Wednesday, November 11, 2026

    Anithavin Appa 21 2

    0

    Anithavin Appa 21 1

    0

    Anithavin Appa 20 3

    0

    Anithavin Appa 20 2

    0

    Anithavin Appa 20 1

    0

    Anithavin Appa

    Anithavin Appa 11 1

    0
    பகுதி – 11 மலையில் இருந்து இறங்கியவர்கள் எதிரே இருந்த கருமாரியம்மன் ஆலயத்திற்கும் சென்று வழி பட்டனர். இவர்கள் சென்ற போது அலங்காரம் முடிந்து சாமிக்கு கற்பூர ஆராதனை தொடங்கியது. நின்று கண்குளிர அம்மனை தரிசித்துவிட்டு வந்தனர். நான்கு குடும்பமும் நான்கு கார்களில் வந்திருந்தனர். வரும் போது ஹரி தான் அவனின் காரை ஒட்டிக்கொண்டு வந்திருந்தான். இப்போதும்...

    Anithavin Appa 10

    0
    பகுதி - 10 மறுநாள் காலையே தேவ் அவன் மனைவி தீப்தியுடன் வந்துவிட்டான். திருமணத்தை எந்தக் கோவிலில் நடத்துவது என்று முடிவு செய்தவர்கள், அதற்கான ஏற்பாட்டைப் பார்க்க சென்றனர். தீப்தி மீனாவை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்ததால்... விக்ரமும் ஹரிணியும் அவளை அழைத்துக்கொண்டு மீனாவை பார்க்க சென்றனர். இவர்கள் சென்ற போது மீனா வீட்டில் இல்லை.... அலுவலகத்தில்...

    Anithavin Appa 9 2

    0
    போச்சு... ஏன் இன்னைக்குக் கிளம்பலைன்னு விக்ரமை திட்ட போறார். ஏற்கனவே அவர்கள் திடிரென்று கிளம்பிய போதே முனங்கிக்கொண்டு தான் சம்மதித்தார். அவருக்கு எப்போது பணம் சம்பாதிப்பது ஒன்றே தான் குறிக்கோள்... அதைச் செலவு செய்யவும் மனது வராது. தானும் அனுபவிக்க மாட்டார், மற்றவர்களையும் அனுபவிக்க விட மாட்டார். இப்ப என்ன சொல்ல போறாரோ? ஹரிணி இப்படி...

    Anithavin Appa 9 1

    0
    பகுதி – 9 விஸ்வம் வாங்கி வந்த இனிப்புக் காரங்களை ரதி தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். மீனா வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டாள். அவளின் மனநிலை உணர்ந்து யாரும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. கிளம்பும் சமயம் அவளிடம் வந்த வைஷ்ணவி சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். “இன்னைக்கு வேலைக்குப் போகலையா மீனா....” “இல்லை.... இன்னும் என்னால நேத்து நடந்ததுல...

    Anithavin Appa 8 3

    0
    தன் அண்ணனுக்கு இந்தத் திருமணமாவது நல்லபடியாக நிலைக்க வேண்டும். அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வேண்டியபடி ஹரிணி உறங்கி போனாள். மதிய உணவு முடிந்து சிறிது நேரம் சென்று அனிதா வீட்டிற்குக் கிளம்பினர். ஹரி வரவில்லை என்று விட்டான். விக்ரம் காரை ஓட்ட அவன் காரில் எல்லோரும் சென்றனர். முதலில் விமலாவை சென்று பார்த்துவிட்டு...

    Anithavin Appa 8 2

    0
    “எனக்கு அனிதா மீனா ரெண்டு போரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஹரியும் மீனாவும் குழந்தைக்காக இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாலும், கண்டிப்பா பின்னாடி அவங்க நல்ல கணவன் மனைவியா வாழ்வாங்க அப்படின்னு நான் நம்புறேன்.” வைஷ்ணவியின் விளக்கத்தைக் கேட்ட விக்ரம் அதற்கு மேல் எதுவும் மறுத்து பேசவில்லை.... அவன் சென்று ஓய்வு எடுக்க.... ஹரிணியும் வைஷ்ணவியும் மதிய சமையலுக்குத்...

    Anithavin Appa 8 1

    0
    பகுதி – 8 இரவு உறங்க நெடு நேரம் ஆனதால்... மறுநாள் தாமதமாக எழுந்த ஹரி மெதுவாகக் குளித்துக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க..... வைஷ்ணவி சமையல் அறையில் இருந்ததால்.... ஹரி சென்று கதவை திறந்தான். “ஹே.... நீ எங்க வந்த?” என்று அவன் போட்ட சத்தத்தில் வைஷ்ணவி பதறி போய்,...

    Anithavin Appa 7 3

    0
    மகள் எந்த வித உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் இருப்பது நல்லது இல்லையே என்று நினைத்து பயந்து கொண்டிருந்த விஸ்வத்திற்கு, மீனா அந்நேரம் அழுதது உண்மையில் ஆறுதலாகவே இருந்தது. இனி சரியாகி விடுவாள் என்று நினைத்தார். அனி இதுவரை மீனாவின் பேச்சை மீறி நடந்ததே இல்லை.... ஆறு வருடமாக பெற்று வளர்த்த தன்னை விட... இப்போது ஆறு மாதத்திற்கு...

    Anithavin Appa 7 2

    0
    மீனாவின் வீடு பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளே இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.  தினமும் அவள் நடந்து தான் செல்வாள். அன்றும் அது போல் அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வந்து இறங்கியவள், முக்கிய சாலையில் இருந்து திரும்பி கிளை சாலைக்குள் நடந்து கொண்டிருந்தபோது “அம்மா...” என்ற குரல் கேட்டு, யாரோ யாரையோ அழைக்கிறார்கள் என்று...

    Anithavin Appa 7 1

    0
    பகுதி – 7 இரண்டு நாட்கள் ஹரி வரவில்லை என்றதும் அனிக்கு ஹரியை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. மீனாவிடம் கேட்டாலும் ஒழுங்கான பதில் இல்லை.... ஹரியின் அத்தையிடம் பேச அனிக்கு பயம். அவர் தானே அவளுக்கு தலைமை ஆசிரியர். நான் என்னுடனே ஹரியை ஊருக்கு அழைத்து சென்று விடுவேன் என்று வைஷணவி கேலியாக கூறியதை...

    Anithavin Appa 6 2

    0
    “அவங்க ஹரி சாரோட அம்மா தான... அவங்க எதுக்கு இங்க வந்தாங்க?” “சும்மா தான் வந்தாங்க.” என்ற மீனாவின் கலங்கிய முகத்தைப் பார்த்த ரதி “அவங்க எதாவது பேசினாங்களா....” எனத் தூண்டி துருவி விசாரிக்க... இதற்கு முன்பு எல்லாம் ரதி இப்படிப் பேசுபவள் அல்ல... அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று தான் இருப்பாள். அதனால்...

    Anithavin Appa 6 1

    0
    பகுதி – 6 ஹரி வகுப்பு முடிந்து வந்ததும் வைஷ்ணவி மீனாவை பார்க்க சென்றார். ஹரி அவன் அத்தையின் வீட்டிலேயே இருந்து கொண்டான். மீனா வேலை விட்டு வந்ததுமே அனி வைஷ்ணவி வருவதைப் பத்தி சொல்லி இருந்தாள். அவங்க எதுக்கு இங்க வராங்க? என்று யோசித்தபடியே மீனா வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். எழு மணி போல் வீட்டிற்குள் நுழைந்த வைஷ்ணவியை...

    Anithavin Appa 5 3

    0
    “அம்மா நீங்க சொன்னா மாதிரி எல்லாம் விசாரிச்சிட்டேன்.” என்றவன் விவரம் சொல்ல.... அதை முழுவதும் கேட்டு முடித்தவர், மீனாவோட முதல் கணவன் ஆகாஷ் பற்றியும் விசாரித்தார். “அது ஒன்னும் பிரச்சனை இல்லைமா.... ரெண்டு பக்கமுமே எழுதி வாங்கி இருக்காங்க. அதோட ஏழு வருஷம் ரெண்டு பேரும் பிரிஞ்சும் வாழ்ந்திருகிறதுனால... நாளைக்குக் கோர்ட் அது இதுன்னு போனாலும்...

    Anithavin Appa 5 2

    0
    மகன் ஏன் அப்படிப் பேசுகிறான் என்று தெரியும் என்பதால்.... அவர் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் ஹரியே திரும்பப் பேச்சை ஆரம்பித்தான். “அப்புறம் வெங்கட் என்ன பண்றார்? உங்களை எப்படி மனசு வந்து அனுப்பி வச்சார்? கண்டிப்பா எனக்கு அர்ச்சனை நடந்திருக்குமே.....” “ம்ம்.... ம்ம்.... நடந்தது நடந்தது..... அவன் இங்க வர வேண்டியது தான.... எதுக்கு உன்னைக்...

    Anithavin Appa 5 1

    0
    பகுதி – 5 ஹரி ஒருபக்கம் இளைத்துக்கொண்டே செல்ல...அனியும் தேய்ந்து கொண்டே சென்றாள்... சரியாகச் சாப்பிடுவதே இல்லை.... மீனாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவள் நல்ல நாளிலேயே அப்படித்தான் இருப்பாள். மகள் சிறிது நாட்களில் பழையபடி ஆகிவிடுவாள் என்று நினைத்ததற்கு மாறாக.... அவள் தனக்குள்ளேயே வைத்து மறுகிகிறாள் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது. மறுநாள் காலை மீனா...

    Anithavin Appa 4 2

    0
    மாலை அலுவலகத்தில் இருந்து வந்த மீனா முடிந்தவரை வீட்டை ஒழுங்குபடுத்தி அலங்காரம் செய்து வைத்தாள். மற்றவர்கள் கொண்டாடும் போது... தான் மட்டும் பிறந்தநாள் கொண்டாடவில்லை என்றால் மகளின் மனம் வருத்தப்படுமே என்று தான்.... அனிதா காலையில் அணிந்திருந்த உடையே நன்றாக இருக்க... வெறும் முகம் மட்டும் கழுவி மகளுக்கு ஒப்பனை செய்துவிட்டாள். இவள் வாங்கிய உடையைத்...

    Anithavin Appa 4 1

    0
    பகுதி – 4 அன்று அனிதா தன் மாமா வீட்டில் அஸ்வத் மற்றும் அவனின் நண்பன் ப்ரணவ்வோடு விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது நான் இங்கே சென்றேன், அங்கே சென்றேன் என்று அனிதா பெருமை பேச.... குழந்தைகளுக்கே உரிய போட்டி குணம் தலைதூக்க... அவர்களும் பதிலுக்குப் பெருமை பேசினர். அஸ்வத் வீட்டில் பெற்றோர் இருவருமே வேலை பார்ப்பதால் அவர்கள்...

    Anithavin Appa 3 2

    0
    அங்கிருந்த டேபிளில் அனிதாவை வசதியாக உட்கார வைக்க..... அவள் ஸ்பூனால் உணவை அழகாக எடுத்து சாப்பிட்டாள். ஸ்பூன் பெரிதாக இருந்ததால்....அவள் குஞ்சு வாய்க்குள் பாதி உணவு தான் சென்றது, மீதி அவள் தட்டிலேயே விழுந்தது. ஹரி அதை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். பிருந்தாவை பற்றியே மனசுக்குள் ஓடிக்கொண்டு இருந்ததால் ஹரி சாப்பிடாமல் இருந்தான். அதைக் கவனித்த...

    Anithavin Appa 3 1

    0
    பகுதி – 3 மறுநாள் ஹரிஹரன் வழக்கம் போல் வகுப்பிற்குத் தனது வண்டியில் வந்து கொண்டிருந்தான். தெருமுனை திரும்பும் போது... ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த அனிதா... வண்டியில் இருந்தவரிடம் தூக்கு தூக்கு எனப் பரக்க..... அவரும் தூக்கி அவளை முன்னால் வைத்துக் கொண்டதும், அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மேடம் எங்கையோ போறாங்க போலிருக்கு.......

    Anithavin Appa 2 2

    0
    அவன் என்ன செய்தாலும் அவனின் பெற்றோர் கேட்பதே இல்லை.... ஒரு நாள் எல்லோரும் இருக்கும் போதே மீனா வெடித்து விட்டாள். “இவ்வளவு நாள் நல்லா தானே இருந்தீங்க. இப்ப என்ன வந்தது?” “இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணதுனால என்னோட சுதந்திரம் போய்டுச்சு... எப்ப பாரு கேள்வி கேட்டு உயிரை எடுக்கிற? நீயெல்லாம் ஒரு ஆளு உன்னைப் போய்...
    error: Content is protected !!