அத்தியாயம் -19

அவனது குறுகுறு பார்வையில் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியாததால், அவன் முன்னாலேயே உடையை மாற்றினாள். வேறு என்ன செய்ய முடியும்? “விடா கண்டனாக இருக்கிறானே!”

இருவரும் ஒருவழியாக கீழே வந்தார்கள். “மேடம்,” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு, “அத்தை, நீங்க வரலையா?” எனக் கேட்டாள் செம்பருத்தி.

“இல்லை மா! எனக்கு இன்னிக்கி முக்கியமான வேலை,” என்ற மணியம்மை, “குரு, நீ ஶ்ரீராமுக்கு போன் பண்ணி வரச் சொல்லு,” என்றார்.

குருசேத்ரன் முறைக்க, “சொல்லுடா, நான் போயிட்டு வரேன்,” என அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

“அப்போ நீங்க எங்க கூட வரலையா?” என செம்பருத்தி மீண்டும் கேட்க…

“இன்னொரு நாள் வரேன். ப்ளீஸ் மா! நீங்க போயிட்டு வாங்க. எனக்கு முக்கியமான வேலை,” எனப் புறப்பட்டார்.

“முதல்ல நீங்க கிளம்புங்க,” என குருசேத்ரன் அவர்களை வழி அனுப்பி வைக்க… அடுத்ததாக, குருசேத்ரன் காரை எடுத்ததும் திங்க் குதித்தான். தன்னையும் அழைத்து போக சொல்லி…

“ப்ளீஸ், கிளம்பலாம். அம்மா ரெண்டு தடவை போன் பண்ணிட்டாங்க!” என செம்பருத்தி மீண்டும் கூற…

“இங்கே திங்க் மட்டும் தனியா இருப்பான். சோ…” என குரு நிறுத்த…

“எனக்கு பிடிக்காது. வேண்டாம், எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க,” என நடுங்கிக்கொண்டே கூறினாள் செம்பருத்தி.

“முடியாது! இவனும் வருவான்,” என்றவன், “இவனாலதான் இன்னிக்கு நீ என் பக்கத்தில் இருக்க,” என ஏகாந்த நினைவுகளை மனதில் ஓட்டிக்கொண்டவன், “ஹே, இங்கே வாடி! அவன் ஒண்ணும் பண்ண மாட்டான். நீ அவன் கூட ஃப்ரெண்ட் ஆகிடு! அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு,” என்றான் குரு அவளை அழைத்துக்கொண்டே…

“இல்லை, மாட்டேன். என்னால முடியாது,” என செம்பருத்தி பயந்துகொண்டே கூற…

“ஹே, உங்க வீட்ல பெட் இருக்குன்னு உன்னோட தம்பி சொன்னானே, அப்புறம் என்ன? நீ வா, ஒரு தடவை ட்ரை பண்ணு,” எனக் கையைப் பிடித்துக் கெஞ்ச வைத்தான்.

திங்க் அவளின் காலை நக்கியது.

“அக்சுவலி, உண்மை என்னன்னா, எனக்கு டாக்ஸ் பிடிக்காது. அதோட சலைவால நிறைய ஜெர்ம்ஸ் இருக்கும்.”

“நான் இதுல மட்டும் விதிவிலக்கு. எனக்கு டாக் பிடிக்கும்,” என்றவன் திங்க்கை காரில் ஏற்றி கொண்டான். அது பின் சீட்டில் அமர்ந்து கொண்டது. செம்பருத்தி தயக்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்கள். ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்தார்கள். சம்பூர்ணம் தான் ஆரத்தி எடுத்தாள்.

“மாமா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,” என சம்பூர்ணம் கூற…

“திங்க் அழைச்சிட்டு வந்திருக்கேன். உனக்காகவும், உன்னோட அண்ணனுக்காகவும்,” என்றான் குரு.

“ஹை, ஜாலி!” என இருவரும் ஓடினார்கள். ஆல்ரெடி கார் பின் டிக்கியில் நிறைய தீனி மற்றும் ஸ்வீட் பாக்ஸ், பழங்கள் என அனைத்தையும் வாங்கி வந்தவன், செல்வியிடம் நீட்டினான்.

செம்பருத்தி, “இத்தனையா?” என்பதைப் போல வியப்பில் பார்த்தாள்.

“எதுக்கு மாப்பிளை, இத்தனை?”

“இட்ஸ் ஓகே, ஆன்ட்டி,” என நீட்டினான். செல்வி அனைத்தையும் வாங்கி கொண்டவர், தண்ணீர் கொடுத்தார்.

செம்பருத்தி வாங்கிக்கொள்ள, “அம்மா வரலையா?” என பாரி கேட்டார்.

“அம்மாவுக்கு கொஞ்சம் முக்கியமான வேலை, போயே ஆக வேண்டிய கட்டாயம்… இன்னொரு நாள் வருவாங்க. எதுவும் நினைச்சுக்காதீங்க,” என்றான் குரு.

“இன்னொரு நாள் கண்டிப்பா வரணும், மாப்ளை!” என செல்வி கூற…

“கண்டிப்பா அத்தை,” என ஓரிடத்தில் அமர்ந்துகொண்டான் குருசேத்ரன். எதிரில் கர்ணன் தனது மகனை வைத்துக்கொண்டிருக்க… குரு மென் புன்னகை சிந்தினான். அவ்வளவே…

“மாமா, பின் பக்கம் வாங்க,” என சம்பூர்ணா வந்து அழைக்க…

“ம்ம்,” என குருசேத்ரன் அவர்களின் பின் சென்றான். அங்கே தர்மன் அழகியை வைத்துக்கொண்டிருக்க, சம்பூர்ணம் திங்க்கை வைத்து விளையாடினாள்.

குருசேத்ரனுக்கு கால் வர, போனை எடுத்துக்கொண்டு ஓரமாக சென்றிருந்தான்.

“ஹே, மாப்பிளைக்கு மட்டன் சூப் கொடு. அப்புறம், சம்புவையும் தர்மனையும் இங்கே வரச் சொல்லு,” என செம்பருத்தியிடம் கொடுத்து அனுப்பினார் செல்வி.

செம்பருத்தி சூப்புடன் சென்றவள், குருசேத்ரனுக்காக காத்துக்கொண்டிருந்தாள். “சம்பு, தர்மா, இங்கே வாங்க,” என செல்வியின் குரல் கேட்க, இருவரும் சென்றிருந்தார்கள்.

குரு பேசிக்கொண்டே, “என்ன?” என்பது போல புருவம் தூக்கினான்.

“அம்மா கொடுத்தாங்க,” என சூப்பை நீட்டினாள்.

“உட்காரு,” என கண்களால் சைகை காட்டியவன் போன் பேசிவிட்டு வர சிறிது நேரமானது.

செம்பருத்தி எதேச்சையாக திரும்பிப் பார்த்தாள். “திங்க் அழகியுடன், ஐயோ! என்ன காரியம் பண்ணிட்டு இருக்கான். விவஸ்தை கெட்டவன். எங்க வீட்டு அழகிய இப்படி பகலில்… ஐயோ, ஐயோ,” என சிணுங்கிக்கொண்டே பார்த்தாள்.

“என்னாச்சு?” என போனை கட் செய்துவிட்டுத் திரும்பினான் குருசேத்ரன்.

“அது… அது ஒண்ணுமில்ல,” என செம்பருத்தி சமாளிக்க…

“என்னன்னு சொல்லு,” என குரு அதட்ட…

“சூப் கொடுத்து விட்டாங்க அம்மா! அதான்,” என்றவள், “வாங்க, இங்கே உட்காருங்க,” எனக் கையைப் பிடித்தாள்.

குருசேத்ரன் பார்வை சட்டென கொஞ்சம் தீவிரமாக அவளை ஆராய்ந்தது. அவளின் முகத்தில் இருக்கும் வியர்வையே விவகாரம் இருக்கிறது என்பதை விளக்கிவிட, சட்டென அவ்விடத்தை ஆராய்ந்தான். கண்களில் கோபம் அப்பட்டமாக மின்னியது. கடைசியில நாய் அதோட வேலையை பார்த்திருச்சே என உள்ளுக்குள் தோன்றியது. ஆம், அழகியுடன் திங்க் சேர்ந்துவிட்டான். குருசேத்ரனுக்கு ஆத்திரம், கோபம் அனைத்தும் ஒன்றாக தலை தூக்க, கஷ்டப்பட்டு அடக்கியவன் உடனே எழுந்தான்.

“என்னாச்சு?” என செம்பருத்தி கேட்க…

“முக்கியமான ஒர்க் இருக்கு. நீ இங்கேயே இரு. எப்படியும் லஞ்ச் சாப்பிட டைம் எடுக்கும். நான் போய் அந்த வேலையை முடிச்சிட்டு, ஆஃப் அண்ட் ஹவர்ல வந்துடுறேன்,” என உடனே கிளம்பினான்.

“அப்படியா? அப்பாகிட்ட சொல்லிட்டு போங்க,” என செம்பருத்தி அழைக்க… அதற்குள் திங்க்கை இழுத்து வந்து காருக்குள் விட்டான் குரு.

“மாப்ள, என்னங்க வந்ததும் போறீங்க?”

“முக்கியமான வேலை, அங்கில் நான் போயிட்டு உடனே வந்துடுவேன்,” எனச் சொல்லிவிட்டு உடனே புறப்பட்டான் குரு.

“என்னக்கா, மாமா கிளம்பிட்டாரா?” என தர்மன் மற்றும் சம்பு இருவரும் கேட்க…

“வருவார்,” என செம்பருத்தி உள்ளே சென்றாள்.

“ஐயோ, திங்க்கைக் காணோம்,” என சம்பூர்ணம் பதட்டத்துடன் தேடினாள்.

செம்பருத்திக்கு அழைப்பு வந்தது. “என்னங்க… திங்க்…” என அவள் ஆரம்பிக்க…

“வீட்டிலதான் வேலை! நான் தான் அவனை கூட்டிட்டு வந்துட்டேன். அதை சொல்லத்தான் கால் பண்ணேன்,” எனக் கட் செய்தான் குரு.

“அக்கா, திங்க்…” என தர்மன் கேட்க…

“அவர் கூட்டிட்டு போயிட்டாரு,” எனச் சொல்லிவிட்டு அமர்ந்தாள் செம்பருத்தி.

அனைவரும் அவனுக்காக காத்திருக்க, இரண்டு மணிக்கு வந்தான். உணவுகளை ஆசையாக பரிமாறினார் செல்வி. பாரி தனது மகளையும் மருமகனையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் மனதுக்குள், “இதை விட கொஞ்சம் பெரிய வீடாகப் பார்த்து வாடகைக்கு போகணும். மாப்பிளைக்கு இந்த சௌகரியம் பத்தல. சொல்லும்படியாக இங்கே பெருசா சௌகரியம் இல்லை,” என நினைத்திருந்தார்.

“நல்லாருக்கா? இன்னும் கொஞ்சம் வைக்கவா, மாப்ளை?” என செல்வி கேட்க…

“வைங்க,” எனக் கேட்டு வாங்கி சாப்பிட்டான். செம்பருத்தி அவனையே விதிர்த்துப் பார்த்தாள். யாரிடமும் பேசாதவன், இந்த ஒரு மூன்று நாட்களில் நிறைய மாற்றங்களுடன் இருப்பது புதிராக இருக்கிறது. அதுவும், தன்னிடம் அவன் நடந்துகொள்வது கற்பனைக்கு எட்டாத காட்சியாக இருக்கிறது.

இருவருக்கும் உடை வாங்கி வைத்திருந்தார்கள். செல்வி இருவரையும் சேர்ந்து நிற்கவைத்து உடையைக் கொடுக்க…

“எதுக்கு ஆன்ட்டி இது?” என தயங்கினான் குரு.

“எங்களோட ஆசைக்காக வாங்கிக்கோங்க,” என பாரி மற்றும் செல்வி இருவரும் சேர்ந்து கூற, வாங்கிக்கொண்டான்.

“சரி, கிளம்புறோம்,” என அனைவருக்கும் சொல்லிவிட்டு, அவளுடன் வேகமாகப் புறப்பட்டான் குரு.

“சம்மந்தி அம்மாவுக்கு சாப்பாடு போட்டு கொடுக்கலாம்னு நினைச்சேனே,” என அவர்கள் சென்றதும் தான் செல்விக்கு தோன்றியது.

“அவங்க நமக்கு கொடுத்து அனுப்புவாங்க. ஆனா, நம்ம கொடுத்தனுப்ப முடியுமா? அவங்க எவ்ளோ பெரிய ஆளுங்க,” என துளசி கூற…

“நீ கண்டத உளறிட்டு இருக்காத,” என கர்ணன் அமைதி படுத்தினான்.

“அக்கா, நீ நினைக்கிற மாதிரி குரு மாமா கிடையாது. அவரு ரொம்ப நல்ல டைப், தெரியுமா?” என சொல்லிக்கொண்டே சென்றான் தர்மன்.

“நேத்து வந்த புது மாமா உனக்கு முக்கியமா போயிட்டாப்டியா?” என துளசி கோபத்துடன் கேட்டாள்.

கர்ணன் சிரித்துக்கொண்டே, “அவன் சின்ன பையன்! அவன் சொல்றத போய் சீரியஸா எடுத்துட்டு இருக்காத, துளசி,” என்றான்.

“இருந்தாலும்…” என துளசி ஒரு கமா வைத்தாள்.

பாரி சிரித்துக்கொண்டே, “இப்போ எதுக்கு துளசி இத்தனை குழப்பம்? நம்ம வீட்ல எத்தனை மாப்ளை வந்தாலும், என்னைக்கும் என்னோட மூத்த மாப்ளை, எனக்கு நெருக்கமான மாப்ள, பெரிய மாப்ள தான்,” என்றார்.

“இப்போ சந்தோஷமா?” என கர்ணன் தன் மனைவியைப் பார்க்க, மழுப்பிவிட்டுச் சென்றாள் துளசி சிரிப்புடன். மனதுக்குள் ஒரு திருப்தி தான்.

வீட்டுக்கு வந்ததும் நேராக ஸ்டடி ரூம் சென்றவன், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெளியே வரவே இல்லை. மணியம்மை எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தவர், “விருந்து எப்படி போச்சு? ஜாலியா? நான் தான் மிஸ் பண்ணிட்டேன்,” என்றார் வருத்தத்துடன்…

“இன்னொரு நாள் உங்களை கண்டிப்பா வீட்டுக்கு வர சொன்னாங்க, அம்மா!” என செம்பருத்தி கூற…

“சரி, வந்துட்டா போச்சு,” என இருவரும் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்கள்.

“இப்போ நைட் என்ன செய்யலாம்? சாந்தா அக்கா இன்னிக்கி வரலையே,” எனக் கேட்டுக்கொண்டே கிச்சன் சென்றவள், ஃபிரிட்ஜைத் திறக்க… “அரிசியம் பருப்பு சாதம் செய்யலாமா?” என மணியம்மை கேட்கவும், “சூப்பர் மேடம், அதையே செய்யலாம்,” என செம்பருத்தி உடை மாற்றச் சென்றவள் உடையை எடுக்க… “குளி,” என கதவைத் திறந்து கொண்டு வந்தான்.

“சமைச்சு முடிச்சிட்டு குளிக்கிறேன்,” என செம்பருத்தி திரும்பக் கூற…

“என்ன பண்ணுவியோ தெரியாது, குளிக்கிற,” என்று விட்டுச் சென்றான்.

“ஐயோ, குளிச்சிட்டு போலாம்,” என செம்பருத்தி சுத்தமாகி கீழே வர… மூவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். மணியம்மை பேச வர… “டேப்லெட் போட்டீங்களா?” என ஆஃப் செய்தவன், அவரைப் படுக்க வைத்துவிட்டு மேலே வந்தான்.

செம்பருத்தி சோர்வுடன் கண்களை மூட, அவளின் உதட்டை மூடினான் குரு.

மீண்டும் மீண்டுமா என தோன்றத்தான் செய்தது. ஆனால் அவன் விடவில்லை. கிட்டதட்ட இரண்டு நாட்கள் அவளை ஒரு வழி செய்துவிட்டான்.

தொடரும்..