் உள்ளே வந்தாள்.
பவித்ராவைக் கண்டு சிநேகமாய் சிரித்தவள், “நேரமா எழுந்துட்டீங்களாம்மா.... காபி போட்டுத் தரட்டுமா....” என்றாள்.
“இல்ல... இன்னைக்கு எல்லாருக்கும் நான் காபி போடறேன்... யார் யாருக்கு எந்த டேஸ்ட்ல...
இமை – 1
“கெட்டிமேளம்..... கெட்டிமேளம்.....” ஐயரின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கத்தொடங்கிய மங்கள வாத்தியங்களின் இசை மண்டபத்தை நிறைக்க, அனைவரின் கைகளும் மணமக்களின் மீது அட்சதையைத் தூவி வாழ்த்துவதற்குத் தயாராக, மணப்பெண் பவித்ராவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து தாலிக்காய் காத்திருக்க, மாங்கல்யத்தைக் கையில் பிடித்திருந்த மணமகன் மித்ரனோ ஒரு நொடி தயக்கத்துடன் அவள் முகம் நோக்கினான்....
இமை – 17
கட்டிலில் படுத்திருந்த பவித்ரா மருந்தின் உதவியால் மதியத்திலிருந்து நல்ல உறக்கத்தில் இருக்க, அருகில் ஏதேதோ யோசனையுடன் வருத்தமாய் அமர்ந்திருந்தான் மித்ரன். நல்ல காய்ச்சலுடன் அரை மயக்கத்தில் இருந்தவளைப் பரிசோதித்த டாக்டர் ஊசிபோட்டு காய்ச்சல் குறையாவிட்டால் உடனே மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி சென்றிருந்தார்.
மித்ரன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க சூடு...
இமை – 14
பவித்ராவுக்கு ரோஹிணி சொன்ன வார்த்தைகள் இப்போதும் முள்ளாய் இதயத்தைத் தைத்துக் கொண்டிருக்க சாப்பாடே இறங்கவில்லை. தண்ணியைக் குடித்துவிட்டு சாப்பாடு வேண்டாம்... என்று எழுந்தவளை சாவித்திரி கவலையுடன் பார்த்தார்.
“பவிம்மா, ஒருநேரம் தான் சாப்பிடறதே... கொஞ்சமாவது சாப்பிடுங்க... போன ஜென்மத்துல அந்தப் பொண்ணு ராட்சசியா இருந்திருப்பான்னு நினைக்கறேன்... அதான் என்ன வேணும்னாலும் பேசுது...” என்றார்...
இமை – 20
“பவி...” வெறித்த பார்வையுடன் எங்கோ பார்த்துக் கொண்டு கண்ணில் நீர் வழிய அதிர்ச்சியில் நின்றவளை வேகமாய் நெருங்கினான் மித்ரன்.
“என்ன நடந்துச்சுன்னு முழுமையா தெரிஞ்சுக்காம எந்த முடிவுக்கும் வந்திடாதே...” சொன்னவன் வேகமாய் அவள் கையைப் பிடிக்க உதறியவள் உறுத்து நோக்கினாள். அவளது பார்வையில், “உன்னால் எப்படி இப்படியொரு துரோகத்தை எனக்குப் பண்ண முடிந்தது...”...
இமை – 26
“ஓம் நமச்சிவாய”
இடுப்பில் காவி வேஷ்டியும், நீண்ட தாடியும், காவித் தலைக்கட்டுமாய் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து அமர்ந்திருந்த அந்த முதியவரின் முன்னில் பக்தியோடு அமர்ந்திருந்தனர் சில பக்தர்கள். கனிவு ததும்பும் விழிகளும், அவரது முகத்தின் தேஜசும் பார்ப்பவர்களைக் கையெடுத்து கும்பிட வைத்தது.
ஆன்மீகத்தோடு வாழ்வியல் உண்மைகளைக் கலந்து கனிவோடு அவர் சொன்ன கதைகள்...
இமை – 19
சட்டென்று அவன் விலகவும் திகைத்தவள், தான் கூறியது அவனை வருத்தியிருக்குமோ என்ற தவிப்புடன் மெல்ல ஏறிட்டாள். அவனது விழிகள் சிவந்து எங்கோ வெறித்துக் கொண்டிருக்க காணவே பாவமாய் தோன்றியது.
அவனை சற்று நெருங்கி தோளை உரசிக் கொண்டு அமர்ந்தவள், அவளாகவே அவனது கையை கோர்த்துக் கொண்டாள். அலைபாயும் கூந்தலில் வீசிய ஷாம்பூவின் மணம்...
இமை – 4
“காலையில் கணவன் கிளம்பிவிடுவானே... அவனுடன் எதுவுமே பேச முடியவில்லையே...” என்று வருத்தத்தோடு அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த மித்ரனைக் கண்டதும் திகைத்தாள்.
அவன் உறங்காமல் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பான், சற்று மெதுவாய் செல்லலாம் என்று நினைத்து அடுக்களையில் நேரம் கழித்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி தலையில் குட்டிக் கொண்டாள்.
மிதமான...
இமை – 23
அழகான மாலையில் வானம் இருட்டிக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்க மித்ரனின் மனமோ தெளிவான நீரோட்டமாய் அமைதியுடன் இருந்தது.
பவித்ரா அறையில் இருக்க தோட்டத்தில் நடந்து கொண்டே அவள் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்த மித்ரன், மாடியில் காற்றில் படபடத்து கொடியில்...
இமை – 25
“என்னங்க, எழுந்திருங்க... இன்னைக்கு சீக்கிரமா மில்லுக்குப் போகணும்னு சொன்னிங்களே... டைம் ஆச்சு பாருங்க...” பவித்ரா உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் குரல் கேட்டு எழுந்தவன், “குட் மார்னிங் பவி...” எனவும், பதிலுக்கு குட்மார்னிங் சொல்லி ஒரு புன்னகையை உதிர்த்தவள் “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க... நான் காபி எடுத்திட்டு வரேன்...” அவன்...
இமை – 6
சும்மா இருந்தால் மனது அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் என நினைத்த பவித்ரா அறையில் அங்கங்கே கிடந்த பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைக்கத் தொடங்கினாள். மேசை வலிப்பைத் திறந்து கலைந்து கிடந்த பொருட்களை ஒதுக்கியவள் ஓரமாய் ஒரு காக்கி கவரைக் கண்டதும் எடுத்துப் பார்த்தாள். அதில் மித்ரனின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய...
இமை – 27
“அப்படி என்னப்பா, சரி பண்ண முடியாத தப்பைப் பண்ணினீங்க...” மித்ரனின் கேள்வி குளவியாய் நெஞ்சைக் கொட்ட சிறிது நேரம் அமைதியாய் இருந்தார். மீனாவும் அவர் சொல்வதைக் கேட்கக் காத்திருக்க நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவர் நிமிர்ந்தார்.
“சொல்லறேன் மித்ரா, அப்ப நீ சென்னைல மாமா வீட்டுல இருந்து படிச்சிட்டு இருந்தே... என் பிரண்டு...
இமை – 16
விடியும் நேரத்தில் உறங்கிப் போன மித்ரன், யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் மெல்லக் கண்விழித்தான். இமை மீது கல்லை வைத்தது போல் கனத்து எரிய மெல்ல எழுந்தான்.
கண்ணைத் தேய்த்துக் கொண்டே கதவருகில் சென்றவன்,
“இந்நேரம் பவித்ரா எழுந்து கதவைத் திறந்து வெறுமனே சாத்திவிட்டுத் தானே போயிருப்பாள்... இன்னும் அவள் எழுந்திருக்க வில்லையா...”...
இமை – 9
அன்று காலையில் எழுந்தது முதலே பவித்ராவுக்கு ஒருவிதப் படபடப்பாய் இருந்தது. மனம் ஓயாமல் கணவனுக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சென்னை வந்துவிட்டதாகவும். மித்ரனுக்கு அங்கேயே ஒரு பரிசோதனை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகவும் வந்த அலைபேசி செய்தியில் அவள் மனம் ஓரிடத்தில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“மித்து... இன்னைக்கு உங்களைப் பார்க்கப் போறேனா... அவருக்கு...
இமை – 13
“ரோஹி...” கோபமாய் ஒலித்தது மித்ரனின் குரல்.
“எதுக்கு இப்படிப் பேசறே... படியில் தவறி விழப் போன என்னை பவித்ரா பிடிச்சுகிட்டா... அதுக்கு எதுக்கு இப்படி கோபப்படறே... அவ பிடிக்காம நான் கீழ விழுந்து மறுபடியும் இன்னொரு காலையும் உடைச்சுக்கணும்னு நினைக்கறியா...” கோபமாகவே மித்ரனும் கேட்டான்.
அவன் அப்படி சொல்லவும் தான் நடந்தது தலைக்கேற...