Wednesday, November 11, 2026

    மன்னவன் மயங்கும் மலரவள்

    அத்தியாயம் - 3 குருசேத்ரன், "எல்லாமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா சரியா இருக்கணும்" என போனில் பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரம், சுப்ரியாவின் கார் நேர்த்தியாக உள்ளே நுழைந்தது. அந்த இடத்தைப் பார்த்து செம்பருத்தி அதிர்ந்து போனாள். "வாட் ஹேப்பன்? உன்னோட ரியாக்‌ஷன் ஏன் இப்படி இருக்கு?" என சுப்ரியா கேட்க, "வீடு ரொம்பப் பெருசா இருக்கு மேடம். நான்...
    அத்தியாயம்-14 “என்ன மாமியாரா? எனக்கு மாமியாரா?” என செம்பருத்தி அதிர்ச்சியுடன் கேட்டாள். சம்பூர்ணம் ஆர்வத்துடன் கண்கள் விரிய, ”அக்கா, நான் குளிச்சிட்டு தலையை துவட்டிட்டு வெளியே நின்னுட்டு இருந்தேன். திடீர்னு ஒரு காரு வந்தது. நல்லா பளபளன்னு! இந்த எதிர்த்த வீட்டு பையன் ரோகன், ‘வாயை திறந்து பார்த்துகிட்டே ஆடி கார்!’ அப்டின்னான். அது நேரா நம்ம...
    அத்தியாயம் - 28 இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மெல்ல பாத்ரூம் எழுந்து சென்று வந்தாள் செம்பருத்தி. அவளுக்கு யூரின் சென்சேஷன் அதிகமாக இருந்தது. அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே வர சட்டென அதிர்ந்தாள். "இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?" என மனதுக்குள் ஓட, எதுவும் பேசாமல் கதவைத் திறந்தவள், "வெளியே போ!" என நின்றாள். "நான் எதுக்கு...
    அத்தியாயம்-21 "என்ன பண்ணேன்?" "நீ செம்பருத்தியை மேரேஜ் பண்ணிருக்கியாமே?" என்றாள் சுப்ரியா. குருசேத்ரன், ஸ்ரீராமை முறைத்துப் பார்க்க, "பாஸ், நான் சொல்லல பாஸ்!!" என்றான் சத்தியம் செய்வது போல தலையில் கை வைத்து கொண்டே. "அவன் சொல்லல!!" "அவனா?" என ஸ்ரீராம் நினைத்தான். ஆனால் கேட்கவா முடியும்? "செம்பருத்தி சொன்னாளா?" என குரு பார்த்தான். "அவள் சொல்லல!! எனக்கு தெரிய வந்தது." "நானே உன்னை இன்வைட்...
    அத்தியாயம்- 23 விடமாட்டேன் என ஒரே வார்த்தையில் முடித்திருந்தான் குருசேத்ரன். இருவர் முகமும் சடுதியில் மாற, இரண்டு கையையும் தலைக்கு வைத்தபடி அவர்களை ஏறிட்டுப் பார்த்தான். மணியம்மை எதுவும் பேசாமல் திரும்பி நடக்க, "ஒரு நிமிஷம் இருங்க." "என்ன கண்ணு?" "நீங்க மட்டும் போக வேணாம். சாந்தாவையும் கூட்டிட்டுப் போங்க! அண்ட்," என்றவன் செம்பருத்தியைப் பார்த்து, "உன்னோட மம்மி டாடி வருவாங்களா?"...
    அத்தியாயம்- 26 தனது கண்களை நம்ப முடியாமல் பார்த்தாள் செம்பருத்தி. மூச்சு விட சிரமப்பட்டாள். நித்யா அவளைப் பார்த்து விட்டு, "என்னாச்சு உங்களுக்கு? எதுவும் பிரச்சினையா?" எனக் கேட்டார். "இல்லை, இல்லை டாக்டர், நான் நல்லா இருக்கேன்," என்றவள் மெல்ல தன்னைச் சமப்படுத்திக்கொண்டாள். "ப்ளீஸ், ஓப்பனா சொல்லுங்க! உங்க கிட்ட அவர் நல்ல விதமா நடந்துகிட்டாரா? இல்லை எதுவும் 'ஹார்ஷா'...
    அத்தியாயம் -19 அவனது குறுகுறு பார்வையில் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியாததால், அவன் முன்னாலேயே உடையை மாற்றினாள். வேறு என்ன செய்ய முடியும்? “விடா கண்டனாக இருக்கிறானே!” இருவரும் ஒருவழியாக கீழே வந்தார்கள். “மேடம்,” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு, “அத்தை, நீங்க வரலையா?” எனக் கேட்டாள் செம்பருத்தி. “இல்லை மா! எனக்கு இன்னிக்கி முக்கியமான வேலை,” என்ற...
    அத்தியாயம்- 24 இரண்டு, மூன்று நாட்களாக ஒரே சோர்வாக இருந்தாள் செம்பருத்தி. திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தது. இறுதியாக அவளது வீட்டில் தான் மாதவிடாய் முடித்தாள். அதன் பின்தான் திருமணமே நடந்தது. அன்று கருவாடு ஆசையுடன் தான் செய்து சாப்பிட நினைத்தாள். குருசேத்ரன் வந்து தடுத்து விட்டான். 'எதற்கும் பரிசோதனை செய்து பார்க்கலாம்,' என நினைத்தவள்...
    அத்தியாயம்-5 "என்ன நடந்தது சொல்லுங்க சாந்தா?" என சுப்ரியா கேட்டாள். அவள் எதேச்சையாகத்தான் அங்கே வந்தாள். "இது சைவ ஈரல் வறுவல், அதாவது பச்சைப்பயிறில் செஞ்சது. இது சிக்கன் பிரியாணி இல்ல, பலாப்பழக்காயில், அதாவது பலாக்காய்ல செஞ்ச பிரியாணி. இது மீன் இல்ல, வாழைக்காய். இது முட்டை ஆம்லெட் இல்ல, கடலை மாவுல செஞ்ச தோசை," என்றார். அழுது...
    அத்தியாயம்- 32 “என்ன சொல்லணும்? இப்போவே சொல்றேன்!!” என காலை மெல்ல பிடித்து முத்தமிட்டான். “தேடி கண்டுபிடி குருசேத்ரன். என்னைக் கல்யாணம் பண்ண எவ்ளோ ‘பிளான்’ போட்டிருப்ப? உன் அம்மாவோட வாயில் இருந்து என்னோட பேர் வர என்னென்ன செஞ்சிருப்ப? அதே போல இதையும் கண்டுபிடி!!” என்றாள் செம்பருத்தி. “கண்டிப்பா!” என மார்தட்டிக்கொண்டான் குரு. இப்படி அவன் செம்பருத்தியின்...
    அத்தியாயம்-11 வளையலைப் பார்த்தபடி நீச்சல் குளத்தின் பக்கம் அமர்ந்திருந்தாள் செம்பருத்தி. "அய்யோ, தங்க வளையலை வேற இந்த மேடம் போட்டு விட்டுட்டாங்களே! நான் என்ன செய்வேன்?" என நினைத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. சம்பூர்ணா அழைத்திருந்தாள். "ஹலோ, சொல்லு சம்பு." "ஹே, அக்காவுக்கு நார்மல் டெலிவரி ஆகிடுச்சு. பையன் பொறந்துட்டான்," என உற்சாகத்துடன் கூறினாள். "அப்படியா?"...
    அத்தியாயம்- 33 "எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது, பிடிச்சு விடுங்க," என செம்பருத்தி கூறினாள். "இதோ வர்றேன்," என அனைத்துப் பணிவிடைகளையும் செய்தான். "எப்படி இத்தனை நேரம் என்கூட இருக்கீங்க? உங்களுக்கு ஒரு கண்ணு உங்க மம்மின்னா இன்னொரு கண்ணு உங்களோட எம்.ஜி. கன்ஸ்ட்ரக்சனாச்சே? எப்படி விட்டு இருக்க முடியுது? அன்னிக்கு சொன்னீங்களே, என்னோட மனசு சிமெண்ட், செங்கல்,...
    அத்தியாயம்-12 “கையில வளையல் எங்கே?” எனக் கேட்க… “ரூம்ல இருக்கு மேடம்! நீங்க டேப்லெட் போட்டீங்களா?” என அனைத்தையும் கேட்டவள், அவருக்கு எடுத்துக்கொடுத்துவிட்டு நொண்டி நொண்டி நடந்து அறைக்குள் சென்று விட்டாள். “என்னாச்சு? ஒரு மாதிரி நடக்கிறா?” என்று மணியம்மை சாந்தாவிடம் கேட்க, “நான் காலையிலேயே கேட்டேன் மேடம். அது செம்பருத்தி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாளாம். அதனால கால்...
    அத்தியாயம்-18 என்ன?” என செம்பருத்தி அவனை விதிர்விதித்து பார்க்க, அவளின் மோவாய் பற்றி நிமிர்த்தினான் குரு. ”சொல்லுங்க...” ”என்னை கல்யாணம் பண்ணதால உன்னோட வாழ்க்கையில் என்ன நடந்திருக்கு, லிஸ்ட் போடு!” ”ஹாங்!!” ”போடுஊஊஊ!!” ”எங்க வீட்ல இருந்து இங்கே வந்தேன்.” ”அடுத்து?” ”உங்க பொண்டாட்டி ஆகிட்டேன்” என சோகமாக கூறினாள் செம்பருத்தி. ”அடுத்து?” என கன்னத்தை அழுத்தி பற்றினான். ”வீட்ல இருக்கேன்.” ”பின்ன காட்லயா இருப்பாங்க!! அடுத்து?” ”வேற என்ன? உங்க...
    அத்தியாயம்-15 செம்பருத்தி தயக்கத்துடன் பார்த்தாள் மணியம்மையை. ”என்னாச்சு? என்னைத்தான் உனக்கு நல்லா தெரியுமே. அப்புறம் எதுக்கு என்னை யாரோ போல பார்க்குற?” ”இல்லை, சும்மா மேடம்! அது எனக்கு ஒண்ணுமே புரியல. இன்னும் சில விஷயங்களில் எனக்கு clarity வேணும்” என்றவள் தயங்கிக்கொண்டே, ”சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியல. எதுக்கு நீங்க என்னை செலக்ட் பண்ணீங்க? உங்களோட மருமகளாக?...
    அத்தியாயம்- 27 குருசேத்ரன் அவளின் அருகில் நெருங்கினான். “வீட்டை விட்டு வெளியே போயிடுங்க!!” என்று கூறினாள் திருத்தமாக. “என்னாச்சு?” செம்பருத்தி அவனைப் பார்த்து, “எல்லாமே தெரிஞ்சுதான் நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட இதுக்கும் மேலயும் நடிக்க வேணாம். எப்போவும் போல உங்க இயல்புல பேசுங்க.” “என்னோட இயல்புல பேசணும், ரைட்!” “ம்ம்!” என்றாள் அவனைப் பார்த்து. “அப்போ எழுந்திரு, மூச்சு முட்டுது....
    அத்தியாயம்-22 இடுப்பில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான் குருசேத்ரன். செம்பருத்தி எதுவும் பேசாமல் உடை மாற்றச் சென்றாள். அவனால் உள்ளமும் சோர்வு, உடல் அதற்கும் மேல் சோர்வு. தன்னை கொஞ்சிக் கொண்டாடித் தீர்த்தால் ஓடிச் சென்று ஒட்டிக்கொள்வேன் என்று நினைத்தானா? அது மட்டும் செம்பருத்தியிடம் நடக்காது. போர்க்களத்தில் பூக்களுக்கு என்ன வேலை என்பதைப் போலத்தான் அவளின் வாழ்க்கை. உடையை...
    அத்தியாயம்- 31 அறைக்குள் தடாலடியாக நுழைந்தான் குரு. “அம்மா, பேய்!” என அலறியபடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், அவனைப் பார்த்ததும் “பேய்க்கு உண்டான மரியாதை போச்சு” என வாய்மொழியாகக் கூறினாள் செம்பருத்தி. “உன்னோட தங்கச்சிக்கு நடக்க இருக்குற கல்யாணத்தை நிறுத்தணும்.” “எந்தத் தங்கச்சி?” “திவ்யனுக்கும் சம்பூர்ணத்துக்கும் நடக்க இருக்குற கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டு இருக்கேன். அந்த திவ்யன் மோசமானவன். அவனை கட்டிக்கிட்டா...
    அத்தியாயம்-10 “மே ஐ கம் இன் சார்!!” என சொல்லிக்கொண்டே கதவை தட்டினாள் செம்பருத்தி. “உள்ளே வாங்க!!” “சார்,” என அவன் முன்னால் டிபன் கேரியரை வைத்தாள் செம்பருத்தி. “ஃபுல்-டைம் குக்கரா மாறிட்டீங்களா, மேடம்? இப்போ நான் உங்களை எப்படி கூப்பிட? நர்ஸா? இல்ல, குக்கா? சாரி, அந்த டேர்ம், செஃப்,” என யோசிப்பது போல பாவனை செய்தான் குரு. அவனை...
    அத்தியாயம்-17 “என்ன மா?” என மணியம்மை பார்த்தார். “அங்கே மேலே இருக்கிற ரூம் ரொம்ப பெருசா இருக்கு. கலர் பிடிக்கல. அப்புறம் தூக்கமே வர மாட்டேங்குது. எங்க வீட்டையே அடக்கலாம். என் பக்கத்தில் என்னோட தங்கச்சி சம்பு படுத்துப்பா. இன்னொரு பக்கம் தாமரை அக்கா இருக்கும். அப்படி தூங்கிட்டு இப்போ, தனியா இருக்கிற போல ஒரு ஃபீலிங்....
    error: Content is protected !!