“வீட்டை விட்டு வெளியே போயிடுங்க!!” என்று கூறினாள் திருத்தமாக.
“என்னாச்சு?”
செம்பருத்தி அவனைப் பார்த்து, “எல்லாமே தெரிஞ்சுதான் நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட இதுக்கும் மேலயும் நடிக்க வேணாம். எப்போவும் போல உங்க இயல்புல பேசுங்க.”
பாரி, செல்வியின் குரல் கேட்க, குரு தன் மனைவியைப் பார்த்து, “உன்னோட பூமர் குடும்பம் வருது.”
“இறக்கி விடுடா, அசிங்கம் பிடிச்சவனே! நீ தொட்டாலே எனக்கு அசிங்கத்தை மிதிச்சபோல இருக்கு. நான் இப்போ நினைக்கிறது ஒண்ணு மட்டும்தான். நீ இல்லாத உலகத்துக்கு போகணும். அதுக்கு நான் சாக…” என்று சொல்லி முடிப்பதற்குள் உதட்டை மூர்க்கத்துடன் முத்தமிட்டான்.
செல்வி கதவைத் திறந்தவர், அவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டு சட்டென மூடினார்.
“இல்லை ஆன்ட்டி, நீங்க வாங்க!” என கதவைத் திறந்துவிட்டான்.
செம்பருத்தி உதட்டைத் துடைத்தபடி நின்றிருந்தாள்.
அனைவரும் உள்ளே நுழைந்தார்கள். குருசேத்ரன் பாரியின் பக்கம் திரும்பி, “உங்க வீட்ல நிறைய பேர் இருக்கீங்க. நீங்க தனியா இருக்கறபோல தோணாது. அங்கே அம்மாவும் நானும் மட்டும்தான் இருக்கோம். எங்க அம்மாவை பார்த்துக்கதான் செம்பருத்தி வீட்டுக்கு வந்தாள். இப்போ இல்லை, இதுக்கு முன்னாடி சொல்றேன். இவள் கூட இருந்து பழகிவிட்டோம். கொஞ்சம் வீட்டுக்கு அனுப்புறீங்களா?”
“நான் போகல! எனக்கு அங்கே போகப் பிடிக்கல!” என செம்பருத்தி வெடுக்கென கூறிவிட்டாள்.
“அவ்ளோதானே! செஞ்சி கொடுக்கிறேன். நான் காலையிலேயே வாங்கிட்டு வந்துட்டேன்,” என்ற செல்வி வேகமாக கிச்சன் சென்று சமைக்க ஆரம்பித்தாள்.
செம்பருத்தி ஓரிடத்தில்போய் அமர்ந்துகொண்டாள்.
வீடு முழுவதும் கருவாடு வாசம் பரவியது, செம்பருத்தியின் பாணியில். குருசேத்ரன் முகம் அரண்டிருந்தான்.
போன் வருவதுபோல வெளியே சென்றான் குரு. முக்கால் மணி நேரம் கழித்து உள்ளே வந்தான்.
பொறுமையாக உணவைச் சாப்பிட்டாள் செம்பருத்தி. ஏனோ அவளுக்கு மற்ற பொருளை சாப்பிட்டால் குமட்டல் அதிகமாக இருந்தது. கருவாடு மட்டும் ஒத்துக்கொண்டது, குமட்டல் இல்லை. திருப்தியாகச் சாப்பிட்டவள், “எனக்கு தூக்குப் போஸ்ல போட்டு கொடு மா! நான் நாளைக்கு வச்சு சாப்பிட வேணும்.”
குருசேத்ரன் முகம் கோபத்தில் மாற, டிப் பேனாவை பாக்கெட்டுக்குள் வைத்து, “பத்து, ஒன்பது, எட்டு, ஏழு…” என பின்வரிசையில் எண்ணி கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
பாரி தனது மகளைப் பார்த்தார். முகத்தில் சந்தோஷம் துளிகூட இல்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது. செம்பருத்தி கொஞ்சம் பொறுப்பான பெண், எதையும் யோசிக்காமல் பேசவே மாட்டாள். பெரிய மகள் துளசிபோல செம்பருத்தி. தாமரை மிகவும் செல்லம், விரும்பியதைச் செய்ய காரியம் சாதிக்க கண்ணாக இருப்பாள். அவள் பொறியியல் படித்திருக்கிறாள். ரோஜா அவர்களின் வீட்டிலேயே கொஞ்சம் வித்தியாசம், யாரிடமும் ஒட்டமாட்டாள், இடக்குமடக்காக பேசுவாள், நடந்துகொள்வாள். தன் தேவையை யாருடைய உதவியும் இல்லாமல் சாதித்துக்கொள்வாள். சம்பூர்ணம் புத்தி கூர்மை அதிகம் இல்லை, ஆசை அதிகம் உள்ளவள். ஆனால் குடும்பக் கஷ்டம் தெரிந்து அளவுடன் இருப்பாள், ‘ஆவரேஜ்’ என்று கூறலாம். தர்மன் அனைத்து பெண்களின் செல்லம்.
“என்ன பாப்பா ஆச்சு? எதுக்கு முகம் பொடுக்குன்னு இருக்குது?”
“ஒண்ணுமில்ல பா! நான் வந்து ரெண்டு நாள்கூட ஆகல, அதுக்குள்ளே அங்கே கூப்பிட்டா எனக்கு எப்படி போகப் பிடிக்கும்? ரொம்ப அவஸ்தையா இருக்கு பா! அவ்ளோ பெரிய மச்சு வீடாக இருந்தாலும் எனக்கு நிம்மதியான தூக்கம் இங்கே நம்ம வீட்லதான் பா கிடைக்குது,” என்று அவள் சொல்லாமல் தவிக்கும் உணர்வைச் சுருக்கமாகக் கூறி முடித்தாள்.
பாரி தனது மகளின் தலையை வருடி விட்டவர், “கண்ணு, அப்படி சொன்னால் மாப்ளை மனசு கஷ்டப்படும். இதுதான் நான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனா? உங்க மாமியார் தங்கமான மனுஷி. அவங்க என்ன நினைப்பாங்க? இப்படியெல்லாம் பேசக்கூடாது தங்கம்,” என்றார்.
“ம்ம், சரிங்க பா!” என சொல்லியபடி புறப்பட்டாள் அவனுடன்.
அனைவரும் வழியனுப்பி வைக்க, “என்னாச்சு பா?” என சம்பூர்ணம் கேட்டாள்.
“அவளோட முகமே சரியில்லை. எனக்கு மனசு கேட்கல சம்பு,” என்று உருக்கமாகக் கூறினார்.
“மாமா பாத்துக்குவார் பா,” என சம்பூர்ணம் கூறியபடி உள்ளே சென்றாள்.
இங்கே வீட்டுக்கு வந்ததும் வேகமாக இறங்கினாள் செம்பருத்தி.
“ப்ச், என்ன அவசரம்?” என அவளின் கையைப் பிடித்தான் குரு.
அடுத்த நொடி கையைத் தட்டி விட்டவள் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“இப்போ என்ன பிரச்னை உனக்கு? எதுக்கு இப்படி நடந்துக்குற?” என குருசேத்ரன் எதுவுமே நடக்காததுபோல கேட்டான்.
“என் கிட்ட நெருங்கும் வேலைய இன்னையோட விட்டுடு. இந்த உலகத்திலேயே நான் வெறுக்கிற ஒரே ஆள் நீதான்டா! இந்த வாழ்க்கை நரகமா இருக்கு. உன்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டேன்.”
“சரி, அதுக்கு என்ன பண்ணலாம்?”
“என்னோட வாழ்க்கையில எதுக்குடா வந்த?” என அழுதபடி கேட்டாள் செம்பருத்தி.
“நீதான் என்னோட வாழ்க்கையில வந்த?”
“உனக்கும் எனக்கும் என்னடா பொருத்தம்? உன்னைவிட எட்டு வயசு சின்னவ! எதுக்குடா கல்யாணம் பண்ண? என் அம்மாவை நீ மெய்ட் கூடதான் அனுப்பி வச்சிருக்க, இல்லை மெய்டாதான் அனுப்பி வச்சிருக்க. உங்க அம்மாவைப் பார்த்துக்க சரிதானே! உனக்கும் நான் மெய்ட்டா இருக்கணும். அதுதானே! யாருடா நீ? ச்சீ, உன்னோட குழந்தையை நான் சுமக்கிறதை நினைச்சா அருவருப்பா இருக்கு,” என வாய்க்கு வந்த அனைத்தையும் பேசினாள்.
குருசேத்ரன் எதையும் கண்டுகொள்ளாமல் அவளை அணைக்க பாய, சிவந்த விழிகளில் அவனைத் தள்ளிவிட்டாள்.
“குரு!” என மணியம்மையின் குரல் கேட்க,
ஒரு பெருமூச்சை விட்டவன் மெல்ல உள்ளே சென்று கதவைத் திறந்துவிட்டான்.
“யாரது? செம்பருத்தி மாதிரி இருக்கு?” என மணியம்மை கூற,
“ஆமா மேடம், நான் தான்,” என சொல்லிக்கொண்டே இறங்கினாள்.
“என்னடி, மேடம் சொல்ற?” என மணியம்மை திடுக்கிட்டுப் பார்க்க,
“டக்குன்னு வந்திடுச்சு மேடம்,” என்றவள் சிரித்துக்கொண்டே, “உங்களைப் பார்த்துக்க ஆள் வேணும்னு சொன்னாரு, அதான்,” என அவருடன் உள்ளே வந்தாள் செம்பருத்தி.
“உன்னோட முகமே சரியில்லையே?” என மணியம்மை கேட்க,
“இல்லை மேடம், அது சரியா தூக்கமே இல்லை. மாசமா இருக்கேனா, ரொம்ப மன அழுத்தமா இருக்கு. அதான் வந்துட்டேன். தொலைச்ச இடத்துல நிம்மதி தேட வந்தேன்,” என்றாள்.
“என்னமா இப்படியெல்லாம் சொல்ற? எதுவும் பிரச்னையா?” என மணியம்மை பதட்டத்துடன் பின்னால் வரும் குருசேத்ரனைப் பார்த்தார்.
“என்னை விட்டு அவளால இருக்க முடியல! அதனால நான்போய் கூட்டிட்டு வந்துட்டேன்,” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“மேடம், எனக்கு மயக்கம் வர்றபோல இருக்கு. டாக்டர் சுப்ரியாவை வர சொல்றீங்களா?” எனத் தள்ளாடுவதுபோல போய் அமர்ந்தாள் சோபாவில்.
குருசேத்ரன் அவளை உற்றுப் பார்த்தான். ‘என்னைவிட நடிக்கிறா! அதுவும் பயங்கரமா,’ என அப்படியே நின்றான்.
“டேய், என்னடா நிக்கிற? சுப்ரியாவுக்கு கால் பண்ணு! சாந்தா, வேகமா வா!” எனப் பதட்டத்துடன் மணியம்மை அங்கும் இங்கும் நடந்தார்.
குரு போன் செய்து அரை மணி நேரத்தில் வந்தாள் சுப்ரியா.
“என்ன பண்ணுது செம்பருத்தி?”
“கிறுகிறுப்பா இருக்கு டாக்டர்,” என்றாள்.
“அப்படியா?” என சுப்ரியா அவளைச் செக் செய்ய,
“என்னால ஸ்டெப்ஸ் ஏற முடியாது,” என தலையைப் பிடித்தபடி கூறினாள் செம்பருத்தி.
“அப்போ நீ கீழே ரூம்லயே இருமா!” என்றார் மணியம்மை.
சுப்ரியா அவளை பார்த்து, “இப்போதைக்கு நீ மேலே போகாத! அகைன் உனக்கு இதே போல வந்ததுன்னா நம்ம ஸ்கேன் பண்ணிடலாம் ஓகேவா?”
ம்ம் இதுவும் ஓகே என செம்பருத்தி மிகவும் களைப்பாக இருப்பதை போல ஆக்ட் விட்டாள்.
குருசேத்ரன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். ‘இத்தனை நடிப்பா? பச்சையா தெரியுது டி! நீ எத்தனை ட்ரிக் பண்ணாலும் என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. உன்னை என்கூட வச்சுக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன். என்ன? கீழே இருக்க ரூமில் தானே இருக்க போற!! அங்கேயும் வருவேன் டி! என்னை பத்தி நீ யார்கிட்ட என்ன சொன்னாலும் யாரும் என்னை நம்ப மாட்டாங்க’ என்று உறுதியாக இருந்தான்.
இது சைக்கோ தனமாக அல்லவா இருக்கிறது. ஆம் இது சைக்கோதனம் தான் எப்படி அவனை செம்பருத்தி சமாளிக்க போகிறாள்? இனி என்ன நடக்கும்? கடவுளுக்கு தான் வெளிச்சம்.
செம்பருத்தி நிதானமாக எழுந்து மணியம்மை இருக்கும் பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டாள்.